என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கட்சி இருக்குது!கொடியும் இருக்குது!


  தொலைக்காட்சியில்  வறுமையின் சிவப்பு படத்தில் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.  சட்டென்று அந்த மெட்டில் கட்சி இருக்குது கொடியும் இருக்குது என்ற ஒரு வரி மனதில் உருவானது. ஸ்ரீதேவியின் சந்தத்திற்கு அப்படியே தற்போதைய தேர்தல் காட்சிகளை வரிகளாக்கினால் என்ன என்ற விபரீத ஆசை தோன்ற ஒரு வழியாக பாடலை வரிகளால் நிரப்பினேன். நம்ம (கர்ண கடூரமான) குரலில் யாரும் அறியாமல் பாடிப் பாரத்ததில் பொருத்தமாக இருப்பதாக தோன்றியது. இதை யாரையாவது கரோக்கி பயன்படுத்தி பாடவைத்து யு ட்யூபில் போடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள் அடுத்த தேர்தலே வந்து விடும் என்பதால் வரிகளை மட்டும் இங்கே வெளியிடுகிறேன். 
எத்தனையோ சோதனைகளை சந்தித்திருப்பீர்கள். அதில் ஒன்றாக இதையும் கருதும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 (சிப்பி இருக்குது முத்தும் இருக்குது  மெட்டு)

பெண்     :  தந்தன தத்தன தைய்யன தத்தன தான
                 தத்தன தான தையன்ன தந்தனா

ஆண்      :  கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                      கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி

பெண்     :  ல ல ல ல ல ல லா ல ல ல லா
ஆண்      :  தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது
           கூட்டணி சேர  ஆளுமில்லடி  ராசாத்தி

          கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                   கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி
               தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது
          கூட்டணி சேர ஆளுமில்லடி  ராசாத்தி

பெண்     :  ம் (விசில் சத்தம்)
ஆண்      :  தொண்டர்கள்

பெண்     :  நனா னா
ஆண்       பாவம்தான்

பெண்     :  ரீசரி
ஆண்      :  அஹா...தலைவர்கள்

பெண்     :  ம்...ம்...ம்...

ஆண்      :  பேரம்தான்
                தொண்டர்கள் பாவம்தான் ...தலைவர்கள் பேரம்தான்
                
பெண்     :  அ...
ஆண்       :  கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                     கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி


     (இசை)                          சரணம் - 1

பெண்     :  நன நானா
ஆண்       :  கமான் சே இட் ஒன்ஸ் அகையின்

பெண்     :  நன நானா
ஆண்      :  இம்... காசு வேணும்

பெண்     :  தர னன னன தர்ர ர னன னன
ஆண்      :  போஸ்டர் ஒட்ட ஆளும் வேணும்

பெண்     :  தானே தானே தான
ஆண்     :  அப்படியா ம் நோட்டு காட்டி ஒட்டு


பெண்     :  தத்தன தன்னா
ஆண்    :  கேட்கவைத்து

பெண்     :  லாலா லல்லா லாலா லா
ஆண்       :  வணக்கம் சொல்லி கெஞ்சிக் கொண்டு

பெண்     :  நனா நன நனா தனன்ன ல ல தனன்ன
ஆண்       :  பியூட்டிபுல்                
            தெருவில் நின்றது யார் நானா அவனா எவனோ

                கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                      கொள்கையின்னு  எதுவும் இல்லடி ராசாத்தி
                 தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது
           கூட்டணி சேர ஆளுமில்லடி  ராசாத்தி

                 தொண்டர்கள்

பெண்     :  அஹா ஹா
ஆண்       :  பாவம்தான்

பெண்    :  அஹா ஹா
ஆண்       :  தலைவர்கள்

பெண்     :  அஹா ஹா
ஆண்       :  பேரம்தான்

பெண்    :  அஹா ஹா

                   (இசை)                          சரணம் - 2
பெண்     :  இப்ப பார்க்கலாம்
                 தனன்ன தனன்ன ன ன
ஆண்      :   சாதி  பாத்து  நில்லு

