என்னை கவனிப்பவர்கள்

புதன், 25 ஜூன், 2014

பத்துக் கேள்விகள்! வெத்துபதில்கள்!

   
   
   மதுரைத் தமிழன் தொடங்கி வைத்த தொடர் பதிவு விளையாட்டு சுவாரசியமாக சென்றுகொண்டிருபதை அறிய முடிகிறது . என்னையும் பதில் சொல்ல அழைத்திருந்தார். நேற்றுதான் பார்த்தேன். மதுரைத் தமிழன் முத்துநிலவன் இருவரின் பதில்களைத் தவிர மற்றவர்கள் எழுதியதை இன்னும் படிக்கவில்லை. காரணம் அவர்கள் சொன்ன பதில்களின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காக . நாளை மற்றவர்களின் பதில்களையும் படித்து விடுவேன். 

      பதில் சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. பாஸ் மார்க் வாங்கற அளவுக்கு ஈசியா கேள்வியை செட் பண்ண மாதிரி தெரிந்தாலும் உண்மையில் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் கேள்விகளுக்கு பதில் சொல்றது நம்மையும் ஒருத்தர் பேட்டி எடுத்தது மாதிரி  சந்தோஷமாத்தான் இருக்கு.  மதுரைத் தமிழனுக்கு நன்றி 

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
  
   மற்றவர்களுக்கு சொல்லாமல் மனதுக்குள் மட்டும். ஏன்னா நூறு வயசு ஆனதுக்கு அப்புறமும் போகாம இன்னமும் உசுரை வாங்கரானேன்னு  நினைப்பாங்களே


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    எப்படி பேசினாலும் நம்மையே  குற்றவாளியாக மாற்றிக் காட்டும் பெண்களின் புத்திசாலித்தனத்தை .


3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?


   நரசிம்மராவிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அவர் இல்லை என்பதால் கேள்வியை மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கிறேன். 


4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


    கரண்ட் பில் குறையும் என்று திருப்திப் பட்டுக் கொள்வேன்.


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 


 என் தந்தை என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்வேன்.( அவர் என்ன சொன்னாருன்னுதானே கேக்கறீங்க அவர்தான் ஒன்னும் சொல்லலையே  )


6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்? 


விவசாயிகள் பிரச்சனையை . அவர்கள் பிரச்சனை தீரவில்லை என்றால் நமக்கு பூவா பிரச்சனையாகி விடுமே.
   
    

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?


என்னை எதிரியாக நினைப்பவரிடம். அவர் ஆலோசனையை கேட்டு அதன் படி நடக்காமல் இருக்கலாம் அல்லவா. 


8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?


  சிரிப்பேன்.ரசிப்பேன்.பின்னர் ஏன் அப்படி சொன்னார் என்று யோசிப்பேன்.


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?( வாழ்வின் நிறைவுப் பகுதியில் இருப்பவர்களாகக் கொள்க) 

   வருத்தமாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டுக்கு வந்தால் காபி கிடைக்காதே என்று. (நகைச்சுவையை எதிர்பார்த்து கேட்கப் பட்டதாக கொண்டதால் இந்த பதில்) 

உண்மையான பதில் :மனைவியுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள். தேவைகளை எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளப் பழகுங்கள். கணிசமான சேமிப்பை கையிருப்பை வைத்துக் கொள்ளுங்கள். 



10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?


     யாரையாவது (பேச்சுத்) துணைக்கு  அழைப்பேன். புத்தகம் படிப்பேன். இருக்கவே இருக்கிறது இணையம் துணையாக.

*******************************************************************

இதுவரை இந்த 10 கேள்வி பதில் தொடர்பதிவில் சிக்காதவர்கள் யாராக இருந்தாலும்  தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்.



68 கருத்துகள்:

  1. அடடே....! பெண்களின் புத்திசாலித்தனத்தை கண்டுபிடித்து விட்டீர்களா...? ஹிஹி...

    // விவசாயிகள் பிரச்சனையை // - சிறப்பு...

