என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கட்சி இருக்குது!கொடியும் இருக்குது!


  தொலைக்காட்சியில்  வறுமையின் சிவப்பு படத்தில் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.  சட்டென்று அந்த மெட்டில் கட்சி இருக்குது கொடியும் இருக்குது என்ற ஒரு வரி மனதில் உருவானது. ஸ்ரீதேவியின் சந்தத்திற்கு அப்படியே தற்போதைய தேர்தல் காட்சிகளை வரிகளாக்கினால் என்ன என்ற விபரீத ஆசை தோன்ற ஒரு வழியாக பாடலை வரிகளால் நிரப்பினேன். நம்ம (கர்ண கடூரமான) குரலில் யாரும் அறியாமல் பாடிப் பாரத்ததில் பொருத்தமாக இருப்பதாக தோன்றியது. இதை யாரையாவது கரோக்கி பயன்படுத்தி பாடவைத்து யு ட்யூபில் போடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள் அடுத்த தேர்தலே வந்து விடும் என்பதால் வரிகளை மட்டும் இங்கே வெளியிடுகிறேன். 
எத்தனையோ சோதனைகளை சந்தித்திருப்பீர்கள். அதில் ஒன்றாக இதையும் கருதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 (சிப்பி இருக்குது முத்தும் இருக்குது  மெட்டு)

பெண்     :  தந்தன தத்தன தைய்யன தத்தன தான
                 தத்தன தான தையன்ன தந்தனா

ஆண்      :  கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                      கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி

பெண்     :  ல ல ல ல ல ல லா ல ல ல லா
ஆண்      :  தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது
           கூட்டணி சேர  ஆளுமில்லடி  ராசாத்தி

          கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                   கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி
               தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது
          கூட்டணி சேர ஆளுமில்லடி  ராசாத்தி

பெண்     :  ம் (விசில் சத்தம்)
ஆண்      :  தொண்டர்கள்

பெண்     :  நனா னா
ஆண்       பாவம்தான்

பெண்     :  ரீசரி
ஆண்      :  அஹா...தலைவர்கள்

பெண்     :  ம்...ம்...ம்...

ஆண்      :  பேரம்தான்
                தொண்டர்கள் பாவம்தான் ...தலைவர்கள் பேரம்தான்
                
பெண்     :  அ...
ஆண்       :  கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                     கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி


     (இசை)                          சரணம் - 1

பெண்     :  நன நானா
ஆண்       :  கமான் சே இட் ஒன்ஸ் அகையின்

பெண்     :  நன நானா
ஆண்      :  இம்... காசு வேணும்

பெண்     :  தர னன னன தர்ர ர னன னன
ஆண்      :  போஸ்டர் ஒட்ட ஆளும் வேணும்

பெண்     :  தானே தானே தான
ஆண்     :  அப்படியா ம் நோட்டு காட்டி ஒட்டு


பெண்     :  தத்தன தன்னா
ஆண்    :  கேட்கவைத்து

பெண்     :  லாலா லல்லா லாலா லா
ஆண்       :  வணக்கம் சொல்லி கெஞ்சிக் கொண்டு

பெண்     :  நனா நன நனா தனன்ன ல ல தனன்ன
ஆண்       :  பியூட்டிபுல்                
            தெருவில் நின்றது யார் நானா அவனா எவனோ

                கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                      கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி
                 தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது
           கூட்டணி சேர ஆளுமில்லடி  ராசாத்தி

                 தொண்டர்கள்

பெண்     :  அஹா ஹா
ஆண்       :  பாவம்தான்

பெண்    :  அஹா ஹா
ஆண்       :  தலைவர்கள்

பெண்     :  அஹா ஹா
ஆண்       :  பேரம்தான்

பெண்    :  அஹா ஹா

                   (இசை)                          சரணம் - 2
பெண்     :  இப்ப பார்க்கலாம்
                 தனன்ன தனன்ன ன ன
ஆண்      :   சாதி  பாத்து  நில்லு

பெண்     :   தன்னானன தனன்ன ன ன
ஆண்       :   அப்பத்தானே ஒட்டு கிடக்கும்  சொல்லு

பெண்     :   தனன்னான தனன்னான தன்னா 
ஆண்       :  அம்மாடியோ தனன்னான தனன்னான தன்னா
           தண்ணி வாங்கி குடுக்க காசு இருக்கா

