Beer இல் தொடங்கும் Tear இல் முடியும் இதுதான் குடிகாரர்கள் வாழ்க்கை. சாதி மதம் இனம் பாரபட்சமின்றி அடிமையாக்குவதில் மதுவுக்கு இணை ஏதுமில்லை. கடந்த வாரம் நீயா நானாவில் குடியைப் பற்றியும் குடிகார்களைப் பற்றியும் விவாதிக்கப் பட்டது. மாதுக்களும் மதுப்பழக்கத்திற்கு மெல்ல அடிமையாக்கும் கலாசாரம் தொடங்குவதை அறிய முடிந்தது. இதில் கலந்துகொண்ட பெண்களின் முகங்களில் ஒரு கலக்கம் இருப்பது தெரிந்தது.
கருத்துத் திலகம் மனுஷ்யபுத்திரன் நானும் இரண்டு ஆண்டுகளுக்கு குடித்துக் கொண்டிருந்தேன். வேறு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி அதை மறந்தேன். என்றார். குடிப்பதும் மற்ற பழக்கங்களுக்கு அடிமையாவதும் அவரவர் சொந்த விஷயங்கள் என்றாலும் பிரபலங்கள் இதுபோன்ற தவறுகளை செய்வது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுகிறது. புதிதாக தொடங்குபவர்களுக்கு ஏற்படும் லேசான குற்ற உணர்வையும் இது தடுத்து விடுகிறது. ஆனால் அவர் சொன்னதில் ஒரு விஷயம் 'பணி நேரம் போக மீதி நேரங்களை எப்படி செலவழிப்பது என்ற திட்டமிடலோ விழிப்புணர்வோ இல்லாததே குடிப்பழக்கம் போன்றவற்றிற்கு காரணமாக அமைந்து விடுகிறது' என்று சொன்னது ஓரளவிற்கு ஏற்கத்தக்கதாகவே இருந்தது
சுபவீர பாண்டியனோ இவர்களிடம் கேட்ட பழக்கம் இருக்கிறதே தவிர இவர்கள் யாரும் கெட்டவர்கள் இல்லை.மனைவிக்காக, மக்களுக்காக, குடும்பத்துக்காக குடியை விடுவதை விட தனக்காக குடியை விடுவதுதான் சிறந்தது என்றது கூறியது ஒரு விதத்தில் சரியே!
இன்னொரு சிறப்பு விருந்தினர் புகழேந்தி சொன்னது கவனிக்கத் தக்கது. எந்தக் காலத்திலும் மனிதர்கள் தன்னிலை மறக்கும் நிலையை விரும்புகிறார்கள். ஒருவர் பக்தியில் தன்னிலை மறக்கிறார், இன்னொருவர் காமத்தில் தன்னிலை இழக்கிறார், பலர் வேறு சிற கேளிக்கைகளில் போதை வஸ்துக்களில் தன்னிலை மறக்கிறார்கள். சினிமா பார்ப்பது, எப்போதும் இணையத்தில் இருப்பது இவை கூட தன்னிலை மறக்க விரும்புதலின் அம்சமே என்றார். ஆனால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது போதை வஸ்துக்களின் மூலம் தன்னிலை மறத்தலே. இவற்றிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை.
நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எல்லாம் இருந்தும் ஏதோ இனம் புரியாத அவஸ்தையினால் தன் கணவர் அமைதியின்றி தவிப்பதைக் கண்ட இவர் குடித்தாவது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கட்டும் என்று குடிக்க சொல்லி வற்புறுத்தியதை குறிப்பிட்டார். ஆனால் இன்று மதுவுக்கு அடிமையாகக் கிடக்கும் கணவனைப் பார்த்து தான் செய்தது எவ்வளவு தவறு என்று வருத்தப்பட்டுக் கொட்டிருந்தார்.
நிறுவனத்தைப் பற்றி ஊழியர்களின் கருத்து என்ன என்று அறிவதற்கு இந்த கார்ப்பரேட் மது பார்ட்டி உதவுகிறது என்று சொன்னது சற்று அபத்தமாகத்தான் பட்டது. போலீஸ் கூட குற்றவாளிகளிடம் உண்மையை அறிய இதை பயன்படுத்த முடியுமே!
ஆனால் பொறுப்புள்ள பதவிகளில் உள்ள ஒரு சிலருக்கு பலவீனமாக இந்த மதுப்பழக்கம் இருப்பதும் அவர்களிடம் மதுவை காட்டி காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும் என்பதும் கசப்பான உண்மையாகத்தான் இருக்கிறது.
