என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 4 மார்ச், 2013

இப்படியும் ஒரு பெண்!

   சில பெண்களின் மன உறுதியும் விடா முயற்சியும் அயராத உழைப்பும்  பல சமயங்களில் என்னை வியக்க வைத்திருக்கின்றன. இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஏன்? ஆண்களைவிட , ஆண்களுக்கேன்றே கருதிவந்த தொழில்களையும் சிறப்பாக செய்து அசத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடலட்சுமி. காக்கி சட்டை அணிந்து ஆட்டோ ஒட்டிய இவர் கருப்பு  கோட் அணிந்து  நீதிமன்றம் செல்லப் போகிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா? இதோ அவரது கதை 

 பொதுவாக ஆட்டோ ஒட்டுனர்களாக பெண்கள் இருப்பது அரிது. இவர் ஆட்டோ ஒட்டுனரானது எதிர்பாராதது. தொடக்கத்தில் கணவரின் வருமானம் போதாத நிலையில் ஐம்பது , நூறு பேருக்கு சமையல் செய்து அனுப்பி சம்பாதித்து வந்தார். சமைத்த உணவை கொண்டு செல்லும் ஆட்டோ டிரைவர் சரிவர வராமல் வெங்கடலட்சுமியை சங்கட லட்சுமியாக்கிவிட்டார்.  அதிலிருந்து தானே ஆட்டோ ஓட்டுனராக முடிவு செய்தார். அதுவே பிட்த்துப் போக,சமையல் தொழிலை விட்டுவிட்டு  2001 இல் இருந்து முழு நேர  ஆட்டோ ஒட்டுனரானார். இவரது நேர்மை, வாடிக்கையாளர்களிடம் பழகும் முறை ஆங்கிலம் பேசும் திறமை போன்றவற்றால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள் பலர் இவரது ஆட்டோவைத் தேடி வந்தனர். 

  அப்படியே  எளிதாகப் போய்விடவில்லை வாழ்க்கை!. திடீரென ஒரு நாள்  ஐந்து ரவுடிகள் இவரை தாக்கி, கடத்தி சமூக விரோதிகளிடம் விற்க முயன்றனராம். அவர்களிடம் போராடித் தப்பிய வெங்கடலட்சுமி போலீசில் புகார் கொடுக்க அவரது புகார் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. நடையாய் நடந்து அதிகாரிகள் முதல் அமைச்சர்வரை முறையிட்டு புகாரை பதிவு செய்யவே  போராடி இருக்கிறார். இந்த வழக்கு கோர்ட்டுக்கு வரவே பல ஆண்டுகள் ஆயிற்றாம். இவர் சார்பில் வாதாடிய  வழக்கறிஞர் வக்கீல் வண்டுமுருகன் போல் சொரத்தில்லாமல் வாதாட, நொந்து போனார் வெங்கடலட்சுமி .

  தன்னைப்  போன்று இன்னும் எத்தனை பேர் இது போன்ற வக்கீல்களால் நீதி கிடைக்கப் பெறாமல் போயினரோ என்ற எண்ணம் ஏற்பட்டது வெங்கடலட்சுமிக்கு.அப்போதே முடிவு செய்தார் தானே வக்கீல் ஆவதென்று . ஏற்கனவே எம்.ஏ. கரஸ்பாண்டன்ஸ் மூலம் படித்திருந்த வெங்கடலட்சுமி ஐந்து ஆண்டு  படிப்பான LLB இல் பாபு ஜெகஜீவன்ராம் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார், காலையில் கல்லூரி;மாலையில் ஆட்டோ சவாரி; என்று கடுமையாக உழைத்து ஐந்து ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்து சாதித்தார். 
   மகளை பள்ளிக்கு அனுப்புவது முதல் அனைத்து வீட்டுப் பணிகளையும் செய்து முடித்து ஆட்டோவும் ஒட்டி முழு நேரமும் ஓய்வின்றி உழைத்து தன முயற்சியில் வெற்றி பெற்ற இந்தப் பெண்ணை பாராட்டுவதற்கு வார்த்தைகளைத் தேடிக்  கொண்டிருக்கிறேன். 
   எப்படி இவரால் இதை சாதிக்க முடிந்தது? எல்லாப் பாடப் புத்தகங்களையும் எப்போது ஆட்டோவில் வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் படித்து விடுவாராம். இரவில்  ஒன்பதாவது படிக்கும் மகளுடன் சேர்ந்து படிப்பை தொடர்வாராம். 

 அது மட்டுமல்ல! அதையும் தாண்டி இன்னுமொன்றும் செய்யவேண்டி இருந்தது வெங்கடலட்சுமிக்கு. நீதிமன்றங்களில்வாதாடுவதற்கு பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டுமே! மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முடிக்க ஐந்து ஆண்டு எடுத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டு படிப்பை ஐந்தே ஆண்டில் முடித்த இவருக்கு பார் கவுன்சில் தேர்வா அச்சம்தந்திருக்க முடியும்? அதிலும் தேர்ச்சிபெற்று  வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார். இந்த மார்ச் மாதத்தில் நீதிமன்றப் பிரவேசம் செய்ய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  ஒரு திறமையான நேர்மையான ஆட்டோ ஓட்டுனராக இருந்த வெங்கடலட்சுமி நீதி கிடைக்காத பெண்களுக்காக வாதாடுவதை முதன்மையாகக் கொள்வேன் என்று உறுதி உரைக்கிறார்.

 ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமல்ல முன்னேறத் துடிக்கும் அனைத்து இளைஞர்களும்  இவருடைய நேர்மை நாணயம் உழைப்பு உறுதி இவற்றை இவரிடமிருந்து கற்றுக்கொண்டால் உயர்வு நிச்சயம்.
சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் இவரை வாழ்த்துவோம் பாராட்டுவோம்!

