இது சூப்பர் ஹிட் தானே? ஒத்துக்கறீங்களா? |
ஏங்க! பதிவு எதுக்கு எழுதறோம்? நிறையப் பேர் படிக்கணும். நிறைய ஹிட் கிடைக்கணும்னுதானே?. நானும் அதுக்குதாங்க எழுதறேன். என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை. இருக்காதா பின்ன? அந்த ஆசை இப்படி நிறைவேறும்னு நான் நினைக்கவே இல்லைங்க.
சில பதிவர்கள் எல்லாம் அதிக ஹிட் கொடுத்த வாசகர்களுக்கு நன்றின்னு அதுக்கு ஒரு பதிவு போட்டு பெருமையா பீத்தீக்கிறாங்க. ஒவ்வொரு பதிவுக்கும் நான் வாங்கிற ஹிட் மாதிரி அவங்க யாராலையும் வாங்க முடியாதுன்னு அடிச்சி சொல்ல முடியும். இல்ல இல்ல அடிவாங்கி சொல்லமுடியும்
என்னடா என்னமோ உளறிக்கிட்டு இருக்கானேன்னு பாக்கறீங்களா?. உண்மையைத்தான் சொல்றேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா? அது எப்படித்தெரியும்?. எங்க வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும்!. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்.
பதிவு போடறதுக்கு கம்ப்யூட்டரை ஆன் பண்ணுவேன். அப்பவே ஹிட் ஆரம்பம் ஆயிடும்னா பாத்துக்கோங்களேன். எங்க வீட்டு அம்மணிகிட்ட வாங்கற ஹிட்டதான் சொல்றேன். யாருமே படிக்காததுக்கு யாருக்காக பதிவு போடறீங்கன்னு சொல்லி, ஆரம்பிக்கும் போதே தலையில நறுக்குன்னு முதல் ஹிட். காலங்காத்தால 4 மணிக்கு எழுந்து லைட்ட போட்டுக்கிட்டு எங்க தூக்கத்தை கெடுத்துக்கிட்டு, பால் வாங்கிட்டு வராம கம்ப்யூட்டர்ல உக்காந்துக்கிட்டு இருக்கறது நியாயமான்னு கேட்டு ஓர் ஹிட். கூப்பிட்டு எவளோ நேரம் ஆச்சு? இன்னுமா எழுந்திருக்கலன்னு கேட்டு ஒரு ஹிட்? வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஒட்டரை அடிக்கச் சொன்னத மறந்துட்டு எட்டரை மணிவரை டைப் அடிச்சிக்கிட்டு இருந்ததால அதுக்கு ஒரு சூப்பர் ஹிட். ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்க! ஹீட்டர் போட்டு அரைமணிநேரம் ஆச்சுன்னு சொல்லி இன்னொரு ஹிட்.
என்னமோ பெரிசா பதிவு போடறேன்னு நேரத்த வேஸ்ட் பண்ணீங்களே அந்தப் பதிவு என்னனு எங்கிட்ட காமிச்சீங்களான்னு கரண்டியாலயே நச்சுன்னு ஒரு ஹிட். கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னா எனக்கு டைம் இல்லேன்னு சொல்லிட்டு மொக்க பதிவ போட்டு அத எத்தனை பேரு பாத்தாங்கன்னு நிமிஷத்துக்கு ஒரு தடவை பாக்கறதுக்கு மட்டும் நேரம் இருக்கான்னு கேட்டு ஒரு ஹிட்.
இந்த மாசம் கரண்ட் பில் அதிகமா வந்ததுக்கு காரணம் உங்க பதிவு வெறிதான்னு வெறித்தனமா ஒரு ஹிட். இன்னைக்கு உங்க பதிவ ஒருத்தர் கூட பாக்கல போலிருக்குன்னு சந்தோஷமா ஒரு ஹிட்
இப்படி ப.மு. , ப.போ , ப.பி, (பதிக்கு முன், பதிவின் போது , பதிவுக்கு பின்) அதிகமா ஹிட் வாங்கின பதிவர் வேற யாராவது இருந்தா சொல்லுங்க.
இப்போ சொல்லுங்க நான்தானே 2014 இன் சூப்பர் ஹிட் பதிவர்?
கொசுறு:1 அப்புறம் தமிழ்மணம், அலெக்சா,தமிழ் 10 இவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நான் வாங்கின இந்த ஹிட்டை எல்லாம் சேத்து கணக்கில எடுத்துக்கிட்டு ரேங்க் போடனும்ன்னு கேட்டுக்கிறேன். அப்படி என் கோரிக்கைய நீங்க கேக்கலேன்னா பதிவு எழுதறதை நிறுத்திடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க.
***********************************************************************************
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
*******