என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 17 ஜனவரி, 2013

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்-பவர்ஸ்டோரி+ஏ.ஆர்.ரகுமான்+ஜல்லிக்கட்டு


இந்த ஆண்டு  பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்த சேனலை திருப்பினாலும்  பவர்ஸ்டாரின் கவர் ஸ்டோரியாகவே இருந்தது. ஆளாளுக்கு பவர்ஸ்டாரை வஞ்சப் புகழ்ச்சித்துக்(எப்பூடி நம்ம புது வார்த்தை) கொண்டிருந்தனர்.கே.டி.வியில் ஹிந்தி இங்கிலீஷ் வசனங்களை பேச வைத்து கலாய்த்தனர்.அவரும் சளைக்காமல் வராத வசனங்களை பேசிக் காட்டியது சிரிப்பை வரவைத்தது என்றாலும் சற்று நெருடலாகத்தான் இருந்தது. அவரது அப்பாவித் தனங்களும் கம்மெண்டுகளுக்கு அவர் கொடுக்கும் ரியாக்.ஷனையும் பார்க்கும்போது அவரை மற்றவர்கள் கலாய்க்கிறார்களா?அல்லது அவர் நம்மை எல்லாம் கலாய்க்கிறாரா என்று லேசான சந்தேகம் ஏற்படுகிறது.சன் நியூசில் பவர் ஸ்டாருடனான பாஸ்கி யின் நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது.
அதில் தனது கதையைத் திருடியதாக புகார் கொடுத்திருக்கும் பாக்கியராஜிடமே கேட்டார்கள் பாக்கியராஜ் முதலில் பவர் ஸ்டாரைப் பாராட்டினார் என்றாலும் கடைசியாக என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க "என்ன சொல்றது? என் கதைய என்ன கேக்காம யூஸ் பண்ணிட்டாங்க.என் பையனை வைத்து எடுக்கலாம்னு நினச்சேன். கேஸ் போட்டிருக்கேன் பாக்கலாம்" என்றார்.எஸ்.வி சேகரும் கதையை முறையாக வாங்காதது தவறு என்றார். ஆனால் இதையெலாம் க.ல.தி.ஆ குழு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.சந்தானம் இதற்கு ஒரு தீர்வு காண்பார் என்று நம்புவோம்.
*****************************************************************************************************************
ஏ.ஆர் ரகுமானின் தாய் மண்ணே வணக்கம் ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகியது. இவரது இசைக்கு ஏதோ ஒரு மந்திர சக்தி உள்ளது.YMCA மைதானத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட்டது.அவரது இசை ஆயிரக்கணக்கான ரசிகர்களை மயக்கியது;. கட்டிப்போட்டது:; துள்ளிக் குதிக்க வைத்தது.

   தேசம்(ஹிந்தியில் ஸ்வதேஷ்) படத்தின் தமிழ் பாடலான ”உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா? சொந்த வீடு உன்னை வா வென்று அழைக்குது”.என்று சொந்தக் குரலில் பாட கூட்டம் ஆர்ப்பரித்தது.பொதுவாக சிறந்த இசை அமைப்பாளர்களின் குரல் அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை. (விதி விலக்குகள் உண்டு) எம்.எஸ்.வி, இளையராஜா, போலவேதான் ரகுமானின் குரலும்.ஆனாலும் அந்தக் குரலில் ஒரு கவர்ச்சி இருப்பதை மறுக்க முடியாது.அதுவே சில பாடல்களுக்கு அழகு சேர்த்து விடுகிறது. ரகுமானின் பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் ஒவ்வொன்றும் நுணுக்கமான இசைக் குறிப்புக்ளால் இணைக்கப்பட்டுள்ளது   பாடல்களின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. ஹரிஹரன் சித்ரா, மனோ கர்த்திக் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வெண்ணிலவே! வெண்ணிலவே! பாடலை தனகே உரிய பாணியில் ஹரஹரன் பாடியது ஒரு இசை இனிமை. எஸ்.பி.பி  கண்ணில் படவில்லை.நேரில் செல்ல முடியாத ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது நிகழ்ச்சி.
**********************************************************************************************************************
ஜெயா டிவியின் பட்டிமன்றமும் சுவையாகவே இருந்தது.பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் தலமையில்; தகவல் தொடர்பு சாதனங்கள் வரமா? சாபமா? என்ற தலைப்பில் நடந்த வாதப் பிரதி வாதங்கள் நன்றாகவே இருந்தது. வரம்தான் என்று தீர்ப்பு அளிக்கப் பட்டது.கத்தி எடுத்து கொலையும் செய்யலாம் சிகிச்சையும் செய்யலாம்.அது மனிதனின் தவறே தவிர சாதனங்களின் தவறு அல்ல என்றார்.

