என்னை கவனிப்பவர்கள்

புதன், 23 ஜனவரி, 2013

பிரபல கவிஞர் எழுதியது எது?



  அரவாணிகள் பற்றிய இவ்விரண்டு கவிதைகளில். ஒன்று பிரபல கவிஞர் எழுதியது. ஒன்று  நான் எழுதியது. எதை  யார் எழுதியது  என்பதைக் கண்டு பிடியுங்கள். கவிஞர் பெயரையும் சொல்லுங்கள். நீங்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.

                         நாங்கள் யார்? 
                    நாங்கள் யார்?
                    எங்களுக்கே ஐயமுண்டு!

                    நாங்கள்

                    பாலினம் அறியாத 
                    படைப்புப் பழுதுகள்!

                    வேராய் மாற முடியாத
                    வெற்று விழுதுகள்!

                    ஆணாய்ப் பிறந்தாலும்

                    பெண்மை உணர்வுகளால்
                    பேதப்  பட்டுப்போனவர்கள்!

                    பெற்ற அன்னையும்
                    வெறுத்ததொதுக்கும்
                    பெரும்பாவம் செய்தவர்கள்!

                    அலிகள் என்று 
                    உங்களால் கேலி செய்யப்படும் 
                    கேள்விக் குறிகள்!

                    கடுங்குரலும் கடுமுடியும்
                    காட்டிக் கொடுக்க 
                    கழிப்பறைக்குள் கூட 
                    அனுமதிக்கப்படாத
                    அருவெறுப்பு பிண்டங்கள்

                    எங்களுக்கும்  ஆசைதான்! 
                    கூடப் பிறந்தவர்களுடன் கூடி வாழ,
                    அன்னையின்  மடியில் 
                    அழுதபடி தலை சாய்க்க,
                    தங்கையின்  பூப்பெய்தலில்
                    பூரிப்படைய,
                    அண்ணனின் திருமணத்திற்கு 
                    அலங்காரமாய்ச் செல்ல!

                    என்ன செய்ய?
                    தெருவோரம்  நின்றால்கூட
                    துரத்தப்படும்
                    தெருநங்கைகளான  
                    திருநங்கைகள் ஆகிவிட்டோமே!
                   

                    கடவுளாய் இருந்தால் 
                    கை கூப்பி தொழுகிறீர்கள்!
                    மனிதராய்ப் பிறந்தால் 
                    கைகொட்டி சிரிக்கிறீர்கள்!

                    ஆனாலும்
                    நீங்களெல்லாம்  பெருந்தன்மை 
                    கொண்டவர்கள்தான்!
                    ஒரிலக்க எண்களில் 
                    மிகப்பெரியதை எங்களுக்கே 
                    சொந்தமாக்கி இருக்கிறீர்களே! 

****************************************************************************************

                          காகிதப் பூக்கள் 


                          காலமழைத் தூரலிலே
                          களையாய்ப் பிறப்பெடுத்தோம்
                          தாய்ப்பாலின் சரித்திரத்தில்
                          சதிராடும் புதிரானோம்

                          விதைவளர்த்த முள்ளானோம்

                          விளக்கின் இருளானோம்
                          சதை வளர்க்கும் பிணம் நாங்கள்
                          சாவின் சிரிப்புகள்

                          மூங்கையொரு பாட்டிசைக்க

                          முடவனதை எழுதி வைக்க
                          முடவன்  எழுதியதை
                          முழுக் குருடர் படித்ததுண்டோ

                          சந்திப் பிழை போன்ற 

                          சந்தததிப் பிழை நாங்கள்
                          காலத்தின் பேரேட்டை
                          கடவுள் திருத்தட்டும்

                          தலை மீது பூவைப்போம்

                          தாரணியோர் கல்லறையில்
                          பூவைத்தல்  முறைதானே
                          பூத்த உயிர் கல்லறைகள் நாங்கள்

                          தாய்ப் பெண்ணோ முல்லைப்பூ

                          தனி மலடி தாழம்பூ
                          வாய்ப் பந்தல் போடுகின்ற
                          காகிதப் பூக்கள் நாங்கள் 

******************************************************************************************

கவிதைத் தேர்தலில் ஒட்டு போட்டு விட்டீர்களா?
டெப்பாசிட்டாவது கிடைக்குமா?

*****************************************************************************************
 இதைப் படித்து விட்டீர்களா?
புத்தக்கக் காட்சியில் பட்டிக்காட்டாரிடம் பதிவர்கள் கோரிக்கை.

35 கருத்துகள்:

  1. காகித பூக்கள் நல்லா இருக்கு..

