உலகின் ஒவ்வொருமூலையிலும் ஏதாவது கொடுமைகள் நடந்த வண்ணம்தான் உள்ளன. பெரும்பாலும் அவை அந்தந்த நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாகவே நடைபெறும். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்படும் சில கொடுமைகள் மனித தர்மத்துக்கு எதிரானவையாக அமைவதுண்டு. அதை நீங்களோ நானோ அநியாயம் என்று சொல்லலாம். ஆனால் சட்டம் அதை நியாயப்படுத்தி விடுகிறது. அல்லது அவற்றை நியாயப் படுத்துவற்காகவே சட்டம் இயற்றப் படுகிறது. ஆதரவற்றவர்களாகவோ கேள்வி கேட்க யாரும் இல்லாதவர்களாக இருந்தால் போதும் சட்டம் சந்தோஷமாக தன் வேலை செய்து விடும். அமெரிக்காவின் இந்த செய்கை எனக்கு அநியாயமாகப் பட்டது. நியாயம் என்று வாதிடுவோரும் இருக்கலாம்.
அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்களா. அதற்கு முன் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள் இந்த உலகில் அறிவாளிகள் என்பவர் யார்? முட்டாள்தனத்தை எதை வைத்து முடிவு செய்வது? முட்டாள்கள் இந்த உலகத்தில் வாழத் தகுதி அற்றவர்களா?
அடித்துச் சொன்னது அமெரிக்க நீதி மன்றம்.ஆம்! என்று. இபோது அல்ல கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில். ஆம் 1927 இல் கேரி பக் என்ற அப்பாவி பெண்ணுக்கு எதிராக இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது அமெரிக்க உச்ச நீதிமன்றம்
" கேரி பக்கும் அவரது சகோதரியும் கட்டாயமாக கருத்தடை செய்து கொள்ளவேண்டும் . இவர்கள் பரம்பரை முட்டாள்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன . இவர்களின் சந்ததிகளும் முட்டாள்களாகவே இருப்பார்கள் . அமெரிக்கா முட்டாள்கள் நிறைந்த சமூகமாக மாறிவிடக்கூடாது . மூன்று தலைமுறை முட்டாள்கள் போதும் "
“It is better for all the world, if instead of waiting to execute degenerate offspring for crime or to let them starve for their imbecility, society can prevent those who are manifestly unfit from continuing their kind…Three generations of imbeciles are enough.”
அந்த தீர்ப்பில் இடம் பெற்ற வாசகங்கள்தான் இவை. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் பெயர் ஆலிவர் வெண்டில் ஹோம்ஸ். இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது அல்ல. சட்டமே முரணானது என்று வேண்டுமானால் சொல்லலாம்
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் எம்மா பக் என்பவருக்கு பிறந்த துரதிர்ஷ்ட சாலிதான் இந்த கேரி பக். எம்மா பக் மதிநலம் குறைந்தவராக கருதப்பட்டு விர்ஜீனியாவில் இது போன்றவர்களுக்கான குடியிருப்புக்கு மாற்றப்பட்டார். எம்மா பக் ஏழு வயது மனநிலையைக் கொண்டவர் என்று கூறப்பட்டது
பின்னர் ஜான்-ஆலிஸ் டோப்ஸ் என்ற வளர்ப்பு பெற்றோரிடம்(Foster parent) கேரி பக் ஒப்படைக்கப் பட்டார் ஆறாவது கிரேட் வரை பள்ளிக்கு சென்ற கேரி பின்னர் இக்குடும்பத்தின் வீட்டுவேலைகளை செய்து கொண்டு காலம் கழித்து வந்தார். அப்பாவி கேரி பக்கை தன் பாலியல் இச்சைக்கு பலியாக்கினார் இக்குடும்பத்தின் உறவினர் ஒருவர். அதன் காரணமாக தனது 17 வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கேரி. குழந்தை விவியனை வளர்ப்பதற்கு ஒப்புக்கொண்டு கேரிபக்கை விர்ஜீனிய காப்பகத்திற்கு அனுப்பிவிட்டது டாப்ஸ் குடும்பம்.
