மகளிர் தின வாழ்த்துக்கள்
(இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்)
நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும் பெரியவர் ஒருவரைத் சந்தித்து தன் மனைவியைப் பற்றி சொல்லி ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் கணவர் ஒருவர்.
"அய்யா! என் மனைவி கிராமத்திலிருந்து வந்தவர். நகரத்திற்கு வந்தும் அதற்கேற்ப தன்னை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. என் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை. நாட்டு நடப்பு எதுவும்
தெரியாது. முதல்வர் யார்? பிரதம மந்திரி யார் என்று கூட தெரியாது. அரசியல்
பற்றி இம்மியும் தெரியாது. இலக்கியங்கள் கவிதைகள் பற்றி தெரியாது.
புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கிடையாது. நாளிதழ்கள் கூட வாசிப்பதில்லை.
அனைவரும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய சினிமா நடிக நடிகையரின் பெயர்களும்
தெரியாது. என் நண்பர்களின் மனைவிகள் அரசியல், கணினி, விளையாட்டு, பங்கு
வர்த்தகம்,கலைகள், இலக்கியங்கள், கவிதைகள், என்று
வெளுத்துக்கட்டுகிறார்கள். இவளுக்கோ செல்போனை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாது. போன் வந்தால் எடுத்துப் பேசவும், எப்போதாவது அவசர தேவை எனில் எனக்கு போன் செய்யவும் மட்டுமே தெரியும். ஃபேஸ்புக் வாட்ஸ் அப், டுவிட்டர் எதுவும் தெரியாது.
எவ்வளவுதான் சொன்னாலும் இவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம்
ஏற்படவில்லை. அவற்றை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதில்லை. இவளை எப்படித்
திருத்துவது என்று நீங்கள்தான் ஐயா ஆலோசனை கூறவேண்டும்."
அவரை உற்றுப் பார்த்த பெரியவர் கேட்டார் "தம்பி நீங்கள் நகரத்திலேயே பிறந்து வளரந்தவரா?"
"இல்லை. நானும் கிராமத்தில் இருந்துதான் வந்தேன். ஆனால் நகரத்திற்கேற்ப என்னை மேம்படுத்திக் கொண்டேன்"
அவரை உற்றுப் பார்த்த பெரியவர் கேட்டார் "தம்பி நீங்கள் நகரத்திலேயே பிறந்து வளரந்தவரா?"
"இல்லை. நானும் கிராமத்தில் இருந்துதான் வந்தேன். ஆனால் நகரத்திற்கேற்ப என்னை மேம்படுத்திக் கொண்டேன்"
"நல்லது உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்" பெரியவர் கேட்டார்.
"நான்,என் மனைவி, ஒரு குழந்தை, மூன்று பேர் இருக்கிறோம்."
" நாளை உங்கள் மனைவியை இங்கு அழைத்து வாருங்கள். அறிவுரை கூறுகிறேன் "
பெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.
பெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.
மனைவியின் இடுப்பில் குழந்தையும், கையில் ஒருபை. அந்தப் பையில் ஏதோ சில பொருட்கள் இருந்தன. மூவரும் பெரியவரை வணங்கினர். கணவனை சற்று நேரம் வெளியே
இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டார். பின்னர் பெண்மணியை
வெளியே அனுப்பிவிட்டு கணவனை அழைத்தார்.
"ஐயா,என் மனைவிக்கு அறிவுரை சொன்னீர்களா? கணவன் கேட்டான்.
பெரியவர் "கொஞ்சம் பொறுங்கள்.அதற்கு முன் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
இங்கு வரும்போது என்ன கொண்டு வந்தீர்கள்"
"எனக்கு ஒன்றும் தேவை இல்லை என்பதால் நான் ஒன்றும் கொண்டுவரவில்லை ஐயா!, என்மனைவிதான் ஏதோ பை ஒன்றை கொண்டு வந்திருக்கிறாள் "
"உன் மனைவி கொண்டு வந்த பையில் என்னவெல்லாம் இருக்கிறது? .உனக்குத் தெரியுமா?
