என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

லேசா பொறாமைப் படலாம் வாங்க!


  
வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு வெட்டியாக  பதிவு எழுதுபவரா நீங்கள்? வாங்க இவங்களை பாத்து கொஞ்சம் பொறாமைப் படலாம்.
கூகிள் பதிவு எழுதுபவர்கள் சம்பாதிப்பதற்கு ஆட்சென்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட வலைப்பூக்களுக்கு கூகிள் விளம்பரங்களை வழங்குகிறது. அதன் மூலம் கணிசமான வருமானம் பெறுபவர்கள் உண்டு. ஆனால் தமிழில் எழுதுபவர்களுக்கு இந்த விளம்பரங்களை கூகிள் தருவதில்லை. தமிழில் எழுதுபவர் சிலரும் எப்படியோ கூகிள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் பெறுவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு எந்தஅளவுக்கு வருமானம் கிடைக்கறது என்று தெரியவில்லை
 
   சமீபத்தில் ஆட்சென்ஸ்  மூலம் அதிகமாக சம்பாதிக்கும்  முதல் 10 இந்திய பதிவர்களைப் பற்றி அறிய நேர்ந்ததது. இதோ அந்த விவரம்.இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்
பெருமூச்சு விட்டுட்டும் படிக்கலாம் படிச்சிட்டும் பெருமூச்சு விடலாம்.


முதல் இடத்தில் இருப்பவர் அமீத் அகர்வால்.இவரது வலைப பூவின் பெயர் digital insipration; வலைபூ முகவரி www.lebnol.org.  I.I.T இல படித்த பொறியியல் பட்டதாரியான கணினி தொழில் நுட்பப் பற்றி எழுதிவரும் இவர் இந்தியாவின் முதல் முழுநேர தொழில்முறைப் பதிவராம்.இவரது சராசரி வருமானம் $40000. வருடத்திற்கு அல்ல மாதத்திற்கு.




 
2 வது இடம் அமித்பவானி  amitbhawani tech blog என்ற வலைபூ இவருடையது. வலைபூ முகவரி amitbhawani.com/blog கணினி தொழில் நுட்பம், பற்றியே  எழுதுகிறார். இவரது வருமானம்  $20000..இவரது வலைப் பூ எளிமையானவடி வமைப்பில் உள்ளது.




 
3. Shout Me Loud என்ற வலைப்பூவின் உரிமையாளர்  ஹர்ஷ் அகர்வால் .ஒரு மென்பொருள் பொறியாளர் .முன்னணி கணினி தொழில் நுட்ப நிறுவனமான அக்செஞ்சர் நிறுவனத்தில் கிடைத்த வேலையை ஒதுக்கி விட்டு முழு நேர வலைப் பூ எழுதுபவராக மாறினார்.அவர் குடும்பத்தினர் இதை எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லையாம்..இன்று மாதம் 15000$  வருமானம்  ஈட்டுகிறார். முகவரி http://www.shoutmeloud.com/




4.மாதம் 11000$ ஈட்டும் ஜஸ்பால் சிங் http://savedelete.com/ என்ற ப்ளாக் நடத்துகிறார். பெயருக்கேற்ற வகையில் கணினி குறிப்புகள் இவரது வலைப்பூவில் நிறைந்து காணப்படுகிறது.இவரும் மற்றவர்களைப் போலவே பொறியியல் பட்டதாரிதான். ஆனால் மெக்கானிக்கல் படித்தவர்.கணினியின் மீது தீராத  காதல் கொண்ட இவர் தூங்குபோது கூட மடிக் கணினி யுடன்தான் தூங்குவாராம்


5. கணினி அல்லாத துறையில் எழுதுபவர்களில்  முன்னணியில் இருக்கும் பிளாக்கர்  அருண் பிரசாத் தேசாய். பிசினஸ், மார்கெட்டிங் ட்ரெண்ட் பற்றிய செய்திகள் இவரது  trak.in வலைப்பூவில் அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன .இவரது மாத வருமானம் 10000$ களாம். IT பொறியாளராக இருந்த போதும் பிசினஸ் தான் இவரை கவர்ந்திருக்கிறது.

 
6. நிர்மல் பாலச்சந்திரன்: கணினி செல்போன் நுட்பங்கள்  பற்றி எழுதி முன்னிலையில் இருக்கும்  பதிவர் கொச்சியை சேர்ந்த இவர் சிவில் இஞ்சினியர்.முன்னணி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய இவர்    அதனை துறந்து 24 மணி நேர வலைப பதிவர் ஆனார்.இவரது வலைபூ http://www.nirmaltv.comநிர்மல் டிவி.காம் இன் மாத வருமானம் 9000$ 

 
7.  blogsolute.com ஐ தொடங்கி கணினி தொடர்பான செய்திகளை எழுதி வரும் ரோஹித் லாங்டே ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் .இவர் ஈட்டும் டாலர் வருமானம் 8500.கணினி சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் இவர் இணையம் கணினி தொடர்பான சொற்பொழிவுகளும் ஆற்றுகிராரம் .

