மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!
"தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்" என்பதை இண்டு மூன்று நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் நம்பள்கி. அந்தப் பதிவின் கருத்துரைகளில் நிழல் விழுவது பற்றி பலரும் விவாதித்திருந்தனர். நிழல் விழாமல் எந்த கட்டடமும் கட்ட முடியாது ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் தலைக்கு மேல் வரும்போது (நேர் செங்குத்தாக) வரும்போது மட்டும் நிழலை காண முடியாது.ஏன் எனில் நிழல் அந்தப் பொருள் மீதே விழும். இது ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும். அந்த அதிசயம் நிகழும் இரண்டு நாட்களில் இன்று இன்றைய நாளும்(செப் 22) ஒன்று.
நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்கவும் நினைவில் வைத்துக் கொள்ளவும் நேரம்
இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில் நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர்
22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும்
இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு
நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத்
தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத்
தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல்
ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது
அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப்
பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின்
நீள் வட்டசுற்றுப்பாதை ஒரு சாலை என்று கொண்டால் அந்தப் பாதைக்கு நேர்
செங்குத்தாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக
அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.
இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில்
கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே
காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத்
தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில்
ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி
அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம். ஒரு
குறிப்பிட்ட நாளில் மேல் முனை (வடதுருவம்) சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக
வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்
படம் 1 |
ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி சுற்று சுற்றி எதிர்புறம்
வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை(துருவம்அல்லது சுழலும் அச்சின் மேல்முனை ) சூரியனை நோக்கி இருக்காது. இப்போது
கீழ் முனை தென் துருவம் சூரியனை நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில்
இருக்கிறது.
இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2 |
பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும்
வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி
சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன்
வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3 |
ஆனால் இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை. இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது. ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சூரியனை விட்டு விலகி இருக்கும், அதாவது பூமியின் சுழலும் அச்சை ஒரு கோடாக பல்வேறு நிலைகளில் வரைந்தால் ஒவ்வொரு நிலையிலும் அந்தக் கோடு பல்வேறு தளங்களில் அமைந்த இணைகோடுகளாக இருப்பதைக் காணலாம்
படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம்
சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக
நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக்
கோளத்தில் சூரிய ஒளி அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும்
விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு நேரம்
சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை
அடைகிறது.
இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப்
போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 22 அன்று
நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒளி விழுவதால் வட அரைக்
கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட
துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக
உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும்
சமமாக அமைகிறது.
இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று
ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று
மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன்
தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம்
என்று கூறுவார்கள்.
சரி! இவையெல்லாம் விண் வெளியில் நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும்
1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும்
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத
குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது.
தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான
கிழக்கு மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ சாலைகள் இல்லை அதனால் திசைகளை
அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து திசைகளின்
அமைப்பை அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.
ஜூன் 21 அன்று டிசம்பர் 21 அன்று
இன்று செப்டம்பர் 22 அன்று
இவை யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும். இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும்.
இவை யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும். இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும்.
மேலே சொன்னது எல்லா இடங்களுக்கும் பொருந்துமாயின் இன்று பகல் 12 மணி அளவில் ஒரு பொருளின் நிழல் பூமியில் விழாமல் இருக்கவேண்டும் ஆனால் இன்று எல்லா இடங்களிலும் அப்படி இருக்காது. உதரணமாக சென்னையில் எப்படி இருக்கிறது என்பதை அறிய கீழே உள்ள புகைப் படத்தை பாருங்கள் . என் வீட்டு வாசலில் ஒரு அரை அடி உயரமுள்ள முக்கால் அங்குல பிவிசி பைப்பை நிற்க வைத்து புகைப்படம் எடுத்திருக்கிறேன். எடுத்த நேரம் இன்று(sep 22) ஏறக்குறைய பன்னிரண்டு மணி
மேலுள்ள படத்தில் பன்னிரண்டு மணிக்கு நிழல் வடக்கு புறமாக விழுந்துள்ளதை காணலாம். இதே நில்னடுக்கொட்டுப் பகுதியில் இதே முறையில் படம் எடுத்தால் நிழல் இருக்காது.
