"நீயா? நானா?" நிகழ்ச்சி பத்தி பதிவர் மோகன் குமார் சில குறைகளை தன்னோட பதிவுல சொன்னார். "நீயா நானா" நிகழ்ச்சியை நான் பார்க்க விரும்புவதில்லை". அதற்கு வேறொரு காரணம் உண்டு. என்று பின்னூட்டமிட்டிருந்தேன்.
அந்தக் காரணம் என்னன்னு யாரும் கேட்கலன்னாலும் சொல்லலன்னா என் தலை வெடிச்சிடும். (யோவ்! சொல்லலன்னா உன் தலை வெடிச்சிடும்.சொன்னா எங்க தலை வெடிச்சுடும்னு நீங்க சொல்லறது எனக்கு கேக்குது)
நம்ம டிவி சீரியல் மட்டுமில்ல "நீயா? நானா?" நிகழ்ச்சியும் குடும்பத்தோடு பாக்க முடியாது சார்!
கோபி நாத் பெருசா பீத்திக்குவாரு. இந்த நிகழ்ச்சி சமூகத்தில, குடும்பத்துல நடக்கிற விஷயங்களின் பரிமாணங்களை பதிவு செய்யறோம். இதனால விழிப்புணர்வு ஏற்படும்னு வேற சொல்றாரு.
அட போங்க சார்! குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்துதுன்னு அவர்கிட்ட யார் போய் சொல்லறது.? நம்ம மோகன்குமார் தான் சொல்லணும்? (அவரகூட இனிமே கூப்பிடமாட்டாங்க போல இருக்கே.)
எந்த நிகழ்ச்சியப் பாத்தாலும் கமென்ட் அடிச்சுக்கிட்டே பாக்குற பழக்க தோஷம் காரணமா, ஒரு நாள் இந்த நிகழ்ச்சியை பாக்கும்போதும் வாய வெச்சுகிட்டு சும்மா இருக்காம நாம இதுதான் சரி அதுதான் சரின்னு ஏதோ சொல்லப்போக அது வீட்டம்மாவுக்கு பிடிக்காம கவுன்டர் குடுக்க, வீட்டுல இன்னொரு "நீயா? நானா?" நடக்க, அது சப்ஜெக்டை தாண்டி எங்கயோ போய் பெரிய சண்டையில முடுஞ்சிடுது
உதாரணத்துக்கு ஒண்ணு: ஒரு நிகழ்ச்சியில ஒரு பெண்மணி என் கணவர் ஆபீசுக்கு போனா ஃபோன் பண்ணவே மாட்டார். நானே பண்ணாலும் ஒன் வோர்ட் ல ஆன்சர்சொல்லி கட் பண்ணிடுவார்னு சொல்ல, என்னோட கெட்ட நேரம் மனைவியிடம், "பாத்தியா? நான் போன் பண்றதில்லைன்னு சொல்லுவியே.எத்தனை பேரு என்னை மாதிரி இருக்காங்க பாரு" ன்னு சொல்ல, இன்னொரு பெண் 'அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை எங்க வீட்டுக்காரர் போன் பண்னுவார்னு' சொல்ல அவ்வளவுதான்! அதுக்கு மேல என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லியா தெரியணும்.
இன்னொரு நிகழ்ச்சியில மனைவிய எப்படி செல்லமா கூப்பிடுவோம்னு விதவிதமா சொல்ல "நீங்க இப்படி என்ன எப்பாவாவது கூப்பிட்டிருக்கீங்களான்னு ஆரம்பிச்சு வாக்குவாதம் வலுத்து பட்டிமன்றம், வழக்காடு மன்றம் ரேஞ்சுல தொடர டிவி ப்ரோக்ராம் முடிஞ்சும் நான் வாங்கி கட்டிக் கிட்டதும் அடுத்த நாள் ஆபீசுக்கு லஞ்ச் குடுக்காம கட் பண்ணதும் என்வாயால எப்படி சொல்லுவேன்?
(லஞ்ச் எடுத்துட்டு போகாம இருந்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு மட்டும் நீங்க நினச்சிடாதீங்க. ஹி..ஹி)
இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும். இதெல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆறதுக்குள்ள அடுத்த வார ப்ரோக்ராம் வந்துடுது.
