என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆவலுடன் அந்தரங்கம்!

    
  தினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில்  அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள் கூட்டம் நிறைய உண்டு.  அப்படி  ஒரு கூட்டம் ஒரு நாள் அவர்களின் இள வயதைத் தாண்டிய நண்பர் ஒருவரை பயங்கரமாகக் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். அவரைப் பார்த்தால் அப்பாவியாகத் தெரிந்தது. அவர்கள் எல்லை மீறி பேசிக்கொண்டிருந்தனர். அவர் கோபப் படாமல் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த புத்தகத்தை  காட்டி இத 'படிச்சி பாரு, இதுல இருக்கற மாதிரி ஆயிடப் போகுது ஜாக்கிரத!' என்று சொல்லி சிரித்தனர் அவர்கள் வைத்திருந்த புத்தகம் தினமலர் நாளிதழின் இலவச இணைப்பான வாரமலர்.அவர்கள் காண்பித்த பகுதி அன்புடன் அந்தரங்கம். இப்போது  ஓரளவுக்கு விஷயத்தை ஊகிக்க முடிந்தது.

  தினமலர்  வார மலரில் "அன்புடன் அந்தரங்கம்" என்ற பகுதி வெளிவருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதில் பலர் தங்கள் பிரச்சனைகளை சொல்லி தீர்வு கூறுமாறு கேட்பார்கள் இந்தப் பகுதியை மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதி வந்தார்.அவருக்குப் பின் சகுந்தலா கோபிநாத் என்பவரும் எழுதி வருகிறார்.இதில் தீர்வு கேட்பவர்கள் (ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி) பெரும்பாலும் முறையற்ற அந்தரங்க உறவுகளைப் பற்றியதாகவே இருக்கிறது. திருமணத்திற்கு முன்னும் பின்னும் தான் செய்யும் தவறான காரியங்களுக்கு தீர்வு கேட்பார்கள். திருமணத்திற்கு முன் பலபேருடன் உடல் ரீதியான உறவுகொள்பவர்கள், திருமணத்திற்குப் பின் கணவன்/அல்லது மனைவி வேறு ஒருவருடனோ பலருடனோ தொடர்பு வைத்திருத்தல், வயதானவர்களின் சேட்டைகள் உள்ளிட்ட, பலவற்றை  எல்லாம் அவர்களே விளக்கமாகச் சொல்லி ஆலோசனை கூறுமாறு  கேட்கிறார்கள். பெயர் மட்டும் குறிப்பிடுவதில்லை.

   இந்தப் பிரச்சனைகளுக்கு 'தகாத உறவுகளை விட்டுவிடுங்கள், வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்', என்று எல்லோருக்கும் தெரிந்த அறிவுரைகள் வடிவில் தீர்வுகள், ஆலோசனைகள்  சொல்லப் படுகின்றன. எனக்கு எழும் சந்தேகமெல்லாம் இந்த ஆலோசனைகள் உண்மையிலேயே பயன்படுமா என்பதே. ஆலோசனை சொல்பவர் டாக்டராகவோ, உளவியல் நிபுணரோ அல்லது  வல்லுனராக இருப்பதாகத் தெரியவில்லை.

  இன்னொரு ஐயம் என்னவென்றால் உண்மையிலேயே வாசகர்கள் தங்கள் பிரச்சனைகளை சொல்லி தீர்வு கேட்கிறார்களா? யாரேனும் இவ்வளவு அழகாக பிரச்சனைகளை எழுதி தங்கள் அந்தரங்க விஷயங்களை வெளிப்படுத்த முன் வருவார்களா? அப்படி எழுத முடிந்தவர்கள் தக்க மருத்துவரை நாடாமல் பத்திரிகைக்கு எழுதுவது ஏன்? இங்கு சொல்லப்படும் ஆலோசனைகளால் யாராவது பயன் பெற்றிருக்கிறார்களா?

   எனக்கு என்னவோ இது வாசகர்களை கவர்ந்திழுக்க கற்பனையாக எழுதப் படுவதுபோலவே தோன்றுகிறது. அதுவும் ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியான பிரச்சனைகளே வெவ்வேறு வடிவத்தில் கூறுவது ஐயத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

   எல்லாப் பிரச்சனைகளுமே முறை சாராத பிரச்சனையாகவே இருப்பதால் இதை அடிக்கடி படிக்கும் வாசகர்களின் மனதில் ஒரு எதிர்மறை எண்ணத்தை உண்டு பண்ணக் கூடிய அபாயம் இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது  சமுதாயத்தில் இது போன்ற உறவுகள் மிகச் சகஜம். நாமும் இது போல் இருப்பது தவறில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. குறிப்பாக பெண்கள் அந்தரங்க விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவது  போல அமைந்திருப்பது பெண்களை இழிவு படுத்துவதாகவே கருதுகிறேன். இதைப் படிக்கும் பக்குவமில்லாத டீன் ஏஜ் வயதினருக்கு (ஏன்? அதைக் கடந்தவர்களுக்குக் கூட) எதிர் பாலினத்தின் மீது "எல்லோருமே இப்படித்தான் போலிருக்கிறது' அவ நம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.