அப்படியானால் இதே நேரத்தில் சென்னையில் நிழல் தெரியா நிலை எப்போது வரும் என்று கேள்வி எழலாம்?
சென்னை 13 டிகிரி வட அட்சத்தில்(lattitude) அமைந்துள்ளது. ஜூன் மாதத்தில் தெற்கு பக்கமாக சாய்ந்து பயணம் செய்வது (போல) தொடங்குகிறது. 0 டிகிரி நில நடுக்கோட்டுப்(Equator) பகுதிக்கு வர செப்டெம்பர் மாதம் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் சென்னையை அதற்கு முன்பாகவே கடந்து விடுகிறது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் 20(தோராயமாக ) தேதிகளுக்கு கடக்கிறது.அந்த நேரத்தில் பகல் பன்னிரண்டு மணி அளவில் மேற்கண்ட போட்டோ எடுக்கப் பட்டால் நிழல் இல்லாமல் இருக்கும். அதாவது சூரியன் நேர் செங்குத்தாக இருக்கும். இதே நாளில் நிழல் மற்ற நேரத்தில் வலப்புறமோ இடப் புறமோ சாயாமல் தண்டவாளம் போல வரையப்பட்டுள்ள இணை கோட்டுக்குள்ளேயே காலையில் மேற்குப் புறமாகவும் மாலையில் கிழக்குப் புறமாகவும் விழும்.
மேற்புறத்தில் இருந்து எடுக்கப் பட்ட படம் |
சுருக்கம்: 1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள்
2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு
3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல்
இன்றைய நாளோட முக்கியத்துவம் இதுதாங்க
இன்றைய நாளோட முக்கியத்துவம் இதுதாங்க
தலையை சுத்துதா? சகிச்கிக்கோங்க பாஸ். திட்டறதுன்னா
கம்மென்ட்ல திட்டலாம்
*********************************************************************************
இந்தப் பதிவு தொடர்பான வவ்வாலின் கேள்விகளுக்கு இன்னும் சில விளக்கங்களை காண
http://tnmurali.blogspot.com/2013/09/explanation-shadows-axis-of-rotation-revolution.html வவ்வாலின் கருத்துகளுக்கு விளக்கங்கள்
இந்தப் பதிவு தொடர்பான வவ்வாலின் கேள்விகளுக்கு இன்னும் சில விளக்கங்களை காண
http://tnmurali.blogspot.com/2013/09/explanation-shadows-axis-of-rotation-revolution.html வவ்வாலின் கருத்துகளுக்கு விளக்கங்கள்
படங்களுடன் விளக்கங்கள் அசத்தல்... பாராட்டுக்கள் முரளி அவர்களே....
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
நீக்குவியப்பாக உள்ளது. மகிழ்ச்சி.
நீக்குசுருக்கம்: /// purinjathu sir.. oru murai padichathukku thlai suthichu.. innum 2 murai padicha puriyumpola.. theriyaha thakaval sir..
பதிலளிநீக்குநன்றி மகேஷ்
நீக்குசென்னையில் பகல் 12 மணிக்கு சூரியன் தலைக்கு மேல் வரும் தேதியை முன் கூட்டியே பதிவிட்டிருந்தால் நிறைய பேருக்கு த்ரில்லாக இருந்திருக்கும், Anyway தெளிவான விளக்கத்திற்கும் படங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஜெய தேவ்
நீக்குஎவ்வளவு விசயங்களை சொல்லிருக்கீங்க நல்லதொரு பகிர்வு நன்றி சார்
பதிலளிநீக்குநன்றி சரவணன்
நீக்குபடங்களுடன் விவரங்களை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குநன்றி குமார்
நீக்குபடங்களுடன் தெளிவாகவே விளக்கியிருக்கிறீர்கள், முரளி.
பதிலளிநீக்குஅட அப்படியா என்று தோன்றியது. பாராட்டுக்கள்!