பெண்     :   தன்னானன தனன்ன ன ன
ஆண்       :   அப்பத்தானே ஒட்டு கிடக்கும்  சொல்லு

பெண்     :   தனன்னான தனன்னான தன்னா 
ஆண்       :  அம்மாடியோ தனன்னான தனன்னான தன்னா
           தண்ணி வாங்கி குடுக்க காசு இருக்கா

பெண்     :  சபாஷ்
ஆண்      :  இருந்தா ரொம்ப ஜோரு
           உடனே வந்து  பல்லை இளிப்பான் பாரு 
           கொடுத்த லஞ்சங்களை ஜெயிச்சபின்னே
           அவனிடமே நான் பெறுவேன் 

                 கொடுத்த லஞ்சங்களை ஜெயிச்சபின்னே
           அவனிடமே நான் பெறுவேன் 


பெண்     :  கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                     பதவி மட்டும் கொள்கையாச்சு  ராசாத்தி
           தொகுதி இருக்குது சீட்டும் கிடச்சுது
           கொள்ளையடிக்க நேரம் வந்தது  ராசாத்தி

           கட்சி இருக்குது கொடியும் இருக்குது
                     பதவி மட்டும் கொள்கையாச்சு  ராசாத்தி
           தொகுதி இருக்குது சீட்டும் கிடச்சுது
           கொள்ளையடிக்க நேரம் வந்தது  ராசாத்தி

ஆண்      :  ம்...அஹா...லல லா ம்...ம்...ம்...அஹா...அ
& பெ  :  லாலா லா லாலா லா லாலா லா லாலா லா

(எச்சரிக்கை: பின்னர் டப் செய்து வெளியிடப்படும் )

*******************************************************************

பேஸ்புக்லதான் லைக் போடணுமா? இங்கயும் போடலாம் 
புடிச்சா போடுங்க புடிக்கலன்னாலும் லைக் போடுங்க ஹிஹிஹ் 

27 கருத்துகள்:

  1. ஆஹா! போட்டுத் தாக்கிட்டீங்க..முரளி. பதிவர்கள் எல்லாரும் இந்த முறை தமிநாட்டுத் தேர்தல்ல போட்டுத் தாக்கிக் கலக்குறீர்ங்க....இங்கும் கேரளத்திலும் மே16 தேர்தல்...ரொம்ப ரசித்தோம்...

    கீதா: அப்படிப் போடுங்க....என்னப்பா பதிவர்கள் பலருக்கும் தேர்தல் ஜுரம் போல..ஹஹஹஹஹ் நீங்க பாட்டு எழுதி பாட.....அங்க விசுவும் தேர்தல் பாட்டு ஒன்று பாடி பாட்டையும் பதிவு செய்து பதிவும் போட்டிருக்கிறார்...உங்களைப் போல...செம போங்க...

    நல்லாவே பொருந்திருக்கு...பாடியும் பார்த்துட்டேன்..ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  2. #கொள்ளையடிக்க நேரம் வந்தது #டப் செய்து போட சீக்கிரமே நேரம் வரட்டும் :)

    பதிலளிநீக்கு
  3. அருமை. ஆனால் சில இடங்களில் பொருந்தவில்லை. உதாரணமாக "கட்சி இருக்குது கொடி இருக்குது கொள்கை இல்லடி ராஜாத்தி" என்று இருந்தால் சரியாக இருக்கும். பல இடங்களில் ஓகே. சில இடங்களில்தான் இப்படி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இல்லை ஸ்ரீராம்...பொருந்துது...என்னனா கட்சி இருக்குது கொடி இருக்குது (யிம் தட்டுது) கொள்கையின்னு எதுவும் இல்லடி ராசாத்தி தான் சரியா வருது...கொள்கை இல்லடி ராசாத்தி னு வந்தா ஒரு நடுல தாளம் தட்டும்......அதே போல் தொகுதி இருக்கு சீட்டும் இருக்கு நு பாடினால்தான் சரியா வரும் தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது நு பாடினால் தாளம் இடிக்கும்....கொஞ்சம் சில எழுத்துகள் மட்டும்தான் இடிப்பதனால கூட்டிக் குறைச்சு பாடணும் மத்தபடி பொருந்துது ...நான் முழுசும் பாடிப் பார்த்துட்டேன்...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் சிங்கர் கீதா!

