என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 2 செப்டம்பர், 2013

விவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை

  கேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன் அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்)
 விவேகானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனையில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மஹாராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத்தி தேவையான வசதிகளை செய்து தந்தார். 
    மன்னர்   ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர்.  கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ்வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம்.
   அப்படித்தான் அன்று ஒரு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. மன்னர் விவேகனந்தரையும் நிகழ்ச்சியைக் காண அழைத்தார். 
அன்று நாட்டியம் ஆட இருந்தவர் ஒரு தேவதாசி. அவர் தெய்வ பக்தி உடையவர். தனது நாட்டியத்தை விவேகானந்தரும் காணப் போகிறார் என்று கேள்விப்பட்ட அந்த நாட்டிய மங்கை அளவிலா ஆனந்தம் அடைந்தார். உலகம் போற்றும் ஒருவரின் முன் தான் நாட்டியம் ஆடப் போகிறோம் என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். 

   ஆனால் விவேகனந்தரோ தேவதாசியின் நடனத்தை கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானது என்று கருதினார். 
அதனால் நாட்டிய நிகழ்ச்சிக்கு செல்ல வில்லை.

   அரங்கத்திற்கு விவேகானந்தர் வராததை அறிந்த அந்த நாட்டியமங்கை மனம் வாடினார். ஸ்வாமிஜி தன்னை புறக்கணிப்பதை அறிந்து  அளவிலா வேதனை அடைந்தார். அந்த வேதனையில் அவள் சூர்தாசரின் பாடல் ஒன்றைப் பாடி நடனம் ஆடினாள்.

 "இறைவா எனது தீய குணங்களை பார்க்காதே!
 உனக்கு முன்னே எல்லோரும் சமம் அல்லவா?
  ஓர் இரும்புத் துண்டு கோவிலில் விக்கிரமாகிறது. 
  இன்னொன்றோ கசாப்புக் கடைக்காரனின் கையில் கத்தியாகிறது. 
 ஆனால் பொற்கொல்லன் உரைகல்லுக்கோ இரண்டும் ஒன்றுதான் 
ஓர் ஓடையில் தூய நீர் 
மற்றொன்றில் சாக்கடை நீர் 
கங்கையில் சங்கமிக்கும்போது இரண்டும் ஒன்றாகி விடுமல்லவா?"

என்ற பொருள்படும்படி உருக்கமாக கண்ணில் கண்ணீருடன் பாடி ஆடுகிறாள் அந்தப் பெண். அந்தப் பாடல் காற்றில் மிதந்து வந்து விவேகானந்தரின் காதில் விழுகிறது. 
பாடலைக் கேட்கக் கேட்க அவரது உள்ளம உருகியது . "எல்லா உடல்களிலும் கோவில் கொண்டிருப்பது அந்த இறைவன்தான். இங்கே உயர்வு என்றும் தாழ்வு என்றும் ஏதாவது உண்டா?  இதை உணராமல் அந்த பெண்ணின் மனதை புண்படுத்தி விட்டோமே! " என்று வருந்திய விவேகானந்தர் உடனே அங்கிருந்து நாட்டிய அரங்கிற்கு சென்றார். அந்தப் பெண்ணின் முன்னால் நின்று கைகூப்பி,
"அம்மா! என் கண்களை திறந்து விட்டாய்? உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

---------------------------------------------------------------------------------------------
இதைப் படிச்சிட்டீங்களா?

எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க!

15 கருத்துகள்:

 1. கதை அருமை... உயர்வு - தாழ்வு : எல்லாம் மனதைப் பொறுத்து...!

  பதிலளிநீக்கு
 2. எந்தப் பாவமும் செய்யாதவர்கள் இவள்மீது முதல் கல்லை எறியட்டும என்று இயேசு சொன்னதாக ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. மாமேதைகள் எப்போதுமே மேதைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்... பணியுமாம் எனறும் பெருமை! அழகான கதையை படிக்கத் தந்தமைக்கு நன்றி முரளி அய்யா. பதிவர் திருவிழாவில் உஙகளை சந்தித்ததைப் பெரும் பெருமையாகக் கருதுகிறேன். நட்பு வலை விரியட்டும்.

  பதிலளிநீக்கு
 3. மற்றவர்களுடைய குணங்களில் நல்லதையும் உணர்ந்தால் அங்கு வெறுப்புக்கு இடமேது?மனிதரிடம் உயர்வு, தாழ்வு இல்லை என்பதை விவேகானந்தர் மூலம் உணர்த்திய கதை நன்று!
  த.ம-2

  பதிலளிநீக்கு
 4. மனிதர்களின் மனத்தை மட்டுமே பார்க்கவேண்டும் என்று உணர்த்தியது அருமை.

  பதிலளிநீக்கு
 5. அந்தப் பெண்ணின் முன்னால் நின்று கைகூப்பி,
  "அம்மா! என் கண்களை திறந்து விட்டாய்? உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?" என்று கண்ணீர் மல்கக் கூறினார்//

  இந்த பணிவுதான் அவரை அந்த அளவிற்கு உயர்த்தியது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. இதுவரை அறியாத கதை
  பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நல்ல கதை. விவேகானந்தரிடம் இருந்த பணிவினை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.
  உங்களை பதிவர் விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சி, முரளிதரன்.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. மிகச்சிறப்பான ஒரு பகிர்வு! பதிவர் விழாவில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. தெரியாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. சிறப்பான பதிவு அய்யா. இது போன்ற கதைகளை படிக்கும் போது மனது இன்னும் பக்குவப்படுகிறது எழுத்துக்கள் மூலம் மாபெரும் மாற்றத்தை ஒரு மனிதனினி மனதில் ஏற்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை, பதிவுத் திருவிழா சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள. நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 11. கருத்தை மிக இயல்பாக மனதினுள் கடந்தி சென்றது .பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. தாழ்வு மனப்பான்மைதான் வெற்றியைப் பாதிக்கிறது

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895