நன்றி மேடம்
நீக்குநிறைய முயற்சி எடுத்து அருமையாக
பதிலளிநீக்குபடத்துடன் மிக மிக
எளிமையாக விளக்கியமைக்கு
மனமார்ந்த நன்றி
நன்றி ரமணி சார்
நீக்குதெளிவான விளக்கங்கள்..பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குநன்றி ராஜேஸ்வரி
நீக்குEquinox வருசத்தில் எப்படியும் ரெண்டு நாள் வந்துருது.
பதிலளிநீக்குபடங்களும் விளக்கங்களும் அருமை.
இனிய பாராட்டுகள்.
நன்றி துளசி கோபால்
நீக்குMr Murali,
பதிலளிநீக்குA truly commendable job. It is apity that many people, even the so called educated ones, do not have any basic idea about such things.
Like wise, you must spare time and effort to make lay men understand the nuances of full moon day and new moon day in connection with the eclipses.
Shankar
நன்றி சங்கர்
நீக்குபடங்களும் விளக்கமும் அருமை ஐயா.மிகவும் கடினமாக உழைத்திருக்கின்றீர்கள். நன்றி
பதிலளிநீக்குமுரளி,
பதிலளிநீக்குசன் டயல் பற்றி சொல்லும் போது குச்சியை உதாரணம் காட்டி சின்னதாக ஒரு பின்னூட்டம் போட்டேன் ,நீங்கள் செயல்முறையில் செய்துப்பார்த்து பதிவாக போட்டதற்கு பாராட்டுக்கள்!
# உங்க முயற்சி சரி தான்,ஆனால் இவ்வளவு மொத்தமான பொருளை வச்சு செய்யக்கூடாது, இப்படி செய்தால் சூரியன் உச்சியில் வரும் போது கூட நிழல் விழலாம்.
சூரிய ஒளியின் கோணத்திற்கும், பூமிக்கும் ,சூரியனுக்கும் உள்ள தூரம், சூரியனின் அளவு இவற்றுடன் ஒப்பிட்டு சரியான முறையில் காலிபரேட் செய்து குச்சியின் நீளம்,தடிமன் கொண்டு செய்தால் நிழல் விழுவதை பெருமளவு கோண அளவில் தவிர்த்துவிடலாம். சென்னைப்போன்ற பகுதிக்கு சுமார் இரண்டு இஞ்ச் உயரம், ஒரு பென்சில் அளவு(குறைவான தடிமன் இன்னும் நல்லது) கொண்டு முயற்சித்தால் நிழல் உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாமல் செய்து விடலாம். குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமில்லை, பலநாட்களுக்கு சாத்தியமுண்டு.
இந்திய வடகோளார்த்தப்பகுதியில் உள்ளது,பொதுவாக "அக்னிநட்சத்திரம்" என சொல்லப்படும் காலம் முழுவதும் சூரியன் "அல்மோஸ்ட்" நமக்கு உச்சியில் காட்சி தரும்,எனவே தான் அக்காலம் முழுவதும் கடும் வெப்பமாக இருக்கும்.
இந்தியாவுக்கு மார்ச் -21 தான் Equinox . செப்டம்பர் 22 தென்கோளார்த்தத்தின் Equinox ,ஆஸ்திரேலியா,நியுசிலாந்து பகுதிகளில் சமநாள்,இரவு இருக்கும்.நேற்று சென்னையின் பகல் நேரம் 12 மணி ஏழுநிமிடங்கள்
# சிலர் சொல்வது போல ஈக்கவடேரியல் ரீஜனில் மட்டும் சூரியன் உச்சியில் வரும் என்பது சரியானது அல்ல, நீங்களும் அதனை நம்புகிறீர்களா என தெரியவில்லை.
23.5 டிகிரி வடக்கு (கடகரேகை) - 23.5 டிகிரி தெற்கு(மகரரேகை) இடைப்பட்ட பகுதியில் எல்லா இடத்திற்கும் சில குறிப்பிட்ட காலத்தில் சூரியன் மிகச்சரியாக உச்சி நிலையில் சஞ்சரிக்கும்.
நாம் பூமத்திய ரேகைக்கு அண்மைப்பிரதேசம் என்பதால் வருடம் முழுவதும் குறைவான சாய்மான கோணத்தில் சூரியனின் கதிர்கள் விழும் எனவே தான் "mean solar days' இந்தியாவுக்கு அதிகம் (311 நாட்கள் என நினைக்கிறேன்) எனவே நமக்கு வெப்பமான நாட்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கும்.