      நீக்கு
    4. நன்றி கீதா மேடம். நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். கொடி இருக்குது என்று சொல்லும்போது ஓசை குறைவாக இருப்பது தோன்றுகிறது.கொடி என்று எழுதினால் டியை கொஞ்சம் நீட்டிப் பாட வேண்டும் . அதனால்தான் கட்சி கொடியு மிருக்குது என்று எழுதினேன். ஒரிஜினல் பாடலில் முத்து த் என்ற எழுத்து கூடுதல் ஓசை தரும்.அதனை ஈடு கட்டவே கொடியும் என்று சேர்த்தேன்.

      நீக்கு
  4. அட்டகாசம்! கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பலமுறை படித்து ரசித்தேன் நண்பரே அருமை வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரு துள்ளல்...அருமை..அருமை

    மூங்கில் காற்றில் தீப்பிடிக்கிறது...
    பிடிக்கிறது

    பதிலளிநீக்கு
  9. திரைப்படத்துக்கு எழுத வரும் புதிய பாடலாசிரியர்கள் ஆரம்பத்தில் இப்படிதான் பாடல் வரிகளை மாற்றி எழுத பயிற்சி செய்கிறார்கள்... ஆக ட்யூனை கொடுத்து விட வேண்டியதுதான்.. தொடர் கவனம் செலுத்தி நேரம் ஒதுக்கினால் நீங்கள் கதாசிரியர், பாடலாசிரியர் இரண்டிலும் சிறப்பாக வர முடியும்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஷா மேடம் நீங்கள் கதாசிரியர், முரளி பாடலாசிரியர் அந்த படத்தில் நமக்கு ஒரு காமெடி கேரக்டர்மட்டும் தந்திடுங்க ஒகேவா

      நீக்கு
    2. ஹுரோ கேரக்டரே கொடுத்திடறேன் நயன்தாரா ஜோடியா.. பட் பைனான்ஸியராவும் நீங்க இருக்கனும் ஓகேவா

      நீக்கு
    3. நீண்ட நாட்களுக்குப் பிறகு உஷா வருகை மகிழ்ச்சி.நீங்கள் சொல்வது உண்மைதான். கருத்துக்கு நன்றி

      நீக்கு
  10. அற்புதம்
    பாடிக் களித்தேன்
    உள் குத்தும் வெகு வெகு அருமை
    பகிர்வுக்கும் அடுத்துத் தொடரவும்
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. தங்களது தளத்தில் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது போல உள்ளது. உங்களது பாட்டை பாடிப்பார்த்தோம். அருமை.

    பதிலளிநீக்கு
  12. அரசியல் ஜுரம் முரளி சாருக்கு வந்திருச்சு போல.....இந்த ஜுரம் வந்தால் சீக்கிரம் போகாது இது மே 19க்கு மேலதான் போகும்....அது வரைக்கும் வேறு வழியில்லை இப்படி பதிவு போட்டு கலக்கிட்டு இருக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  13. Pl send it to Dinamalar election special, they print songs like these everyday.

    பதிலளிநீக்கு
  14. பாடல் வெகு ஜோர்!பாராட்டுக்கள், முரளி!
    இந்த தேர்தல் இணையத்தையும் கலக்கிக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. அருமை! பாடத் தெரிந்தால் பாடலாம்!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895