 
 
 8. ராகுல் பன்சால் :இவரது வலைபூ Devil Workshopகணினி கைபேசி சார்ந்தே இவரது பதிவுகளும் அமைந்திருக்கின்றன . இவரது பொருளீட்டல் மாதந்தோறும் 7000 $.



 
9. இன்னும் ஒரு முன்னணி கணினி, வலைபதிவுகள்  சார்ந்து வலைபதிவர் ஹனிசிங் .இவரது வலைப்திவின் பெயர்  Honeytechblog.com.  வருமானம்  6000$ மாதந்தோறும் அட்சென்ஸ் மூலமாக சம்பாதித்து வருகிறார்

 .
 
10. இந்த வரிசையில் இடம் பெற்றுள்ள  தமிழ்நாட்டை சேர்ந்த  ஸ்ரீனிவாசின் வலைபூ 9lessons. முகவரி http://www.9lessons.info/. கணினி மொழிகள் நிரல்கள், தொடர்பாகவே எழுதும் இவரது வருவாய் மாதம்  5000$ . சென்னையில் வசிக்கும் இவர் DR. MGR பல்கலைக் கழகத்தில் படித்த மென்பொறியாளர்


  இவர்களைத் தவிர முன்னிலையில்  இருக்கும் இன்னும் பலரும் உண்டு.

       இவர்களைப் பற்றிய விவரங்களில் இருந்து சில விஷயங்களை  புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் கணினி தொடர்பான தகவல்களை  ஆலோசனைகளை பற்றி எழுதுபவர்கள் தான் பிளாக்கில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற முடியும் என்ற நிலையே தற்போது உள்ளது. இந்த நிலை ஒருநாள் மாறக் கூடும் 

   இவர்கள் யாரும் ஒரே நாளில் இந்த நிலையை அடைந்து விடவில்லை. Adsense  மூலம் வருமானம் ஈட்டுவதற்கு கடின உழைப்பும் உடனடி மேம்படுத்திக் கொள்ளுதலும் அவசியம் என்பதை இவர்களது பதிவுகள் உணர்த்துகின்றன. 
    கூகுளின் adsense அங்கீகாரம் பெற்ற மொழிகளில் தமிழ் இல்லை.  இந்தி மொழிக்கும் Adsense அப்ரூவல்  கிடைக்கவில்லை. இணையத் தொடர்பான முன்னேற்றம் இந்தியாவில் இன்னும் வளர வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

   அதீதமான நம்பிக்கையும்  உள்ளார்ந்த ஈடுபாடும், திட்டமிட்ட செயல்பாடும்   ஆழ்ந்த அறிவும் உடையவர்கள் எப்போதுமே வெற்றி பெறுகிறார்கள்.


நன்றி : தமிழ் கம்ப்யூட்டர் இதழ்  மற்றும் பல்வேறு இணைய  தளங்கள்

*********************************************************************************
எச்சரிக்கை: 1
பல்லு  இருக்கறவன் பக்கோடாவுக்கு ஆசைப்படலாம் பல்லு இல்லாதவன் "பன்"னோட நிறுத்திக்கணும்

எச்சரிக்கை  2 :  இந்தப் பதிவை அவங்கங்க பெட்டர் ஹாப் கிட்ட(ஏன் Best Half ன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க?) காட்டக்கூடிய தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால்  (அடி வாங்கினாலும் வெளிய சொல்லாத) காட்டலாம்

எச்சரிக்கை 3
இந்த top 10 வரிசையை பலர் பலவிதமாக வெளியிட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று உறுதிப் படுத்தப் படவில்லை,


*************************************************************************************** 

எழுத்துக்கள்  சிறியதாக காட்சி அளித்தால் தெரிவிக்கவும்


39 கருத்துகள்:

  1. ஸ்ரீனிவாசன் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நல்ல எச்சரிக்கைகள்...!

    பதிலளிநீக்கு
  2. எதுக்குங்க பெட்டர் ஹாப் கிட்ட காட்ட பயப்படணும்... இப்ப இப்படி ஆரம்பிச்சிருக்கற எங்களுக்கு எப்பவாவது, கண்டிப்பா இப்படியொரு எதிர்காலம் வரும்னு பில்ட் அப் கொடுத்திட வேண்டியதுதானே...

    பதிலளிநீக்கு
  3. அதீதமான நம்பிக்கையும் உள்ளார்ந்த ஈடுபாடும், திட்டமிட்ட செயல்பாடும் ஆழ்ந்த அறிவும் உடையவர்கள் எப்போதுமே வெற்றி பெறுகிறார்கள்.

    வியக்கஐக்கும் பகிர்வுகள்...!

    பதிலளிநீக்கு
  4. ஒரு பெண் பதிவாளர் கூட இல்லையே..

    எப்படி எல்லாம் வாழ்க்கையில் அசத்துறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச நேரம் நமக்காக ஒதுக்கி கணிணியிடம்
      வந்தாலே வீட்டில் திட்டு கிடைக்கிறது.
      இதுல பெண்கள் முழுநேர கணிணியில் வேலை செய்வதாவது...)