# //மேல் முனை பூமியை நோக்கி இருக்காது.இப்போது கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். //
#//மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.//
இப்படி சொல்லி இருப்பது எதனை ஒப்பிட்டு , நீங்கள் பூமியை ,பூமியின் அச்சுடனே ஒப்பிட்டு அதுவே அதனைப்பார்த்து சாய்ந்திருப்பது போல சொல்லி இருக்கிறீர்கள்.
சூரியனை நோக்கி ,பூமியின் அச்சினை ஒப்பிட்டுத்தான் சொல்லவேண்டும்.
பல இணையத்தளங்களிலும், பள்ளியிலும் நீங்கள் சொல்லி இருப்பது போல பூமியின் சாய்வு அச்சினை வச்சு ஒரு விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க, ஆனால் பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும் சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும் சொல்கிறார்கள், அப்படி இருக்கும் எனில் இப்போது அளிக்கும் விளக்கங்கள் அனைத்துமே தவறாகிவிடும், சரியான விளக்கம் வேறு ஆக இருக்க வேண்டும் ,எளிதில் புரிய வைக்க இப்படியே விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.
to be continued...
நேற்றே உங்கள் கருத்துக்களை எதிர் பார்த்தேன். நன்றி . உங்கள் கருத்துகளுக்கான சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.(நான் புரிந்து கொண்டவற்றை) இன்று இரவு அளிக்கிறேன்
நீக்கு# // ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6 மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம் சரியான விட்டு விலகி இருக்கும், //
பதிலளிநீக்குபெரும்பாலும் கால நிலை மாற்றம் இப்படித்தான் உருவாகிறது என்பதற்காக சொல்லப்படுகிறது, உண்மையில் அது சரியான விளக்கமும் அல்ல.
பூமித்தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருப்பதால் , சூரியனை விட்டு விலகி இருக்கும் வட துருவம் , அடுத்த 24 மணிநேரத்தில் சூரியன் இருக்கும் பக்கம் வந்துவிடுமே, அப்புறம் எப்படி நிரந்தமாக குளிர்,கோடைகாலம் உருவாகிறது. ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மீண்டும் சூரியனை பார்க்க ஆரம்பித்துவிடும்,எனவே நிரந்தரமாக எந்த துருவமும் சூரியனை விட்டு விலகியே நிற்காது.
கால நிலைமாற்றம் ஏற்படக்காரணம் நீள்வட்டப்பாதையும், பூமியின் சுழற்சியில் உள்ள அலைவும் காரணம், மேலும் பிளேன் ஆப் ரோட்டேஷனில் ஏற்படும் மாற்றமும் இருக்கிறது, இந்த பிளேன் ஆப் ரோட்டஷனில் உள்ள மாற்றத்தினை இதுவரையில் யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லை ,அல்லது இணையத்தில் இல்லை, இதன் அடிப்படையில் நானே ஒரு தியரி வச்சிருக்கேன் , நேரம் கிடைத்தால் பதிவு போடுகிறேன்.
# //வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.//
உண்மையில் பூமி செங்குத்தான அச்சில் சுழண்டாலும் கால நிலை மாற்றம் ஏற்படும், மேற் சொன்ன காரணங்களே போதுமானவை. மேலும் கூடுதல் காரணங்கள் பூமியின் வளிமண்டலம்,வளிமண்டலத்தின் சுழற்சி, பூமியின் நிலம்,நீர் பரவல் ஆகும். வடகோளார்த்தத்தில் அதிக நிளப்பரப்பும், தென்கோளார்த்தத்தில் அதிக நீர்பரப்பும் என உள்ளதால், பூமி சூடாவதில் ஒரு மாற்றம் உண்டாகிறது, கூடவே வளிமண்டல சுழற்சி, இதனால் கொரியாலிஸ் எபெக்ட், எல்நினோ,லாநினோ, தாழ்வழுத்த/ உயர் அழுத்தம் ஆகியன என எல்லாம் சேர்ந்து மழைப்பொழிவுகள் ஏற்படுகிறது.
