என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, July 7, 2013

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?


கற்று குட்டியின் கணினிக் குறிப்புகள் 

EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா? என்ற பதிவிற்கு நான் எதிர் பாராத அளவிற்கு வரவேற்பளித்த அத்தனை பேருக்கும் நன்றி.(தெரியாம பண்ணிட்டோம். விட்டுடுப்பா எங்களை என்று யாரோ சொல்வது கேக்குது. ஆனாலும் விடமாட்டோம் இல்ல)

அந்தப் பதிவின் கருத்துரையில் நண்பர் முகமது கையூம்  "தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?" என்று கேட்டிருந்தார். நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன். ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது. அதன் மூலம் நம் வீட்டில் கூட பிரிண்டரில் காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக நிரப்ப  செய்ய முடியும். 

   கையாள்வதற்கு  மிக எளிமையான இதை  பயன்படுத்த Excel மேக்ரோ Enable  செய்யப்பட்டிருக்க வேண்டும்

இதோ  விளக்கம்

கீழுள்ள இணைப்பின்மூலம் Cheque Print என்ற எக்செல் கோப்பை டவுன் லோட் செய்யவும்.

Cheque Print Download

    இந்த பக்கத்திற்கும் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்

http://www.xl.nkworld.in/2013/03/bank-cheque-printing-software-in-excel.html

இதை கணினியில் உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளவும். கோப்பை திறந்தவுடன் மேக்ரோக்கள் செயல்பட அனுமதி கேட்கும்.படத்தில் உள்ளவாறு Options ஐ கிளிக் செய்துEnable the Content தேர்ந்தெடுக்கவும்

இந்த பைலில் மூன்று ஷீட்டுகள் உள்ளன முதல் சீட் HOME..இதில் காசோலை பிரிண்ட் செய்வதற்கான குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன 
அடுத்தது Data . இந்த ஷீட்டில் காசோலை விவரங்களை டைப் செய்யவேண்டும்.
இந்த விவரங்களில் Amount in words நான் forumula பயன்படுத்தி இருக்கிறேன்.நீங்கள் ரூபாயை எழுத்துக்களால் டைப் செய்தும் கொள்ளலாம்

(Formula பயன்படுத்த வேண்டுமெனில் இந்த பதிவைப் பார்க்க  EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?)

மூன்றாவது  சீட் CHEQUE. இதில்தான் காசோலை அமைப்பு  LAYOUT உள்ளது. 

1. DATE BOX  2.NAME BOX   3. AMOUNT IN WORDS BOX 4.AMOUNT IN FIGGURES

இதில் வழங்கும்  வங்கிக் கணக்கில் செலுத்தியா பின்னர் தொகை பெரும் வகையில் காசோலையை A/C PAYEE ஆக வழங்க இட்டு மேற்புறத்தில் YES ஐ கிளிக் செய்ய வேண்டும் இது தேவை இல்லையெனில் YES க்கு பக்கத்தில் DROP DOWN MENU உண்டு, அதில் NO வை தேர்ந்தெடுக்க வேண்டும் 

. முந்தைய SHEET ஆனா DATA வில் அளிக்க வேண்டிய  காசோலையின் விவரங்களை தட்டச்சு செய்திருக்கிறோம் அல்லவா அதில் நமக்கு தேவையான ஒன்றை RIGHT CLICK செய்தால் போதும். அதன் விவரங்கள் CHEQUE பக்கத்திற்கு தானாக உள்ளீடு செய்துவிடும்.எளிதில் செக் பிரிண்ட் எடுக்கலாம்.

நம்மிடம் உள்ள காசோலைத் தாளில் உரிய இடங்களில் விவரங்கள் இல்லாமல் சற்று மேலேயோ கீழேயோ இடதுபுறமாகவோ வலது புறமாகவோ பிரிண்ட் ஆகிவிட வாய்ப்பு உண்டு. இதை சரியான இடத்தில் அச்சடிக்க இதில் உள்ள  வசதியே வலது புறத்தில் அமைந்துள்ள  LAYOUT SELECTION BOX.

   முதல் செக்கை பிரிண்ட் எடுக்குமுன் நம்மிடம் உள்ள காசோலையை  A4 தாளில் மேற்புறமாக அமையும்படி XEROX எடுத்துக் கொள்ளவேண்டும்.அதில் மாதிரி பிரிண்ட் எடுத்துப் பார்த்தால் விவரங்கள் சரியான இடத்தில் அமைந்துள்ளனவா என்பதை அறிந்து கொள்ள முடியும். 

