நமது சமுதாயத்தில் காலம் காலமாக காதல் திருமணங்கள் நடந்ததாலும் கூடவே அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஆதரவு கூடி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.
20.01.2013 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதலை ஆதரிக்கும் பெற்றோர்களும் எதிர்க்கும் பெற்றோர்களும் விவாதித்தனர். வழக்கம்போல கோபியூத் சாரி கோபிநாத் காதலை ஆதரித்து பேசினார்.(கோபிநாத்தின் திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நினைக்கிறேன்.)
காதல் திருமண எதிர்ப்பிற்கு காரணம் சாதிதான் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் சுபவீ அவர்களின் பேச்சு எதிர்வாதம் செய்ய முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது. ஆனால் வாதம் செய்ய முடியாதே தவிர மனதை மாற்றிவிடுமா என்றால் சந்தேகமே! பத்திரிகையாளர். இறைவன் ,"என்னதான் சாதிகள் வெளியே இல்லை என்று சொன்னாலும் உள்மனதில் சாதீய உணர்வு இருப்பதை மறுக்க முடியாது" என்றார்.
அதற்கு உதாரணம் இதில் பங்கேற்ற ஒருவர் இளவயதில் சாதி மதம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்தவர்.அவர் கூட பிற்காலத்தில் தன் வாரிசுகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியது பத்திரிகையாளர் இறைவன் கருத்தில் இருந்த உண்மையை சுட்டிக் காட்டியது.
தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் கொடுப்பதையோ எடுப்பதையோ விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தது ஒரு தரப்பு. சமூகத்தில் பலர் சொல்லவில்லையே தவிர உள்மனதின் நிலை இதுதானே!
கிராமப் புறங்களில் காதல் திருமணம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தற்போது குறிப்பாக நகர்ப்புறப் பெற்றோர்களின் மனநிலை மாறியுள்ளதாகவே தெரிகிறது. நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும் இப்போது மாற்றம் வந்திருக்கிறது. உட்பிரிவுகளை பொருட் படுத்தாமல் நிச்சயம் செய்யப் படுகிறது. காதல் திருமணத்தை விரும்பாவிட்டாலும் தீவிர எதிர்ப்பு காட்டுவதில்லை. மகன் அல்லது மகனுடன் பேசி காதல் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாற்றிவிடுகிறார்கள்.அதனால் பல சிக்கல்கள் தீர்ந்து விடுகிறது. உறவினர்களின் முணுமுணுப்பை கண்டு கொள்வதில்லை.

எனது நண்பர்களில் ஒரு சிலர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிலரது காதல் பாதியில் முடிந்திருக்கிறது. இந்தக் காதல்களில் ஒரு விஷயம் கவனித்தேன். நகர்ப்புறமாக இருந்தாலும் சாதிகளின் பங்கு இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய இனத்தை விட உயர்ந்த சாதியாக தாங்களே கருதும் பெண்களைத்தான் காதலிக்கிறார்கள். இதனை சாதனையாகவும் நினைக்கிறார்கள்.இதற்கு பல சமூக காரணங்கள் உண்டு.. இதற்கு பையனின் பெற்றோர்கள் அதிக எதிர்ப்பு காட்டுவதில்லை.
கீழ் நிலையில் உள்ளதாககக் கருதப்படும் இனத்தின் பெண்ணை காதலிப்பதை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன்பெண் தன்னைவிட கீழ் சாதியாக கருதப்படும் ஆணை காதலித்தால் வெட்டிவிடுவேன் என்று சொன்னது அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சில இடங்களில் அவ்வாறுதான் நடந்து கொண்டிருகின்றன.

நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணை யார் காதலிப்பதற்கும் தடை ஏற்படுவதில்லை என்றார் எழுத்தாளர் இமயம்
ஆனால் தன் இனத்தை விட கீழானதாக நினைக்கும் சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வது அரிய நிகழ்வாகத்தான் இருக்கிறது. காதலிப்பவனே திருமணம் செய்து கொள்ள முழுமனதுடன் விரும்புவதில்லை என்றே கருதுகிறேன். இதற்கு விலக்குகளும் உண்டு.
ஆண் அழகைப் பார்த்தே காதலை தொடங்குகிறான். தொடர்கிறான்
தொடக்கத்தில் ஆணின் தோற்றத்தால் பெண்கள் கவரப் பட்டாலும் தன்னை உண்மையாக காதலிப்பவன் என்று பெண் நினைத்தால் அவனது அழகைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது எனது கருத்து. பெண்கள் பெரும்பாலும் சாதிகள் பார்ப்பதில்லை என்பது நல்ல விஷயம்.
காதலால் சாதிகள் ஒழியும் என்ற நப்பாசை நிறையப் பேருக்கு உண்டு.எத்தனையோ காதல் திருமணங்கள் நடந்தாலும் சாதிகள் ஒழிய அது உதவியதா என்பது கேள்விக் குறியே! மேல் தட்டு வர்க்கத்தினரிடம் காதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமுமே காதலால் அதிக பாதிப்பை சந்திக்கின்றன.
எந்த சாதியாக இருந்தாலும் அழகான அல்லது திறமையான பெண்களே காதலிக்கப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. காதலிக்கப்படாத அல்லது காதலிக்காத பெண்களுக்கு நிச்சயிக்கப்படும் திருமணமே கை கொடுக்கிறது. யாருக்காவது வறுமையில் வாடும் பெண்ணை பார்த்து காதலிக்கவும் திருமணம் செய்து கொள்ளவும் தோன்றுகிறதா என்று கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைத்தது.
நல்ல மாற்றங்களுக்கு காதல் திருமணம் உதவினால் மகிழ்ச்சிதான். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
*****************************************************************************************