என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்



புயல் எச்சரிக்கை
   மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தொடங்கி, கடந்த ஆண்டு மதுரையில் மையம் கொண்ட புயல் கிழக்கே நகர்ந்து புதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ளதாக தமிழ் வலைப்பதிவர்  ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. இது சேதம் விளைவிக்கும் புயலல்ல.  தேசம் கடந்த போதும் தமிழ்ப் பதிவர்களிடையே நேசம் விளைவிக்கும் புயல். உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைக்கும் புயல். அக்டோபர் பத்தாம் தேதி கரையைக் கடக்க இருக்கிற புயல்.
அதனால் ஆங்காங்கே இருக்கிற வலைப்பதிவர்கள் எல்லாம் புதுக்கோட்டைக்கு வந்து சேரும்படி அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்


                      தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு 2015
        நாள்: 11.10.2015

      இடம்:ஆரோக்கியமாதா மக்கள் மன்றம் 

                               பீ வெல் மருத்துமனை எதிரில் 
          ஆலங்குடி சாலை, 
புதுக்கோட்டை 
  கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமயில் நான்காவது பிரம்மாண்ட வலைப்பதிவர் சந்திப்பு  ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் நாளும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு விழா நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை சென்னை பதிவர் சந்திப்பின்போது கூட இருந்து பார்த்த அனுபவம் உண்டு. பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அவ்வப்போது பதிவர் சந்திப்புகள் நடைபெற்று வந்தாலும் 2012 இல் சென்னையில் நிகழ்ந்த வலைபதிவர் சந்திப்பு குறிப்பிடத் தக்கதாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் மூத்த பதிவர் புலவர் ராமானுசம் ஐயா அவர்கள்தான். வலைப்பதிவர்கள் சங்கம் தொடங்கப் படவேண்டும் அது முறையாக பதிவு செய்யப் பட்டு, பயனுள்ள வகையில் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தை  முன்வைத்தார். பதிவர் திருவிழாக்கள் வெற்றிகரமாக நடந்தாலும் நோக்கம்  முழுமைபெறவில்லை  என நினைக்கிறேன். ஆனாலும் அவை மிக சிறப்பான தொடக்கம் என்பதில் ஐயமில்லை
   அடுத்தடுத்து  மூன்று சந்திப்புகள் நிறைவுற்ற போதிலும் கூடினோம் பேசினோம் கலைந்தோம் என்ற விதமாக அல்லாமல் மிகப் பயனுள்ள விதமாக அமைய வேண்டும் என்ற நோக்கோடு ஒரு பிரம்மாண்டமான வலைப்பதிவர் திருவிழாவுக்கு புதுக்கோட்டை தயாராகிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நிகழ்ச்சியை  திட்டமிட்டு எப்படி நடத்த வேண்டும் என்பதில் அனுபவம் பெற்றவர் கவிஞர் முத்துநிலவன்  அவர்கள்.  தான் சிறப்பாக முன்மாதிரியாக செயல்படுவதோடு மற்றவரையும் ஊக்கப்படுத்தி அவர்களது முழுத் திறமையும் வெளிபடுத்துவதில் அவருக்கு இணை அவரே.
  நமது எழுத்துகளை படிப்பவர்கள், நாம் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களை தரும் பதிவர்கள் அசாத்திய  திறமையுள்ள பதிவர்கள் மூத்த - இளைய பதிவர்கள் இவர்களை சந்தித்து உரையாடியதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை  அளவிட முடியாது. ஏற்கனவே மூன்று முறை அந்த மகிழ்ச்சியை அனுபவித்தவன் என்ற முறையில் நான்காவதாக புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவையும் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன் .
  வலைப் பதிவு எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் வலைப் பதிவர்கள் சந்திப்பினால் என்ன பயன் என்று கூறுவோரும் உண்டு.பணப் பலன் தொடர்பான பயன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எத்தனை நண்பர்களை பெற்றிருக்கிறோம் அவர்களைஎல்லாம் சந்தித்து அளவளாவி ஆனந்தம் அடைவதற்கு கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வோம்  இணையத்தின் வழியாகவே மாயத் தொடர்பில் இருந்த நாம் நேரிடையாக சந்தித்து கருத்துகளை பரிமாறிக்கொள்வதில் கிடைப்பதில் மகிச்சியை அளவிடத்தான் முடியுமா.