    நான் முன் பகுதியில் சொன்ன சம்பவத்தில் குறிப்பிட்ட நபரின் மனதில் என்னென்ன  விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கணிக்க முடியவில்லை. அவருக்கு வீண் சந்தேகங்களையும் மனக் குழப்பத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆனால் என்னை பொருத்தவரை அந்த அந்தரங்க செய்திகள் கிண்டல் செய்யப்பட்டவரை விட கிண்டல் செய்தவர்கள் மத்தியில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.

  நல்ல நோக்கத்துடன் இது வெளியடப்படுகிறது  என்று வைத்துக்கொன்டாலும் இதனால் கிடைக்கும் நன்மை மிகக் குறைவே! என்பது என் சொந்தக் கருத்து.

   இதை அந்தப் பத்திரிகை உணருமா? 
**************

நாளை: முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசைப் பின்னடைவு- காரணம் என்ன?

************************************************************************************
சுஜாதாவின் பச்சைப்பொய்கள்  பதிவை  ஹிட்டாக்கியதற்கு மிக நன்றி. சுஜாதா ரசிகர்கள் கோபப் பட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.( நிறையப் படிச்சிருந்தாலும் ஓட்டு போடாமப் போயிட்டாங்களே?)

இதைப்  படிச்சாச்சா?

                            
வடிவேலு வாங்கிய கழுதை
.நான் கழுதை 


 *********************************************

54 கருத்துகள்:

 1. ரயிலில் கவனிக்க ஏராள விஷயம் உண்டு சார். நீங்கள் தினம் போவதால் நிறைய எழுதலாம்

  அலெக்சா பற்றிய பதிவு விரைவில் எழுதி விடுங்கள் இந்த வாரம் எழுதினால் பலரை சேரும்

  பதிலளிநீக்கு
 2. //எனக்கு என்னவோ இது வாசகர்களை கவர்ந்திழுக்க கற்பனையாக எழுதப் படுவதுபோலவே தோன்றுகிறது.//

  நீங்கள் சொல்வது சரி என்றே நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 3. அந்தரங்கங்களை பத்திரிக்கைக்கு எழுதி கருத்துக் கேட்பவர்களை இரண்டு வகையாக நான் பார்க்கின்றேன். ஒன்று மருத்துவரை அணுக அச்சத்தால் இது போன்ற பத்திரிக்கைக்கு எழுதுவது, மற்றொரு பிரிவு தனது அந்தரங்கங்களை பகிர்வதால் கிளர்ச்சியடைவோர் !!!

  என்னைக் கேட்டால் மருத்துவரை அணுகுவது தான் சாலச் சிறந்தது !!!

  பதிலளிநீக்கு
 4. இக்பால் செல்வன் said...
  அந்தரங்கங்களை பத்திரிக்கைக்கு எழுதி கருத்துக் கேட்பவர்களை இரண்டு வகையாக நான் பார்க்கின்றேன். ஒன்று மருத்துவரை அணுக அச்சத்தால் இது போன்ற பத்திரிக்கைக்கு எழுதுவது, மற்றொரு பிரிவு தனது அந்தரங்கங்களை பகிர்வதால் கிளர்ச்சியடைவோர் !!!\
  என்னைக் கேட்டால் மருத்துவரை அணுகுவது தான் சாலச் சிறந்தது !!!
  உங்கள் கருத்தே என் கருத்தும் நன்றி இக்பால்

  பதிலளிநீக்கு
 5. //வே.நடனசபாபதி said...
  //எனக்கு என்னவோ இது வாசகர்களை கவர்ந்திழுக்க கற்பனையாக எழுதப் படுவதுபோலவே தோன்றுகிறது.//
  நீங்கள் சொல்வது சரி என்றே நினைக்கின்றேன். //
  ஆமாம் சார். நன்றி