ருசியோ சுவையோ இல்லதாக சொல்லபடும் திரவத்திற்கு அடிமையாக இருப்பது எப்படி என்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. கிராமம் நகரம் வேர்பாடின்றி குடிகார்கள் என்ற தனி இனமும அவர்களுக்கென்று தனி உலகமும் நம் சமூகத்துக்குள்ளேயே இருப்பது எவ்வளவு பதிப்புகளை ஏற்படுத்துகிறது. குடிப்பதில் அளவு மீறாதவரை தவறு இல்லை என்று பெண்கள் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் படும் இன்னல்களுக்கு அளவு ஏதுமில்லை.
இந்தக் குடிப் பழக்கத்தினால் என்னை அவர் இழந்து விடுவாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது என்று சொன்னார் ஒரு பெண்மணி. எந்த அளவுக்கு அவர் வெறுத்துப் போய் இருக்கிறார் என்பதை அறியமுடிந்தது.ஆனால் அவர் அதை முகத்தில் காட்டவில்லை.
நிகழ்ச்சி வெறும் விசாரணையாகவும் பேட்டியாகவும் அமைந்தது போல் தோன்றியதே
தவிர, அதன் தாக்கத்தை முழுமையாக நிகழ்ச்சி பதிவு செய்யவில்லை என்றே
நினைக்கிறேன். டாஸ்மாக் கடைகள் பற்றிய அப்பிப்ராயங்கள் கேட்கப்
படவில்லை. குடியினால் பாதிக்கப்படும் நடுத்தரக் குடும்பங்களைப் பற்றி
மட்டுமே பேசப் பட்டது.
அன்றாடம் சம்பாதிப்பதை எல்லாம் குடிப்பதிலே
தொலைத்துவிட்டு வீட்டுக்கே ஏதும் தராமல் மனைவியை கொடுமைப் படுத்தும்
குடிகர்கர்க் கணவன்களை திருமணம் செய்து கொண்டு பூவிற்று, காய்கறி விற்று
கூலிவேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் பெண்களை நிகழ்ச்சியில் பேச
வைத்திருக்கலாம். பிள்ளைகளின் கருத்துக்களை கேட்டிருக்கலாம். கல்லூரி
மாணவர்களிடத்திலும் இந்தப் பழக்கம் சகஜமாக இருப்பதை சொல்லி பெற்றோர்கள்
கவனம் கொள்ள வேண்டியதை கோடிட்டாவது காட்டியிருக்கலாம்.
சினிமா தொலைக் காட்சி
போன்ற ஊடகங்களில் தந்தையும் மகனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது சகஜமான
காட்சியாக அமைக்கிறார்கள். இதைப் பார்ப்பவர் மத்தியில் இது சாதாரண நிகழ்வுதான் போலிருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
என்று சப் டைட்டில் மட்டும் போடுவதால் இதுவரை ஏதேனும் பயன் விளைந்ததாகத் தெரியவில்லை.
கல்லூரி மாணவர்களிடத்தில் நிலவி வரும் ஓர் எண்ணம் "பீர் அடிச்சா ஒடம்பு
ஏறும் என்பது". பளபளப்பு கூடும்; கன்னங்கள் மெருகேறும், என்று நண்பர்களால்
உசுப்பேற்றப்பட, பீரில் ஆல்கஹால் அதிகமா இல்ல; அது குடிச்சா தப்பு கிடையாது ;
டாக்டர் கூட பீர் குடிக்க சிபாரிசு பண்ணறாங்க என்று டாக்டரே
பிரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுப்பது போல் பேசிக் கொள்ள, மாணவர்கள்
மெல்ல அதன் வலையில் விழுகிறார்கள். "ஒரு பீருக்கே தாங்கமாட்டான் மச்சீ:" என்று
கிண்டலடிக்கும் நண்பனுக்கு தன்னை நிருபிக்க அடுத்த கட்டத்துக்குள் அடி
எடுத்து வைத்து தடுமாறி விழுகிறார்கள் ஒருசிலர். புத்தியுள்ளவர்கள் மட்டும்
தப்பித்துக் கொள்கிறார்கள். நாம சும்மா இருந்தா கூட நண்பர்கள்
விடமாட்டேங்கறாங்க என்று நண்பர்கள் மேல் குற்றம் சாட்டுவது பலரின்
வழக்கம். எந்த நண்பர்களை சொல்கிறார்களோ அந்த நண்பர்கள் இதே குற்றச்சாட்டை இவர்கள் மேல் வைப்பதை அறியாமல்'
பிரபல பதிவர் ஜோதிஜி அவர்கள் சமீபத்தில் ஒரு திறமையான தொழிலாளியைப்
பற்றியும் அவர் குடிப்பழக்கத்தைப் பற்றியும் எழுதி இருந்தார். அந்தத்
தொழிலாளி இப்பழக்கத்தினாலேயே இறந்து விட
அவரது மனைவிக்கு செய்தி
சொல்லி அனுப்பியபோது "இப்பவாவது செத்தானே!" என்று சொல்லி கணவனின் உடலைக்
காண முதலில் வர மறுத்துவிட்டதாக எழுதி இருந்தார். குடிகாரனுடைய இறப்பு சொந்த மனைவிக்குக் கூட வருத்தத்தை தராது என்பதை குடிகார்கள் உணர்வார்களா?