    முதல் முறையாக பதிவர் சந்திப்பின்போது எத்தனை ஆச்சர்யங்கள். அதிரடியாக எழுதும் எழுத்துக்கள் கொண்ட சிலரை  நேரில் பார்க்குபோது அமைதியின் வடிவமாக பார்த்தேன். எழுத்தில் அமைதியைக் கடைபிடிக்கும் சிலர் நேரில் கலகலப்பாக இருந்ததும், வலைப்பதிவுகளை காரசாராமாக  விவாதத்தில் மோதிக் கொண்டவர்கள் கை கோர்த்துக் கொண்டு பேசிகொண்டிருந்ததும் கண்கொள்ளக் காட்சியாக அல்லவா அமைந்தது   வெளி நாட்டில் இருந்து கூட இப்பதிவர் சந்திப்பிற்காக இந்தியா வந்தவர்களும் உண்டு.
   மாற்றுக் கருத்து உடையவர்களும்   நேரில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு உரையாடுவதற்கு  வலைப்பதிவர் சந்திப்பு துணை புரிகிறது
    பல்வேறு துறைகளில் ஆற்றல் உள்ளவர்களை அந்தந்த துறை சார்ந்து தமிழில்  எழுதுவதற்கு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்பதை சந்திப்பின் முக்கிய  குறிக்கோளாகக் கொள்ளலாம். இணையத்தில்  தமிழின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் தகவல்களை  தமிழில் தேடிப் பெற முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். பொழுதுபோக்கு மட்டுமல்லாது அறிவியல் கலை,பண்பாடு, வரலாறு வாழ்வியல் , அரசியல்,ஆய்வுகள்  என்று எல்லா தளங்களிலும் இப்போதுள்ளதை விட பல மடங்கு அதிக அளவில் உள்ளடக்கம் காணக் கிடைக்க வேண்டும். இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை எந்த அளவுக்கு அதிகரிக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகரிப்பதற்கு அடித்தளமாக வலைபதிவர் சந்திப்பை பயன் படுத்திக் கொள்ளவேண்டும் எனபது தமிழை நேசிக்கும் பலரது விருப்பம் என்றால் மிகையாகாது
விழாவிற்காக நாம் செய்ய வேண்டியது என்ன?
வலைப்பதிவர் கையேடு:
இந்த வலைப்பதிவர் திருவிழாவின் முக்கிய அம்சம்  வலைப் பதிவர் கையேடு ஒன்று வெளிவர இருக்கிறது   தமிழில் பல்லாயிரக் கணக்கில்   வலைதளங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவை அனைத்தும் தொடர்ந்து இயங்குவதில்லை. சில நமக்கு அறிமுகமானவை அவற்றில் பல நாம் அறியாதவை. முடிந்தவரை அவற்றை தொகுத்து அதன் விவரங்களை கையேடாக வெளியிட்டு. அனைவரும் அறியச்செய்யும் வகையில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது பாராட்டத் தக்கது.
   இதில் தமிழில் வலைப் பதிவு எழுதுபவர்களின்  பெயர் வலைத்தளம் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற இருக்கிறது. இந்தக் கையேட்டை வலைப்பதிவர் அல்லாத ஒருவர் காணும் பட்சத்திலும் அவரையும் இணையத்தில் எழுதத் தூண்டும் வகையில் கையேடு அமைய இருக்கிறது. இந்தக் கையேடு சிறப்பாய் அமையும் பொருட்டு வலைப்பூ விவரங்களை உடனடியாக பதிவு செய்து ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். தங்கள் பெயரை   மட்மல்லாது  தங்கள் நண்பர்களின் வலைப்பூ விவரங்களையும் அனுப்ப செய்யும்படியும் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்கள் சார்பாக நீங்களே இதுவரை பதிவு செய்யப்படாத வலைபதிவுகளை பதிவு செய்யும்படி  கேட்டுக் கொள்கிறோம். தற்போது அதிகம் எழுதாத பழைய வலைபதிவுப் பிரபலங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அவர்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதோடு அவர்களுடைய வலைத்தள விவரங்கள் பெற்றுத் தந்தால் கையேடு மிக சிறப்பாக அமையும். கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் வலைப்பூ விவரங்களை தந்து உதவுதல் நலம். வருகையை பதிவு செய்யவும் வலைப் பதிவு விவரங்களை பதிவு செய்யவும் கீழுள்ள இணைப்பின் வழி செல்லவும் 
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