(லஞ்ச் எடுத்துட்டு போகாம இருந்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு மட்டும் நீங்க நினச்சிடாதீங்க. ஹி..ஹி)
இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும். இதெல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆறதுக்குள்ள அடுத்த வார ப்ரோக்ராம் வந்துடுது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இரண்டு பிரிவா இருக்கிற மாதிரி வீடும் ரெண்டு ஆயிடுது.
இப்ப சொல்லுங்க நான் "நீயா? நானா?" பாக்காம இருக்கிறது நியாயம் தானே?
****************************************************
இதை படிச்சிட்டீங்களா?
இதெல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆறதுக்குள்ள அடுத்த வார ப்ரோக்ராம் வந்துடுது.
பதிலளிநீக்குமுடிவல்ல ஆரம்பம் !!!?????
மனைவியோட உட்கார்ந்து டிவி பார்க்கறது முதல் தப்பு. அதைவிட்டு விட்டு நீயா நானா வை குறைகூறுகிறீர்கள், சரிங்க அப்படியே ஸேர்ந்து பார்த்தாலும் டிவி பார்க்கமும் போது ஏதாவது கொறித்து கொண்டே பார்க்க வேண்டும் அப்போதுதான் பதில் சொல்லுவதில் இருந்து தப்பிக்கலாம்
பதிலளிநீக்குHilarious experiences shared by you.
பதிலளிநீக்குYEsterday they telecasted one really good topic. Every one must have enjoyed it.
முன்பு போல் எல்லாம் இல்லை சார்... மனிதன் மனதிற்குள் ஆணவம் அதிகம் வந்தது போல் தோன்றுகிறது. இப்போதெல்லாம் பார்ப்பதே இல்லை
பதிலளிநீக்குTM 2
அவர்கள் உண்மை சொல்வதை கேட்டு நடந்துக்குங்க நண்பரே.
பதிலளிநீக்குஇந்த கொடுமைக்கு தான் நான் விஜய் டிவி-யே பார்க்குரதில்லை ஹி ஹி ஹி
பதிலளிநீக்குசார் ! நேற்று (22.07.2012) நீங்க பார்த்தீர்களா ? அருமையா இருந்தது... 80-களில் வந்த பாடல்களும், அதன் ரசனைகளும்- அமர்க்களமாக இருந்தது... உங்களின் முடிவு மாறி இருக்கலாம்...
பதிலளிநீக்குஎன் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இரண்டு பிரிவா இருக்கிற மாதிரி வீடும் ரெண்டு ஆயிடுது.
பதிலளிநீக்குஒற்றுமையா போற மாதிரி ஒரு கட்டம் வராமலா போகும் :):) !!!???........
பாஸ் உங்க குடும்பத்துல நடக்கிற நீயா நானாவுக்கு வேணுமென்றால் இந்த கோபிநாத் வந்து தீர்ப்பு சொல்லவா? :P
பதிலளிநீக்குஎரியிற நெருப்புல எண்ணைய ஊத்தலாம் பாருங்க.....
நல்லா காமெடியா சொல்லி இருக்கீங்க!
பதிலளிநீக்குஊடல் கூடல்தானே சார் வாழ்க்கையே... அதற்கு ஒரு இனிய வாய்ப்பை நீயா நானா தருதேன்னு சந்தோஷப்படுங்க.... ஹி ஹி...
பதிலளிநீக்குஹ ஹ ஹ...இங்க ஏதாவது நான் எழுதப்போயி..அத உங்க வீட்டுக்காரம்மா பார்த்து...உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆயிருமோன்னு பயமா இருக்கு நண்பரே...ஹிஹிஹி...
பதிலளிநீக்குஅடடா... பொண்டாட்டிங்க சண்டை பிடிச்சதெல்லாம் ஒரு பதிவா போட்டா.... நம் வலைக்குள்ளேயே நீயா.. நானா... போட்டி வந்திடும் சார்.
பதிலளிநீக்கு(நீங்கள் எப்படியாவது சண்டைப் போட்டு பதிவைப் போட்டுவிடுங்கள்... எங்களுக்குப் படிக்க ஜாலிதான்...)