  பதிலளிநீக்கு
 6. சும்மா இருக்கிறவங்களை உசுப்பேற்றும் வேலை இது. அதே போல கலாசார காவலர்களாக கருதிக்கொண்டு கனடாவிலும் அமெரிக்காவிலும் நடக்கும் சீரழிவுகளையும் செய்தியாக்கி பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய கற்பனைத்திறனை மருத்துவம் என்ற பெயரில் மஞ்சள் பத்திரிக்கையாக்குகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 7. இது சர்குலேஷனை அதிகரிக்க நடிகரின் அந்தர்ங்கங்கள் கிசுகிசு ஆக்கப்பட்டு வந்தது போல் வேறு முயற்சி தான். தொலைக்காட்சிகளின் ‘புதிரா புனிதமா?’ போன்ற நிகழ்சிகளும் இது போல நடப்பவை தான். அதிலாவது அந்தந்தத் துறை நிபுணர்கள் (மாத்ருபூதம் போல்) வந்தார்கள். இதில் கதாசிரியர்கள் மற்றும் வேறு துறை சார்ந்தவர்கள் வருவது எந்தளவு கேள்வி கேட்பவருக்கு நன்மை செய்ய முடியும் என்பது புரியவில்லை.

  நல்ல அலசல்.

  பதிலளிநீக்கு
 8. எதைச் சொல்வது எனப் புரியவில்லை. வாசித்தேன் சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 9. முடிவில் தங்களின் கருத்து உண்மை...

  சிலவற்றை வெளிப்படையாக 'பேசுவதே' தவறு...

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM 3)

  பதிலளிநீக்கு
 10. இங்கு இலங்கையி கூட "பிரியா" என்றொரு பத்திரிக்கை , இதே போல் "ஆலோசனை" வழங்கும் வேலையை பார்த்துகொண்டிருந்தது. ஆனால் அந்த பத்திரிக்கையை , நாங்கள் ஏதோ பலான பத்திரிக்கை ரேஞ்சில் தான் பயன்படுத்துவோம். எல்லாம் அம்பானி மூளை.. வியாபார யுக்தி!

  பதிலளிநீக்கு
 11. Dear sir,
  Im also thinking as you like. The dinamalar is always giving some volgar exp. in the article.

  பதிலளிநீக்கு
 12. இவை அப்பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க அவர்கள் கையாளும் தந்திரம். அத்துடன் நம்மவர்களும் அடுத்தவரை எட்டிப்பார்ப்பதில் இன்பம் காணும் போக்கு அதிகம் கொண்டோர்.
  அதனால் கற்பனைக் கேள்வி பதிலே இதில் அதிகம். ஒரு சிலர் வைத்தியரிடமும் தம் முகத்தைக் காட்ட விரும்பாதோர் எழுதலாம்.
  நீங்கள் கூறுவதுபோல் இவை வாசிப்போர் மனதில் நம் சமுதாயமே இப்படி தான் போலுள்ளது, என இதைச் சகஜமாகக் கொள்ள வாய்ப்புள்ளது.
  பல பத்திரிகைகள் - மஞ்சள் பத்திரிகையாகத்தானே நம் வீடுகளில் வலம் வருகின்றன.
  அத்துடன் கள்ளத் தொடர்புக் கதையற்ற தொடருண்டா?, மானாட மயி(ரா)லாட கெமிஸ்ரியில் மூழ்காத வீடுண்டா?
  எல்லாம் உலகமயம்....வல்லரசுக்குள் அடங்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
 13. மிகவும் உண்மை! அந்த பகுதி இப்போது தரம் குறைந்து விட்டது! வியாபாரத்துக்கு செய்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது!

  இன்று என் தளத்தில்
  அஷ்டமி நாயகன் பைரவர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் சொல்லும் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இந்த மாதிரி எங்கோ ஒரு இடத்தில் நடப்பதை திரும்பத் திரும்ப சொல்லும்போது அது நடைமுறையாகும் சாத்தியம் அதிகம். பத்திரிக்கைகள் தங்கள் தர்மங்களை மீறாமல் இருக்க வேண்டும். இதே தான் சின்னத் திரையில் வரும் தொடர்களில் இடம் பெறும் அடுத்தவர் கணவனை ஆசைப்படுவது என்பது அனேகமாக எல்லா தொடர்களிலும் இடம் பெறுகிறது. இரண்டு மனைவிகள் என்பதும் தவறில்லை என்பதுபோல் சித்தரிக்கப்படுகிறது.இதையெல்லாம் பார்க்கும் இளைய சமுதாயம் இது தான் நம் கலாச்சாரம் எனும் தவறான புரிதலுக்கு வர வாய்ப்புள்ளது. அந்தரங்கம் அந்தரங்கமானது. அதைக் கடைச் சரக்காக்காமல் மருத்துவரை அணுகுதல் நலம். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 15. நல்ல அலசல்....