பெண்     :  சபாஷ்
ஆண்      :  இருந்தா ரொம்ப ஜோரு
           உடனே வந்து  பல்லை இளிப்பான் பாரு 
           கொடுத்த லஞ்சங்களை ஜெயிச்சபின்னே
           அவனிடமே நான் பெறுவேன் 

                 கொடுத்த லஞ்சங்களை ஜெயிச்சபின்னே
           அவனிடமே நான் பெறுவேன் 


பெண்     :  கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                     பதவி மட்டும் கொள்கையாச்சு  ராசாத்தி
           தொகுதி இருக்குது சீட்டும் கிடச்சுது
           கொள்ளையடிக்க நேரம் வந்தது  ராசாத்தி

           கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                     பதவி மட்டும் கொள்கையாச்சு  ராசாத்தி
           தொகுதி இருக்குது சீட்டும் கிடச்சுது
           கொள்ளையடிக்க நேரம் வந்தது  ராசாத்தி

ஆண்      :  ம்...அஹா...லல லா ம்...ம்...ம்...அஹா...அ
& பெ  :  லாலா லா லாலா லா லாலா லா லாலா லா

(எச்சரிக்கை: பின்னர் டப் செய்து வெளியிடப்படும் )

*******************************************************************

பேஸ்புக்லதான் லைக் போடணுமா? இங்கயும் போடலாம் 
புடிச்சா போடுங்க புடிக்கலன்னாலும் லைக் போடுங்க ஹிஹிஹ் 

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

பெட்டிக்கடை-இளையராஜா நிகழ்ச்சியில் வைகோ பேச்சு +சூப்பர்சிங்கர்


பெட்டிக்கடை  10 
திறந்து நீண்ட நாட்களாகி விட்டது. இனி அவ்வப்போதாவது எழுத வேண்டும் 

வைகோ பேச்சு :


        கலைஞரைப் பற்றிய வைகோ  பேசிய  பேச்சு  கண்டனத்துக்குள்ளாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. சிறந்த பேச்சாற்றல் வாய்ந்த வைகோ சமீப காலங்களில் தடுமாறி வருவது பரிதாபத்திற்குரியதுதான்
  வைகோ சிறந்த பேச்சாளர் என்பது எல்லோர்க்கும் தெரியும் சில ஆண்டுகளுக்கு முன்பு  . இளையராஜா இசையமைத்த திருவாசகம் இசை வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய அற்புதமான உரை பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இணையத்தில் தேடிப் பார்த்தேன் அந்த ஆடியோவோ, வீடியோவோ கிடைக்கவில்லை.  இப்போது யு ட்யூபில் கிடைத்தது முழுமையாக கேட்டேன். மதிமுக வலை தளத்தில் எழுத்து வடிவிலும் காணப்படுகிறது. என்ன ஒரு சொற்பொழிவு! அழகு தமிழில் மழை எனப் பொழிந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.ஏதோ இளையராஜாவை அடுக்கு மொழியில் பாராட்டி இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியின் திறந்த வெள்ளம்போல் பிரவாகம் எடுத்து ஓடியது போலிருந்தது பேச்சு. அரசியல் சிறிதும் கலக்காமல் தமிழ் இசை பற்றியும் இசை தொடர்பான பல்வேறு தகவல்களுடனும் இலக்கியக் குறிப்புகளையும் பாடல்களையும் சரளமாக சுட்டிக்காட்டி   அவர் பேசிய அந்தப்  பேசிய அந்த பேச்சு வைகோவின்  சிறந்த பேச்சுகளில் ஒன்றாகக் கொள்ளலாம். ஒரு ஆய்வே நடத்தி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அரை மணிநேரத்திற்கு மேலாக அவர் பேசிய உரை அத்துணை பேரையும் கட்டிப் போட்டதாக சொல்லபடுகிறது. ரஜினி அந்தப் பேச்சுக்கு உணர்ச்சி வசப்பட்டு நீண்ட நேரம் கை தட்டுவதை வீடியோவில் காண முடிந்தது 
அப்படிப் பேசிய வைகோ வா இன்று இப்படிப் பேசுகிறார்  என்ற ஐயம் எழுவதில் வியப்பில்லை./ ஹூம் ! எப்படி இருந்த வைகோ ?
வைகோவின் அந்த உரையை கேட்க விரும்புவோர் இங்கு கிளிக்குங்கள்
இளையராஜாவின் திருவாசகம் 
வெளியீட்டு விழாவில் வைகோ பேசிய பேச்சு