போங்க சார் நேற்றைக்கு என்பதில் வந்த இளையராஜாவின் பாடலை பற்றிய நீயாநானா பாருங்கள்.....ஒரு பாடல் அழவைக்குமா? நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது!
பதிலளிநீக்குநல்ல வேளை நான் பார்க்கறதில்லை...
பதிலளிநீக்குநேற்றைய நிகழ்ச்சி பற்றி நண்பர் ஒருவர் கூட மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் - நன்றாக இருந்தது என....
உங்க பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் முரளி!
பதிலளிநீக்குஅப்போ உங்க வீட்டிலையும் நீயா...நானா...தானா???!!!
பதிலளிநீக்குஆகா...கோபிநாத் இந்தப் பதிவைப் பாக்கணுமே.ரொம்ப சந்தோஷப்படுவார் !
பதிலளிநீக்கு//லஞ்ச் எடுத்துட்டு போகாம இருந்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு மட்டும் நீங்க நினச்சிடாதீங்க. ஹி..ஹி)//
பதிலளிநீக்குஎன்ன நீங்கள் குதிருக்குள் இல்லையா?
சரிதான் நானும் பல தடவைகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற சில கருத்துக்களை முன்னிட்டு கோபப்பட்டுள்ளேன்....
பதிலளிநீக்குஎவ்வளவு பிரச்சினைகள் ... இந்த நிகழ்ச்சியால ...
பதிலளிநீக்குஅதையும் ஒரு சாரர் ரசித்து கொண்டிருப்பது தான் கொடுமை ..
இவ்வளவு,,,,,,,,,,,களுக்கு மத்தியில் வருகிர ஒரு நல்ல நிகழ்வைப்பற்றி விமர்சனம் வருவதும்,அது நம்மில் பாதிப்பை உண்டு பண்ணுவதும் சகஜமே/ இரண்டாவது நிகழ்ச்சியைப்பற்றிய விமர்சனம் என்பது வேறு ,நிகழ்ச்சி நடத்துபவரைப்பற்றிய விமர்சனம் என்பது வேறு.
பதிலளிநீக்குஇப்படி வேற நிலமை!ம்ம் அடுத்த புரோக்கிரம் வந்தால் சரி அவருக்கு!ஹீ
பதிலளிநீக்குவீட்டுக்கு வீடு வாசப்படி..இதெல்லாம் சகஜமதாங்க..இந்த மேட்டருக்காக விஜய் டீவிய காலி பண்ணிறாதிங்க.
பதிலளிநீக்குநல்ல காரணம்..
பதிலளிநீக்குஉங்கள் கருத்தை சொல்லுங்கள்..
பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜேஸ்வரி
பதிலளிநீக்கு//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குமனைவியோட உட்கார்ந்து டிவி பார்க்கறது முதல் தப்பு. அதைவிட்டு விட்டு நீயா நானா வை குறைகூறுகிறீர்கள், சரிங்க அப்படியே ஸேர்ந்து பார்த்தாலும் டிவி பார்க்கமும் போது ஏதாவது கொறித்து கொண்டே பார்க்க வேண்டும் அப்போதுதான் பதில் சொல்லுவதில் இருந்து தப்பிக்கலாம்//
நல்ல ஆலோசனைதான்.நன்றி.
Read more: http://tnmurali.blogspot.com/2012/07/neeya-nana.html#ixzz21kU7j9U8
//மோகன் குமார் said...
பதிலளிநீக்குHilarious experiences shared by you//
நன்றி..நகைச்சுவைக்கு மட்டுமே!
//சீனு said.
பதிலளிநீக்குமுன்பு போல் எல்லாம் இல்லை சார்... மனிதன் மனதிற்குள் ஆணவம் அதிகம் வந்தது போல் தோன்றுகிறது. இப்போதெல்லாம் பார்ப்பதே இல்லை//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//Sasi Kala said...
பதிலளிநீக்குஅவர்கள் உண்மை சொல்வதை கேட்டு நடந்துக்குங்க நண்பரே.//
கருத்துக்கு நன்றி சசிகலா. அப்படியே ஆகட்டும்.
//வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குஇந்த கொடுமைக்கு தான் நான் விஜய் டிவி-யே பார்க்குரதில்லை ஹி ஹி ஹி//
ரொம்ப மகிழ்ச்சி!
//திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குசார் ! நேற்று (22.07.2012) நீங்க பார்த்தீர்களா ? அருமையா இருந்தது... 80-களில் வந்த பாடல்களும், அதன் ரசனைகளும்- அமர்க்களமாக இருந்தது... உங்களின் முடிவு மாறி இருக்கலாம்...//
பார்த்தேன்.இப்பதிவு நகைச்சுவைக்கு மட்டுமே.
//அம்பாளடியாள் said...
பதிலளிநீக்குஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இரண்டு பிரிவா இருக்கிற மாதிரி வீடும் ரெண்டு ஆயிடுது.
ஒற்றுமையா போற மாதிரி ஒரு கட்டம் வராமலா போகும் :):) !!!???......//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்!
HOTLINKSIN.COM திரட்டிக்கு மன்றி.
பதிலளிநீக்குஆகா! உங்கள் பதிவும், இதன் கருத்துப் பதிவுகளும் அருமை நன்றாக சிரித்து மகிழ்ந்தேன். நாம் இடையிடையே ஜிரிவியில் போடுவதைப் பார்ப்போம். (தொர்ந்து நீயா நானா பார்ப்பதில்லை). மிக நன்றி பதிவிற்கு. சுவை. நல்வாழ்த்து.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
//kovaikkavi said...
பதிலளிநீக்குஆகா! உங்கள் பதிவும், இதன் கருத்துப் பதிவுகளும் அருமை நன்றாக சிரித்து மகிழ்ந்தேன். நாம் இடையிடையே ஜிரிவியில் போடுவதைப் பார்ப்போம். (தொர்ந்து நீயா நானா பார்ப்பதில்லை). மிக நன்றி பதிவிற்கு. சுவை. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//Gobinath said...
பதிலளிநீக்குபாஸ் உங்க குடும்பத்துல நடக்கிற நீயா நானாவுக்கு வேணுமென்றால் இந்த கோபிநாத் வந்து தீர்ப்பு சொல்லவா? :P
எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தலாமே!?//
இந்த கோபிநாத்துக்கு ஏன் இந்த கொலைவெறி?
//s suresh said...
பதிலளிநீக்குநல்லா காமெடியா சொல்லி இருக்கீங்க!//
நன்றி சுரேஷ் சார்
//HOTLINKSIN.COM திரட்டி said...
பதிலளிநீக்குஊடல் கூடல்தானே சார் வாழ்க்கையே... அதற்கு ஒரு இனிய வாய்ப்பை நீயா நானா தருதேன்னு சந்தோஷப்படுங்க.... ஹி ஹி.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//ரெவெரி said...
பதிலளிநீக்குஹ ஹ ஹ...இங்க ஏதாவது நான் எழுதப்போயி..அத உங்க வீட்டுக்காரம்மா பார்த்து...உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆயிருமோன்னு பயமா இருக்கு நண்பரே...ஹிஹிஹி...//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//AROUNA SELVAME said...
பதிலளிநீக்குஅடடா... பொண்டாட்டிங்க சண்டை பிடிச்சதெல்லாம் ஒரு பதிவா போட்டா.... நம் வலைக்குள்ளேயே நீயா.. நானா... போட்டி வந்திடும் சார்.
(நீங்கள் எப்படியாவது சண்டைப் போட்டு பதிவைப் போட்டுவிடுங்கள்... எங்களுக்குப் படிக்க ஜாலிதான்...)//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//வீடு சுரேஸ்குமார் said...
பதிலளிநீக்குபோங்க சார் நேற்றைக்கு என்பதில் வந்த இளையராஜாவின் பாடலை பற்றிய நீயாநானா பாருங்கள்.....ஒரு பாடல் அழவைக்குமா? நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது!//
நானும் பார்த்தேன்.
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குநல்ல வேளை நான் பார்க்கறதில்லை.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//சென்னை பித்தன் said...
பதிலளிநீக்குஉங்க பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் முரளி!//
நன்றி ஐயா
//மகேந்திரன் said...
