என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்



    பெட்டிக் கடை  பகுதிக்கு இவ்வளவு ஆதரவுகிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. நிறையப் பேர் வரவேற்பளித்து கருத்து தெரிவித்தனர்.
மகிழ்ச்சியாக  இருந்தபோதினும் என் மீதான எதிர்பார்ப்பை நல்ல முறையில் நிறைவேற்ற முடியுமா  என்ற ஐயமும் வந்து விட்டது.முயற்சிப்பேன். நன்றி

                         பெட்டிக்கடை 2
வளர்பிறையும் தேய்பிறையும்   
"தீதும் நன்றும் பிறர தர வாரா" பதிவை எழுதி வரும் ரமணி அவர்கள் இன்றைய நாளை நாமே கணிப்போம் என்ற பதிவை எழுதி வருவதை  அறிவீர்கள்.அதில் வளர்பிறை தேய்பிறை அறிவது பற்றி எளிமையாக சொல்லி இருந்தார்.. நம் முன்னோர்களின் கணிப்பு முறை ஆச்சர்யம் அளித்தது.
அதையே விஞ்ஞான முறையில் இப்படி சொல்லலாம்.    
  •  நிலவு எப்போதும்வலப்புறம் இருந்து இடப்புறமாகவே வளரும் அல்லது தேயும்
  • நிலவின் வெளிச்சப் பகுதி D வடிவத்தில் இருந்தால் வளர்பிறை என்றும் C வடிவத்தில் இருந்தால் தேய்பிறை என்றும் அறியலாம்
  • இன்று  இருள் துவங்கும் நேரத்தில் மேற்கில் பாருங்கள். நிலவு D வடிவத்தில் காட்சி அளிப்பதை காணலாம். இப்போது வளர்பிறை  காலம்
  • வளர்பிறையின் தொடக்கத்தை மேற்கு திசையிலும் தேய்பிறையின் தொடக்கத்தை கிழக்கு திசையிலும் காணமுடியும். 
  • இன்னும் விளக்கினால் பெரிய பதிவாகி விடும். 
  • இந்த படம் இதை புரிந்து கொள்ள உதவும் என்று நம்பலாம். 
வளர்பிறையும் தேய்பிறையும் மாறிமாறி வருவதை காணலாம்


********************************************************************************************
ஆடி(யோ)மாதம் 
   ஆடிமாதம் வந்துவிட்டால் அம்மன் கோவில்கள் களைகட்டத் தொடங்கிவிடும். கோவிலை சுற்றி அரை கிலோமீட்டர் தூரத்திற்கு  எல்.ஆர்.ஈஸ்வரியும், வீரமணியும் அம்மன் கோவில்களை பட்டியலிட்டு ஒலி பெருக்கியில்ஒலித்துக் கொண்டிருப்பார்கள். அனுமதிக்கப் பட்ட டெசிபல்களை தாண்டி தொந்தரவாக ஒலித்தாலும், நம்மையும் அறியாமல், சில வரிகளை முணுமுணுக்க செய்யும் பெருமை ஆடி மாதத்திற்கே உண்டு  
    தலைவர்,வார்டு மெம்பர்களின் உபயத்தில் சீரியல் விளக்குகளால் அமைந்த தோற்றத்தில்  அம்மன் அருள் பாலித்துக் கொண்டிருப்பார். அம்மன் திருவிழாக்களை பொருத்தவரை இது சாமான்யர்களின் விழா.  கூழ் ஊற்றுதலும் பொங்கல் வைத்தல் பிற பாரம்பரிய நிகழ்வுகளும் ,உற்சாகமாக நடைபெறுவதை காணமுடியும். விடியும் வரை சாமி ஊர்வலம் நடக்கும். அதுவரை அமைதியாக கழிந்த நாட்களின் மௌனம் கலைந்து  உற்சாகம் உருண்டோடும். 
   சில சங்கடங்கள் இருந்தாலும் இதுபோன்ற கொண்டாட்டங்கள்  மனிதனை குஷிப்படுத்தவே செய்கின்றன.
**************************************************************************************************
 B.S.N.L சேவை
    நான்கு  நாட்களாக இணைய இணைப்பு  இல்லை. புகார் கொடுத்தும் வழக்கம் போல பி.எஸ்.என்.எல் லில் இருந்து சரி செய்ய யாரும் வரவில்லை. மோடத்தில் கோளாறா?லைனில் சிக்கலா தெரியவில்லை. ரம்ஜான் விடுமுறை. ஆதலால் சிக்கல் தீரவில்லை. இன்று(சனிக்கிழமை) மோடத்தின் Configuration சிக்கல் ஏற்பட்டிருக்கலாமோ என்ற ஐயத்தில்  மோடத்தை கழற்றி  Exchange க்கு கொண்டு போனேன். ஒருவர் மாற்றி ஒருவர் வந்து மோடத்தை கணினியில் இணைத்து முறைத்து முறைத்து பார்த்து கொண்டிருந்தனர், பிறகு மோடம் சரி இல்லை மாற்றவேண்டும் என்றனர். Configuration செக் செய்து பாருங்கள் என்றேன். ரீசெட் செய்ய, வேலை செய்யத் தொடங்கியது. அவர்களாக வந்து பார்த்தால் அதிக நாட்கள் எடுத்தக் கொள்ளப்படுகிறது. நாமாக மோடத்தை எடுத்து சென்றால் சரி செய்துகொண்டு வந்து விடலாம் 
  பள்ளம் தோண்டுவதால் இணைப்பு துண்டித்திருந்தால் சரியாகும் வரை பொருத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.இந்த வாரத்தில் என்னை எந்தப் பதிவையும் போடவிடாமல் தடுத்து உங்களை மகிழ்ச்சிப் படுத்திய பி.எஸ்.என்.எல் லுக்கு நன்றி சொல்லுங்கள்.

