என்னை கவனிப்பவர்கள்

TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

டி.என்.முரளிதரன்-கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இராயபுரம்
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு TPF  வட்டி கணக்கிடுதல் தொடர்பான ஐயங்களுக்கான சில விளக்கங்கள்.
  1.பி.எஃப் லெட்ஜர் மார்ச்சில் இருந்து தொடங்க வேண்டுமா? ஏப்ரலில் இருந்து தொடங்க வேண்டுமா?
       சற்று விளக்கமாகப் பார்ப்போம் இந்தியாவில் மட்டுமல்ல. உலகின் பெரும்பாலான நாடுகள் நிதி ஆண்டாக ஏப்ரல் முதல் மார்ச் வரையே வைத்துள்ளது . இந்தியாவிலும் எல்லா மாநிலங்களிலும் இதே நடைமுறைதான் AG உள்ளிட்ட அரசு நிறுவனங்கள்,வங்கிகள்,வருமான வரித் துறை அனைத்தும் ஏப்ரல் 1 முதல் மார்ச்31 வரையிலான  நிதி பரிமாற்றங்களை ஒவ்வோர் ஆண்டும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. பி.எஃப் இலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட வேண்டும். ஏப்ரல் 1 முதல் மார்ச்31 வரையிலான  12 மாதங்களில் நாம் செலுத்தும் சந்தாத் தொகை பெறும் முன்பணத் தொகை ஒரு நிதி ஆண்டுக்கான கணக்குச்சீட்டில் இடம் பெற வேண்டும். ஏப்ரல் என்று தொடங்குவதே மிக சரியானது .
2.அப்படியானால் லெட்ஜரில் மார்ச் என்று தொடங்குகிறதே ஏன்? அது தவறா?
      மார்ச்,ஏப்ரல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மார்ச் என்றால் ஊதியம் பெறப்பட்ட மாதம் (Salary Month) எனக் கொள்ள வேண்டும். ஏப்ரல் என்றால் போஸ்டிங் Month  என அறிக. மார்ச் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட PF தொகையைத் தான் இங்கு  குறிப்பிடவேண்டும். 31 ம் தேதி பிடித்தம் செய்யப்படும் தொகை 1 ம் தேதி அன்றுதான் பதிவு செய்ய வேண்டும் . இத் தொகை நிதி ஆண்டு துவக்கமான ஏப்ரல் மாதத்தின் ஆரம்ப இருப்பாகும் . எனவே ஏப்ரல் மாத துவக்கத்தில் முந்தைய நிதி ஆண்டின் இறுதி இருப்பு + மார்ச் மாத சந்தாத் தொகை கணக்கில் இருக்கும். இத்தொகை ஏப்ரல் மாதம் முழுதும் இருப்பின் மாத இறுதியில் உள்ள தொகை வட்டி கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும். ஏப்ரல் மாதத்தில் முன் பணத் தொகை பெறப்பட்டால் அது நிதி ஆண்டின் துவக்கத்தில் அதாவது முதல் மாதத்திலேயே பிரதிபலிக்கும்.
    எந்த மாதத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாக இருந்தாலும் அது மாத இறுதியில்தான் அரசு கணக்கில் செலுத்தப்படுவதால் அத்தொகை ஒரு மாதம் முழுமையாக இருந்தால்தான் வட்டி பெற தகுதி உடையதாகும்.    (PF   வட்டி ஒவ்வொரு மாத இறுதியில் உள்ள இருப்பை அடிப்படையாக வைத்தே வட்டி கணக்கிடப் படுகிறது என்பதை அறிவீர்கள்).  உதாரணமாக மார்ச் மாதத்தில்( மாத இறுதியில்தானே சம்பளம் வருகிறது?) பிடித்தம்  செய்யப்படும் தொகை 10000 எனக் கொண்டால் அத் தொகைக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் வரவு வைக்கப்பட்டு  ஏப்ரல் மாத இறுதியில்தான்  வட்டி கணக்கிடப் பட வேண்டும் . அதே போல பிப்ரவரி மாதத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு மார்ச் இறுதியில்தான் வட்டி கிடைக்கும். மார்ச் மாதத்திற்கு வட்டி கணக்கிடப் பட வேண்டுமெனில் தொகை மார்ச் மாதம் முழுதும் இருப்பில் இருக்க வேண்டும். பிப்ரவரி மாத ஊதியத்தில் செலுத்தப் படும் சந்தத் தொகைதான் மார்ச் இறுதி வரை இருக்கும்(மார்ச் மாத சந்தாத் தொகை அல்ல) என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . சுருக்கமாக சொல்ல  வேண்டுமெனில் ஒரு மாதத்தில் பிடித்தம் செய்யப்படும் சந்தாத் தொகைக்கு அடுத்தமாத இறுதியில்தான் வட்டி கிடைக்கும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நாம் லெட்ஜரில் ஊதிய மாதத்தை குறிப்பிடுவது எதனால் எனில் சம்பளப் பட்டியலின் படி பதிவு செய்தால் எளிதாக இருக்கும் என்பதற்காகவே. மார்ச் -பிப்ரவரி  வரையிலான ஊதிய ஆண்டும்  ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதி ஆண்டுக்கு தகுதியானது  என்பதை அறிதல் வேண்டும்
    லெட்ஜர் ஏப்ரல் என்று தொடங்கினால் ஏப்ரலுக்கு நேராக மார்ச் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப் பட்ட தொகையைத் தான் குறிப்பிடவேண்டும்..மார்ச் மாதத்தில் முன் பணம் பெற்றால் அத்தொகை நிதி ஆண்டின் இறுதிப் பதிவாக அமையும் .அதாவது மார்ச் –பிப்ரவரி என்று தொடங்கினால் பிப்ரவரிக்கு நேராகவும் ஏப்ரல் - மார்ச் என்றால் மார்ச்சு க்கு நேராகவும் பதிவிட்டுக் கழிக்க வேண்டும் எப்படி இருப்பினும் மார்ச் மாதத்தில் பெறப்படும் முன்பணம் அந்த நிதி ஆண்டில் இறுதிப் பதிவாகத் தான் இருக்கும் . அதே போல ஏப்ரல் மாதத்தில் பெறப்படும் முன்பணத் தொகை நிதி ஆண்டில் முதல் மாத பதிவுக்கு நேராக போஸ்ட் செய்து கழிக்க வேண்டும் என்பதும்  கவனிக்கத் தக்கது.
இந்த நிதி ஆண்டில் வட்டி வீதம்  ஏப்ரல் 2015 முதல் செப்டம்பர் 2016 வரை 8.1 %
அக்டோபர் 2016 முதல் மார்ச் 2016 வரை 8.0%. உதாரண கணக்கீட்டு மாதிரி
A என்பவரின்  2015-16 இறுதி இருப்பு 2,20,000. மார்ச் முதல் ஆகஸ்டு2016 வரை ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்ட சந்தாத் தொகை  8000 ம் செப்டம்பர்   2016 முதல் பிப்ரவரி 2016 வரை ஒவொரு மாதமும் 10000 ம் பிடித்தம் செய்யப் பட்டது . ஏப்ரல் 2016  மாதத்தில் ரூ 100000  பகுதி இறுதி முன்பணமும் மார்ச் 2017இல் 75000 தற்காலிக முன்பணமும் பெற்றுள்ளார். அவரது வட்டி கணக்கீட்டு மாதிரியை கீழே காண்க
                       2016-17 TPF INTEREST CALCULATION ILLUSTRATION-1
Month & Year
Deposits Subscription
Refunds of Withdrawls
DA Arrear
Total of each month
Withdrawals
Monthly Balance  on which      Interest is Calculated
Rate of Interest
Period of Interest
Opening Balance
220000