         நான் பல முறை கவனித்திருக்கிறேன். பொதுவாக வயதுக்கும் பேச்சுக்கும் தொடர்பு இருக்கிறது . சிறுவயதில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது இயல்பு. அப்போது யோசித்து பேசும் பக்குவம் குறைவாகவே இருக்கும் 
    ஆனால்  நடுத்தர வயதுப் பேச்சில் ஒரு கட்டுப்பாடு இருப்பதை காணமுடியும். மனதுக்குள் இருப்பதை அப்படியே  சொல்லாமல் நாகரீகமாகவும் யாரும் தவறாக எண்ணாத வகையில் எச்சரிக்கையுடன் பேசுவார்கள். பின் விளைவுகளை சிந்தித்துப் பார்ப்பதாக பேச்சு அமையும் . வயது அதிகம் ஆகஆக அந்தக் கட்டுப்பாடு குறையத் தொடங்குகிறது நாசூக்காக சொல்லும் திறமை குறைகிறது. குடும்பங்களிலும் பெரியவர்கள் சட்டென்று ஏதாவது சொல்லிவிட்டு பின்னர் வருந்துவதை காண முடியும். சிலர் தான் சொன்னது தவறு என்று தெரிந்தும் பின்னரும் அதனை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதம்  பிடிப்பவரும் உண்டு. உறவினர்களுக்குள் பிரச்சனைகக்குக்கூட இவை  காரணமாக  அமைகிறது.
     பேச்சு மட்டுமல்ல எழுத்தும்கூட இந்த விதி பொருந்துகிறது. நான் கவனித்தவரை  இணையத்தில்  இளைஞர்களை விட சில மூத்தவர்களின் எழுத்தில் வெளிப்படை தன்மை அதிகம்  காணப்படுகிறது. அவர்கள் என்ன நினைப்பார்களோ இவர்கள் என்ன நினைப்பார்களோ  என்று எண்ணாமல் மனதில் பட்டதை அப்படியே பிரதிபலிப்பார்கள்.
  நா பிறழ்வுக்கு வயது ஒரு காரணமாக அமைவது கண்கூடு கலைஞர் வைகோ,இளையராஜா, விஜயகாந்த் போன்றோரின் பேச்சுக்கள் இவற்றிற்கு உதாரணம்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால் வயது ஆக ஆக எங்கு பேசும்போதும் கவன்ம் வேண்டும் என்பதே .அதுவும் பொது வாழ்க்கையில் அரசியலில் இருப்பவர்கள்  மிக கவனமாகஇருக்க வேண்டும்

****************************************************************************
சூப்பர் சிங்கர் 
நான் சூப்பர் சிங்கர் பைனல்ஸ் பார்க்கவில்லை. அப்படி என்னதான் பாடினார்கள் என்று இணையத்தில் பார்த்தேன். அப்படி ஒன்றும் சுவாரசியமாகப் படவில்லை . 
   சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற ஆனந்த். ஏதோ ரெண்டு சினிமாவில் பாடல் பாடிவிட்டார். அப்படிப் பட்டவரை தேர்ந்தெடுத்தது தவறு என்று விஜய் டிவியை வருத்தெடுதனர் நெட்டிசன்கள் . யார் சூப்பர் சிங்கர் பட்டத்தை  வென்றாலும் ஏதாவது ஒரு சர்ச்சை இருக்கத்தானே செய்கிறது. ராஜகணபதியை விஜய் டிவி பிக்ஸ் செய்திருக்கும் என்று நினைத்தேன். பரீதா வெல்லவேண்டும்  என்ற உணர்வை பார்ப்போரிடையே  ஏற்படுத்தி வைத்திருந்தது  டிவி. ஆனால் எதிர்பாராவிதமாக ஆனந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  எல்லோருமே நன்றாகவே பாடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள் . (இன்னும் கொஞ்ச காலத்திற்காவது நிகழ்ச்சியை நிருத்ஹ்டி வைத்தால் நன்றாக இருக்கும் )
       இதில் வெல்பவர்கள் எல்லாம் இசையை தொழிலாகக்  கொண்டு பிழைக்க முடியுமா என்ற ஐயம் எனக்கு ஏற்படுவதுண்டு . இதில் வென்றவர்களுக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்து வருவது உண்மைதான். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் இசையை பிழைப்பாக இவர்கள் கொள்ள முடியுமா என்ற ஐயமும் எழுகிறது. (வீட்டுக்கு வீடு எஞ்சினியர்கள் போல வீட்டுக்கு வீடு பாடகர்கள்) 
இசைத் துறையில்  ஏற்கனவே புகழ் பெற்றவர்கள் தங்கள் வாரிசுகளையே முன்னிலைப் படுத்துகிறார்கள்.
அது கிடக்கட்டும் . சூப்பர் சிங்கர் பைனல்ஸ் பற்றிய சுந்தர் என்பவரின் சுவாரசியமான விமர்சன  வீடியோவை  பாருங்கள் .