விழாவிற்கு அழைப்பு 

  இங்கு தனிப்பட்ட அழைப்பு யாருக்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்  எனினும் நாமனைவரும் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்துக் கொள்வோம். என்னை அழைக்கவில்லை என் நண்பரை அழைக்கவில்லை என்று தயவுசெய்து யாரும் நினைக்க வேண்டாம்.  இந்த வலைப் பதிவர் சந்திப்பை நமது சொந்த விழாவாகவே கொண்டாட  வேண்டும்.
   விழாவுக்கென்று தனி வலைப்பூ உருவாக்கப் பட்டுள்ளது. அதில் பதிவர் சந்திப்பு பற்றிய அவ்வப்போதைய செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முடிந்தால் இந்த வலைப்பூ ஐ.டி யை பயன்படுத்தி முடிந்தவரை அந்தந்த வலைப் பக்கங்களுக்கு சென்று அவர்களது சமீபத்திய பதிவில் பின்னூட்டத்தில் அழைப்பு விடுத்து  விவரங்களும் கேட்டு கருத்திட்டால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினரை கேட்டுக் கொள்கிறேன். முடிந்தவரை நாம் செல்லும் வலைப்பதிவுகளுக்குசென்று  அழைப்பு விடுப்போம்.
   
 இந்த விழாவில் முக்கிய வலைப் பதிவர் கையேடு புதிய முயற்சியாக முன் வைக்கப் பட்டுள்ளதால் . இதை சாதாரணமானதாக நினையாமல் அனைத்து பதிவர்களும் கீழ்க் கண்ட இணைப்பில் சென்று படிவத்தில்  பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் 
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

பிரம்மாண்டமான போட்டி 
இன்னொரு மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்த்துடன் இணைந்து  சிறந்த கருத்தாக்கம் கொண்ட தமிழ்  வலைப் பதிவுகளை வளர்க்கும் பொருட்டு மாபெரும் போட்டிகள் ஒன்றை அறிவித்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் போட்டியில் திறமையுள்ள உங்கள்  நண்பர்களை பங்குபெற, வலைப்பதிவை தொடங்கிக் கொடுத்து பங்கேற்க செய்யலாம். இந்தப் போட்டி தொடர்பான அறிவிப்பை உங்கள் முகநூல் ட்விட்டர், வாட்சப்பில் பகிர்ந்து போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதை நம் கடமையாகக் கொள்வோம்.பெண்களை அதிக அளவில் பங்கேற்க ஊக்கப் படுத்துவோம்.
போட்டி தொடர்பான விவரங்களை அறிய  இங்கு க்ளிக் செய்யவும்