**********************************************************************************************************
 ஸ்டேட் வங்கி சேவை
  சமீபத்தில் ஸ்டேட் பாங்கின் ஏ.டி.எம் மிற்கு செல்ல நேரிட்டது. உள்ளேயே நமது பாஸ் புக் என்ட்ரியை  நாமே செய்து கொள்வதற்கும் வசதி செய்திருந்தது புதிதாக இருந்தது. இணையப் பணப் பரிமாற்றத்தில் அரசு வங்கிகளில் ஸ்டேட் வங்கியே முன்னிலையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதன் BILLER PAYMENTS சேவை எளிதாக இருக்கிறது.பில் வந்ததும் நினைவு படுத்துவதோடு இந்த வசதியின் மூலம் ஒரே கிளிக்கில் டெலிபோன் பில் செலுத்திவிட முடிகிறது.
ஸ்டேட்  வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக் கொள்ளட்டும் 
    **************************************************************************************************
தமிழ் 
  தமிழ் இலக்கணக் குறிப்பு ஒன்றை   திரைப்படப் பாடல் ஒன்று விளக்கமாக சொல்லிக் கொடுத்தது அது எந்தப் பாடல்? யார் எழுதியது? எந்தப் படத்தில் இடம் பெற்றது?
தெரிந்து  கொள்ள ஆவலா? அடுத்த  பெட்டிக்கடைக்கு. வருகை தாருங்கள்!
தெரிந்தவர்கள்  எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

*******************************************************************************************

எச்சரிக்கை: பெட்டிக்கடையின் சில அறிவியில் பதிவுகள்  பின்னர் சற்று பெரிய பதிவாக வெளியாக வாய்ப்பு உண்டு 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெட்டிக்கடை  1 திறக்க கீழுள்ள படத்தை கிளிக்குங்கள் 






37 கருத்துகள்:


  1. தமிழ்
    தமிழ் இலக்கணக் குறிப்பு ஒன்றை திரைப்படப் பாடல் ஒன்று விளக்கமாக சொல்லிக் கொடுத்தது அது எந்தப் பாடல்? யார் எழுதியது? எந்தப் படத்தில் இடம் பெற்றது?
    தெரிந்து கொள்ள ஆவலா? அடுத்த பெட்டிக்கடைக்கு. வருகை தாருங்கள்!
    தெரிந்தவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ///


    படம் : ஜீன்ஸ் (1998)
    இசை : A.R.ரஹ்மான்
    பாடியவர்கள் : நித்யஸ்ரீ
    பாடல்வரிகள் : வைரமுத்து

    சலசல சலசல இரட்டைக்கிளவி
    தகதக தகதக இரட்டைக்கிளவி
    உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
    பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
    பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை
    இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

    பதிலளிநீக்கு
  2. பெட்டிக் கடையில் உள்ள அனைத்தும் அருமை. அனைத்தையும் இரசித்தேன். அதுவும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பற்றிய செய்திகள் அறியா செய்திகள்.