இந்தக் காப்பகத்தின் கண்காணிப்பாளரான டாக்டர் பி.எஸ். பிரிட்டி சிறந்த மன நல மருத்துவராம். அவர் கேரி பக்கின் நடவடிக்கைகளை உற்று நோக்கி ஒரு முடிவுக்கு வந்தார், கேரி பக்கும் மன நலமும் மன உறுதியும் அற்றவர். கேரின் தாயும் இங்கேயே இருந்தவர். அவரது மகளும் தக்க மூளை வளர்ச்சி அற்றவர் என்ற நிலையில், கேரி பெக் மீண்டும் பிள்ளைகள் பெற்றெடுத்தால் அவர்களும் இவர்களைப் போலவே முட்டாள்களாகவே இருப்பர் என்று முடிவெடுத்து ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.
அப்படி வழக்கு தொடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்று ஆச்சர்யம் உண்டாகலாம்.உண்டு என்று சொன்னது சட்டம்
இது நடந்த சில ஆண்டுகளுக்கு (1924 ) விர்ஜினீயா சட்ட மன்றம் ஒரு புதிய கருத்தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி மனநலம் குறைந்தவர், மன உறுதி குறைந்தவர்,மூளை வளர்ச்சி குறைந்தவர்கள், தீவிர வலிப்பு நோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும் என்று இச்சட்டம் கூறியது.நாட்டின் நலனுக்காக இச்சட்டம் இயற்றப்பட்டது என்று கூறப்பட்டது.
இதை வைத்தே வழக்கு தொடரப்பட்டது. டாக்டர் பிரிட்டி இடையில் இறந்து விட்டதால் அவருக்குபதிலாக பெல் என்பவர் தொடர்ந்தார், அதனால் இந்த வழக்கு கேரி vs பெல் என்றே அழைக்கப் பட்டது.
இந்த சட்டத்தின் மூலம் முதல் கட்டாய கருத்தடை செய்யப்பட்டது கேரிக்குத்தான். சிலகாலம் கழித்து காப்பகத்திலிருந்து விடுவிக்கப் பட்டார்.
இவரது சகோதரிக்கும் இதே போன்று கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. அப்பென்டிசிடிஸ் ஆப்பரேஷன் என்று அழைத்து செல்லப்பட்டு அவர் அறியாமலேயே கருத்தடை செய்து விட்டனர் . பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டார். குழந்தைப் பேறின்மைக்கான காரணத்தை 60 வயது வரை அறியாதவராகவே இருந்தது கொடுமையின் உச்சம்.
ஜியார்ஜியா மாநில பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பால் லோம்பார்டோ என்பவர் 25
ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு ஆவணங்களை ஆராய்ந்ததோடு இதில்
தொடர்புடைய வழக்கறிஞர்கள், சாட்சிகள், மருத்துவர்கள், பொது மக்கள்
அனைவரையும்
சந்தித்து தகவல்களை திரட்டி ஒரு ஆய்வுரையை வெளியிட்டார். சட்டப்படி கட்டாய கருத்தடை செய்யப்பட வேண்டும் என்று வழங்கிய இந்த தீர்ப்பு மனித நேயத்திற்கு எதிரானது, கொடுமையானது என்று உறுதியாக உரைத்தார். இவரின் முயற்சியால் வழங்கப்பட தீர்ப்பு தவறானது என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது..
