என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 1 ஜூலை, 2013

எச்சரிக்கை! கவனியுங்கள் சிறு நீரகங்களை!

 
  சென்னை நுங்கம்பாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் அருகில் துண்டு சீட்டுகள் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கும் ஒன்று கொடுத்தார்கள். ஏதோ ரியல் எஸ்டேட்விளம்பரமாக இருக்கும்அல்லது  கணினி கல்வி நிலையங்களின் விளம்பரமாக இருக்கும் என்று நினைத்தேன். சாதாரணமாக இது போன்ற விளம்பர நோட்டீசுகளை வாங்கிய பின் அவர்கள் எதிரிலேயே தூக்கி எறியாமல் கொஞ்சம் தள்ளி வந்து எறிவது வழக்கம். பெரும்பாலும் அது என்னவென்று பார்ப்பதில்லை. ஆனால் தற்செயலாக இதனை பார்த்தபோது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் அந்த துண்டு சீட்டுகளில் இடம் பெற்றிருந்தன. சிறுநீரகக் கோளாறுகளினால் பலர் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சரியாக கவனிக்காமல் போனால் இக் கோளாறுகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியாதாக மாறிவிடும். அலட்சியம் காரணமாகவும் நோய்க்கான அறிகுறிகளை அறிந்தும் அலட்சியமாக இருப்பவர்  உண்டு .

 இதன் பொருட்டு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக  சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள உள்ள தமிழ் நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷன் என்னும் அமைப்பு  சிறுநீரகம் பற்றி சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில்  அச்சடித்த நோட்டீஸ்கள் தான் அவை.
   சிறுநீரகம்  பற்றிய அடிப்படையான  விஷயங்கள் எளிமையாக அந்த துண்டுச் சீட்டில் கூறப் பட்டிருந்தது. அதன் சாராம்சம் இதோ!
 • நம் உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன .
 • ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மி நீளம் 5 செ.மீ அகலம் 150 கிராம் எடையும் உடையது 
 • உடலின் பின் பகுதியில் உள்ளது 
 • அவரை விதை வடிவம் கொண்டது
 • இடது சிறுநீரகம் வலது சிறுநீரகத்தைவிட சற்று பெரியது.
  சிறுநீரகத்தில்  முக்கிய பணிகள்
 • ரத்தத்தை பெறுவதும் வெளி அனுப்புவதும் 
 • உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல் 
 • உடலில் நீரின் அளவை சமப் படுத்துதல் 
 • உடலில் உள்ள உப்பின் அளவை சமப் படுத்துதல் 
 • அமிலத் தன்மையை சமநிலைப் படுத்துதல் 
 • இரத்தக் கொதிப்பை சீர் செய்தல்
 • சிறு  நீரகத்தில் சுரக்கும் ஒருவித ஹார்மோன்கள் இரத்த உற்பத்திக்கு காரணமாகிறது 
 • வைட்டமின் D உருவாக்க உதவுகிறது.
சிறுநீரகக்  கோளாறின் அறிகுறிகளாக என்னென்ன இருக்கும்?
 • முகத்தில் வீக்கம் 
 • சிறுநீர் குறைவாக வெளியேறுதல் 
 • கால்களில் வீக்கம்
 • சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம்,பசியின்மை 
 • வாந்தி ,உடல் அழற்சி 
 • தூக்கம் இன்மை 
 •  அரிப்பு 
 • சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் 
இவற்றில்  ஒன்றோ சிலவோ அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை நாட வேண்டியது அவசியம்.  இந்த அறிகுறிகள்  இருந்தால் சிறுநீரைக் கோளாறுகள் இருந்துதால் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை,
இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது நல்லது அல்லவா?

யாரை அதிகம் பாதிக்கும்?
 • சர்க்கரை நோய் இருந்தால் 
 • அதிக ரத்தக் கொதிப்பு 
 • புகை பிடித்தல் 
 • அதிக உடல் பருமன் 
 • குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய் இருந்தால் 
சிறுநீரகக்   கோளாறுகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
 • சீரான உணவு பழக்கம் 
 • உணவில் உப்பை குறைத்தல் 
 • புகை பிடிப்பது மது அருந்துவதை நிறுத்துதல்
 • தினமும் நடப்பதில் அல்லது எளிய உடற் பயிற்சியோ செய்தல்
 • நிறைய தண்ணீர் குடித்தல் 
 • சுய மருத்துவத்தை தவிர்த்தல் குறிப்பாக வலிநிவாரணிகளை தவிர்த்தல் 
தமிழ்  ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் துண்டு சீட்டுகள் இருந்தன.

இந்த அமைப்பு சிறுநீரகக் கோளாறு இருந்தும் சரியாக மருத்துவம்  செய்ய இயலாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு  சிகிச்சைக்கு உதவுகிறார்கள்.
   இதுபற்றி முழுவிவரம் அறிய அவர்கள் வலைதளத்திற்கு செல்லவும் வலைத்தள முகவரி 
  ஏழைமாணவர்கள் அதிகம் படிக்கும் மாநகராட்சி பள்ளிகளுக்கு இந்த துண்டு சீட்டுகளை வழங்கி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கும் சொல்ல வைத்திருக்கிறார்கள். விழிப்புணர்வு செய்தியை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் சிறுநீரகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த குறிப்புகளை  அச்சடித்து விநியோகித்த தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷனுக்கு நன்றி சொல்லலாம்.