பிழை திருத்தம்,
நீக்குதுருவம் என்பதை "கோளார்தம்" என கொள்க.
ஏற்கனவே அறிந்த செய்தியாக இருந்தாலும் விளக்கங்களும் படவிளக்கமும் அருமை..
பதிலளிநீக்குநன்றி கலிய பெருமாள்
நீக்குதிட்டறதா..? நல்ல பதிவு..அதற்கான உங்கள் உழைப்பு சிறியதோ,பெறியதோ? பாராட்டுக்கு உரியது..வாழ்த்துகள்..மேலும் தொடருங்கள்...
பதிலளிநீக்குநன்றி சக்தி முருகேசன்
நீக்குவிளக்கமாக படம் எடுத்து அசத்திவிட்டீர்கள். இப்படித்தான் வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் ஷட்டர் வழியாக சூரிய ஒளி கரெக்ட்டாக எங்கள் வீட்டு பூஜையறை பிள்ளையார் மீது படும். எங்க அம்மா அதிசயமா பார்ப்பாங்க.
பதிலளிநீக்குநன்றி உஷா
நீக்குஅசத்தலானபதிவுவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி கண்ணதாசன்
நீக்குஅசத்தலானபதிவுவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குலேட்டா வந்ததால என்னால் தெரிஞ்சுக்க முடியலை. சாரி
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅசத்தலான படங்கள் செயல்முறை விளக்கங்கள்னு ஒரு சயின்டிஸ்ட்டோட பதிவு மாதிரி இருக்கு.... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி ஜோசப் சார்
நீக்குசின்ன வயசுல அறிவியல் வகுப்பில படிச்சது...(அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா இப்போ முரளி சொல்றது ஈசியா புரிஞ்சிருக்குமில்ல---எனக்கு சொல்லிக்கிட்டேன்)
பதிலளிநீக்குஹ ஹஹா
நீக்குஇரவும் வரும் பகலும் வரும்னு எனக்கு பாடத்தான் தெரியும் ...எப்படி வருதுன்னு புரிஞ்சிக்கிட்டேன் ...ரொம்ப தாங்க்சு !
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி
நீக்குசிறப்பான அறிவியல் தகவல்கள்! ஒன்றுக்கு இரண்டு முறை படித்தால் நன்றாக விளங்கும் போல! அவ்வப்போது இது போன்ற சிறப்பான பதிவுகளை தரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதற்போது நிகழ்வது September equinox( பூமத்தியரேகை மீது சூரியன் வருவது ). அதுவும் தட்சினாயனம் (தெற்கு நோக்கிய நகர்வு) . June 20 போல June Solstice நிகழும், அப்போது இந்தியாவின் மீது போகும் கடகரேகை மீது சூரியன் வரும். அதற்கு முன்போ அல்லது அதற்கு பிறகோ தமிழகத்தின் மீது வருகிறது. அப்போது வேண்டுமானால் நீங்கள் நிழல் விழுகிறதா என சரி பார்க்கலாம். இனிமேல் அடுத்த வருடம் தான் பார்க்க இயலும்.
பதிலளிநீக்குமற்றபடி கடகரேகை முதல் மகரரேகை வரையிலான அனைத்து பகுதிகளிலும் சூரியன் செங்குத்தாக வர வாய்ப்பு உண்டு.
நன்றி குட்டிப்பிசாசு
நீக்குநீங்களே ஆகஸ்ட் 20 தோராயமாக என சொல்லியுள்ளீர்கள். ஆகஸ்ட் 20 தேதியில் சென்னையில் சூரியன் செங்குத்தாக வந்ததா? அப்படி துள்ளியமாக கணக்கிட முடிந்தால் சாத்தியம்.
பதிலளிநீக்குஇந்தப் பதிவு போடுவேன் என்று நினைக்கவில்லை தெரிந்திருந்தால் நிச்சயம் சரிபார்த்திருப்பேன். அடுத்த ஆண்டு ஆகஸ்டு முதல் வாரத்தி இருந்தே நிழலின் கோணத்தை கணக்கிட உத்தேசித்திருக்கிறேன்
நீக்கு//சென்னையில் பகல் 12 மணிக்கு சூரியன் தலைக்கு மேல் வரும் தேதியை முன் கூட்டியே பதிவிட்டிருந்தால் நிறைய பேருக்கு த்ரில்லாக இருந்திருக்கும்,//
பதிலளிநீக்குஜெயதேவு,
அந்த நேரம் பார்த்து நான் சென்னையில இல்லாம போயிட்டனே. :))
தங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி! விளக்கப் படங்களும் அருமை!