 எனது கவிதை ஒன்று ஞாபகம் வந்தது
                          ஆதங்கம்
                       சே!
                       இந்த அலைபேசி சேவை
                       ரொம்ப மோசம்!
                       அடுத்த அறையில்  இருக்கும்
                       மனைவியுடன் பேசக்கூட
                       சிக்னல் இல்லை
**********************************************************************************************************************

  சன் டிவி படிமன்றம்: சின்ன சின்னப் பொய்கள் சுகம் தரும்.என்ற அனியில் ராஜா, தராது என்ற அனியில் பாரதி பாஸ்கர் வழக்கமான நகைச்சுவயுடன் பேசி கைதட்டல்களை அள்ளிச் சென்றனர்.
  பெரும்பாலோர் பேசுகையில் மனைவி, அழகு என்று பொய் சொல்லவேண்டி இருக்கிறது என்று நகைசுவைக்காக குறிப்பிட்டனர். ஆனால் எப்படிப்பட்ட கணவனாக இருந்தாலும் மனைவி சகித்துக் கொள்கிறாள்.கணவனை  அழகு என்று பொய் சொல்லும் மனைவியையும் பார்ப்பது அரிது. தன்னையும் தன்னை சார்ந்து சொல்லும் சின்ன சின்ன பொய்களை பெண்கள் ரசிக்கின்றனர் என்பது உன்மையே.அதுவே அவர்கள் ஏமாற்றப் படுவதற்கு காரணமாக சில நேரங்களில் அமைந்து விடுகிறது.
சின்ன சின்ன பொய்கள் வாழ்க்கையை சுகமாக்கும் என்பதில் ஐயமில்லை.  ஆனால் அவை பெரிய பொய்களுக்கு அடித்தளமாக அமையாமல் இருப்பது நல்லது தீர்ப்பும் அவ்வாறே வழ்ங்கப் பட்டது.
   இதில் புதிய முகம் கவிதா ராமானுஜம் என்பவர் .அவர் வணிக வரித்துறை அலுவலகத்தில் பனிபுரிபவராம். ..எஸ். தமிழில் எழுதித் தேர்ச்சி பெற்றவர் என்று சாலமன் பாப்பையா குறிப்பிட்டார் .மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் நன்றாகவே பேசினார்.
**********************************************************************************************************************

 ஜல்லிக் கட்டு  மீது எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொலைக் காட்சியில்
 அதிகமாகவே இடம் பிடித்தது உயர் நீதி மன்ற உத்தரவின் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற பாலமேடு,அலங்க நல்லூர் ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளி பரப்பப் பட்டது. வாடி வாசலில் இருந்து தாவி ஆவேசமாக பாய்ந்து வரும் காளைகள் மீது அச்சமின்றி பாய்ந்தனர் இளைஞர்கள். அவர்களை அலட்சியமாக உதறித் தள்ளியது.சிலர் விடாப்பிடியாக  அதன் திமிலைப் பிடித்து அடக்கி வெற்றிபெற்றது மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாக இருந்தது.
     பிடிக்க முனைந்தபோது கீழே விழுந்தவர்களை மிதிக்காமல் மாடுகள் தாண்டிச்சென்றது ஆச்சர்யமாக இருந்தது.
இன்னொரு ஆச்சர்யம் பவர் கட் இல்லை.

********************************************************************************************************************
இதைப் படித்துவிட்டீர்களா?
200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் நிகழ்ச்சி8 கருத்துகள்:

 1. என் வீட்டில் கேபிள் இல்லை தங்கள் பதிவு இணையத்தில் சுவராஷ்யன நிகழ்சிகலத் தேடித் பார்க்க உதவும்.

  லட்டு: வெளிநாட்டுக் காரன் கதையை திருடினால் கேட்கமாட்டான், தமிழ்ப் படக் கதையையே லவட்டியது கொஞ்சம் ஓவர், பாக்கியராஜுக்கு கணிசமான தொகையை லட்டு காரப் பயல்கள் கொடுப்பதே நியாயம்.

  \\ஏ.ஆர் ரகுமானின் தாய் மண்ணே வணக்கம் \\ இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி, எப்படியாவது தேடித் பிடித்து பார்க்கிறேன்!!

  சன் டிவி படிமன்றம்: பாப்பையா மாதிரி இருப்பவர்கள் இங்கே சிங்கியடித்துக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்.


  ஜல்லிக் கட்டு: முன் காலத்தில் தனிப்பட்ட முறையில் இளைஞன் காளையை அடக்குவானாம்!! தற்போது பத்து இருபது பேர் அதுவும் ஒளிந்திருந்து பொய் பிடிக்கிறார்கள்!!

  \\கீழே விழுந்தவர்களை மிதிக்காமல் மாடுகள் தாண்டிச்சென்றது ஆச்சர்யமாக இருந்தது.\\ எல்லா மனிதர்களும் தன்னை வளர்ப்பவரிடம் காட்டும் மரியாதையை அது காட்டுகிறதோ!! அதுக்கு இருக்கும் உணர்வு கூட மனுஷனுக்கு கிடையாது, எல்லாத்தையும் துன்புறுத்துவான், அடித்துத் தின்னுவான்.

  பதிலளிநீக்கு
 2. பொதுவாகவே டி.வி. நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பதில்லை முரளி. அதுவும் பொங்கல் சமயத்தில் இங்கே விடுமுறை கிடையாது. அதனால் மாலை நேரத்தில் சில நிகழ்ச்சிகளை முடிந்தால் பார்ப்பதுண்டு.....

  உங்கள் பகிர்வு மூலம் இந்த நாட்களில் இருந்த நிகழ்ச்சிகள் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி பார்த்தேன்.
  மிக ரசித்தேன்.
  தங்கள் பதிவு மூலம் தகவல்கள் அறிந்தது. மகிழ்ச்சி.
  மிக்க நன்றி முரளி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 4. டி.வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியலைன்னாலும் உங்க விமர்சனங்கள் மூலம் ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895