என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

நுகர்வு வெறி !

     இன்று நுகர்வோர் உரிமை நாள்.மார்ச் 15 ம் நாள் நுகர்வோர் உரிமை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது.அந்த நாளில்தான் (15.03.1983)அமெரிக்க  நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி அவர்கள் நுகர்வோரின் உரிமைகளைப் பிரகடனம் செய்து உரை நிகழ்த்திய நாள். நாம் பணம் கொடுத்துப் பெறும் எந்த ஒருபொருளும் அல்லது சேவையும் அதன் மதிப்புக்கேற்ப இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் அதை தட்டிக்கேட்கவும் உரியதைப் பெறவும் நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு.நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்க தேவையான அளவு சட்டங்களும் உள்ளன.
 
    சமீப காலங்களில் நுகர்வோரின் உரிமைகள் பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்தாலும் நுகழ்வோர் விழிப்புணர்வு நம்நாட்டில் குறைவு என்றே கூறுகிறார்கள்.  
   படித்தவர்களும்  நுகர்வோர் உரிமைகளை அறியாதவர்களாகவோ அல்லது நமக்கு  எதற்கு இந்த வம்பு என்ற மனப்பான்மை உடையயவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் கௌரவம் கருதியும் உரிமைகளை கேட்கத் தயங்குவது கண்கூடு. இந்த நிலை காரணமாக வாழ்வின் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்கும்போது கூட நுகர்வோர் ஏமாற்றப்படுகிறார்கள். அல்லது குறைபாடுடைய சேவையைப் பெறுகிறார்கள்.

   நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரின் பணப் புழக்கம் காரணமாகவும் மீடியாக்களின் விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம்.தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் வகைகளாகக் கொள்ளலாம். 

   பல்வேறு மாயாஜாலம் காட்டும்  விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும்  நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. அவை
 1. ஆராய்ந்து அறியும் பொறுப்பு: நாம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள் அல்லது சேவையின் விலை தரம் ஆகியவற்றைப் பற்றி விழிப்புடன் இருந்து கேள்விகள் கேட்கவேண்டும்.பொருள் அல்லது சேவையை பற்றிய உண்மைகளை வெவேறு இடங்களிலிருந்தும் விசாரித்து அறிந்து வாங்க வேண்டும்.பணத்துக்கு மதிப்பு, சுற்றுச் சூழலுக்கு மதிப்பு,மக்களுக்கு மதிப்பு ஆகியவற்றைப் பற்றியும் கேட்டறிய வேண்டும்.
 2. செயல்படும்  பொறுப்பு: நுகர்வோரான நாம் நம் உரிமைகளை நிலைநாட்டி நமக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்படவேண்டியது நமது பொறுப்பாகும். சமுதாயத்தில் இருக்கும் மற்றவர்களோடு நமக்கு உள்ள உறவுகளை நாம் மதிக்கிறோம். ஆனால் நமது மதிப்புகளை விட்டுக்கொடுக்காமல் நியாயம் பெறுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
 3. சமுதாயம் பற்றிய சிந்தனை: ஒரு பொருளையோ சேவையையோ நாம்  பயன்படுத்துவதால் மற்ற குடிமக்களுக்கு குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கின்ற வசதியும் வலிமையும் இல்லாத சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படக் கூடிய விளைவுகளை எண்ணிப் பார்த்து உணர்கின்ற தன்மை உடையவர்களாக இருப்பது நமது பொறுப்பாகும். நாம் பயன் படுத்தும் பொருள்களும் சேவைகளும் மற்றவர்களுக்கு துன்பம் தராத சூழ்நிலைகளில் தயாரிக்கப் பட்டவைதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
 4. சுற்றுச் சூழல் பற்றிய சிந்தனை : நம்முடைய நுகர்ச்சியினால் சுற்று சூழலுக்கும் மற்ற வகையிலும் ஏற்படக்கூடிய விளைவை எண்ணிப் பார்க்க வேண்டும்.நாம் வாழும் இந்த பூமியும் இயற்கை வளங்களும்  எதிர்காலச் சந்ததியினருக்கும் சொந்தம் என்பதை உனர்ந்து அவற்றை வீணாக்காமல் பாதுகாக்கவும் பொறுப்பேற்க வேண்டும். பொருள்களின் அல்லது சேவைகளின்  உற்பத்தி, பயன்பாடு மற்றும் அப்புறப் படுத்துதல் ஆகியவை சூற்றுச் சூழலுக்கு தீங்கு செய்யாதவையாக இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பும் நம்முடையதாகும்.
 5. இணைந்து செயல்படல்: நுகர்வோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓர் அமைப்பை நிறுவுகின்ற பொறுப்போடு நுகர்வோர் நலத்தை பாதுகாக்கவும் மேம்படச் செய்யவும் உலகமும் சந்தையும் நீதியுடனும் நேர்மையுடனும் திகழச்செய்ய பாடுபடுபவரோடு துணை நிற்பதும் நம் பொறுப்பாகும்.நுகர்வோர் நலம் பற்றி அறியாத பாமரமக்களுக்கு உதவுவதும் நம் கடமையாகும்.  
     இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நுகர்வு அமைதல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயக்கும். 