பதிலளிநீக்குபடங்களும் விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குமுரளி,
பதிலளிநீக்குஎன்ன ஆராய்ச்சி செய்ய போயிட்டாரா?
சென்னையிலேயே வருடம் 365 நாளும் உச்சி வெயில்(நன்பகல்- 11.30-12)க்கு நிழலே விழாமல் படம் எடுக்கலாம்,மகர- கடக ரேகைக்கு இடைப்பட்ட இடங்கள் மேலும் அதன் அருகில் உள்ள இடங்களில் எல்லாம் சாத்தியம்., அதுக்கு சரியா காலிபரேட் செய்யனும், எகிப்திய தொழில்நுட்பம் சுமார் 3800 ஆண்டுகளுக்கு முன்னரே செய்துக்காட்டிடுச்சு, நானும் அதன் அடிப்படையில் நிழல் விழாத படம் எடுத்து வச்சிருக்கேன் ,இன்னிக்கோ ,நாளைக்கோ பதிவா போடுறேன்,அப்போவாச்சும் நம்புறிங்களானு பார்ப்போம்.
ஒரு கட்டுமான அமைப்பின் ஸ்லோப் ஆஃப் ஆங்கில் எவ்ளோ குறைவாக இருக்கோ அதுக்கு ஏற்றார்ப்போல ,கிழக்கு,மேற்கு,வடக்கு, தெற்கு என எந்தப்பக்கமும் நிழல் விழாமல் குறிப்பிட்ட நேரத்துக்கு இருக்கும், அது சரியா நன்பகலாக இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ,மேலும் சூரியன் உச்சியில் இருக்க பூமத்திய ரேகைப்பகுதியும் தேவையில்லை,மேல் விவரங்கள் பதிவில் சொல்கிறேன்.
http://skytonight.wordpress.com/2012/04/14/zero-shadow-day/
நீக்குhttp://skytonight.wordpress.com/2012/04/14/zsd-over-indian-cities/
இந்தியாவிலும் இது இயலும் என்பதற்கான ஆதாரம்.
ஹா!ஹா ஹா. எதிர்பாரா அலுவகப் பணிகள் காரணமாக வலைப பக்கம் வர முடியவில்லை. இன்றுதான் வர முடிந்தது. எனக்குத் தெரிந்த விளக்கங்களை பதிவாகப் போட்டிருக்கிறேன்.
நீக்குhttp://tnmurali.blogspot.com/2013/09/equal-day-night-equinox-astronomy.html
என்ன ஒரு அற்புதமான பதிவு.அறிவியல் ரீதியான தகவல்கள்.இதை படிக்கும் ஒரு சிலர்
பதிலளிநீக்குஇனிமேல் மொட்டையாக இட்டுக்கட்டி எதையும் எழுத மாட்டார்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
பூமி சுத்துதோ இல்லையோ தலை சுத்துது. "வவ்வாலு" நீங்க தலை கீழா தொங்குவதால இன்னும் தலை சுத்த வைக்கிறீங்களே.நானெல்லாம் கடிகார முள் சுத்துறதையே பாக்க முடியாம டிஜிடல் கடிகாரம் கட்டுன ஆளுங்கோ.
பதிலளிநீக்குதலை சுத்துது தான்.
பதிலளிநீக்குசகிச்சுக்கிட்டு வாழ்த்து கூறுகிறேன்.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இதில் நீங்கள் இந்தியன் ஸ்டாண்டர்டு டைம் பற்றி குறிப்பிட வேண்டும்.(Indian Standard Time is calculated on the basis Mirzapur city (25.15°N 82.58°E) (near Allahabad in the state of Uttar Pradesh) ஏனென்றால் வருடத்தில் இரண்டு நாள் மட்டும் 12மணிக்கு மிர்ஜாபூரில்தான் செங்குத்தாக நிற்கும் பொருள்களுக்கு நிழல் இல்லாமல் இருக்கும்.இதற்கு 25.15 எனும் அட்சரேகையே காரணம். சென்னை சுமார் 13.°N 80°E உள்ளது. ஆகவே சென்னைக்கான உச்சிகால 12 மணியை நிழலை வைத்துதான் கணக்கிடமுடியும் கடிகாரம் பொய் சொல்லிவிடும்.