    நீங்கள் கேட்டிருந்த புதிருக்கு, திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் விடை தந்து எங்கள் வேலையை சுலபமாக்கி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜேஸ்வரி அவர்களின் கருத்தை மறைத்திருக்கிறேன்.அவர் சரியான விடை சொல்லி விட்டார். நாளை வெளியிடுகிறேன்.

      நீக்கு
    2. கந்தசஷ்டி கவசத்துல கூட இரட்டைக் கிளவி பல இடங்களில் வருமே?

      நீக்கு
  3. பெட்டிக்கை செய்திகள் அனைத்தும் அருமை.....

    தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  4. பெட்டிக்கடை ஜோராப் போகுது போல... வாழ்த்துகள்..
    சலசல சலசல ரெட்டைக் கிளவி தானே முரளி?
    ஜீன்ஸ் படத்தில் வரும் பாடல்.
    இப்போதெல்லாம் இதை வைத்துத்தானே -தமிழாசிரியர்கள்-இலக்கண வகுப்பையே தொடங்குகிறோம்!

    நன்றி சங்கர்-ரகுமான்-வைரமுத்து-ஐஸ்வர்யா ராய் கூட்டணிக்கு.

    என்றாலும், இரட்டைக் கிளவி என்பது இரண்டு முறைக்கு மேல வராது என்றும் ஓர் இலக்கணமுண்டு. அதைக் கவனிக்காமல் நான்குமுறை சொல்லியிருக்கிறார் கவிஞர். அவ்வையார் சொன்னால் மறுப்புச் சொல்லலாம், ஐஸ்வர்யா ராய் சொல்லும்போது யார் மறுப்பார்கள் எனவே வைரமுத்து தப்பித்தார்...

    பி.கு.சரி ஏதாவது வாங்கக் கடைக்கு வரும் பிள்ளைகளைக் கவர கொஞ்சம்போல சக்கரை, அல்லது பொட்டுக்கடலையை அள்ளிக் கையில் தருவார் கடைக்காரர் அது போல நம்ம முரளி கடையில் ஏதும் கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா!, நன்றி
      அடுத்த முறை வரும்போது கொடுத்து விட்டால் போகிறது

      நீக்கு
  5. அவர்களாக வந்து பார்த்தால் அதிக நாட்கள் எடுத்தக் கொள்ளப்படுகிறது. நாமாக மோடத்தை எடுத்து சென்றால் சரி செய்துகொண்டு வந்து விடலாம் //
    எனக்கும் இந்த அனுபவம் உண்டு.ஒரு முறை மோடத்தை என் கண்வர் Exchange க்கு கொண்டு போய் சரி செய்து வந்தார். அப்புறம் மறுபடியும் தொந்திரவு செய்த போது அவர்களே வேறு கம்பெனி மோடம் பரிந்துரை செய்ய வாங்கினோம்.
    ஆடி மாதம்பற்றி நீங்கள் சொல்வது உண்மை.
    பெட்டிக்கடையில் பகிர பெற்ற அனைத்து செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு

  6. பெட்டிகடை தகவல்கள் அருமை..... /பெட்டிக்கடை மேலும் வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. பெட்டிக் கடை சரக்குகள்
    வழக்கம்போல் அருமை மற்றும் சுவாரஸ்யம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. Really very good.Especially the one that explains the waxing and the waning crescent. It is so simple.The same thing about BSNL I went to their exchange and sueprisingly, the JE was not only very well informed , but was also very courteous, He sorted out the issue in no time. It is only the low level technicians who spoil their name.
    I am surprised that SBI ATMs now have pass book updating facility. I am out of the country for the past six months. I used to spend close to an hour every month just for updating the passbook. Indian Bank used have a terminal for customers to get their pass books updated with a customer ID even 10 years back.This is definitely a "trip saver" to the branch premises. But, sadly, I notice that wherever they share their ATM with other banks, it is always the SBI ATM that is down without UPS. 100 rupee note, AC failure et al. The other banks ATM will be bright and operational, Even the attender will lack proper uniform. I always joke this to my friends about the Shiva and Vaishnavite temples a, their environs and their priests, The contrast will be very stork.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். தங்கள் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

      நீக்கு
  9. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். தங்கள் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. //ஸ்டேட் வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக் கொள்ளட்டும் // - நிஜம்தான்! எங்க வீட்லயும் பி.எஸ்.என்.எல் இணைப்பு சரியா வர்றதே இல்லை.. ! அதனால ஒரு லாபம் நாமளும் ப்ரீயா இருக்கலாம்... மத்தவங்களும் நிம்மதியா இருப்பாங்க... ஹா.. ஹா...!

