குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது, பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில் குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில் அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம்.
எங்கேயோ எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
நம் சமூகத்தில் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும் பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத எண்ணங்களோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசங்களை அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். Good Touch எது Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும்.
தொடுதலின் வகைகள்:
தொடுதலின் வகைகள்:
- பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
- பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
- தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
தொடுதல் விதி
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.
கட்டியணைப்பது
உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும்
பரிசு
சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.
ரகசியம்
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும்
வேண்டாம்னு சொல்லணும்: தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும்
சொல்லிவிடு
உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு
உன்மீது தவறு இல்லை:
தொடுதல் விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது சொல்லலாம்.
மேற்கூறிய அனைத்தையும் குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது.
அரசுபள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே!
இந்த தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.
இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை அக்கறையுடன் எதிர்பார்க்கிறேன்.
.
******************************************************************************************************************
இக்காலச் சூழலுக்குத் தேவையான பயனுள்ள பதிவு.நன்றி
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
நீக்குபயனுள்ள அவசியமான பதிவு நன்றி.
பதிலளிநீக்குநன்றி கோமதி மேடம்
நீக்குஇந்தியாவில் தான் உலகளவில் அதிக குழந்தைகள் பாலியல் வன்புணர்வு, வங்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என வாசித்தேன், ஆனால் இவற்றைக் குறைக்கவோ தடுக்கவோ இந்திய மத்திய மாநில அரசுகள் ஒன்றுமே செய்திருக்கவில்லை,. குறைந்தது நல்ல தொடுகைகள், கெட்ட தொடுகைகள் குறித்த விழிப்புணர்வோ, பரப்புரையோக் கூட இல்லை. பல ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது தெரியவில்லை. உங்களின் பதிவின் ஊடாக சிலருக்காகவது இவை எட்டினால் மிகவும் நல்லது
பதிலளிநீக்குயாருக்காவது பயன்படட்டும் என்றுதான் எழுதினேன்.ஆனால் இப்பதிவை படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
நீக்குகருத்துக்கு நன்றி இக்பால் செல்வன்
நீக்குபெற்றோர்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...
பதிலளிநீக்குபகிர்கிறேன்... நன்றி...
நன்றி DD சார்
நீக்குவலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குVisit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_20.html
மிகவும் தேவையான பகிர்வு. வாழ்த்துகள் முரளி.
பதிலளிநீக்குகுழந்தைகளிடம் இது பற்றி பேசவே தயங்குவது மாற வேண்டும்....
நிச்சயமாக மாறவேண்டும்
நீக்குநல்ல கருத்துள்ள பதிவு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதும் நன்றி பகிர்வுக்கு
பதிலளிநீக்குநன்றி மலர் பாலன்
நீக்குமிகவும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான பதிவு! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குமிகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் புதுவிதமாக
பதிலளிநீக்குஒரு நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரரே இதனை
அவசியம் பெற்றோர்களும் வளரும் குழந்தைகளும் தெரிந்து
கொள்வது அவசியம் .மிக்க நன்றி சிறப்பான இப் பகிர்வுக்கு .
நன்றி அம்பாளடியாள்.
நீக்குஇவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் சேரவேண்டும் என்பதே
பதிலளிநீக்குபெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
பதிலளிநீக்குமத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
-இந்தியன் குரல்
/மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது. //
நீக்குஉங்கள் நோக்கமும் செயல்பாடுகளும் பாராட்டுக் குரியது .கார்சி ஊடகங்கள் நிச்சி கட்டுப்பாடுடன் பணியாற்ற வேண்டும்.
நன்றி பாலசுப்ரமணியன்
"இந்தியன் குரல்" தளத்திலும் பகிர்ந்துள்ளார்...
நீக்குதங்களின் தகவலுக்கு.... http://vitrustu.blogspot.in/2013/03/blog-post_21.html
/மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது. //
பதிலளிநீக்குஉங்கள் நோக்கமும் செயல்பாடுகளும் பாராட்டுக் குரியது .காட்சி ஊடகங்கள் நிச்சயம் கட்டுப்பாடுடன் பணியாற்ற வேண்டும்.
நன்றி பாலசுப்ரமணியன்
பயனுள்ள அவசியமான பதிவு நன்றி.
பதிலளிநீக்குVetha.Elangathilakam
பெண் குழந்தை வைத்திருப்போருக்கு உபயோகமான பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குமிகப்பயனுள்ள பகிர்வு
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபயனுள்ள பகிர்வு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி குமார்
நீக்குநிச்சயம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய விழிப்புணர்வு. என் மகள் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியைகள் Good Touch எது Bad Touch எது என்பதை வகுப்பில் விழிப்பாக இருக்க கற்று தந்திருக்கிறார்கள். நல்ல பதிவு. மிக்க நன்றி!
பதிலளிநீக்குநன்றி உஷா
நீக்குமிக, மிக பயனுள்ள அருமையான பதிவு.
பதிலளிநீக்குஎன் மகளுக்கு இது போல் ஒரு அருமையான வாய்ப்பு பள்ளியில் கிடைத்தது.
இன்றும் நான்என் மகளது ஆசிரியை செல்வி. சாமுண்டேஸ்வரிக்கு மானசீகமாக நன்றி கூறிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் 5, 6, 7ம் வகுப்பு பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வருவதைப் பற்றியும், GOOD TOUCH BAD TOUCH பற்றியும் அருமையாக சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.
எனக்குக்கூட ஒரு ஆசை உண்டு. அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு இதைப் பற்றி எடுத்துக் சொல்ல வேண்டும். அதை ஒரு சேவையாக செய்ய வேண்டும் என்று.
உங்கள் இந்தப் பதிவை என் வலைத் தளத்திலும், முகப் புத்தகத்திலும் பகிர அனுமதி வேண்டும்.
இதற்கு எதற்கு அனுமதி? தாராளமாக வலைத் தளத்திலும், முகப் புத்தகத்திலும் பகிரலாம்.நிறையப் பேரை சென்றடைந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். அதற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்.
நீக்குபாடத்தோடு இது போன்ற விஷயங்களும் முக்கியம்.தங்கள் மகளின் சேவை பாராட்டுக்குரியது.
இது போன்ற தகவல்கள் அதிகம் தெரியாதவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள்.அவர்களுக்கு உதவிகள் தேவைப் படலாம்.
நன்றி மேடம்.
வணக்கம் சகோ!
பதிலளிநீக்குமூங்கில் காற்றின் நல்ல கதம்ப வாசனையை உங்கள் வலைப்பூவில் நுகர்ந்தேன். நன்றாக இருக்கிறது.
இங்கும் மிக அவசியமான விழிப்புணர்வினை பதிவுசெய்து பகிர்ந்துள்ளீர்கள்.
அருமை! வாழ்த்துக்கள்!
முதல் முறை வருகை என்று நினைக்கிறேன்.தங்கள் கருத்க்கு மிக்க நன்றி இளமதி.
நீக்குபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, குறிப்பாக, பெண் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்!
பதிலளிநீக்குVery good initiative, Keep it up Murali!!
பதிலளிநீக்குநன்றி ஜெயதேவ்
நீக்குமிகவும் பயனுள்ள பதிவு. மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். ப்திவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குநல்ல முயற்சி சார். இந்த பதிவை நானும் எனது பேஸ்புக் மற்றும் கூகில் பிளஸ் பக்கங்களில் பகிர்ந்து கொண்டேன்!
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வு... நன்றி...
பதிலளிநீக்கு