பதிலளிநீக்குவவ்வால்//உங்க முயற்சி சரி தான்,ஆனால் இவ்வளவு மொத்தமான பொருளை வச்சு செய்யக்கூடாது, இப்படி செய்தால் சூரியன் உச்சியில் வரும் போது கூட நிழல் விழலாம்// இது தவறு.
பதிலளிநீக்கு//சூரிய ஒளியின் கோணத்திற்கும், பூமிக்கும் ,சூரியனுக்கும் உள்ள தூரம், சூரியனின் அளவு இவற்றுடன் ஒப்பிட்டு சரியான முறையில் காலிபரேட் செய்து குச்சியின் நீளம்,தடிமன் கொண்டு செய்தால் நிழல் விழுவதை பெருமளவு கோண அளவில் தவிர்த்துவிடலாம். சென்னைப்போன்ற பகுதிக்கு சுமார் இரண்டு இஞ்ச் உயரம், ஒரு பென்சில் அளவு(குறைவான தடிமன் இன்னும் நல்லது) கொண்டு முயற்சித்தால் நிழல் உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாமல் செய்து விடலாம். குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமில்லை, பலநாட்களுக்கு சாத்தியமுண்டு.// தவறு.தஞ்சைப் பெரிய கோவிலுக்கும் அதுதான் பென்சிலுக்கும் அதுதான்.மேலும் ஒரு வருடத்தில் இரண்டு நாள் மட்டும்தான் சாத்தியம்.
///பல இணையத்தளங்களிலும், பள்ளியிலும் நீங்கள் சொல்லி இருப்பது போல பூமியின் சாய்வு அச்சினை வச்சு ஒரு விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க, ஆனால் பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும் சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும் சொல்கிறார்கள், அப்படி இருக்கும் எனில் இப்போது அளிக்கும் விளக்கங்கள் அனைத்துமே தவறாகிவிடும், சரியான விளக்கம் வேறு ஆக இருக்க வேண்டும் ,எளிதில் புரிய வைக்க இப்படியே விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்./// எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை நிலை இதுதான்
///பெரும்பாலும் கால நிலை மாற்றம் இப்படித்தான் உருவாகிறது என்பதற்காக சொல்லப்படுகிறது, உண்மையில் அது சரியான விளக்கமும் அல்ல.//// இதுதான் சரியான விளக்கம்
////பூமித்தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருப்பதால் , சூரியனை விட்டு விலகி இருக்கும் வட துருவம் , அடுத்த 24 மணிநேரத்தில் சூரியன் இருக்கும் பக்கம் வந்துவிடுமே, அப்புறம் எப்படி நிரந்தமாக குளிர்,கோடைகாலம் உருவாகிறது. ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மீண்டும் சூரியனை பார்க்க ஆரம்பித்துவிடும்,எனவே நிரந்தரமாக எந்த துருவமும் சூரியனை விட்டு விலகியே நிற்காது.//// இது தவறு
///கால நிலைமாற்றம் ஏற்படக்காரணம் நீள்வட்டப்பாதையும், பூமியின் சுழற்சியில் உள்ள அலைவும் காரணம், மேலும் பிளேன் ஆப் ரோட்டேஷனில் ஏற்படும் மாற்றமும் இருக்கிறது, இந்த பிளேன் ஆப் ரோட்டஷனில் உள்ள மாற்றத்தினை இதுவரையில் யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லை ,அல்லது இணையத்தில் இல்லை, இதன் அடிப்படையில் நானே ஒரு தியரி வச்சிருக்கேன் , நேரம் கிடைத்தால் பதிவு போடுகிறேன்./// அது நிச்சயம் புதுமையாக இருக்கும்.