    சாலையில் போகும் போது ஆடி மாத பாடல்களும் விழாக்களும் நிச்சயமாய் ஒரு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. ஆமா ஆடி வெள்ளி கும்பிடறேன்னு... வீட்டில் வடை, பாயாசம், கொழுக்கட்டைன்னு செஞ்சிருப்பாங்க... நீங்களும் புல்லா கட்டியிருப்பிங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடி மாதத்தில ஒவ்வொரு வாரமும் கருடபஞ்சாமி நாக பஞ்சமி ஏதாவது ஒண்ணு,வரலக்ஷ்மி விரதம்னு வந்துக்கிட்டுதான் இருக்கு.வடை,கொழுக்கட்டை பாயசம் போரடிச்சி போச்சு

      நீக்கு
  11. \\ஸ்டேட் வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக் கொள்ளட்டும் \\ BSNL உண்மை நிலைமை பலருக்கும் தெரியாது. ஒரு குழந்தையின் தாயே தினமும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து வருகிறாள், அதையும் மீறி அக்குழந்தை உயிர் வாழ போராடுகிறது. இது தான் BSNL னின் கதை. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு BSNL ஐ ஒழிக்க பாடுபட்டு வருகிறார்கள். முதலில் மொபைல் சேவையே BSNL தரக்கூடாது என்று அரசு தடை விதித்தது, BSNL போராடி அந்த உரிமையைப் பெற்றது. தனியார் நிறுவனங்கள் ஒலிபரப்பு டவரை பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் BSNL யாருடனும் கூட்டு போட முடியாது. தனித்து சொந்த டவரை அமைக்க வேண்டும். மேலும் போணியாகாத வடகிழக்கு மாநிலங்கள் போன்ற ஏரியாக்களின் உரிமையை அரசே BSNL தலையில் கூடுதல் விலைக்கு கட்டி, BSNL-இடமிருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அதன் பொருளாதாரத்தை வீக் ஆக்கி விட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக BSNLஐ சாகடிக்க வேண்டும், இருக்கும் ஊழியர்கள் ரிடையர் ஆகிவிட்டால் கேள்வி கேட்க நாதியே இருக்காது. தமிழக அரசு கேபிள் மாதிரி அடக்கமாக செயல்படும், அப்புறம் பணக்கார முதலாளிகள் கொண்டாட்டம் தான். இப்படி ஒரு அரசாங்கம். பாவம் BSNL .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு என்ன அனுபவமோ அதை வச்சு சொன்னேன். உள்ளே எவ்வளவோ விஷயம் இருக்கலாம். அதுல இருக்கறவங்க சொன்னாத்தான் தெரியும். அரசு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுவதில் எவ்வளவு கஷ்டங்கள் உள்ளன என்பதும் கொஞ்சம் அறிவேன்.

      நீக்கு
  12. பெட்டிக்கடையில் எல்லாம் அருமை...

    பி.எஸ்.என்.எல் சேவை எல்லா இடத்திலும் இப்படித்தான் போல... ரொம்ப மட்டமான சேவை...

    பதிலளிநீக்கு
  13. பெட்டிக் கடை அருமை ஐயா. நிலவு தேய்பிறை வளர் பிறை விளக்கமும் படமும் அருமை. தொடருங்கள்.இதுபோன்ற அறிவியல் செய்திகளையும் வாரி வழங்குங்கள் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
  14. வளர்பிறை, தேய்பிறைச் செய்திகள் புதிது. இலக்கணக் குறிப்புக்குப் பழைய பாடல்கள் யோசித்துப் பார்த்துக் கொண்டே கமெண்ட் பகுதிக்கு வந்தால் RR மேடம் விடையைச் சரியாகச் சொல்லி விட்டார்கள்! மொத்தத்தில் எல்லாமே சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  15. புகையிலைப் பொருட்களை உங்கள் கடையில் விற்காதீர்கள் அண்ணே