அளவுக்கு அதிகமான சகிப்புத் தன்மையே பெண்களின் பலவீனம். அது குடிகாரக் கணவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ஆரம்பத்தில் கணவன் குடிப்பதை அறிந்து கடும்கோபம் கொள்ளும் மனைவிமார்கள் போகப்போக சகித்துக் கொள்ளவும் அவர்களை அக்கம் பக்கம் அறியாமல் கையாள்வதற்கும் கற்றுக் கொள்கிறார்களே தவிர தீர்வை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
மருத்துவ ரீதியாக இதற்கு தீர்வுகாண முடியமா என்பதையும்அலசி இருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாகவே அமைந்திருக்கும்
*******************************************************************
படித்து விட்டீர்களா?
பெட்டிக்கடை: சுவாரசியமான தகவல்கள்
படித்து விட்டீர்களா?
பெட்டிக்கடை: சுவாரசியமான தகவல்கள்
இந்த விஜய் டிவி நிகழ்ச்சி பற்றி நானும் எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நேரம் கிடைக்கவில்லை என்பதால் எழுத முடியவில்லை எனக்கு இதைப்பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தாலும் இங்கே ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். உலகெங்கிலும் குடிப்பது என்பது பண்டைய காலங்களில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது ஆனால் குடியைப் பற்றியும் குடிகாரர்களைப் பற்றியும் தமிழகத்தில் மட்டும் ரொம்ப அதிக சவுண்டு வந்து கொண்டிருக்கிறது. காரணம் "தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு குடிப்பது பற்றிய அறிவு சுத்தமாக இல்லாமல்" தன்னையும் கெடுத்து தன்னை சுற்றி நம்பி வாழும் உறவுகளின் வாழ்க்கையும் சிரழித்து விடுகிறார்கள் என்பது மட்டும் உண்மை
பதிலளிநீக்குகூடிய சிக்கிரத்தில் இதைப்பற்றிய பதிவு ஒன்றையும் வெளியிடுகிறேன்
AU aka MT:
நீக்குWhen it comes to drinking, you may be under control FOR NOW and you think "nothing wrong with it"! I understand your thoughts but you should not be encouraging this.
***உலகெங்கிலும் குடிப்பது என்பது பண்டைய காலங்களில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது ஆனால் குடியைப் பற்றியும் குடிகாரர்களைப் பற்றியும் தமிழகத்தில் மட்டும் ரொம்ப அதிக சவுண்டு வந்து கொண்டிருக்கிறது. ***
I know a white guy, today. He is a handy-man and very good in fixing anything home-improvement kind of work. I know him personally and he is a wonderful human being, religious of course. He cant do any work without a glass of vodka. He says his hand is shaking otherwise. I buy him vodka and give him and tell him that I feel very guilty doing it. I keep a special stock of vodka for him. He says I am addicted, if you dont give I will go and get it somewhere. I am sure he did not become alcoholic in one day. he must have been under control like you are today, ONCE. So, alcoholic problem is UNIVERSAL. You might not know that many alcoholics in america as you interact with white collar people.
I have been watching carefully your opinion and thoughts reg drinking issue. I thought I should tell you something. Take it easy.
வருண் நான் யாரையும் என்கரேஜ் பண்ணவில்லை. குடிக்காதவர்கள் & குடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் குடிப்பவனை மிக மோசமாக சித்தகரித்து கொண்டே இருக்கிறார்கள் அது தவறு என்றுதான் நான் சொல்ல முயல்கிறேன். குடித்து குடும்பத்தை அழித்தவனை விட குடிக்காமல் ஆனால் பல வழிகளில் குடும்பத்தை அழித்த யோக்கியர்கள் மிக அதிகம்தான். நான் சொல்ல வருவதெல்லாம் குடியை கண்மூடித்தனமாக எதிர்த்து கடையை அடைக்க ஆர்ப்பாட்டம் பண்ணுவதை விட அதிக குடியினால் வரும் தீமைகளை மிக தெளிவாகவும் பக்குவமாகவும் இளைஞர்களுக்கும் , மொடா குடியர்களுக்கு எடுத்து கூறினால் அவர்கள் மனம் மாறவதற்கு வழி உண்டு அல்லவா
நீக்குஎன்னை பொறுத்தவரை தடை ஏற்படுத்தினால் அதை தாண்டிக் குதிக்கவே மனித மனங்கள் முயற்சி செய்யும். அதனால் தடையை ஏற்படுத்தாமல் விளைவுகளை அவர்கள் மனதில் புரியும்படி செய்ய வேண்டும் அதன் பின் நன்றாக வாழ்வதோ அல்லது சிரழிவதோ அவர்கள் பாடு..