      நீக்கு
    2. @ அமுதா கிருஷ்ணன் உலகில் சிறந்த Chef களில் கூட ஆண்கள் தான் கொடி கட்டிப் பறக்கின்றனர். ஏன் தமிழகத்தில் கூட சிறந்த Chef கூட ஆண்கள்தான்.

      அதுமட்டுமல்ல பூரிக் கட்டையால் அதிகம் அடிவாங்குவதும் ஆண்கள் தான் ஹீ,ஹீ

      நீக்கு
    3. @அருணா செல்வம் கொஞ்சம் நேரம் வந்தாலே நல்லா கலக்குறீங்க உங்களுக்கு நிறைய நேரம் கொடுத்தால் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுவீர்கள் என்பதால்தான் நீங்கள் அடக்கப்படுகிறீர்கள்

      நீக்கு
    4. //கொஞ்ச நேரம் நமக்காக ஒதுக்கி கணிணியிடம்
      வந்தாலே வீட்டில் திட்டு கிடைக்கிறது.
      இதுல பெண்கள் முழுநேர கணிணியில் வேலை செய்வதாவது...)//
      உங்களுக்கா திட்டு கிடைக்கிறது நம்ப முடியலையே! உண்மையில திட்டறது நீங்கதான?

      நீக்கு
  5. ஆனா இதுக்கு நாம ஆங்கிலத்துல தான எழுதணும்.. வட்டார மொழிகளுக்கு ஆட்சென்ஸ் கிடையாதுன்னு நினைக்கிறன் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவின் எந்த மொழிகளுக்கும் அட்சென்ஸ் இல்லை. ஆனால் அதிக அளவில் பார்வையாளர்களைப் பெற்றால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

      நீக்கு
  6. அட பார்றா பிளாக் எழுதியே இம்புட்டு சம்பாதிக்குறாங்க ...!

    தீயா வேல செய்யோணும் ...! மொதல்ல வீட்டாவுல சேரணும் ...!


    //பல்லு இருக்கறவன் பக்கோடாவுக்கு ஆசைப்படலாம் பல்லு இல்லாதவன் "பன்"னோட நிறுத்திக்கணும்//

    பன்னே கெடைக்கமாட்டீங்குது பாஸ் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேட்டரோட கொஞ்சம் பீட்டரும் தேவையாம்
      முயற்சி பண்ணுங்க ஜீவன்

      நீக்கு
  7. வலைப்பதிவாளர்கள் அறிய வேண்டிய பகிர்வு.
    வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  8. அறியாத தகவல்கள்! கடைசி மூன்று அறிவுரைகள் நச்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நான் பெருமூச்செல்லாம் விடலீங்க. ஏன்னா, நான் பதிவுலகுக்குப் புதுசு.

    மிகவும் சுவையான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.உங்கள் வலைப பக்கம் வந்தேன். கம்மென்ட் பாக்ஸ் காணப்படவில்லை. சை செய்யவும்

      நீக்கு
  10. அறிய வேண்டிய தகவல்...
    அறிவுரையும் தேவையானதுதான்...

    பதிலளிநீக்கு
  11. Interesting. Never thought one could make that much money in blogs. If there is some ad in a blog, I usually don't go there. Even if I go, I will not click anything and get the hell out of there as soon as I can! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல் விளம்பரங்கள் எரிச்சலூட்டக் கூடியதுதான்.
      actually Nobody likes to click ads .. Some times it hides the content..closing click is preset as opening click in most of the adds

      நீக்கு
  12. பல்லு இல்லாதவன் பக்கோடா தின்ன ஆசைப்படக்கூடாது.உண்மைதான்

    பதிலளிநீக்கு
  13. நல்ல தகவல்கள்.....

    நன்றி.

    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் முரளிதரன் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - உண்மையாகவே இருக்கட்டும் - தமிழ் வலைப் பதிவர்களூம் ஆங்கிலத்திற்கு மாறட்டும் - வளமாக வாழட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. இப்படி எல்லோரும் நல்லா பதிவு எழுதி சம்பாதிக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் ஜெயலலிதா அவர்கள் அரசாங்கம் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்துகிறார் ஆனால் அதை புரியாமல் மக்கள் குறை சொல்லித் திரிகின்றனர்

    பதிலளிநீக்கு
  16. உண்மையிலேயே பொறாமைப் பட வைக்கும் பதிவுதான். தகவல்களுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  17. சம்பாதிச்சுட்டுப் போகட்டும் விடுங்க பாஸ்! நமக்கு நல்ல பேர் கிடைச்சாலே போதும்! (ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!)

    பதிலளிநீக்கு
  18. பயனுள்ள தகவல்
    பல்லிருந்தும் தமிழ் பதிவர்கள்
    பன் சாப்பிட்டிக் கொண்டிருக்க வேண்டியிருப்பதுதான்
    வருத்தமளிக்கிறது
    விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. படித்துவிட்டு பெருமூச்சும் விட்டாச்சு!
    எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடக்கூடாதுன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?

    பதிலளிநீக்கு
  20. அண்ணாந்து பார்த்து கொட்டாவி விடவேண்டியது தான்.முதலாவது லிங்கில் ஏதோ erorr.சரி பண்ணுங்க

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895