********************************************************************************************
இதைப்  படித்துவிட்டீர்களா?
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! 

44 கருத்துகள்:

 1. வெங்கடலட்சுமி அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்...

  பதிலளிநீக்கு
 2. உண்மையான உழைப்பு எப்போதும் உயர்வுதான். நிச்சயம் வாழ்த்தத்தான் வேண்டும் கூடவே வணங்கினாலும் தவறில்லை.

  பதிலளிநீக்கு
 3. இவரை வாழ்த்தி பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் இவரை முன்னுதாரணமாக கொண்டு வாழக் கற்றுக் கொள்வோம் & கற்றும் கொடுப்போம்

  பதிலளிநீக்கு
 4. தலை வணங்குகிறேன்..வேறு வார்த்தை இல்லை சொல்ல..பிரமிப்பா இருக்கு....

  பதிலளிநீக்கு
 5. *** அப்படியே எளிதாகப் போய்விடவில்லை வாழ்க்கை!. திடீரென ஒரு நாள் ஐந்து ரவுடிகள் இவரை தாக்கி, கடத்தி சமூக விரோதிகளிடம் விற்க முயன்றனராம். அவர்களிடம் போராடித் தப்பிய வெங்கடலட்சுமி போலீசில் புகார் கொடுக்க அவரது புகார் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.***

  இதுமாதிரி பிரச்சினைகள் வருமென்றுதான் பெண்கள் யாரும் இதுபோல் துணிவதில்லை! நம்மாளுக, நியாயமாக தொழில் செய்ற யாரையும் நிம்மதியா வாழவிடமாட்டாணுக! :(

  I dont understand why should we be proud of being an INDIAN?

  சமையல் -> ஆட்டோ -> வழக்கறிஞர்

  வழக்கறிஞராகவாவது நிம்மதியா வாழவிட்டால் சரிதான்! விடுவார்களா??

  பதிலளிநீக்கு
 6. பதிவு அருமை.
  வெங்கட லட்சுமி அவர்களை வாழ்த்தி வணங்கவேண்டும்!

  பதிலளிநீக்கு
 7. தன்னம்பிக்கை பெண்மணி.... இன்னும் பல வெங்கட லட்சுமிகள் பிறக்க வேண்டும் இந்நாட்டில்.....

  பதிலளிநீக்கு
 8. சபாஷ் வருண்! அவருடைய கருத்துதான் என்னுடையதும்கறதால வரிக்கு வரி ஆமோதிச்சு, விலகறேன் முரளி!

  பதிலளிநீக்கு
 9. வணங்குகிறேன்
  உதாரணப் பெண்ணை...

  பதிலளிநீக்கு

 10. சாதனைப் பெண் பெங்களூர் வெங்கடலட்சுமி. பற்றிய பதிவு ஓன்றினித் தந்து, பாராட்டிய மூங்கிற் காற்று T N முரளிதரனுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 11. சங்கடமான தருணங்களை சாதனைகளாக்கிக்கொண்ட வக்கில் வெங்கடலட்சுமிக்கு வாழ்த்துக்கள்... நிகழவைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி முரளிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோர்ந்து கிடப்பவர்களுக்கு நப்பிக்கை ஊட்டும் இவர் வாழ்க்கை

   நீக்கு
 12. இறையருள் அவர் பக்கம் எப்போதும் ஒளிவீசட்டும் பெண்களுக்காக ஒரு விடிவெள்ளியாய் புறபட்டு வரட்டும் பாராட்டுகள் நல்ல பகிர்வை கொடுத்த் உங்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 13. ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமல்ல முன்னேறத் துடிக்கும் அனைத்து இளைஞர்களும் இவருடைய நேர்மை நாணயம் உழைப்பு உறுதி இவற்றை இவரிடமிருந்து கற்றுக்கொண்டால் உயர்வு நிச்சயம்.
  சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் இவரை வாழ்த்துவோம் பாராட்டுவோம்!//

  வெங்கடலட்சுமியை வாழ்த்துவோம், பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 14. அடுத்து இந்தம்மா வாதடுவதைக் கேட்டு தீர்ப்பு சொல்ப்வராவது சரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நல்ல நீதிபதி நாட்டுக்கு கிடைக்கும்படி ஆனாலும் ஆகலாம்.... எப்பூடி..............

  பதிலளிநீக்கு
 15. "நா வேணும்னா படிச்சி, ஒரு Doctor 'ஒ , Engineer 'ஒ அகிடட்டுமா" என்று கிண்டலா படத்துல பார்த்த ஞாபகம். நிஜ வாழ்விலும் இது சாத்தியம்னு நிறுபித்திருக்கிறார்கள் என்றால். அவர் பாராட்டப்பட வேண்டிய நபர் தான். அவரது உழைப்பிற்கும் இலட்சியத்திற்கும் எனது பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 16. நிச்சயம் பாராட்ட வேண்டும்!மார்ச் 8ஐ வரவேற்கும் பதிவு!

  பதிலளிநீக்கு
 17. சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் சாதனைப் பெண்ணை வாழ்த்துவோம் பாராட்டுவோம்!

  பதிலளிநீக்கு
 18. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா! தங்கள் பதிவில் இடம்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 19. முயற்சி தன்மெய் வருத்தக் கூலி தரும் என்பதை நிரூபித்த சாதனைப் பெண் பாராட்டப் பெற வேண்டியவர். சகோதரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழகின்றேன். இவரின் வாழ்வு மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரனமாய் அமையும்.

  பதிலளிநீக்கு
 20. விடாமுயற்சியும் ஊக்கமும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்று நிரூபித்திருக்கின்றார்.இவ்வாறான சம்பவங்களை படிக்கும் போது எம மனதிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகின்றது.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895