வரூண் நான் IT பில்டைவிட்டு வந்து பலகாலம் ஆகிவிட்டது அதனால் எனக்கு வொயிட்காலர் ஆட்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு இல்லை ஆனால் எல்லா நிலை மக்களுடன் பார்க்கும் பலகும் வாய்ப்புகள்தான் தினம் அதிகம்
வருண் இறுதியாக நான் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் சரி என்று நான் கூறவில்லை அதில் தவறுகள் கூட இருக்கலாம். காரணம் நான் அறிவு ஜீவி அல்ல மிக சதாரணமாவந்தான் அதனால் நான் சொல்லவதில் தவறுகள் இருந்தால் நீங்கள் மட்டுமல்ல யாரும் சுட்டிக்காட்டலாம் அது என் புத்திக்கு சரியென்று பட்டால் திருத்தி கொள்கிறேன்
அதனால் நீங்கள் எப்போதும் எங்கும் நான் செய்யும் தவறுகளை திட்டியோ அல்லது திட்டாமலோ சுட்டிக்காட்டலாம் அதை நான் வரவேற்கவே செய்வேன்
1) ***"தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு குடிப்பது பற்றிய அறிவு சுத்தமாக இல்லாமல்" தன்னையும் கெடுத்து தன்னை சுற்றி நம்பி வாழும் உறவுகளின் வாழ்க்கையும் சிரழித்து விடுகிறார்கள் என்பது மட்டும் உண்மை***
நீக்குநீங்க சொல்றதைப் பார்த்தால் "அல்கஹாலிக்ஸ்" அமெரிக்கா, கனடா, யூரோப், சவுத் அமெரிக்காவிலெல்லாம் இல்லை. அவர்கள் எல்லாம் அறிவுப்பூர்வமாக் குடிக்கிறாங்க. தமிழ்நாட்டில் மட்டும்தான் குடிக்கத் தெரியாமல் அறிவுகெட்டதனமாக் குடிக்கிறாங்க, வாழத்தெரியாமல் வாழ்றாங்க னு சொல்றாப்பிலே இருக்கு.
* ஆமாவா?
* இல்லையா?
பதில் சொல்லுங்க!
--------------
2)சரி, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க!
நீங்க, ப்ரோ-அல்கஹாலா இல்லைனைனா ஆண்ட்டி- அல்கஹாலா?
JUST ANSWER!!!
சமீபத்தில் ஜோதிஜியின் "பொறந்த நாள்" பதிவில்கூட நீங்க வீக் எண்ட் குடிப்பதை (அளவாகத்தான், அறிவுப்பூர்வமாகத்தான்) பற்றி "விளையாட்டாகவோ" அல்லது சீரியஸாகவோ சொல்றீங்க. நான் பார்த்தவரைக்கும் you are pro-alcohol
-----------------
3)
***என்னை பொறுத்தவரை தடை ஏற்படுத்தினால் அதை தாண்டிக் குதிக்கவே மனித மனங்கள் முயற்சி செய்யும். அதனால் தடையை ஏற்படுத்தாமல் விளைவுகளை அவர்கள் மனதில் புரியும்படி செய்ய வேண்டும் அதன் பின் நன்றாக வாழ்வதோ அல்லது சிரழிவதோ அவர்கள் பாடு..***
If you give more "opportunities" then more people will drink. If the prohibition of alcohol is continued even today, TN govt might not get huge INCOME from alcohol sales but certainly the percentage of people those who drink regularly must be much lower than TASMAC drinkers of today!
I am not writing in support of Ramadas's political game! Dont mistake me!
----------------------
4) Tell me how many women (%) smoke in Tamilnadu?
How many women smoke (%) in US?
Tell me why women dont go to TASMAC or buy a pack of cigarettes in a "petti kadai" in TN???
Just give me an answer!
Men were like that once. They felt guilty drinking and smoking. Now, the media and people like you encourage (without your own knowledge) men to drink and so everybody drinks and so they dont feel drinking as wrong. Otherwise it would have been like "women smoking" and "women going to TASMAC" situation even for men as well!