  பொறுப்பான  நுகர்வோருக்கான அடையாளங்கள்,மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்களின் முகவரிகள் ஆகியவற்றை அடுத்த வாரம் காண்போம். 
                                                (தொடரும்)
  *****************************************************************************************************

24 கருத்துகள்:

 1. பலரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 2. இவற்றையெல்லாம் யார் சிந்திக்கிறார்கள். சிந்திக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் சிந்திக்க வைக்க முயற்சி செய்வோம்.
   நன்றி சசிகலா

   நீக்கு
 3. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். இன்று நுகர்வோர் உரிமை நாளில் பதிவிட்டது சிறப்பு. அரசு இதற்காக பள்ளி மாணவர்களிடையே மாவட்டந்தோறும் நுகர்வு சம்மந்தமான தலைப்புகளில் கட்டுரை, கவிதை, ஓவியம் என்று விழிப்புணர்வு போட்டிகள் நடத்தியது. என் பெண் மாவட்ட அளவில் ஓவிய போட்டியில் கலந்து வெற்றி அடைந்து இன்று கலெக்ட்டரிடம் பரிசு பெற்றாள். இன்று நடந்த விழாவில் அனைவரும் விளம்பரங்களுக்கு ஏற்படும் disadvantage பற்றிதான் பேசினார்களாம். விளம்பரங்களினால் நன்மைகளும் உண்டு. நன்மை, தீமை பற்றி உங்கள் அடுத்த தொடரில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். விழிப்புணர்வு தரும் உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெறும் படிப்பு மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் உங்கள் மகளை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது.இதுவே உண்மையான கல்வி. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.

   நீக்கு
 4. நன்றி முரளி! அறிய வேண்டிய தகவல் விளக்கமும் நன்று!