நிதி
  விழா நடத்துவதற்கு  கடின உழைப்போடு நிதியும் தேவைப்படும் எனபது நாம் அறிந்ததே. தற்போது வரை நிதி வரவு போதுமான அளவுக்கு இல்லை என தெரிய வருகிறது. வலைப் பதிவர்கள் அவரவர் விருப்பப் பட்ட தொகையை விழாக் குழுவினருக்கு வழங்கினால் நிதிச்சுமையை குறைக்க முடியும்
நன்கொடை அளித்தவர்கள் மற்றும் நன்கொடை அளிப்பதற்கான விவரங்களை அறிய  க்ளிக் செய்யவும் .
நன்கொடை விவரங்கள்
 நன்கொடை விவரங்கள் மற்றும்  விழா செலவு விவரங்கள்  விழா முடிந்ததும் முறையாக அறிவிக்கப்படும்
விழாவிற்குவருவோர் மற்றும்  வர இயலாத சூழலில் உள்ளோர் யாராக இருப்பினும் கீழ்க்கண்ட  இணைப்புக்கு சென்று பதிவு செய்யுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இந்த வலைப்பதிவர் திருவிழா சற்று தொய்வடைந்துள்ளதாக கருதப்படும் வலைப்பூக்களை, மீண்டும் எழுச்சி பெற செய்வதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை
வலைப்பதிவர்கள் அனைவரும் பங்கேற்போம் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு நம் பங்கை முன்வைப்போம். 

                                         அணையப் போகும் விளக்காக
                                      அருந்தமிழ் நிலையும் ஆகிடுமோ?
                             கணையை செலுத்தா  வில்லாக
                                       கன்னித் தமிழும் இருப்பதுவோ?
                            அணையைத் தாண்டா வெள்ளமென
                                       அடியில் கிடந்து பயன்என்ன?
                             இணையத் தமிழால் வலைப்பதிவர் 
                                         இக்குறை போக்க இணைந்திடுவோம்

                             மென்பொருள் வன்பொருள் யாவிலுமே
                                        தமிழின் கால்கள் பதியட்டும்
                             நன்பொருள் இலக்கியம் கட்டுரைகள்
                                       இணையம் முழுதும் பரவட்டும்
                             கண்பொருள் பார்த்துக் கற்றவையும்
                                      கணினித் தமிழால் வளரட்டும்
                             இன்பொருள் என்று தமிழ்மொழியை
                                        இவ்வுலகம் அறிந்து கொள்ளட்டும்

****************************************************************************
விழா தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி

bloggersmeet2015@gmail.com      
இவ்விழா சிறக்க உழைத்துக் கொண்டிருக்கும் விழாக்குழுவினருக்கும், நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும், வாழ்த்தும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 

***********************************************************************************
மன்னிப்பு 
கடந்த ஒரு மாத காலமாகவே வீடு மாற்றம்,எதிர்பார்த்த எதிர்பாராத இணைய இணைப்பு சிக்கல்கள்,அலுவலகப் பணிகள் காரணமாக விழா பற்றி எழுத இயலவில்லை.விழாக் குழுவினரும் பதிவர்களும் தாமதமாக எழுதியதற்கு மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் 

புதன், 9 செப்டம்பர், 2015

உண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா?

  
  நடுத்தர மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினர்,  பணப் புழக்கம் காரணமாகவும்  மீடியா விளம்பரங்களின் தாக்கம் காரணமாகவும் நுகர்வு நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார்கள். இதை நுகர்வு வெறி என்று கூட கூறலாம். தேவைக்கு அதிகமான நுகர்ச்சி,பொறுப்பற்ற நுகர்ச்சி,தொடர்ந்து கடை பிடிக்க முடியாத நுகர்ச்சி இவை நுகர்வு வெறியின் அம்சங்களாகும். இவை வாங்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது 

   பல்வேறு மாயாஜாலம் காட்டும்  விளம்பரங்கள் நுகர்வோரை கவர்ந்திழுப்பதால் தேவையை கணக்கில் கொள்ளாமல் பொருட்கள் வாங்கிக் குவிக்கப் படுகின்றன. நுகர்வோரின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும்  நுகர்வோருக்கென்று பொறுப்புகள் உண்டு. அவை என்னவென்று சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

   நாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை  கீழே கொடுக்கப் பட்டவற்றோடு  ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா?
  1. பணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.
  2.  கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.
  3.  பொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.
  4. வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.
  5.   பொருளின் பெயர் சீட்டில் அல்லது உறையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.
  6. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
  7.  சந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.
  8. எதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.
  9. சந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,
  10.  நான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.
  11. நுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும்  உதவுவேன்.
  12. எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான்  வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே  வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.
இவற்றில் எட்டுகேள்விகளுக்காவது உங்களுடைய நேர்மையான பதில் ஆம் என்றால் நீங்கள் சமூக ஆர்வலர் என்றும் விழிப்புணர்வு மிக்கவர் பெருமை கொள்ளலாம். 