பதிலளிநீக்குஅப்போ உங்க வீட்டிலையும் நீயா...நானா...தானா???!!//
ஹி.ஹி
//ஹேமா said...
பதிலளிநீக்குஆகா...கோபிநாத் இந்தப் பதிவைப் பாக்கணுமே.ரொம்ப சந்தோஷப்படுவார் !//
நன்றி ஹேமா
//வெங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்கு//லஞ்ச் எடுத்துட்டு போகாம இருந்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு மட்டும் நீங்க நினச்சிடாதீங்க. ஹி..ஹி)//
என்ன நீங்கள் குதிருக்குள் இல்லையா?//
ஹி.. ஹி ..
//எஸ்தர் சபி said...
பதிலளிநீக்குசரிதான் நானும் பல தடவைகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற சில கருத்துக்களை முன்னிட்டு கோபப்பட்டுள்ளேன்..//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//அரசன் சே said...
பதிலளிநீக்குஎவ்வளவு பிரச்சினைகள் ... இந்த நிகழ்ச்சியால ...
அதையும் ஒரு சாரர் ரசித்து கொண்டிருப்பது தான் கொடுமை ..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்!
//விமலன் said...
பதிலளிநீக்குஇவ்வளவு,,,,,,,,,,,களுக்கு மத்தியில் வருகிர ஒரு நல்ல நிகழ்வைப்பற்றி விமர்சனம் வருவதும்,அது நம்மில் பாதிப்பை உண்டு பண்ணுவதும் சகஜமே/ இரண்டாவது நிகழ்ச்சியைப்பற்றிய விமர்சனம் என்பது வேறு ,நிகழ்ச்சி நடத்துபவரைப்பற்றிய விமர்சனம் என்பது வேறு.//
நன்றி விமலன் சார்!
//சதீஷ் செல்லதுரை said...
பதிலளிநீக்குவீட்டுக்கு வீடு வாசப்படி..இதெல்லாம் சகஜமதாங்க..இந்த மேட்டருக்காக விஜய் டீவிய காலி பண்ணிறாதிங்க.//
கருத்துக்கு நன்றி சதிஷ்!
//தனிமரம் said...
பதிலளிநீக்குஇப்படி வேற நிலமை!ம்ம் அடுத்த புரோக்கிரம் வந்தால் சரி அவருக்கு!ஹீ//
தனிமர்த்திற்கு நன்றி
//மதுமதி said...
பதிலளிநீக்குநல்ல காரணம்..//
நன்றி மதுமதி சார்
உங்க வீட்ல நடந்த சண்டைக்கு நீயா நானா? காரணமில்லை உங்க வாய் தான் காரணம் ...(நிகழ்ச்சி மறைமுக காரணமாக இருக்கலாம் ஆனால் நீங்க தான் நேரடி காரணம் )
பதிலளிநீக்குசாரே நான் ஏதோ சீரியஸ்ஸான பதிவுன்னு நினைச்சு ஓடிவந்துட்டேன் ஆனா உங்களுக்கு நடந்ததையும் நாம நினைவில வச்சுருக்கணும்....http://www.venkkayam.com/2012/04/blog-post_26.html விவாதமே நடக்குமுன்னு நினைச்சன்..நல்ல பதிவு
பதிலளிநீக்குமுரளி சார் பொதுவாவே அடுத்த வீட்டுச்சமாச்சாரத்தை (சம்சாரம் இல்லீங்க) மனைவிகள் மட்டுமல்ல ஆண்களூம் ஆர்வமுடம் கேட்பார்கள். ஞாயிறு இரவு நீயா நானா வந்தா பார்க்காமல் இருப்பார்களா? சீரியாஸா பேசி தூக்கத்தை கெடுத்துடுறாங்க. மேலும் விஜய் டிவி நிகழ்ச்சி மொத்தமா என்னவோ அரைமணி நேரமா இருக்குமோ அடெங்கப்பா 5 நிமிசத்துக்கு ஒரு முறை விளம்பரத்தை போட்டு படுத்தாறங்கப்பா அதனாலேயே டிவியை ஆப் செய்திட்டு நாம் ஆப்யிடவேண்டியிருக்கிறது. ஹி..ஹி...ஹி...
பதிலளிநீக்கு