  பதிலளிநீக்கு
 5. அருமை ! பயனுள்ள பதிவு ; வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 6. எல்லோருக்கும் விழிப்புணர்ச்சியை அழகாக சொல்லியுலீர்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 7. மிகவும் பொறுப்புணர்வாக எழுதப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அய்யா. தொடருங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  அவசியமாய் அறிய வேண்டிய நல்ல சிந்தனையுள்ள கருத்துக்கள் அழகாக தொகுத்த வழங்கிய உங்களக்கு பாராட்டுக்கள் அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 10. ராம்நாட் - கோமுட்டி வற்றல்
  உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
  பாபநாசம்- கார்லிக் நான்
  கீழக்கரை - புளியோதரை, வென்பொங்கல் தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
  ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்
  சென்னை-நெல், அவல்,பீடி
  மதுரை -இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை
  கல்லிடைக்குறிச்சி -அப்பளம், சரவணன்-மீனாட்சி
  திருநெல்வேலி- மல்லிகைப்பூ, கவிதை
  குற்றாலம்- ரசமலாய், பாப்கார்ன்
  கடையநல்லூர்-இடிச்சபுளி
  பொட்டல்புதூர்-சர்க்கரைப் பொங்கல்
  பாபநாசம்- கார்லிக் நான்
  இராஜபாளையம் - கொயயாப்பழம், குள்ளக்கத்திரி வத்தல்
  குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு, அன்ரூல்ட் பேப்பர் பொரியல்
  கொல்லாம் பழம் ,
  நெல்லை - அல்வா,பாப்பாளி தோசை
  மணப்பாறை - முருக்கு, மண்டைப்பனியாரம்
  சாத்தூர் - சேவு,சாமியார்கோட்டம் பாக்கு
  சங்கரநயினார் கோவில் - பிரியாணி, கருப்பு அவரைக்காய் கூட்டு
  ப்ரானூர் பார்டர் - சிக்கன், சின்ன மாம்பழம்
  நாமக்கல் - முட்டை, பல்பு மீன் வருவல்
  பழனி - பஞ்சாமிர்தம்
  கோயம்புத்தூர் - மைசூர்பாக், சப்போட்டா தொக்கு,மிளாகா ரசம்
  திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி,தக்காளி வருவல்
  பொள்ளாச்சி - இளநீர், வெண்டைக்கா பாயாசம்
  ராமேஸ்வரம் - கருவாடு, மழிப்பிமீன் தொக்கு
  உடன்குடி - கருப்பட்டி
  சவுதி - பேரீச்சம்
  திருப்பதி - லட்டு
  விருதுநகர் - புரோட்டா , பன்னீர் பஜ்ஜு
  மதுரை - அயிரை மீன், அரைத்த மஞ்சள்
  திண்டுக்கல், ஆம்பூர் - பிரியாணி , புண்ணாக்கு சட்னி
  காரைக்குடி - உப்புக்கண்டம் , கடுகு கொழம்பு
  சிதம்பரம் - இறால் வருவல் , பிரம்புப்பாய்
  சிதம்பரம் - சிறுமீன்
  மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
  வேலூர் - வாத்துக்கறி , தார் டின்
  சேலம் - வெடிச்ச மாம்பழம்
  ஊத்துகுளி - வெண்ணெய், சோன்பப்டி
  ராசிபுரம் - நெய், வெளக்கமாறு
  முதலூர் - மஸ்கோத் அல்வா
  ஊட்டி - டீ வர்க்கி
  திருச்சி - பெரியபூந்தி, கொளுத்தி மீன் சூப்
  காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா
  கன்னியாகுமரி - முந்திரிகொத்து
  தூத்துக்குடி - மக்ரூன்
  அருப்புக்கோட்டை - காராச்சேவு
  பாலவாநத்தம் - சீரணி மிட்டாய்
  வெள்ளியணை - அதிரசம்
  திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
  நெய்வேலி - முந்திரி
  மன்னார்குடி - பன்னீர்சீவல்
  மேச்சேரி - ஆடு, கணக்கு மட்டை
  ஊட்டி - உருளை
  கொடைக்கானல் - ஹோம் மேட் சாக்லேட்
  தூத்துக்குடி - உப்பு
  அரவக்குறிச்சி - முருங்கை

  பதிலளிநீக்கு
 11. இந்தியாவில் நுகர்வோர் விழிப்புணர்வு ரொம்ப கேவலாமாக இருக்கிறது. தடை செய்யப் பட்ட மருந்துகள், காலாவதியான பொருட்கள், உடல் நலத்துக்கு நூறு சதவிகிதம் கேடு விளைவிக்கும் கோலாக்கள் போன்ற வஸ்துக்கள் இங்கே தாரளாமாக விநியோகிக்கப் படுகின்றன. ஏதோ சட்டங்களும் இருக்கின்றன, ஆனால் அவை ஒருபோதும் EFFECTIVE ஆக இல்லை, அல்லது இருப்பதே தெரிவதில்லை தங்கள் முயற்சி மிகவும் வரவேற்கத் தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.மருந்துகள் வாங்கினாலும் கேட்டலொழிய பில் தருவதில்லை. பில் போட்டால் டேக்ஸ் வரும் என்று சொல்லி கஸ்டமர்களை ஏமாற்றுகிறார்கள்

   நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895