///உண்மையில் பூமி செங்குத்தான அச்சில் சுழண்டாலும் கால நிலை மாற்றம் ஏற்படும், மேற் சொன்ன காரணங்களே போதுமானவை. மேலும் கூடுதல் காரணங்கள் பூமியின் வளிமண்டலம்,வளிமண்டலத்தின் சுழற்சி, பூமியின் நிலம்,நீர் பரவல் ஆகும். வடகோளார்த்தத்தில் அதிக நிளப்பரப்பும், தென்கோளார்த்தத்தில் அதிக நீர்பரப்பும் என உள்ளதால், பூமி சூடாவதில் ஒரு மாற்றம் உண்டாகிறது, கூடவே வளிமண்டல சுழற்சி, இதனால் கொரியாலிஸ் எபெக்ட், எல்நினோ,லாநினோ, தாழ்வழுத்த/ உயர் அழுத்தம் ஆகியன என எல்லாம் சேர்ந்து மழைப்பொழிவுகள் ஏற்படுகிறது./// நீள் வட்டப் பாதையும் அச்சின் சாய்வும்தான் வருடாந்திரபருவ நிலை மாற்றத்திற்கான காரணம். மேலும் அந்த அச்சின் பம்பர சுழற்சி 12000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் பனியுக மாற்றத்திற்கு காரணம்.
அடுத்த பதிவில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறேன்.
நீக்குஇதில் நீங்கள் இந்தியன் ஸ்டாண்டர்டு டைம் பற்றி குறிப்பிட வேண்டும்.(Indian Standard Time is calculated on the basis of 82.5° E longitude, in Mirzapur city (25.15°N 82.58°E) (near Allahabad in the state of Uttar Pradesh) which is nearly on the corresponding longitude reference line.)ஏனென்றால் வருடத்தில் இரண்டு நாள் மட்டும் 12மணிக்கு மிர்ஜாபூரில்தான் செங்குத்தாக நிற்கும் பொருள்களுக்கு நிழல் இல்லாமல் இருக்கும்.இதற்கு 25.15 எனும் அட்சரேகையே காரணம். சென்னை சுமார் 13.°N 80.°Eல் உள்ளதுஆகவே சென்னைக்கான 12 மணியை நிழலை வைத்துதான் கணக்கிடமுடியும் கடிகாரம் பொய் சொல்லிவிடும். அட்ச ரேகையின் வித்தியாசத்தால் நிழலின் வீச்சும், தீர்க்க ரேகையின் வித்தியாசத்தால் நேரமும் மாறுபடும்.
பதிலளிநீக்குஇதைப் பற்றி தனி பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.
நீக்குமிகவும் அருமையான, எளிமையான விளக்கம். மிக்க நன்றி. :)
பதிலளிநீக்குஅப்பா! எவ்வளவு அருமையான விவரணப் பதிவு. வாழ்த்துக்கள். ஒன்றைக் கவனிக்க வேண்டும் உலகின் மிக முக்கியமான பண்டிகைகள் பலவும் இதேக் காலக்கட்டத்தில் தான் வரும், அதே போல காலநிலை மாற்றங்களும் அப்போதே வரும். மார்ச் 21 வசந்த கால தொடக்கம், பண்டைய சமூகங்களில் இது புத்தாண்டாகவும் இருந்தது. ஜூன் 21 ல் முக்கியப் பண்டிகைகள் வருவதுண்டு. செப் 21 வாக்கில் இலையுதிர்காலம் தொடங்கும் இருள் கவ்வும் தீவாளி உட்பட ஒளி சார்ந்த பண்டிகைகள் பலவும் இக்காலக்கட்டதில் வரும், பேய்கள் விரட்டும் பண்டிகைகளும் வரும், திச 21 குளிர்கால தொடக்கம் பல அறுவடை திருநாள், சூரிய வணக்க பண்டிகைகள் வரும். இயற்கையும் வாழ்க்கையும் எப்படி இயைந்துள்ளன என்பதே வியப்பு . முகநூலில் இப்பதிவை பகிர்கின்றேன் நன்றிகள்
பதிலளிநீக்குஅதிசயமாக உள்ளது. இன்றுதான் இப்பதிவைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதனை நீங்கள் தந்துள்ள விதம் அருமை. நன்றி.
பதிலளிநீக்கு