March.16
8000
8000
100000
(drawn in April)
128000
8.1%
1.4.16-30.4.16
Apr.16
8000
8000
136000
8.1%
1.5.16-31.5.16
May.16
8000
8000
144000
8.1%
01.06.16- 30.06.16
Jun.16
8000
8000
152000
8.1%
01.07.16- 31.07.16
Jul.16
8000
8000
160000
8.1%
01.08.16- 31.08.16
Aug.16
8000
8000
168000
8.1%
01.09.16-30.09.16
Sep.16
10000
10000
178000
8.0%
01.10.16-31.10.16
Oct.16
10000
10000
188000
8.0%
01.11.16 30.11.16
Nov.16
10000
10000
198000
8.0%
01.12.16- 31.12.16
Dec.16
10000
10000
208000
8.0%
01.01.17 31.01.17
Jan.17
10000
10000
218000
8.0%
01.02.17 28.02.17
Feb.17
10000
10000
75000
153000
8.0%
01.03.17- 31.03.17
Total
108000
0
0
108000
175000


குறிப்பு : மார்ச் 2016 என்று இருப்பதால் 8.7% வட்டி கணக்கிடக் கூடாது

ஏப்ரல் 2016-செப்டம்பர் 2016 வரைக்கான வட்டி     
                                               =(128000+136000+144000+152000+160000+168000)*8.1/1200
                                                =888000*8.1/1200=  5994
அக்டோபர்2016-மார்ச் 2016 வரை
           =(178000+188000+198000+208000+218000+153000)*8.0/1200
           = 1143000*8/1200= 7620
மொத்த வட்டி =5994+7620=  ரூ13614
ஆரம்ப இருப்பு =                                  220000
சந்தா தொகை+Refund of Advance=  108000
மொத்தம் =                                            328000
 Withdrawls=                                             175000
Balance Pricipal =                                     153000
Interest =                                                     13614
Closing Balanc 2016-17                                        166614    

இக்குறிப்பு : இந்த முறையில்தான் AG, DATA CENTRE இல் வட்டி கணக்கிடப் படுகிறது
Prepared by
T.N.Muralidharan
Addl AEEO
Royapuramm,Chennai
Mobile : 9750982290
வலைத்தள முகவரி : www.tnmurali.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895