கேரி பக் இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அவரை சந்தித்தார் லொம்பார்டோ. அப்போது கேரிக்கு வயது 76. வீல் சேரில் அமர்ந்திருந்தார் அவரிடம் நடந்ததெல்லாம் உண்மையா என்று கேட்டார். ஆம் என்று புன்னகைத்தார் கேரி. தான் பள்ளியில் பல கிரேடுகளில் தேறியதும் உண்மை என்று தெரிவித்தார். இப்போதும் நாளிதழ்கள் படிப்பதாகவும், குறுக்கெழுத்துப் புதிர்களை விடுவிப்பதாகவும், ஏனைய பெண்களைப் போலவே வீட்டு வேலைகளை செய்து வந்ததையும் அறிய முடிந்ததாக குறிப்பிட்டார் லொம்பர்டோ. பள்ளி ஆவணங்களையும் கேரி நண்பர்களயும் விசாரித்ததில் அவை உண்மை என்பதை உறுதி செய்தார்
மேலும் லொம்பர்டோ கூறுகிறார். "அவரை ஒருவர் சந்திக்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் கேரி. இன்னமும் தான் அவமானப்பட்டதை உணர்வது முகத்தில் தெரிந்தது" என்று உருக்கமாக உரைக்கிறார். அவருடைய சகோதரியும் இறந்து விட்டதாக கூறியுள்ளார் கேரி. 1983 இல் கேரியும் உயிர் நீத்தார்
கேரி பக்கின் மகள் விவியனும் முட்டாள் என்றே கருதப்பட்டார். 6 மாத குழந்தையாக இருந்தபோதே இவரை ஆய்வு செய்து இவர் சராசரி அறிவுக்கு குறைவானவர் என்று சான்றளிக்கப்பட்டது.. ஆனால் அவ்வாறு சான்றளித்தவரே பின்னாளில் நான் இவரது அறிவை பரிசோதிக்க வில்லை என்று கூறியது குறிப்பிடத் தக்கது.விவியனின் பள்ளி முன்னேற்ற அறிக்கையை ஆய்வு செய்த லொம்பர்டொ அவர் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பதை அறிந்தார். உரிய வயது வந்ததும் இவருக்கும் கருத்தடை செய்யவெண்டும் என்றே முடிவு செய்திருந்தனர்.ஆனால் எதிர்பாராத நோய் தொற்று காரணமாக தன் எட்டாவது வயதில் மரணம் அடைந்தார் விவியன்.
லொம்பார்டோவின் முயற்சி காரணமாக கேரியை தகாத முறையில் நடத்தியதற்காக 2002 இல்விர்ஜீனியா சட்டமன்றம் மன்னிப்பு கோரி தீர்மானம் நிறைவேற்றியது. பரம்பரையையே அழித்தாகி விட்டது. இப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன்? ஒருவருக்கு செய்யும் மிகப் பெரிய தீங்கு என்ன? தடுக்க இயலாத நிலையில் உள்ள
ஒருவரின் வம்சத்தை அழிப்பதுதான் இது போன்ற கொடும்பாவம் வேறு ஏதேனும் உண்டா?.
அமெரிக்காவில் அறிவாளிகளுக்கு மட்டும்தான் இடமா? கேரிபெக்கின் வாழ்க்கையைப் படித்த பின் என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டது. முட்டாள்களும்,மனவளர்ச்சி குறைந்தவர்களும், வாழ உரிமை இல்லாதவர்களா? குறையே இல்லாதவர்கள் நிறைந்த நாடாக மாற்றுவதற்கு இதுதான் வழியா?
அமெரிக்காவின் அன்றைய கோரமுகத்தை அறிய நேர்கையில் இன்றும் மனதில் இனம் புரியாத அச்சமும் வேதனையும் ஏற்படுகிறது.அமெரிக்கா இது போன்ற விஷயத்தில் மாறி இருக்கிறதா? அல்லது இன்னமும் முகமூடி அணிந்திருக்கிறதா ? இவற்றிற்கான விடை எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு?
*********************************************************************************
கொசுறு :
1. இந்த தீர்ப்பு தவறானது என்று ஆய்ந்து வெளிப்படுத்தியமைக்கு 1500 டாலர்கள் பரிசாகப் பெற்றார் லொம்பார்டோ.
2. கேரி பக்கின் கதை தொலைக்காட்சி நாடகமாக 1994இல் ஒளி பரப்பப் பட்டது.
3.கேரி பக்கின் கருத்தடைக்குப் பின்னர் 1970 வரை அமெரிக்காவில் 65000 பேருக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
****************************************************************************************
இதைப் படித்து விட்டீர்களா?
மனித உரிமை போற்றப் படும் நாடு என்று சொல்லப் படும் அமெரிக்காவிலா இப்படி ?
பதிலளிநீக்குமுட்டாள்தனமான தீர்ப்பு என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை !
த ம 1
சட்டம் இயற்றி இருக்கிறார்கள் பாருங்கள் அதைத்தான் சொல்ல வேண்டும்.
நீக்குஅடச்சே...