   (நான் ஆம் சொன்னதை எண்ணிப் பார்த்தேன். எட்டு தேறவில்லை. முயற்சிக்க வேண்டும்) 

    ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

    விகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆச்சர்யம்


    பொதுவாக மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் ஹிட்ஸ்களின் எண்ணிக்கை யை  விட  எனது கவிதைகளுக்கான ஹிட்ஸ்கள் குறைவாகத் தான் இருக்கும் அதற்கு விதிவிலக்காக  ஒரே ஒரு கவிதை அமைந்திருக்கிறது . 
    அதவும் 2013 செபடம்பர் 5 அன்று நான் "உண்மையான ஆசிரியர் இப்படித்தான்  இருப்பாரோ என்ற கவிதையை பதிவிட்டேன். கவிதைகளுக்கு ஆயிரம் ஹிட்ஸ் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் இந்தக் கவிதை  இன்று   வரை 7312 முறை பார்க்கப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. அதுவும் கடந்த  சில நாட்களாக ஆசிரியர் பற்றி தேடுவோர் கண்ணில் சிக்கி படிக்கப் படுவதாக tynt publishing tool இன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது  கடந்த வாரத்தில்  மட்டும்  கிட்டத்தட்ட 2000 ஹிட்ஸ் கிடைத்துள்ளதோடு கிட்டத் தட்ட 90 முறைக்கு  மேல்  இதன் டெக்ஸ்ட் காப்பி செய்யப் பட்டதாகவும்  தெரிவிக்கிறது. ஒரு  பழைய பதிவு இத்தனை முறை பார்க்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது. புதிய பதிவுகளை பின்தள்ளி முன் நிற்பதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்பதில் ஐயமில்லை.



         இக்கவிதையை  செல்போனில் நானே வாசித்து ஆடியோவாக பதிவு செய்து படக் காட்சி உருவாக்கி ஆடியோ இணைத்து யூ ட்யூபிலும் வெளியிட்டுள்ளேன்.  குறைவான தரமுடைய வீடியோ  என்ற போதிலும் அதனையும் 4,479 பேர் பார்த்துள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது.





    பலமணி நேரம் போதித்து தூக்கத்தை வரவழைப்பவர் அல்ல ஆசிரியர்
    சில மணித்துளிகள் பேசினாலும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்தான் உண்மையான ஆசிரியர்

    தனது அறிவால் கற்பிப்பவரை விட நடத்தையால் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியர்.
    காலம் கடந்தும் மாணவர் மனதில் நிலைத்திருப்பவரே உன்னத  ஆசிரியர்.

           ஆசிரியப் பணியை உண்மையான ஈடுபாட்டோடு செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களும் செய்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள். ஏற்றிய ஏணியை எப்போதும் நினைத்துப்பார்ப்போருக்கும் வாழ்த்துகள் 

    ***********************************************************************


    இரண்டு நாட்களுக்கு முன்னர் விகடன்.காம் இல்  வாசகர் பக்கத்தில் எனது (கு)லுங்கி அழுது கேட்கிறேன் என்னை ஏன் கைவிட்டீர்? என்ற பதிவு வெளியாகி இருக்கிறது .புகைப்படத்துடன் வெளியிட்ட விகடனுக்கு நன்றி
    விகடனில் படிக்க
    http://www.vikatan.com/news/article.php?aid=51914
    (கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"

    என்வலைப்பதிவில் படிக்க
    (கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"
    "என்னை ஏன் கைவிட்டீர் என்ற தலைப்புக்கு சற்று பயந்தேன் ,.யாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்ற அச்சம் இருந்தது.நல்ல வேளை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நகைச்சுவையாக எடுத்துக் கொண்டமைக்கு நன்றி

    ***************************************************************

    படித்து விட்டீர்களா

     மதுமொழிகள் 




    வெள்ளி, 4 செப்டம்பர், 2015

    Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின்தொடர முடியுமா?


    கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் 
    புதியவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படக் கூடும் 
    வலைப் பூக்களில் பல வசதிகளை கூகிள் வழங்கி வருகிறது.அவற்றில் சிலவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றில் நான் பயன்படுத்திய கற்றுக்கொண்ட ஒரு சிலவற்றை உங்களுடன் அவ்வப்போது
    கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்  என்ற தலைப்பில் பகிர்ந்து வருகிறேன் ஒரு சிலருக்காவது பயன்படும் அல்லவா?

       வலைப்பூவில் எழுதுவன் நோக்கம் படைப்புத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமன்று. யாரும் படிக்க வேண்டியதில்லை எனது ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறேன்.பார்வையாளர்களைப் பற்றிக் கவலை என்று ஒரு சிலர் சொன்னாலும்  நமது படைப்புகளை பிறர் படிப்பதாலும்  அங்கீகரிப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதே உண்மை .விவேக் ஒரு திறப்படத்துள் சொல்வது போல யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்.
       நமது பதிவுகள்   நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவது அதற்கான முயற்சிகள் எடுப்பதும்   தவறில்லை. 
      அதன் பொருட்டே நமது பதிவை  படிப்பவர்களுக்கு  விரும்பினால் அவர்கள் பின் தொடர்வதற்கு ஏதுவாக Follower விட்ஜெட்  மற்றும்  EMAIL SUBSCRIPTION விட்ஜெட் இணைத்து வைத்திருப்போம். அதில் விவரங்கள் கொடுத்து    இணைப்பவர்களுக்கு நமது பதிவுகள் அவர்களது பிளாக்கர் டேஷ்போர்டுக்கு  போய் சேர்ந்து விடும். அதே போல பிறரது வலைப்பூக்களில் உள்ள இணைப்பு விட்ஜெட் மூலம் நமது பிளாக்கர் ஈமெயில் முகவரி கொடுத்து இணைத்துக் கொண்டால் அவர்களது பதிவு நமது பிளாக்கர் டேஷ் போர்டுக்கு  வந்து சேர்ந்து விடும். இணைத்ததற்கு அடையாளமாக  நம்முடைய profile படமும் அவரது follwer விட்ஜட் டில் காட்சி அளிப்பதை காணலாம் .
     மேலுள்ள விட்ஜெட் மூலம் உள்நுழைந்து பின்தொடர்வதற்காக இணைவோம் .
    EMAIL SUBSCRIPTION மூலமும் நம்முடைய பதிவுகளை பிறரும் பிறருடைய வலைப் பதிவுகளை நாமும் தொடர்ந்து அறியலாம். இதனை பின்னர்  விரிவாக பார்ப்போம்.

       நமது வலைபதிவில் sign in செய்து உள்நுழைந்தால் பிளாக்கர் டேஷ் போர்டில் கீழ்க் கண்டவாறு  காண முடியும் இதில் நாம் இணைந்துள்ள வலைப் பூக்களின் பதிவுகளின் பட்டியலுடன் பதிவின்  சுருக்கத்தை காண முடியும். நாம் பின்தொடரும் வலைப் பதிவர்கள் புதிய பதிவுகள் இடும்போதெல்லாம் அவை சில நிமிடங்களில் நம்மை வந்தடைந்து விடும். விரிவாகப் படிக்க அதனை கிளிக் செய்தால் அவரது வலைப் பக்கத்துக்கு சென்றுவிடும் . இதே போல நம்மை  பின்தொடர்பவர்களுக்கும் நமது பதிவுகள்  சென்றடையும்.