(சூப்பர் சிங்கர் முடிஞ்சி எவ்வளோ நாளாச்சு இப்போ  இதைப் பத்தி எழுதறது தேவயான்னு கேக்கலாம்? நானெல்லாம்  போன மாசம் சொன்ன ஜோக்குக்கு இந்த மாசம் சிரிக்கற ஆளு. அதனால கண்டுக்காதீங்க.)
------------------------------------------------------------------------------------------------------------------------

அட! என்னைப் போல் ஒருவன் 
அவ்வப்போது என்னுடைய பெயரில் யார் யார் இருக்கிறார்கள் என்ன எழுதுகிறார்கள் என்று இணையத்தில்  தேடுவது வழக்கம். அப்படி தேடியபோது  முகநூலில் கிடைத்தவர் முரளிதரன் . தன்னை விவசாயி மகன் என்று பெருமையோடு கூறிக் கொள்ளும் இவரது முகநூல் பதிவுகளில் கிராமம் சார்ந்த பதிவுகளை இட்டு அசத்தி வருகிறார். கிராமத்து விவசாய மாந்தர்களின்  புகைப்படங்கள் மூலம் கிராம வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அவற்றைப் பார்த்தால் கிராமங்கள் மீது நமக்கும் காதல் உண்டாகிவிடும்.
அவரது கவிதை ஒன்று


விளைவித்தவன்
பிச்சைக்காரன்!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...
எங்களையோ அல்லது நாங்கள் 
விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....
இப்படிக்கு விவசாயிகள்...
நன்றி முரளிதரன் 
https://www.facebook.com/murali.arun.509

*****************************************************************************************************************
எனது முகநூல் கிறுக்கல்கள் 

மக்கு முக ராசிதான் இல்லன்னு பாத்தா முக நூல் ராசிகூட இல்ல போலிருக்கு .  நம்ம நட்பு வட்டத்துல 304 பேர் இருக்காங்க. முன்பெல்லாம் என்னோட வலைப்பதிவில எழுதியத மட்டும் முக நூல இணைப்பு கொடுப்பேன். அதுக்கு லைக்கோ கம்மெண்டோ கிடைக்கிறது ரொம்ப ரொம்ப  கம்மி. அப்படி வர்ற கம்மெண்டும் லைக்கும் நம்ம வலைப்பதிவு நண்பர்கள் போனாபோகுதுன்னு போடறதுதான்ஆமாலும் விடுவமா என்ன?  அவ்வப்போது  முகநூலல கிறுக்கறத விடமாட்டோம் இல்ல. 

சரி என்னோட கிறுக்கல்களை படிச்சிட்டு  கிறுக்கு புடிச்சா நன் பொறுப்பு இல்ல.

  • பல தோல்விகளைத் தாண்டி பெற்ற ஒரே ஒரு வெற்றி அத்தனை தோல்விகளையும் மறக்க செய்துவிடுகிறது. ப்ல வெற்றிகளுக்குப் பின்சந்திக்கும் ஒரேஒருதோல்வி அத்தனை வெற்றிகளையும் ஒன்றுமில்லாததாக்கிவிடுகிறது.
  • வெற்றிபெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும்ஒருபெண்தான்இருக்கிறாள்.... 
  • மக்களுக்காக மக்களே மக்களால் வேறு வழியின்றி ஏமாறும் நிகழ்வு  தேர்தல்
  • மனிதன் மிருகத் தனமாக நடந்துகொள்ளும் போதெல்லாம் சொல்லும் வார்த்தை 'நானும் மனிதன்தானே!'
  • அன்பினால் இந்த உலகத்தை திருத்த முடியும் என்றால் வள்ளுவன் புத்தன் ஏசு  போன்றோர் போதித்த அன்றே அராஜகங்கள் அழிந்திருக்க வேண்டும். சட்டங்களாலும் தண்டனைகளாலும் முடியும் என்றால் சிறைகள் எல்லாம் காலியாக அல்லவா இருக்க வேண்டும். இரண்டும் கலந்த கலவை தேவைப்படுகிறது . எது எவ்வளவு சதவீதம் என்பதுதான் புரியாத புதிர்

(இந்த மாதிரி எழுதினா யார் படிப்பாங்கன்னு கேக்கப் படாது )

******************************************************************************************

ரசித்தது 

மூங்கில் சிற்பம் 

கலைஞன்டா!