அமெரிக்காவிலும் குடித்துவிட்டு தன்னை அழித்தவர்களும் உண்டு. அதனால் அவர்கள் குடும்பம் இந்தியாவில் உள்ள அளவிற்கு அழிந்தது கிடையாது என்று சொல்லலாம். உதாரணமாக இங்கு கணவன் குடித்து அழிகிறான் என்றாள் மனைவி கொஞ்சம் முயற்சி செய்வாள் அப்படியும் அவன் கேட்கவில்லையென்றால் போடா மயிரு என்று டைவர்ஸ் வாங்கிவிட்டு வேறு ஒருத்தனை மணந்து கொள்வாள் அதானல் இங்கு பாதிப்பு அதிகம் இல்லையென்று சொல்வேன்
நீக்கு*-------------
2)சரி, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க!
நீங்க, ப்ரோ-அல்கஹாலா இல்லைனைனா ஆண்ட்டி- அல்கஹாலா?
நான் சோசியல் டிரிங்கர். அவ்வளவுதாங்க
//சமீபத்தில் ஜோதிஜியின் "பொறந்த நாள்" பதிவில்கூட நீங்க வீக் எண்ட் குடிப்பதை (அளவாகத்தான், அறிவுப்பூர்வமாகத்தான்) பற்றி "விளையாட்டாகவோ" அல்லது சீரியஸாகவோ சொல்றீங்க. நான் பார்த்தவரைக்கும் you are pro-alcohol//
நான் எப்போதும் எங்கும் அளவோடுதான் குடிக்கிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறேன் அறிவை நான் எப்போதும் என்னோட சேர்த்து கொள்வது இல்லை நண்பா நீங்கள் என் பதிவை படித்து இருந்தால் பல முறை பல இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்வது எனது கருத்துக்கள் சாதாரனமான ஒருவனின் கருத்துக்கள் அறிவுஜீவியின் கருத்தாக எடுத்தக்க வேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.
தன்னிலை இழக்காமல் ஒருவன் குடிப்பதைதான் நீங்கள் pro என்று குறிப்பிட்டால் நானும் pro தான்
நான் எப்படா வீக்கெண்ட் வரும் சேரை இழுத்து போட்டு சரக்கு அடிக்கலாம் என்று நினைப்பத்தில்லை எப்பவும் தனியாக உட்கார்ந்து தண்ணி அடிப்பதில்லை
நான் அளவிற்கு அதிகம் குடித்தது என் உடன் பணிபுரிந்த அமெரிக்க பெண்ணின் திருமண பார்ட்டியின் போதுதான் அப்போதும் நான் நிதானம் இழக்கவில்லை என்பது மட்டுமல்ல என் வேனில் அழைத்து சென்ற என் நண்பர்கள் 5 பேரை அவர்களின் வீட்டிலும் டிராப் செய்துவிட்டுதான் நான் வீடு சென்றேன். இதை நான் இங்கு சொல்ல காரணம் நான் எந்த நிலையிலும் நிதானம் இழக்க மாட்டேன் என்று சொல்வதற்குதான் பெருமைக்கோ அடுத்தவர்களை எங்கரேஜ் பண்ணிவதற்கோ அல்ல. அதனால் இதை வைத்து இன்னொரு கேள்வி எழுப்ப வேண்டாம் நண்பா
3)
///If you give more "opportunities" then more people will drink.///
நீங்கள் சொல்வது மிக உண்மைதான் அதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்போது தமிழ்நாட்டில் உள்ள நிலை கழுத்துக்கும் மேல் வெள்ளம் வந்துவிட்டது போலத்தான் இருக்கிறது இந்த ஒயின் ஷாப்பினால் மிக அதிக அளவு வருமானம் மிக எளிதாக வருகிறது. அதை நிறுத்த எந்த முதலைமைச்சர்களும் முடிவு எடுக்க மாட்டார்கள்
இந்த கடைகளை தடை செய்யும் அதிகாரம் ஆளும் கட்சியின் தலைமைக்கும் உண்டு ஆனால் அப்படி ஒரு நல்ல செயலை செய்யக் கூடிய ஒரு யோக்கியமான தலைவரும் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.