    பதிலளிநீக்கு
  16. பெட்டிக் கடை இரசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. நண்பரே....
    பெட்டிக்கடையில் கூட்டம்
    அதிகமாக இருக்கிறது
    குடிமகன்கள் பற்றிய வியாபாரம்
    அருமையாக இருக்கிறது...தொடரங்கள்

    பதிலளிநீக்கு
  18. முரளி,

    நிலா வளருதா தேயுதானு பார்த்தே தேய்ஞ்சுப்போயிருப்பிங்க போல :-))

    ஹி...ஹி நமக்குலாம் அந்த நிலாவ தானா கையிலப்புடிச்சேன் என் ராசாவுக்காகனு எதுனா சிட்டுப்பாடினா ,எங்க ...எங்க கொஞ்சம் நான் பார்க்கிறேன்னு, "பார்க்கத்தான்" தெரியும் :-))

    "C" for corrosion-தேய்ப்பிறை

    "D" for Develeopment- வளர்ப்பிறை.

    #ஆடி(யோ)மாசம் நல்லாத்தான் இருக்கு, இப்ப என்ன தமிழ் மாசம்னு கேட்டா பொதுவா குழம்புவேன், ஆனால் ஆடிமாசத்துக்கு அந்த குழப்பமேயில்லை, ஏன்னா பாட்டு போட்டு ஆடி வந்தாச்சுனு அறிவிச்சுடுறாங்க :-))

    # இன்னும் நம்பிக்கையா கேபிள் பிராட்பேண்ட் வச்சிருக்கிங்கலா?

    மழைக்காலம் ஆனால் கேபிள் இணையம் சொதப்பும்,காரணம் நமக்கு வரும் வயரில் ஆங்காங்கே வெட்டி ஒட்டி, டேப்படிச்சு இணைச்சிருப்பாங்க,இணைப்புகளில் நீர் பட்டால் , லேட்டன்ஸி அதிகம் ஆகி டேட்டா டிரான்ஸ்பர் ஆகாது,கிட்டத்தட்ட ஷார்ட் சர்கியூட் ஆவது போலத்தான். ஈரம் காய்ஞ்சாதான் நெட் ஒழுங்காகும்.வெட் ஜாயிண்ட் என்பார்கள்.

    மோடம் பிரச்சினை அதிகம் வராது, மோடம் ஒழுங்கா சிஸ்டம் உடன் கனெக்ட் ஆகி இருக்கானு "லேன்" லைட் வச்சு தெரிஞ்சுக்கலாம், இல்லைனா

    run,



    type , ping -t 192.168.1.1

    request timed out

    வராம 4 பேக்கட் சென்ட் ,ரீசீவிடுனு வந்தா ,மோடம்,சிஸ்டம் நல்லா கனெக்‌ஷன்ல இருக்கு, மோடமும் ஒர்க் ஆகுதுனு தெரிஞ்சிக்கலாம், அப்பவும் நெட் கனெக்ட் ஆகலைனா, வெளியில கேபிள் வெட் ஜாயின்ட், இல்லை டிஸ்கனெக்ட் ஆகி இருக்கலாம்,

    இப்படி பிங்க் செய்தால் சில சமயம் தூங்கிட்டிருக்க மோடம் முழிச்சிக்கும்,நெட் கனெக்ட் ஆகும், மோடம் தூங்குறதுலாம் விளக்கினா இழுக்கும்.

    பெரும்பாலான கேபிள் இண்டர் நெட்டின் மோடத்தின் டிபால்ட் ஐ.பி 192.168.1.1 ஆகவே இருக்கும்.

    அதனால் அதனை கொடுத்துள்ளேன், உங்க மோடம் ஐ.பி, லேன் ஐபி லாம் பார்க்கனும்னா,

    run,

    type

    cmd

    command prompt

    type, ipconfig

    உங்க லேன் ஐ.பி,மோடம் ஐபி எல்லாம் காட்டும்.