********************************************************************************************************

32 கருத்துகள்:

 1. ஆம் உண்மைதான் அனைத்து நோய்களுக்கும் காரணம் சிறுநீரகத்தின் செயல்பாடே ஆகும்.

  பதிலளிநீக்கு
 2. அறிய வேண்டிய சாராம்சம்...

  தமிழ் நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பின் சேவைக்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 3. அறிய வேண்டிய விழிப்புணர்வு பதிவு சார்

  பதிலளிநீக்கு
 4. நல்ல முயற்சி...
  விழிப்புணர்வுப் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷனுக்கு நன்றியும் பாராட்டுக்களும்...!

  பதிலளிநீக்கு
 6. ப‍ராட்டப் படவேண்டிய பவுண்டேஷனுக்கும், அத்தோடு உங்களுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. உண்மை தான் ஐயா,கொழும்பில் எங்கள் வார்டில் இருக்கும் ஐம்பது பேரில் ஏறத்தாழ பத்து பேருக்கு சிறுநீரக கோளாறு தான் பிரச்சனை.Chronic Kidney Disease நோயாளிகள் எழுதப்படாத மரணச்சான்றிதழுடன் நாள் தோறும் வாழ்கின்றார்கள் என்று எமது Consultant அடிக்கடி சொல்லுவார்

  பதிலளிநீக்கு
 8. பயனுள்ள தகவல்.
  பகிர்வுக்கு நன்றி மூங்கில் காற்று.

  (நீங்கள் கேட்ட பாடலை எழுதினேன்.
  படிக்கவில்லையா...?)

  பதிலளிநீக்கு
 9. நடப்பதை மனித இனம் மறந்துகொண்டு இருக்கும் வேளையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல் . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. அருமையான விழிப்புணர்வு பதிவு! தகவல்களுடன் இணைய தள முகவரியும் அளித்தது நோயாளிகளுக்கு பயனளிக்கும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள பணி மேற்கொள்ளும்
  கிட்னி ரிசெர்ச் பவுண்டேசனுக்கும்
  அதை அருமையாகப் பதிவாக்கி அனைவரும்
  அறியத் தந்த தங்களுக்கும் மனமார்ந்த
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. // இந்த அமைப்பு சிறுநீரகக் கோளாறு இருந்தும் சரியாக மருத்துவம் செய்ய இயலாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு சிகிச்சைக்கு உதவுகிறார்கள்.
  இதுபற்றி முழுவிவரம் அறிய அவர்கள் வலைதளத்திற்கு செல்லவும் //

  தகவலுக்கு நன்றி! நான் பெரும்பாலும் யார் என்ன நோட்டீஸ் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன். வீட்டில் வந்து படிப்பேன். சில சமயம் உங்களுக்கு கிடைத்தது போன்று விஷயம் உள்ளவைகளும் உண்டு.

  பதிலளிநீக்கு
 13. Good initiative by kidney research foundation. Keep up this noble job.
  Sivaraman.S
  Chennai

  பதிலளிநீக்கு
 14. சிலர் படிக்காமலே தூக்கி ஏறிந்துவிடுவார்கள் சிலர் படித்த பின் தூக்கி ஏறிவார்கள் ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கும் பயன்படி இணையத்தில் தூக்கி ஏறிந்து இருக்கிறீர்கள்... பாராட்டுகள் முரளி சார்

  பதிலளிநீக்கு
 15. எளிமையாக இருக்கிறது. சொல்லும் கருத்தில் வலிமையாக இருக்கிறது. பயனுள்ள முயற்சியைப் பற்றிப் பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 16. சிறப்பான பகிர்வு. தேவையான விஷயங்கள். அவர்களது தொண்டு மூலம் பலர் பலன் அடைவது உறுதி.....

  பதிலளிநீக்கு
 17. உண்மையிலேயே பயனுள்ள பகிர்வு..நம் உடலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் காரணம் சிறு நீரகக் குறைபாடே என்பதான ஒரு டாக்டரின் குறிப்பு குறித்து வலை தளத்தில் படித்து எழுதலாம் என்று உள்ளேன்...

  பதிலளிநீக்கு
 18. மிகப் பளனுடை தகவல்கள்.
  நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 19. பகிர வேண்டிய செய்திதான்..நானும் நண்பர்களுக்குப் பகிர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. விழிப்புணர்வை பகிர்வது நல்ல விஷயம்... நன்றி!
  கமெண்ட் இடுவது, ரிப்ளை எல்லாம் chorme இல் வேலை செய்கிறது. இனி கருத்துரை தொடரும்.

  பதிலளிநீக்கு
 21. பயனுள்ள தகவல்கள். சிறுநீரகம் பற்றி இத்தனை தெளிவாக பாடப் புத்தகங்களில் கூட வந்திருக்குமா, தெரியவில்லை. சர்க்கரை நோயில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற செய்தி வந்துள்ள நேரத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரம் மிகவும் அவசியம்.

  உங்கள் பதிவில் பகிர்ந்தது ரொம்பவும் நல்ல விஷயம்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895