உதாரணத்திற்கு  தேதி சரியான இடத்தில் விழவில்லை என்று வைத்துக் கொள்வோம். வலது புறத்தில் உள்ள LAYOUT SELECTION BOX உள்ளது 

அதில் கிளிக் செய்தால்DROPDOWN MENU கிடைக்கும் அதில் 1. DATE BOX  2.NAME BOX   3. AMOUNT IN WORDS BOX 4.AMOUNT IN FIGGURES ஒன்றன கீழ் ஒன்றாக உள்ளது.அதில் DATE BOX ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தேதியை இடதுபுறம் நகர்த்த வேண்டும் எனில் < ஐயும் வலதுபுறம் நகர்த்த > ஐயும் கீழுப்புரமாக நகர்த்த v ஐயும் மேற்புறமாக நகர்த்த ^ஐயும் கிளிக் செய்யவேண்டும் .இப்படி தொகை,பெயர் இவற்றையும் சரியாக செட் செய்து கொள்ளலாம். XEROX இல் சரியாக வந்ததும் ஒரிஜனல் காசோலையில் பிரிண்ட் எடுத்துப் பார்த்து சேமித்துக் கொள்ளலாம்.

   இந்த பக்கத்தில் காசோலை விவரங்களை உரிய பகுதிகளில் நேரடியாக டைப் செய்தும் மேற்புறத்தில் உள்ள PRINT NOW கட்டளையை கிளிக்செய்து பிரிண்டரில் செக்கை உள்ளிட்டால் அழகாக பிரிண்ட் செய்து விடும்

*************************************************************************

 நன்றி: http://www.xl.nkworld.in

17 comments:

 1. பலருக்கும் உதவலாம்... நல்ல விளக்கத்துடன் கூறி உள்ளீர்கள்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்

   Delete
 2. ஐயா...

  உதவிகரமான தகவல்... அழகான விளக்கக் குறிப்புடன் படங்களும் இணைத்து பதிவிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. நல்லதொருதகவலை விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. இணையத்தின் மூலமே பெரும்பாலான செலவுகள் செய்து விடும் தற்போதைய நாட்களில் காசோலை பழக்கம் குறைந்து வருகிறது.

  காசோலை அதிகம் பயன்படுத்துவர்களுக்கு பலன் தரும் பகிர்வு.....

  ReplyDelete
 5. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.!

  ReplyDelete

 6. வலைத்தளத்தின் "கம்பியூட்டர் புரொபஷர்" முரளி அவர்களே உங்களின் பதிவு பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் இது போல பதிவுகளை தொடர்ந்து இடுங்கள் தமிழில் படிப்பவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்

  ReplyDelete
 7. நல்ல தகவல், அதிக அளவில் காசோலை பயன்படுத்துவோருக்கு இது மிக உதவியாக இருக்கும், நாமும் முயற்சி செய்து பார்க்கலாம், இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கும் நன்றி.

  ReplyDelete
 8. நல்ல தகவல்,
  Vetha.Elangathilakam

  ReplyDelete
 9. பலருக்கு உதவும் தகவல் அய்யா...

  ஆனால், எழுத்துகள் பெரியதும் சிறியதுமாய் படிக்க சிரமமாய் உள்ளது... வரும் பதிவுகளில் ஒரே சீராய் எழுதுங்கள் அய்யா...

  நன்றி வணக்கம்..

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? எனது கணினியில் அனைத்தும் ஒரே அளவாக சரியாகத்தானே தெரிகிறது, என்னவென்று பார்க்கிறேன். வேறு பிரவுசரில் செக் செய்து பார்க்கிறேன். தகவலுக்கும் வருகைக்கும் நன்றி

   Delete
 10. பயனுள்ள தகவல். ஆனால் இதை வங்கிகள் ஏற்றுக் கொள்கின்றனவா?

  ReplyDelete
 11. நாம எப்பவாவது ஒருக்காதான் செக் யூஸ் பண்ணுறோம் அதனாலே கையாலே எழுதிட்டுப் போறது.

  இருந்தாலும் கம்பெனிகளுக்கு இது மிகவும் பிரயோஜனமானது மிக்க நன்றி...!

  ReplyDelete
 12. நமக்குப் புரியாத விஷயம். அதனால் 'உள்ளேன் ஐயா' சொல்லிவிட்டு நடையைக் கட்டுகிறேன்.
  யாராவது கேட்டால் சொல்லலாம் என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
  நன்றி!

  ReplyDelete
 13. பயனுள்ள தகவல்கள் அய்யா.நன்றி

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895