    மோடம் ஐ.பி ,192.168.1.1 ஐ பிரவுசர் அட்ரஸ்பாரில் அடிச்சால் மோடம் ஹோம் பேஜ் வரும்,அப்போ யூசர் ஐடி,பாஸ்வேர்ட் கேட்கும்,பெரும்பாலும் admin & admin or admin123 & admin123 என்றே இருக்கும் ,அதை கொடுத்துட்டு மோடம் செட்டிங்ஸ் பேஜ் உள்ளப்போயும் பார்க்கலாம்,அதில் எதுவும் மாற்ரத்தேவையில்லை, தேவைனா, அதில் உள்ளதை அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு,நீங்களே மோடம் ரிசெட் செய்து ,மீண்டும் கொடுத்துக்கொள்ளலாம்.

    கேபிள் நெட் பயன்ப்படுத்துற எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள் அடிக்கடி , ஆபிஸ் செல்லத்தேவையில்லை.

    கேபிள் ஃபால்ட் இல்லாத நிலையில் ,நெட் அடிக்கடி டிசி ஆச்சுனா ,கொஞ்ச நேரம் மோடம் ஆஃப் செய்து வைத்து விட்டு ஆன் செய்தால் சரி ஆகிடும்.

    மோடம் சூடு ஆகுதானும் தொட்டுப்பாருங்க ,சூடாச்சுனாலும் நெட் டிசி ஆகும்.

    போன், நெட் இரண்டும் ஒரே நேரத்தில் பயன்ப்படுத்த என ஒரு "two way splitter" போட்டு கனெக்ட் செய்திருப்பார்கள், நெட் அடிக்கடி டி.சி ஆச்சுனா கொஞ்ச நேரம் போன் ஜாக் எடுத்துவிட்டாலும் சரி ஆகும். காரணம் போன் மூலம் சிக்னல் நாய்ஸ்(snr value) அதிகம் ஆகி நெட் படுத்துக்கும்.

    இதெல்லாம் இங்கே பலருக்கும் தெரிஞ்சிருக்கும்,ஏதோ நமக்கு தெரிஞ்சதும் சொல்லி வைக்கிறேன்.

    # அது சரி (பொட்டி) கடை திறந்த கடைஏழு வள்ளலேனு இன்னுமா யாரும் பிளெக்ஸ் பேனர் வைக்கல?

    பதிலளிநீக்கு
  19. வவ்வால் சார் . உங்க அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது. எனக்கு என்ன தெரியுமோ அதை வச்சு ஒப்பெத்திகிட்டு வரேன்.
    modem configuration பேக் அப் எடுத்து வச்சிருந்தேன். அத வச்சு 192.168.1.1 க்கு போய் செட்டிங்க்ஸ் அப்டேட் பண்ணிப் பாத்தேன். எரர் மெசேஜ்தான் வந்தது.
    ping -t 192.168.1.1 இத ட்ரை பண்ணி பாத்ததில்ல. இதெல்லாம் உங்களுக்கு பழசு எனக்கு இந்த விஷயம் எல்லாம் புதுசு
    நீங்க சொன்ன மாதரி போன் DC பண்ணா சில சமயம் வரும். இந்த முறை என்ன பண்ணியும் வரல. இதையெல்லாம் விளக்கமா ஒரு பதிவா போடுங்க நாங்களும் தெரிஞ்சுக்கறோம்
    அப்புறம் ஸ்கூல்ல படிச்சததான் இப்ப பதிவா போடறேன். அப்ப புரியாத விஷயங்கள்
    இப்போதான் கொஞ்சம் புரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது சரி (பொட்டி) கடை திறந்த கடைஏழு வள்ளலேனு இன்னுமா யாரும் பிளெக்ஸ் பேனர் வைக்கல?//
      கூடிய விரைவில் எதிர்பார்க்காலாம். அப்படி இல்லை என்றால் நானே வச்சுடறேன். ஹிஹிஹி

      நீக்கு
  20. // Configuration செக் செய்து பாருங்கள் என்றேன். ரீசெட் செய்ய, வேலை செய்யத் தொடங்கியது. அவர்களாக வந்து பார்த்தால் அதிக நாட்கள் எடுத்தக் கொள்ளப்படுகிறது. நாமாக மோடத்தை எடுத்து சென்றால் சரி செய்துகொண்டு வந்து விடலாம் //

    ம்ம் ! ரிசெட் செய்தால் ஒர்க் செய்யும் என்று தெரியாத அதிகாரிகள் ! பலே :)

    அதென்ன சார் எச்சரிக்கை ! Waiting for ur science Posts கலக்குங்க சார்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895