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அடி தூள்! இந்தக் கேள்வி பதில் சுற்றுக்களிலேயே சுவாரசியமான -ஜனரஞ்சகமான- பதில்கள் தி.ந.முரளிதரன் அவர்களுடையதுதான் என்று நான் வாக்களிக்கிறேன். யாராவது பரிசு அறிவித்தால் கொடுத்துவிடலாம் (3 மற்றும் 5ஆம் பதில்கள் வெகு சிறப்பு. ஆனாலும் ஒன்பதாம் கேள்விக்கான பதிலை மறுபரிசீலனை செய்யக் கேட்டு்க்கொள்ளலாமா முரளி அய்யா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யாராவது பரிசு அறிவித்தால் கொடுத்துவிடலாம்///
      உங்கள் புரொபைலில் உள்ள படத்தை சிறிது பெரிது படுத்தி கொடுத்துவிடுங்கள்.. அந்த கள்ளம்கபடமில்லாதா சிரிப்பை விட வேறன்ன பரிசு வேண்டும் முத்துநிலவன்

      நீக்கு
    2. நகைச்சுவையை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்வி என்று நினைத்ததால் அந்த பதில்.. தவறாக நினைக்க வேண்டாம். உண்மையாக என்ன சொல்வேன் என்பதையும் இப்ப்போது குறிப்பிட்டிருக்கிறேன்.. முன்பே அதை செய்திருக்க வேண்டும். தங்கள் அன்புக்கும் ஆலோசனைக்கும் நன்றி ஐயா

      நீக்கு
    3. மதுரைத் தமிழன் சொன்னதை ஆமோதிக்கிறேன்.தணல் களங்கமில்லா சிரிப்பும் இனிமையான பேச்சும் மட்டுமே போதும்.
      தங்களுக்கு ஒரு வேண்டுகோள், என்னை ஐயா என்றழைக்க வேண்டாம். முரளி என்றழைத்தாலே போதுமானது.பெயர் சொல்லவும் ஒருமையில் அழைக்கவும் உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

      நீக்கு
    4. நன்றி முரளி. இந்த அன்பின் ஈரத்தில்தான் இதயம் இயங்குகிறது!
      நண்பர் மதுரைத் தமிழனும் நீங்களும் சொல்றதக் கேக்க நல்லாத்தான் இருக்கு (இன்னொரு மொற சொல்லுங்க...விளம்பரம் ஓடுது) ஆனா, எங்க வீட்டு முதலமைச்சர் நாலு வருசமா மாத்தாம வச்சிருக்கீங்க.. மாத்திருங்க ன்றாங்க என்னபண்றது? ஆணையை மீறவும் முடியாமல் உங்களைப் போன்றவர்கள் ஏற்றிவிட்டதிலிருந்து இறங்கவும் முடியாமல்..பார்க்கலாம்.

      நீக்கு
    5. அண்ணிகிட்ட நான் வேண்டுமானால் ரெகமென்ட் பண்ணட்டுமா?
      நானும் அண்ணனின் இந்த போட்டோவுக்கு fan ஆகும் :))

      நீக்கு
  3. தூள் பதில்கள்... ஒரு வரி இரண்டு வரியில் நச் பதில்கள்...

    பதிலளிநீக்கு
  4. ///நாளை மற்றவர்களின் பதில்களையும் படித்து விடுவேன். ///

    எல்லாப் பதிவுகளையும் படிக்க ஒரு நாள் போதாது என நினைக்கிறேன் காரணம் சில காலம் பதிவு எழுதாமல் பதுங்கி இருந்தவர்கள் நட்புக்கள் விட்ட அழைப்பால் பதிவிட்டு இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  5. உங்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கிறது இதை பாலகணேஷ் பதிவில் படிக்கும் பொது அறிந்தேன் அதன் பின் இங்கும் இப்போது அறிகிறேன் பாராட்டுக்கள் அவ்வப்போது நகைச்சுவை பதிவையும் வெளியிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவை உணர்வு உள்ளுக்குள் இருந்தாலும் உங்கள் பதிவுகள், பாலகணேஷ் அவர்களின் பதிவுகள் படிக்கும்போதுதான் அவை அவ்வப்போது எனக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றன.