பதிலளிநீக்குகொடுமை...
கொடுமைதான்
நீக்கு///அமெரிக்காவில் அறிவாளிகளுக்கு மட்டும்தான் இடமா? ///
பதிலளிநீக்குஅப்படி சட்டம் இருந்தால் மதுரைத்தமிழன் எப்படி அமெரிக்காவில் வசிக்க முடியும்?
அதுதானே!எப்படி?
நீக்கு//அமெரிக்கா இது போன்ற விஷயத்தில் மாறி இருக்கிறதா? அல்லது இன்னமும் முகமூடி அணிந்திருக்கிறதா ? இவற்றிற்கான விடை எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு?//
பதிலளிநீக்குஅமெரிக்காவில் இதைப் போல பல கொடுமைகள் நடந்துள்ளன. இவ்வளவு விரிவாக எழுதிய உங்களுக்கு இப்போதைய நிலை தெரியவில்லை என்பது நம்பும்படி இல்லை.
இவர்களை ஆக்கபூர்வமாக மாற்றுத்திறனாளிகள் என்று அழைப்பது, சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவது என்று பல வகைகளில் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உதவுவதில் அமெரிக்கா இப்போது முன்னோடியாக உள்ளது.
நன்றி குலவுசனப்பிரியன்
நீக்குமுரளி:
பதிலளிநீக்குஅமெரிக்காவில் கருப்பர்களை (நீக்ரோ என்று சொல்வது தவறு; நம்ம ஊரில் ப....என்று சொல்வது மாதிரி) அடிமையாக கொண்டு வந்தார்கள். அமெரிக்கர்கள் அந்த கால கட்டங்களில் நிறைய கொடுமைகள் கருப்பர்களுக்கு செய்து இருக்கிறார்கள். அதை அவரகள் மறைப்பது இல்லை--தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்--கொண்டார்கள்.
நாம் அப்படி இல்லை--தாழ்த்தப்பட்டவர்களிடம் என்றும் மன்னிப்பு கேட்கக் போவதில்ல்லை! காரணம் உங்களுக்கு தெரியும்--நாம் உயர்ந்த ஜாதி!
ஜெயிலில் இருந்த கருப்பர்கள் மீது டாக்டர்கள் SYPHILIS நோயின் தன்மையை அறிய அந்த கிருமியை செலுத்தி பல சோதனைகள் செய்தனர்..
அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் அன்று அவர் முன்னோர்கள் செய்த தவறுக்கு ஒரு பொது மன்னிப்பு கேட்டார்.-அவர் பேச்சை கேட்டால் கல்லும் கரையும் ;அழாமல் இருக்கமுடியாது.
அமெரிக்க கருப்பு அடிமைகள் என்ன ஒரு நானூறு வருட சரித்திரம் இருக்குமா? இன்று நிலைமை எப்படி? இந்தியாவில் தாழ்த்தப் பட்டவன் இன்றும் தாழ்த்தப்பட்டவன் தான்----இது இன்னும் 2000 வருடங்கள் வந்தாலும் மாறாது!
எவனோ செய்த தவறுக்கு கிளிண்டன் பொது மன்னிப்பு கேட்டார்; தான் செய்த கோத்ரா தவறுக்கு ஏன் மோடி இன்னும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்கிறார்?.
தவறுக்கு வருந்தும் மனோபாவம் இருந்தால் எவ்வளோ மாற்றங்கள் நடந்திருக்குமே?
நீக்குமிகச்சிறந்த ஒப்பீடு. அய்யா நம்பள்கி அவர்களுக்கு என் வணக்கம்.
நீக்குஇதுவரை அறியாத தகவல்
பதிலளிநீக்குஅனைவரும் அவசியம் தெரிந்து
தெளியவேண்டிய தகவல்
விரிவான அருமையான பகிர்வுக்கு
நல்வாழ்த்துக்கள்
நன்றி
நீக்குஅறியாத புதிய தகவல்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குநினைத்துப் பார்க்கவே முடியாத கொடுமை ஐயா இது.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவேடிக்கை மனிதர்கள்!
பதிலளிநீக்குஆறியாத தகவல் தான். என்ன கொடுமை இது.