அதனால் தடை செய்யவேண்டும் என்று போராடுவதை விட குடிப்பதினால் வரும் தீமைகளை சிறுவயதில் இருந்தோ அல்லது குடிப்பவர்களிடம் பக்குவமாக சொல்லி திருந்த செய்ய வேண்டும் அப்படி செய்யாமல் தமிழகத்தில் கடையை மூடு மூடு என்று கத்துவது செவிடன் காதில் சங்கு ஊதியது போலத்தான் இருக்கும்
/I am not writing in support of Ramadas's political game! Dont mistake me!//
அட என்னங்க நீங்க என்ன தப்பா சொல்லீடிங்க நான் தப்பா எடுத்துக்க அப்புறம் ராமதாஸ் ஒரு காமெடி தலைவருங்க என்ன பொருத்தவரை
----------------------
4) தமிழகத்தை விட அமெரிக்காவில் சிகரெட் மற்றும் குடிக்கும்ம் பெண்கள் மிக அதிகமே
இறுதியாக வருண் உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது குடிக்கு எதிரான உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்
நானும் என் மனம் விட்டு ஒன்றை சொல்லுகிறேன் நான் குடியைபற்றி பல இடங்களில் கருத்து எதனால் வெளியிடுகிறேன் தெரியுமா? பல பேர் குடியைப்பற்றி பேசும் போது குடிகாரர்களை மோசமான ஆளாகவும் குடிக்காதவர்களை மிக யோக்கியமான ஆளாகவும் சித்தகரிக்க முயல்கிறார்கள் .ஆனால் அப்படி சொல்வது தவறு என்றுதான் சொல்ல முயல்கிறேன்
புரிதலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி, ம த. Let us move on! :)
நீக்குநன்றி வருண், மதுரை தமிழன். உங்கள் விவாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. பண்டைய காலத்தில் இருந்தே இப்பழக்கம் இருந்தாலும் இன்று வரை ஒரு கெட்ட பழக்கமாகவே பார்க்கப் படுகிறது.குடிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல.குடிக்காதவர்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல.என்பதும் உண்மையே!
நீக்குஅளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அளவுக்கதிமாககுடிப்பவரின் நம்பகத் தன்மை ஐயத்திற்குரியதாகவே பார்ர்க்கப் படுகிறது.
இங்கு நாம் பேசுவது அளவுக்கதிகமாக குடிப்பவர்களைப் பற்றியே. Occasional drinkers ஐ பற்றி கவலை இல்லை. அவர்கள் கட்டுப்பாட்டை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
//நான் அளவிற்கு அதிகம் குடித்தது என் உடன் பணிபுரிந்த அமெரிக்க பெண்ணின் திருமண பார்ட்டியின் போதுதான் அப்போதும் நான் நிதானம் இழக்கவில்லை என்பது மட்டுமல்ல என் வேனில் அழைத்து சென்ற என் நண்பர்கள் 5 பேரை அவர்களின் வீட்டிலும் டிராப் செய்துவிட்டுதான் நான் வீடு சென்றேன். //
நீக்குnot sure you are in US. DUI is against the law.
குடிப் பழக்கத்தினால் அழிந்தவர்கள் தான் அதிகமே தவிர வாழ்ந்தவர்கள் இல்லவே இல்லை எனச் சொல்லலாம்.....
பதிலளிநீக்குநல்ல அலசல். பெரும்பாலும் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சியில் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்....
நன்றி நாகராஜ் சார்
நீக்கு//குடிப் பழக்கத்தினால் அழிந்தவர்கள் தான் அதிகமே தவிர வாழ்ந்தவர்கள் இல்லவே இல்லை எனச் சொல்லலாம்....//
நீக்குதவறு, குடியினால் வாழ்வாங்கு வாழ்பவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
In tamilnadu what do they sell as beer or whiskey is not a real beer or whiskey, for me its looking like a govt action on population control, unfortunately.
பதிலளிநீக்கு//In tamilnadu what do they sell as beer or whiskey is not a real beer or whiskey//
நீக்குஎனக்கு இது பத்தி தெரியாது பாஸ்
குடிப்பது என்பதை பலவீனமாகக் கருதி
பதிலளிநீக்குஅதனைத் தடுக்க முயற்சிக்கவோ அல்லது
கண்டுகொள்ளாது இருத்தலையோ செய்யாது
அதனையும் இப்படி பகிங்கிரப்படுத்தி
விளம்பரப்படுத்துவது சரிதானா என
யோசிக்கவேண்டியுள்ளது
தெரிந்தோ தெரியாமலோ சமுதய்த்ஹில் குடிப்பது பலவீனமாகவே கருதப் படுகிறது. ஆனாலும் குடிப்பவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை
நீக்குtha,ma 2
பதிலளிநீக்குகுடியை பற்றி விழிப்புணர்வு பதிவு! நீயா நானா இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை! என் மாணவர்கள் கூட இப்போது மதுவுக்கு அடிமையாகி என்னிடம் பழகுவதை தவிர்த்து வருகின்றனர்! குடி என்பது ஒரு ஃபேசன் ஆகிவிட்டது. குடியினால் கெட்டவர்களில் என் சிறிய தந்தையும் ஒருவர்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குமருத்துவ ரீதியாக இதற்கு தீர்வுகாண முடியமா என்பதையும்அலசி இருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாகவே அமைந்திருக்கும் //
பதிலளிநீக்குநானும் பார்த்தேன் இந்த நிகழ்ச்சியை.