**************************************************************************************************************************
முந்தைய பெட்டிக்கடை சரக்குகள் 



பெட்டிக்கடை9-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?




வியாழன், 7 ஏப்ரல், 2016

இவன் ஒரு கட்சி! இவன் நிழல் ஒரு கட்சி!


அட!இந்தக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கே!யாரையாவது நினைவு படுத்தினா நான் பொறுப்பு இல்ல 



வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி . இவரது கவிதைகள் அனைத்தும் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டும் வரிகளால் நிறைந்தவை. படிப்போர் மனதில் சட்டென ஒட்டிக் கொள்பவை.பல்வேறு சூழல்களுக்கு மேற்கோள் காட்ட ஏற்றவை. அவரது கவிதைகள் சிலவற்றை அவ்வப்போது பகிர்ந்திருக்கிறேன். இதோ இன்றைய கால சூழலுக்கும் ஏற்ற இன்னொரு கவிதை 


இவன் ஒரு கட்சி இவன் நிழல் ஒரு கட்சி 

                                          அம்மா தாயே! பாரத தேவி!
                                          அரசியல் என்பது மணியாரம்!
                                          அம்மம் மாஉன் பிள்ளைகள் கையில் 
                                          அதில்தான் எத்தனை அலங்கோலம் 

                                          சும்மா இருப்பவ னெல்லாம்  நாட்டில் 
                                          சொந்தக் கட்சி தொடங்குகிறார் 
                                          சிம்மா சனத்தில் ஏறுவதற்கு
                                          சிரசா சனங்கள் பழகுகிறான் 

                                          விற்பதற்கென்றே கட்சியை தொடங்கும் 
                                          வேடிக்கை இங்கு வாடிக்கை 
                                          முற்பகல் பிற்பகல் கட்சித் தாவல்கள் 
                                          முடிவில் லாத கேளிக்கை!

                                           நிற்கும் இவனொரு கட்சிக்குள் 
                                           இவன் நிழலோ வேறோரு கட்சிக்குள்!
                                           கற்கும் பாடம் தினசரி மாறும் 
                                           காசுக்கேற்ற விகிதத்தில் 

                                           மகன் ஒரு கட்சி! தாய் ஒரு கட்சி 
                                           மனைவி ஆளுங் கட்சியிலே!
                                           முகங்கள் மாறும் அரசியல் குடும்பம் 
                                           முக்கோணத்தின் உச்சியிலே 

                                           மூன்று காலிகள் சேர்ந்தால் போதும் 
                                           முளைக்கும் புதிதாய் ஒரு கட்சி 
                                           தான்தோன்றிக்கு தலைவர் பதவி 
                                            தண்டல்கள் செயலர் பொருளாளர் 

                                           முக்கா லிகளோ ஊரை ஏய்த்து 
                                            நாற்காலிக்கு மாறுகையில் 
                                            உட்காருவதில் சிக்கல் வந்து 
                                            ஒருவன் கட்சியை உடைக்கின்றான் 

                                            கட்சித் தாவல் சட்டம் இவனை 
                                            கைது செய்ய முடியாதாம்!
                                            கட்சியில் பிரிந்தவன் மூவர் கட்சிக் 
                                            கணக்கில் மூன்றில் ஒருபங்காம் 

                                            பொருட்பால் இவர்க்கு மனப்பாடம்: பெரும் 
                                            பொய்கள் இவர்க்கு குருபீடம் 
                                            புரட்டல் அரசியல் கலையாகும்; வெறும் 
                                            போலிகள்,கொள்ளையர் கூடாரம்!

                                             ஆத்திகன் தூக்கும் காவடி போல 
                                             அரசியல் காவடி இருக்கிறது 
                                             நாத்திகன் கூட காவடி தூக்கும் 
                                             நாடகம் இங்கே நடக்கிறது 

*********************************************************************

தாராபாரதியின் பிற கவிதைகள்


************************************************************************