பதிலளிநீக்குஅறியாத தகவல்... நன்றி...
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅமெரிக்காவின் இன்னொரு முகத்தை அறிய முடிந்தது! நல்லதொரு பதிவு!
பதிலளிநீக்குஇந்தக் கொடுமை
பதிலளிநீக்குஎந்த உறவுக்கும் வேண்டாம்
// உலகின் ஒவ்வொருமூலையிலும் ஏதாவது கொடுமைகள் நடந்த வண்ணம் ... உள்ளன.//ஒவ்வொரு நிமிடமும் என்பதுவே உண்மை .
பதிலளிநீக்குதெரியாத தகவல். தெரியபடுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குWhen you look at history, you need to look at what went on other countries AT THE SAME TIME. Then you would know nobody was civilized, not just Americans. I have seen with my own eyes, scheduled caste women (mother, wife or daughter) were abused by "high class dravidians" in my neighborhood in the GREAT INDIA of yours. They never had rights even after they got freedom. It is believed by high class dravidians that there is nothing wrong in abusing their women and girls because they are "low class". Even today, that's what we see when a SC guy fell in love with vanniyar girl. This is what WE ARE. We never worry about them, because they were not our sisters or mothers. We were also ANIMALS, not that long ago, Murali.
பதிலளிநீக்குWhen you look at history, we need to look at what we did at that time! History is not something everybody loves to look at. Our grand parents were "freedom-less" Indians
உண்மைதான் வருண்.
நீக்குஅறியாத தகவல் இது அறிய தந்தமைக்கு நன்றி !
பதிலளிநீக்குநன்றி மனோ சார்
நீக்குஅறியாத தகவலை பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குத.ம.2014!
வவ்வாலுக்குத் தெரியாத விஷயமா?அப்படித்தான் தெரியவில்லை என்றாலும் அதை ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்?.இவ்வளவு நேரம் தேடிப் பார்த்து விட்டிருப்பீர்களே! ஹிஹிஹிஹி
நீக்குமுரளி,
நீக்குஎன்ன இருந்தாலும் நீங்க நாலும் தெரிஞ்சவர்,அறிஞ்சவர் ,நாம அறியாத வயசு ,புரியாத மனசு அதான்!
# ஆமாம் சார் தெரியாத சமாச்சாரம்லாம் தெரியிற வரைக்கும் ஒப்புக்கிறதில்லை, ஆனால் ஒருத்தர் 73.62% வாக்குப்பதிவு நடந்திருக்கு , மிக அதிக வாக்குப்பதிவுனு தமிழ்நாடே சொன்னாலும் , வாக்குப்பதிவு குறைஞ்சிடுச்சுனு காரணம் எலெக்ஷன்ன் கமிஷன் டபுள் என்ட்ரி நீக்கிடுச்சுனு அடம் புடிக்கார் ,அவருக்கும் ஒப்புக்க மனசே இல்லையாம் ,பார்த்தால் சொல்லுங்கோ அவ்வ்!
பதிவை சரியா படிக்காமயே எடக்கு மடக்கா பேசினா என்ன பண்றது. என்னோட பதிவ படிச்சிட்டுத்தான் சொல்றீங்களா. இல்ல வேற எதையாவது படிச்சிட்டு சொல்றீங்களா?. எப்பவுமே வாக்கு சதவீதம் அதிகம்தான்னு சொல்லி இருக்கேன். டபுள்என்ட்ரி நீக்காமல் இருந்தால் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். நீக்கியபின் இருக்கும் வாக்கு சதவீதம் சரியா இருக்கும். அதைத்தான் குறிப்பிட்டிருக்கேன். சென்னையில் வாக்கு பதிவு குறைவு என்று சொல்வது தவறு என்ப்தற்குத்தான் விளக்கம் குடுத்திருக்கேன்..
நீக்குஉண்மையில் வாக்குப் பதிவு சதவீதம் தொண்ணூறு இருக்கலாமனுதான் என் கணிப்பை எழுதி இருக்கேன்.
இப்படி சொன்னதற்குக் அனுபவ காரணமும் உண்டு. நான் நிறையத் தேர்தல்ல வாக்குப் பதிவு அதிகாரியா இருந்திருக்கிறேன்.பலவித தேர்தல் அலுவல்களை பார்த்திருக்கிறேன்.