நீங்கள் சொல்வது போல் குடியிலிருந்து விடுபட மருத்துவ ரீதியாக ஆலோசனை, குடும்பத்தினர் ஒத்துழைப்பு,முக்கியமாய் குடிப்பவர்கள் குடியிலிருந்து மீள மனதை தயார் படுத்திக் கொள்ள முன் வருவது. இதையெல்லாம் சொல்லீருக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்
நீக்குபுதிதாக தொடங்குபவர்களுக்கு ஏற்படும் லேசான குற்ற உணர்வையும் இது தடுத்து விடுகிறது. //சரியாக சொன்னீங்க நண்பரே .குடிப்பதால் கவலைத் தீர்ந்து விடாது என்பதும் உண்மைதான்
பதிலளிநீக்குநன்றி கவியாழி
நீக்குகுடிப் பழக்கத்தினால் அழிந்தவர்கள் தான் அதிகமே தவிர வாழ்ந்தவர்கள் இல்லவே இல்லை எனச் சொல்லலாம்.....
பதிலளிநீக்குதெருவுக்குத் தெரு கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு குடிக்காதே என்று சொன்னால எப்படி ஐயா எடுபடும். குறைந்த பட்சம் கடைகளின் எண்ணிக்கையினையாவது குறைக்க வேண்டும்.
கருத்துக்கு நன்றி ஜெயகுமார்
நீக்குகுடி வெறியில் நிதானம் இழந்து போகிறவர்களே அதிகம் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள், அமைதியாக அளவாக குடிக்கும் மெத்த படித்த படிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நான் அவர்களை நியாப்படுத்தவில்லை இருந்தாலும் குடி குடியை கெடுக்கும் அம்புட்டுதான்.
பதிலளிநீக்குஉண்மைதான். நமது கவலை கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமாக குடிப்பவர்களைப் பற்றியே!
நீக்குவணக்கம் சகோ !
பதிலளிநீக்குஉங்களை என் முதற் பதிவின் சந்தோசம் என்ற தொடர் பதிவினைத்
தொடர வரும்மாறு மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன் .
வாருங்கள் சகோ .http://rupika-rupika.blogspot.com/2013/08/blog-post_4.html
.இணையஇணைப்பில் சிக்கல் இருப்பதால் எழுதுவது ஸ்ரமமா இருக்கிறது. விரைவில் எழுதுகிறேன்.
நீக்குபுகழேந்தி சொன்னது சிந்திக்க வைக்கிறது. எனினும், குடி சிகரெட் பழக்கம் (பழக்கம் என்றால் என்னவென்று விவாதிக்கலாம் :) போன்றவை உடலுக்கும் மனதுக்கும் கேடு, சுற்றுப்புறத்துக்கும் கேடு என்பதால் இணையப பழக்கம் போன்றவற்றுடன் ஒப்பிடுதல் சரியாகத் தோன்றவில்லை.
பதிலளிநீக்குபீர் குடித்தால் கன்னம் பளபளக்குமா? எத்தனை அறியாமை! சாமி கும்பிட்டா புண்ணியம் கிடைக்கும்ன்றாப்புல இதுவும் ஒரு நம்பிக்கையா? ஹ்ம்ம்.
நமது நாட்டில் இணையத்துக்கு அடிமையானவர்கள் அதிகம் இல்லை. ஆனால் வெளி நாடுகளில் அப்படி இருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லநீங்கள் சொல்வது போல குடியோடு ஒப்பிடக் கூடிய அளவுக்கு தீமையானது அல்ல
நீக்குநன்றி அப்பாதுரை சார்
\\எந்தக் காலத்திலும் மனிதர்கள் தன்னிலை மறக்கும் நிலையை விரும்புகிறார்கள்.\\ குடிக்கிறவன் இன்ன நிலை வேண்டும் என்று போவதில்லை, மாறாக ட்ரை பண்ணிப் பார்ப்போமே என்றுதான் செல்கிறான், அப்போது அதில் உள்ள போதைக்கு அடிமையாகிறான், அதன் பின்னால் மீள முடியாமல் தவிக்கிறான்.
பதிலளிநீக்குஒரு முறை அந்த நிலையை அனுபவித்ததும் மீண்டும் அதே நிலையில் இருக்கவே விருபுகிறான்.