  தொடரட்டும் பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
 16. நல்ல அலசல்
  எனக்கும் அது கற்பனையாகத்தான்படுகிறது
  அவர்கள் செய்வது நிச்சயம் பயனற்றது
  அறியாதிருக்கும் மற்றவர்களுக்கு வாழ்வின்
  அசிங்கமான பக்கத்தை
  அறியச் செய்வது போல் உள்ளது

  பதிலளிநீக்கு
 17. Gobinath said...
  சும்மா இருக்கிறவங்களை உசுப்பேற்றும் வேலை இது. அதே போல கலாசார காவலர்களாக கருதிக்கொண்டு கனடாவிலும் அமெரிக்காவிலும் நடக்கும் சீரழிவுகளையும் செய்தியாக்கி பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய கற்பனைத்திறனை மருத்துவம் என்ற பெயரில் மஞ்சள் பத்திரிக்கையாக்குகிறார்கள்.//
  உண்மைதான் கோபி

  பதிலளிநீக்கு
 18. //வெங்கட ஸ்ரீநிவாசன் said...
  இது சர்குலேஷனை அதிகரிக்க நடிகரின் அந்தர்ங்கங்கள் கிசுகிசு ஆக்கப்பட்டு வந்தது போல் வேறு முயற்சி தான். தொலைக்காட்சிகளின் ‘புதிரா புனிதமா?’ போன்ற நிகழ்சிகளும் இது போல நடப்பவை தான். அதிலாவது அந்தந்தத் துறை நிபுணர்கள் (மாத்ருபூதம் போல்) வந்தார்கள். இதில் கதாசிரியர்கள் மற்றும் வேறு துறை சார்ந்தவர்கள் வருவது எந்தளவு கேள்வி கேட்பவருக்கு நன்மை செய்ய முடியும் என்பது புரியவில்லை.
  நல்ல அலசல்.//
  நன்றி வெங்கட் ஸ்ரீனிவாசன்

  பதிலளிநீக்கு
 19. kovaikkavi said...

  எதைச் சொல்வது எனப் புரியவில்லை. வாசித்தேன் சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.//
  நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 20. //திண்டுக்கல் தனபாலன் said...
  முடிவில் தங்களின் கருத்து உண்மை...
  சிலவற்றை வெளிப்படையாக 'பேசுவதே' தவறு...
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM 3)//
  வருகைக்கும் கருத்துக்கும் வாகிற்கும் மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 21. //கிஷோகர் said...
  இங்கு இலங்கையி கூட "பிரியா" என்றொரு பத்திரிக்கை , இதே போல் "ஆலோசனை" வழங்கும் வேலையை பார்த்துகொண்டிருந்தது. ஆனால் அந்த பத்திரிக்கையை , நாங்கள் ஏதோ பலான பத்திரிக்கை ரேஞ்சில் தான் பயன்படுத்துவோம். எல்லாம் அம்பானி மூளை.. வியாபார யுக்தி!//
  நன்றி கிஷோகர்

  பதிலளிநீக்கு
 22. Anonymous said...
  Dear sir,
  Im also thinking as you like. The dinamalar is always giving some volgar exp. in the article.//

  நன்றி.

  பதிலளிநீக்கு
 23. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  இவை அப்பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க அவர்கள் கையாளும் தந்திரம். அத்துடன் நம்மவர்களும் அடுத்தவரை எட்டிப்பார்ப்பதில் இன்பம் காணும் போக்கு அதிகம் கொண்டோர்.
  அதனால் கற்பனைக் கேள்வி பதிலே இதில் //அதிகம். ஒரு சிலர் வைத்தியரிடமும் தம் முகத்தைக் காட்ட விரும்பாதோர் எழுதலாம்.
  நீங்கள் கூறுவதுபோல் இவை வாசிப்போர் மனதில் நம் சமுதாயமே இப்படி தான் போலுள்ளது, என இதைச் சகஜமாகக் கொள்ள வாய்ப்புள்ளது.
  பல பத்திரிகைகள் - மஞ்சள் பத்திரிகையாகத்தானே நம் வீடுகளில் வலம் வருகின்றன.
  அத்துடன் கள்ளத் தொடர்புக் கதையற்ற தொடருண்டா?, மானாட மயி(ரா)லாட கெமிஸ்ரியில் மூழ்காத வீடுண்டா?
  எல்லாம் உலகமயம்....வல்லரசுக்குள் அடங்கிவிட்டது.//
  அதற்காகத்தானே கதாசிரியரை ஆலோசகராக வைத்திருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 24. /s suresh said...
  மிகவும் உண்மை! அந்த பகுதி இப்போது தரம் குறைந்து விட்டது! வியாபாரத்துக்கு செய்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது!//
  நன்றி சுரேஷ்