    //மூங்கையொரு பாட்டிசைக்க
    முடவனதை எழுதி வைக்க
    முடவன் எழுதியதை
    முழுக் குருடர் படித்ததுண்டோ//

    குறிப்பா இந்த வரிகள்

    பதிலளிநீக்கு
  2. முதல் கவிதை வெளிப்படையாக எழுதியது, இரண்டாவது கவிதை கொஞ்சம் கலை நயத்துடன் எழுதியது இரண்டும் இரண்டு விதத்தில் எனக்கு பிடித்திருக்கிறது. இதில் முதலில் எழுதப்பட்டது எதுவோ அதற்கே எனது வாக்கு. :-)

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இரண்டாம் கவிதையின் தலைப்பு "தரையில் ஓடும் ரயில்கள்"
    என்று நினைக்கிறேன். கவிஞர் வைரமுத்து என்று நினைவு.
    சரியானதாக இல்லமல் இருக்கலாம் ஆனால் "சந்திப்பிழை போல் சந்ததிப்பிழைகள் நாங்கள்" என்ற‌வரிகள் நினைவைவிட்டு அகலவில்லை. 10 ஆம் வடுப்பு படிக்கும்போது நூல்நிலையத்தில் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  5. யார் எழுதியது என்றெல்லாம் கண்டுகொள்ளத் தெரியவில்லை, ஆனால் இரண்டு கவிதையிலும் வலி இருக்கிறது... முதல் கவிதையில் சற்றே அதிகமாய் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தினமும மின்சார ரயிலில் பயணம் செய்யும்போது அவர்களைப் பார்க்கிறேன்.
      அதன் பாதிப்பில் விளைந்ததே கவிதை.

      நீக்கு
  6. இரண்டு கவிதையும் சிறப்பு! முதல் கவிதை உங்களுடையது இரண்டாவது வைரமுத்துவின் கவிதை என்று நினைக்கிறேன்! சிறப்பான கவிதை பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

  7. இரண்டும் நன்றே!முன்னது, உம்மது

    பதிலளிநீக்கு
  8. முரளிதரன் இரண்டு கவிதையும் நன்றாக இருக்கிறது.
    முதல் கவிதை உங்கள் கவிதை என நினைக்கிறேன்.
    புலவர் ஐயாவும் இதை சொல்லும் போது அது சரியாகதான் இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. கண்டுபுடிக்க முடியலை, நீங்களே சொல்லிடுங்க!!

    பதிலளிநீக்கு
  10. இரண்டு கவிதைகளும்
    இதயத்தைக் கிழிக்கிறது.

    முதல் கவிதை உங்களது என்று நினைக்கிறேன்.
    இரண்டாவது கவிஞர் வாலியின் கவிதையா...?

    பதிலளிநீக்கு
  11. முரளீதரனின்
    மூங்கில் காற்று கலைநயத்துடன் திகழ்கிறது..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. முதல் கவிதை முரளிதரன் கவிதை

    இரண்டாவது வைரமுத்து அவர்கள் என நினைவு

    இரண்டும் அருமை

    பதிலளிநீக்கு
  13. இரண்டுமே அருமை....

    இரு கவிஞர்களின் கவிதையிலும் வலி.....

    பதிலளிநீக்கு
  14. இரண்டாவது படைப்பு தங்களுடையது என நினைக்கிறேன். இரண்டு கவிதைகளுமே அருமை!

    பதிலளிநீக்கு
  15. ரயிலில் செல்லும் போது, திருநங்கை உங்களிடம் மிரட்டி பணம் வாங்குகிறார். கையில் இருக்கும் எதையாவது பிடுங்கி கொண்டு விடுகிறார். என்ன நினைப்பீர்கள்? கோபம், வருத்தம் துளியும் படாமல், சாந்தமாக நின்று கொண்டு இருப்பீர்களா?

    உங்களிடம் அவர்கள் வந்து காசு கேட்டால் எவ்வளவு கொடுப்பீர்கள்?
    பஸ்ஸில் உங்கள் அருகில் அவர்கள் உட்கார்ந்தால் எவ்வாறு உணர்வீர்கள்? அவர்களிடம் பேசுவீர்களா?
    கவிதையை தவிர, அவர்களுக்கு ஏதாவது உதவி, நன்மையை செய்திருக்கிறீர்களா? அவர்களை எவ்வாறு நடத்தியிருக்கிறீர்கள்?