நீக்குநேற்று குடிபோதையில் தெருவில் ஆடை கலைந்து சுயநினைவற்று விழுந்து கிடந்தோம் என்பதும் அடுத்த நாள் குடித்தால் அதே நிலை ஏற்படும் என்று தெரிந்தும் குடிப்பதை நிறுத்தாதவர்களை என்ன சொல்லி திருத்துவது.
எந்த விவாதத்துக்கும் தீர்வு என்று ஒன்று வேண்டும்தான்!
பதிலளிநீக்குஇதற்கு எப்போது தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை
நீக்குசுத்தி நெருப்பு நடுவுல கற்பூறாம்னு காதுல பூ சுத்தும் ஒரு ஒப்பாரியை முக்கியமான இரு கட்சிகளும் மாரடித்துக்கொண்டிருப்பதை பார்த்துமா புரியவில்லை தமிழகம் இனி தேறாது என்று. இந்த ஒரு விஷயத்திலாவது ஒத்த கருத்து கொண்டமைக்காக ஆளுக்கு ஒரு குவாட்டர் அடித்து மகிழ்வோமாக.
பதிலளிநீக்குஹஹஹஹா
நீக்குநண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)
பதிலளிநீக்குதங்கள் அனுமதியின்றி ஒரு தொடர்பதிவுக்கான அழைப்பு... எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்....
http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html
அதுக்கென்ன எழுதிட்டா போச்சு படிக்கபோறது நீங்கள்லாம்தன?
நீக்குகுடிப்பது என்பது இன்று பேஷனாகிவிட்டது. அரபு நாடுகளில் வேலை செய்யும் நம்மவர்களில் பெரும்பாலோர் எப்படா வியாழன் வரும் என்றே காத்திருப்பார்கள். வியாழன் குடிக்க ஆரம்பித்தால் வெள்ளி முழுவதும் தண்ணியில்தான்... பெரும்பாலானோர் குடியால் இறந்தும் இருக்கிறார்கள்...
பதிலளிநீக்குஅவர்களுக்கு காரணம் தனிமையின் கொடுமை.
நீக்குகுடிப்பது பேஷன் என்பதை சினிமாவிலும் சித்தரித்து விடுகிறார்கள்.இப்போதெல்லாம் திருமணத்தில் மணமகன் குடிப்பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் அவர் நண்பர்களுக்கு ஒரு அமௌண்ட் கொடுத்து விட வேண்டும். ப்ரெண்ட்ஸ்ன்னு சொல்லிகிட்டு அன்னிக்கு அவங்க ஒரு குரூப்பா தண்ணியடிச்சிட்டு பண்ற ரகளை இருக்கே..கல்யாணத்துக்கு வர்ற எல்லோரையும் முகம் சுளிக்க வைக்குது... சமீபத்தில் எங்கள் உறவினர் வீட்டு திருமண வரவேற்பில் ஒரு பக்கம் குழந்தைகளின் பரத நாட்டியம் நடந்து கொண்டிருந்தது... வந்திருந்த அனைவரும் அழகாக ரசித்து கொண்டிருக்கையில்... மாப்பிள்ளையுடன் பணி புரியும் நண்பர்கள் குரூப்பா 20 பேர் விசில் சத்தத்துடன் நுழைந்து பரத நாட்டிய பாடலை நிறுத்த சொல்லிவிட்டு ஓரே ஆட்டம் போட்டு விட்டு மாப்பிள்ளையை தோளில் தூக்கி அமர்த்தியும், கலர் ஜிகினாக்களை வெடிக்க செய்தும் ரகளை செய்தார்கள். அவர்களுக்கு சில ஆயிரங்களை தண்ணிக்காக தண்டம் செய்திருந்தார் மாப்பிள்ளை. மாப்பிள்ளை குடிப்பழக்கம் இல்லாதவராயிருந்தாலும் நண்பர்கள் தரும் வரை விடுவதில்லையாம். யூத்னா குடிச்சி எஞ்சாய் பண்ணனும் என்றமாதிரி ஒரு டிரண்டை உருவாக்கிறாங்க..! குடிப்பழக்கம் எல்லை மீறல்களுக்கு அடி எடுத்து கொடுக்கிறது. மதுப்பழக்கம் தேவையற்ற ஒன்று!
பதிலளிநீக்குஎனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,
பதிலளிநீக்குஉங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
நன்றி
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதில் தொந்தரவு ஏதும் இல்லை. உங்கள் மனம் கவர்ந்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் எனது கருத்தை எழுதுகிறேன்.
நீக்குஇதைப்பற்றிபேசுகிற வேளை இந்தப்பழக்கம் மிகவும் அதிகமாகி உள்ளது எனபதே சுடும் நிஜமாய்/
பதிலளிநீக்கு