தலைப்பை மட்டும் படிச்சிட்டு கருத்து சொல்லிட்டீங்களோ?
நீங்களே நான் வாக்களிக்காதவர் சதவீதம்தான் குறைவுன்னு சொன்னதை கருத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்களே. அப்புறம் ஏன் இந்த கொலை வெறி.
முரளி,
நீக்கு//நீங்களே நான் வாக்களிக்காதவர் சதவீதம்தான் குறைவுன்னு சொன்னதை கருத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்களே. அப்புறம் ஏன் இந்த கொலை வெறி.
//
உங்க அளவுக்கு எனக்கு மூளை இல்லை அவ்வ்!
நீங்க கம்மியா போயிடுச்சுனு சொன்னதாக நினைச்சு சொன்னது அது.
நான் மட்டுமல்ல கரந்தை ஜெயகுமார் அவர்களும் இம்முறை வாக்களிப்பு குறையவில்லை ,கூடுதல் என சொல்லி இருப்பாரே பார்க்கலையா, காரணம் நீங்க கம்மியாகிடுச்சுனு சொன்னதா என்னப்போல அவரும் நினைச்சுட்டார் என நினைக்கிறேன்.
//கரந்தை ஜெயக்குமார்April 28, 2014 at 8:55 PM
வாக்குப் பதிவு சதவிகிதம் ஒன்றும் குறைவல்ல ஐயா. அதிகம்தான்.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரங்கள் செய்கிறார்களே தவிர, தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் வாக்களிக்க போதிய ஏற்பாடுகளைச் செய்ய மறுக்கிறார்கள். காரணம் புரிய வில்லை ஐயா//
நீங்க இன்டைரக்ட்டா சொன்னது எனது சிற்றறிவுக்கு எட்டலைனு நினைக்கிறேன் எனவே மன்னிச்சு அவ்வ்!
பாது காப்பு கொடுக்க முடியாத அரசின் லட்சனம் தீர்பில் தெரிகிறது. கருப்பர்களின் மீது கட்டவிழ்த்த கொடுமையின் காலம்.
பதிலளிநீக்குஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு குறுகிYஅ வட்டத்தில் சிந்தித்து முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு வாழ்க்கையை அழிக்க இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்..
பதிலளிநீக்குபிறப்பால் எவரும் தாழ்ந்தவர்-உயர்ந்தவரும் இல்லை, அறிவாளி-முட்டாளும் இல்லை இது அந்த அறிவாளிகளுக்குத் தெரியாததில்ல. திமிர். உலகக் காவலர் எனும் திமிர். அருமையான செய்தியை அரிய பதிவாக்கி, அறிவுபூர்வமாகத் தந்த உங்களுக்கு என் தனியான வணக்கம் நண்பர் முரளி அவர்களே! இப்படி எத்தனையோ கொடுமைகள் வெளியில் தெரியாமல்தான் கிடக்கின்றன. உங்களைப் போன்றோர் இதை அணுகும் விதம்தான் சரியானது. பாராட்டுகள் அய்யா.
பதிலளிநீக்குஇப்ப அங்கே இருப்பவர்கள் எல்லோரும் ரொம்ப அறிவாளிகளாமா??இப்போ அந்த நாட்டாமையின் வாரிசுகளை சோதனை செய்யணும்.
பதிலளிநீக்குஎன்ன கொடுமை..... பல நாடுகளில் இதே விதங்களில் அவலங்கள் நடந்தபடியே.......
பதிலளிநீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குகண்களைக் குளமாக்கிய உண்மை சம்பவம் எனக்குள்ளும் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது ஐயா. ஒரு பரம்பரையை அழித்து விட்ட அமெரிக்காவின் மனிதாபிமற்ற குணம் இன்னமும் குறையவில்லை என்றே நினைக்கிறேன் பெரியண்ணன் போக்கில் தான் செயல்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நமக்கு தெரியாமல் இன்னும் எத்தனை எத்தனையோ. வெளியிட்டமைக்கு நன்றீங்க ஐயா..
அருமையான பதிவு.
பதிலளிநீக்கு