  பதிலளிநீக்கு
 25. ezhil said...
  நீங்கள் சொல்லும் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இந்த மாதிரி எங்கோ ஒரு இடத்தில் நடப்பதை திரும்பத் திரும்ப சொல்லும்போது அது நடைமுறையாகும் சாத்தியம் அதிகம்//
  நன்றி எழில்

  பதிலளிநீக்கு
 26. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல அலசல்.... //
  நன்றி வெங்கட் சார்!

  பதிலளிநீக்கு
 27. Ramani said...
  நல்ல அலசல்
  எனக்கும் அது கற்பனையாகத்தான்படுகிறது
  அவர்கள் செய்வது நிச்சயம் பயனற்றது
  அறியாதிருக்கும் மற்றவர்களுக்கு வாழ்வின்
  அசிங்கமான பக்கத்தை
  அறியச் செய்வது போல் உள்ளது//

  வருகைக்கும் கருத்துக்கும் வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. நல்ல அலசல், வாரமலர் இம்மாதிரி வாசகர் எழுதும் கடிதங்களை வைத்திருக்கிறதா (அல்லது) இவர்களாகவே எழுதுகிறார்களா என தெரியவில்லை.. இருந்தாலும் நம்மவர்களுக்கு அடுத்தவர் அந்தரங்கம் அறிய உள்ள ஆர்வத்தை நன்றாக கல்லா கட்டுகிறார்கள்!!

  பதிலளிநீக்கு
 29. || நல்ல நோக்கத்துடன் இது வெளியடப்படுகிறது என்று வைத்துக்கொன்டாலும் ||

  நிச்சயம் இல்லை !!

  சினிமாவில் வன்முறையும்,முறையற்ற,வக்கிரமான காமமும் படம் நெடுகிலும் காட்டப்பட்டு, கிளைமாக்சில் அந்தக் காமந்தகன்|தகி தண்டனையடைவது போல் காட்டிவிட்டு, சமூகத்திற்கு நாங்கள் நன்மை செய்யத்தான் படமெடுக்கிறோம் என்று ஜல்லியிடிப்பவர்கள் போன்றதே தினமலரிம் அன்புடன் அந்தரங்கம்..அதை எழுதுவது ஸ்யூடோ வாக (தினமலர்)ரமேஷ் என்பது எனது அனுமானம்.

  பதிலளிநீக்கு
 30. யோசிக்க வேண்டிய, அதேநேரம் சற்று முன்னமேயே வந்திருக்க வேண்டிய சிறந்த பதிவு.....

  பொண்டாட்டிய காணும்னு ரயில்வே ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிற முட்டாள்கள் நிஜ வாழ்கையில் இல்லவே இல்லை..... ஆனால் இந்தப் பத்திரிகையின் இந்தப் பகுதி அப்படியும் மனிதர்கள் இருப்பதாய் சித்தரித்துக் காட்டுகிறது.....

  இது முழுக்க முழுக்க தரம் தாழ்ந்த வியாபார உத்தி என்பதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை......
  மிகச் சிறந்த பதிவு......

  பதிலளிநீக்கு
 31. முரளி அண்ணே, அன்புடன் அந்தரங்கம் .உங்க கருத்துதான் அன்னது...அந்த பத்திரிக்கை அத நீக்கினா நல்லதுதான் ...

  ஃபாலோவர் ஆயிட்டேன்(இத்தனை நாள் ஆகாம இருந்திருக்கேன்!!!!!), இனி ரெகுலரா வந்துடுவேனு நினைக்கிறேன். :-)))

  பதிலளிநீக்கு
 32. பெரும்பாலும் இவை கற்பனையே.. ஒன்றிரண்டு உண்மைக் கடிதங்கள் வரலாம். உலகமெங்கும் இதே கதை. ஆனால் இதே டிவியில் வரும்பொழுது அசல் நிகழ்வுகள் தான் பெரும்பாலும் வருகின்றன. டிவியில் அடித்துக் கொள்வார்கள், அணைத்துக் கொள்வார்கள்...

  அலெக்சா என்றால் என்னவென்று அறியும் ஆசையைக் கிளப்பிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 33. jerry springer என்பவர் இந்த வகை ஒளிபரப்புகளில் விற்பன்னர்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895