    முடிந்தால் மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

    காதல் பற்றி எது வேண்டுமானாலும் எழுதி விட்டு போங்கள். ஏழைகளை பற்றி கூட கவிதை எழுதுங்கள். ஆனால்....ஒட்டு பட்டன் வைத்து... "உங்கள் ரசனைக்கு ஒரு சவால்" என்று தலைப்பிட்டு... அவர்கள் வலியை கொச்சை படுத்த வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தினமும் ரயிலில்தான் பயன் செய்கிறேன்.நண்பரே!அவர்கள் காசுகேட்கும்போது அவ்வபோது என்னால் முடிந்ததைக் கொடுத்திருக்கிறேன். சில சமயம் கொடுக்காமலும் இருந்திருக்கிறேன்.திட்டும் வாங்கி இருக்கிறேன். அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உண்மையான பாதிப்பிலும் தான். இந்தக் கவிதையை எழுதினேன்..அரசாங்கம் இவர்களுக்கு என்ன செய்ய முடியும் தனி மனிதன் என்ன செய்ய முடியும். மருத்துவ ரீதியாக என்ன செய்ய முடியும் என்பது போன்ற விவரங்களை தேடி வருகிறேன். பின்னர் இது பற்றி கட்டுரை எழுத இருக்கிறேன். பொதுவாக கவிதைகளுக்கு வரவேற்பு இல்லை என்பதால் படிக்க வைக்கவேண்டும் என்பதற்காக வோட்டுப் பட்டன் வைத்தேனே தவிர வேறு நோக்கம் இல்லை. அது தவறு என்று என்று சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தை ஏற்று அதை இப்போதே நீக்கி விடுகிறேன்..
      கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி நண்பரே!
      நீங்கள் யாரென்று தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன்.என் வலைப் பக்கம் அடிக்கடி வருபவராகக் கூட இருக்கலாம். முகம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
      தயங்காமல் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். நன்றி.

      நீக்கு
  16. முரளிதரன் அவர்களை திரு நங்கைகள் என அழைக்கலாமே .நானும் ஒரு நான்கு வருடங்கள் இரயில் பிரயாணத்தின் போது அவர்களைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன்.என் தோழர் திரு இளங்கோவனால் எடுக்கப்பட்ட ஆவணப்படம் அவர்களின் வலியை உணர்த்துவதாக அது குறித்து எழுதிய பதிவில் அவர்களுக்கு மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுத் தருவோம் என்று எழுதியுள்ளேன் அதே ரீதியில் அதற்காக முயலலாம். சுய தொழில் வைக்க உதவலாம். வேலைவாய்ப்பை கொடுக்கலாம். அல்லது அதற்கான கல்வியினைக் கொடுக்கலாம். நான் அதற்கான யோசனை கொண்டுள்ளேன். நிதி ஆதாரம் சேர்த்த பின் செய்யலாம் என எண்ணியுள்ளேன். அந்தப் பதிவு http://www.nigalkalam.blogspot.in/2012/04/blog-post_07.html நேரமிருப்பின் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  17. நல்ல கவிதை .யாருமே யோசிக்க தயங்குகிற ஓரு இனம் பற்றி பாடுவது மகவும் லேசானதல்ல/வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  18. இரு கவிதைகளுமே அவர்களின் வலியை உண்மையான அக்கறையோடு வெளிப்படுத்தியுள்ளன. நானும் அரவாணி பற்றி இரு கவிதைகள் எழுதியுள்ளேன். சிறுவயதில் அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டிருக்கிறேன். அந்த நினைவு தொடர்ந்து எற்பட்டதால் அது கிவதையாகிவிட்டது. முடிந்தால் படியங்கள்.vjpremalatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  19. அர்த்தம் பொதிந்த வலி வரிகள்.

    நானும் ஒன்று எழுதியுள்ளேன் முன்பு

    http://vijaykavithaigal.blogspot.in/2009/10/blog-post_19.html

    விஜய்

    பதிலளிநீக்கு
  20. நான் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறேன். இங்கு philipines நாட்டைச் சேர்ந்த பல திருநங்கைகள் (சிலர் பெண் உடையிலும், சிலர் ஆண் உடையிலும்) சர்வ சாதாரணமாக பல்வேறுபட்ட பணிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு எந்த இகழ்ச்சியும் / துன்புறுத்தல்களும் இல்லை. இதைப் பார்க்கும் பொது நம் நாட்டிலும் எப்போது அவர்களை எல்லோரையும் போல சாதாரணமாக பார்க்கப்போகிறோம் என்று கேள்வி எழுவதுண்டு..

    பதிலளிநீக்கு
  21. முதல் கவிதை அருமை.. இரண்டாவதும் நன்று..

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895