      நீக்கு
  6. நகைச்சுவை உணர்வு கலந்து அருமையான பதில்களைத் தந்துள்ளீர்கள் சகோதரா .
    வாழ்த்துக்கள் :))

    பதிலளிநீக்கு
  7. சுருக்கமாக ஆயினும்
    மிகச் சிறப்பான பதிலகள்
    மிகவும் ரசிதுப்படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமாக நகைச்சுவையாக கலக்கிட்டீங்க சகோ வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. எல்லா பதில்களும் நல்லா. அதிலும் 5வது பதில் டாப்கிளாஸ் முரளி.

    பதிலளிநீக்கு
  10. நூறு வயசு ஆனதுக்கு அப்புறமும் போகாம இன்னமும் உசுரை வாங்கரானேன்னு நினைப்பாங்களே
    <>>>
    நம்ம பேர்ல பேங்க் பேலன்ஸ் ஹெவியா இருந்தா இப்படி நினைக்க மாட்டாங்க சகோ! :-)

    உண்மையை சொல்லனும்ன்னா, பொறுப்பையும், பிள்ளைகளின் உணர்ச்சியையும் புரிந்து, அணுசரனையா நடக்கும் பெற்றொருக்கு காசில்லாவிட்டாலும் தாங்கும் பிள்ளைகள் இன்று வரை இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  11. என்னைப் போலவே காமெடியா பதில் சொல்லிக் கலக்கீட்டீங்க ,வாழ்த்துக்கள் !
    த ம 7

    பதிலளிநீக்கு
  12. நறுக். நறுக். நடுவுல சிரிப்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    முரளி (அண்ணா)

    கேள்விகளுக்கு மிகஅருமையாகநகைச்சுவை பாணியில் பதில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    த.ம8வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. எல்லா பதில்களிலும் உங்கள் புத்தி சாதுரியம் தெரிகிறது, தெறிக்கிறது சார்....

    பதிலளிநீக்கு
  16. சூப்பரோ சூப்பர்.

    தலைப்பில் மட்டும்தான் இருக்குது வெத்து.

    ஆனா பத்து கேள்விக்கான பதில்களும் கெத்து.

    அனுப்புறேன் உங்களுக்கு ஒரு பூங்....கொத்து.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  18. மாறுபட்ட எண்ணம் மாறுபட்ட பதில்
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
  19. அனைத்தும் அருமையான பதில்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  20. மூங்கிலில் இருந்து வந்த பதில்கள் வெத்து பதில்களாகத் தெரியவில்லை! நல்ல ஸ்வரங்களோடுதான் வந்திருக்கின்றது! அனைத்தும்! 2-பதில் அனுபவப் பூர்வமான பதிலாகத் தெரிகின்றது?!!!!! 3- 4- ரசித்தோம் மிகவும் ரசனையான பதில்....அட போட வைத்த பதில். 5-அருமை. 6 - மிக மிக யதார்த்தமான, உன்னதமான பதில்....டாப்!

    பாராட்டுக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  21. செம காமெடியான விடைகள்! ஆனால் ரெண்டாம் நம்பர்ல இப்படி கலாயிச்சுடீங்களே !!
    ரைட் விடுங்க அண்ணா அதையே அவார்டா நினைத்துக்கொள்கிறோம் :)

    பதிலளிநீக்கு
  22. ஓ.கே -...ஓகே நன்று. கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
    துடுக்குத்தனமாகவும் உள்ளது. நானும் எழுதிட்டேனே!
    இப்போது அது தான் உள்ளது.
    வாசிப்பது சுவை தானே. 3-4 பேரினது வாசித்தேன்.
    வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  23. இரண்டாவது கேள்விக்கான பதில்.... :))) அது எல்லா ஆண்களும் கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்!

    பதிலளிநீக்கு
  24. அழகான வித்தியாசமான சிந்தனை அதுவும் தாரம் இழ்ந்த நட்புக்கு பதில் ஜோசிக்க வைக்கின்றது!ம்ம்

    பதிலளிநீக்கு
  25. இவைய வெத்து பதில்கள்
    அருமை ஐயா அருமை
    தம9

    பதிலளிநீக்கு
  26. தங்கள் பதில்களை இன்றுதான் காணும் வாய்ப்பு கிடைத்து. வெத்து என்று சொல்லமுடியாது. சில சிந்திக்குமளவுகூட உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு

  27. பதில்கள் ரசித்தேன்.
    இனிய நட்பு த் தின வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895