     
    எல்லா வலைப்பதிவர்களும் தன வலைப்பக்கத்தில் folower விட்ஜெட் இணைப்பதில்லை. Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூகளை நாம் பின்தொடர முடியுமா அதாவது அவர்களது பதிவுகளை அறிவதற்கு வழி இருக்கிறதா? இருக்கிறது. நீங்கள் விருபுகிற வலைப் பூவை உங்கள் வாசிப்புப் பட்டியலில் இணைத்து அவரகளது பதிவுகளின் அறிவிப்பை அறியலாம்
     உதாரணமாக  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் WWW.JEYAMOHAN.IN அவரது வலைப் பதிவை நமது படிக்கும் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனில்


    கீழே படத்தில் உள்ளதை கவனியுங்கள் அதில் சிவப்பில் வட்டமிடப் பட்டுள்ள ADD ஐ கிளிக் செய்தல் அருகில் உள்ளவாறு ஒரு தகவல் பெட்டி தோன்றும்





    அதில் Add from URL இல் நீங்கள் தொடர விரும்பும் வலைப்பூ முகவரியை அதாவது (எ.கா www.jeyamohan.in ) என்று இட்டு Follow பட்டனை அழுத்தவேண்டும் இனி அவர் புதிய பதிவு இடும்போதெல்லாம் உங்கள் டேஷ் போர்டுக்கு தானாக வந்து சேர்ந்து விடும்.

     பதிவுகளை  பதிவு எழுதுபவர் அறியும் வண்ணம் தொடர்வதற்கு  Follow publicly என்ற  ஆப்ஷன் உள்ளது. இதன் நீங்கள்  தொடர்வதை வலைப்பூஎழுதுபவர் அறிவார். உங்கள் profile விவரம் அறிய முடியும்..
           சில  நேரங்களில் அவரையும் அறியாமல் பின் தொடர விரும்பினால் follow anonymously என்ற ஆப்ஷனும் உள்ளது . நீங்கள்தான் பின்தொடர்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரியாது உங்கள் profile படமும் விவரமும் மறைக்கப் பட்டுவிடும்.சில நேரங்களில் சில  காரணத்திற்காக  மற்றவர்களின் பதிவுகளை தொடர்கிறோம் என்பதை தெரிவிக்காமல் இருக்க சிலர் விரும்புவது உண்டு. அவர்களுக்கு இது பயன் படும்.
    கீழுள்ள படத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்



    மேலே following option இல் நீங்கள் விரும்பிய ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.


    இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது Follower விட்ஜட் இணைக்காதவர்களின் பதிவுகளை தொடர முடியும் என்பதே


    சிலர் தினந்தோறும் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பார்கள். அவை நமது டேஷ் போர்டை நிறைத்து எரிச்சலை உண்டாக்கும் .இதனால் நமது ரீடிங் லிஸ்டில் அரிதாக நல்ல பதிவுகள்  கண்ணில் படாமல் போக வாய்ப்பு உள்ளது. 
          அப்படியானால் ஏதோ ஒரு ஆர்வத்தில் இணைந்த வலைபூக்களை தொடர்வதை நிறுத்தினால் நன்றாக இருக்குமே? என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு உள்ளது .
    அப்படி நிறுத்த விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் 
    Email subscption பற்றியும் இன்னொரு பதிவில் பார்ப்போம்  

    ****************************************************************************** 

    கற்றுக் குட்டியின்  முந்தைய கணினிக் குறிப்புப் பதிவுகள்


  1. பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  2. முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  3. உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  4. உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  5. காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  6.  இன்ட்லியால் ஒரு இன்னல்
  7. பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  8. .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?


  9. தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?
  10. எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?
  11.  கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 
  12. காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? 
  13. விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல் 
  14. லேசா பொறாமைப் படலாம் வாங்க! 
  15. எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா? 
  16. EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?