இங்கு வரும்போது என்ன கொண்டு வந்தீர்கள்"
"எனக்கு ஒன்றும் தேவை இல்லை என்பதால் நான் ஒன்றும் கொண்டுவரவில்லை ஐயா!, என்மனைவிதான் ஏதோ பை ஒன்றை கொண்டு வந்திருக்கிறாள் "
"உன் மனைவி கொண்டு வந்த பையில் என்னவெல்லாம் இருக்கிறது? .உனக்குத் தெரியுமா?
"எனக்குத் தெரியாது. என் மனைவிக்குத்தான் தெரியும்"
"உன் குழந்தைக்கு எப்போது உணவு கொடுக்கவேண்டும், எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் தெரியுமா?
"தெரியாது,அது அவளுக்குத்தான் தெரியும்"
"என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றாவது தெரியும்?
"எனக்குத் தெரியாது. அதுவும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.?
"திடீரென்று உன் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
"நிச்சயமாகத் தெரியாது. அதெல்லாம் பெண்களுக்குத் தானே தெரியும்."
"குழந்தை அழுதால் உன்னால் அழுகையை நிறுத்த முடியுமா?
"முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவளிடம் இருக்கும் வரை குழந்தை அழுவதில்லை."
"குழந்தை எப்போது உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெரியுமா?
"அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.
பெரியவர் புன்னகையுடன் "உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா?"
கணவன் விழிக்க,
பெரியவர் சொன்னார் "இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா! பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள நான் அருமையான ஆலோசனைகளைக் கூறுகிறேன்."
கணவன் தலை குனிந்தான்
வேறென்ன செய்ய முடியும்?
"குழந்தை எப்போது உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெரியுமா?
"அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.
பெரியவர் புன்னகையுடன் "உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா?"
கணவன் விழிக்க,
பெரியவர் சொன்னார் "இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா! பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள நான் அருமையான ஆலோசனைகளைக் கூறுகிறேன்."
கணவன் தலை குனிந்தான்
வேறென்ன செய்ய முடியும்?
-----------------------------------------------------------
#ஃபேஸ்புக் வாட்ஸ் அப், டுவிட்டர் எதுவும் தெரியாது. #
பதிலளிநீக்குஇதெல்லாம் மனைவிக்குத் தெரியவில்லைன்னு சந்தோஷப்படணும்,தெரிந்தால் ,அதிலேயே மூழ்கி விடுவார்கள் ,நாம சோத்துக்கு லாட்டரி அடிக்கணும் :)
நீக்குமனைவிக்கு தெரிஞ்சா நமக்கு ஆபத்துதானே...விவரம் தெரியதா கணவனாக இருக்கிறானே
பிள்ளைப் பெற்றோமா ,அதை வளர்த்தோமா என்றில்லாமல் சமத்துவம் பேசினால் தப்புதானே :)
நீக்குஆணாதிக்கம் எப்படி எல்லாம் பெண்ணை ஏமாற்றுகிறது :)
நன்றி சகோ
பதிலளிநீக்குநெத்தியடி! முரளி! என்ன இப்படிக் கலக்குறீங்க? எப்பவாவது வந்து ஒரே போடா போட்டு அழகாக எழுதிட்டம்னு நினைச்சு த.ம.வுல முந்திக்கிட்டோம்னு நினைச்சுத் திரிஞ்சுக்கிட்டு இருக்கும் என்னமாதிரி ஆள்களையெல்லாம் ஒரேயடியாக் காலிபண்ணிட்டீங்களேய்யா! உண்மையிலேயே அருமை! மிகமிக அழகான விளக்கம்... மகளிர்தினத்திற்கு இதைவிடச் சிறந்த பதிவுபோட என்னால் முடியாது அய்யா! (அய்யா நீர் புலவர்தான்! நான்...நான் இல்லை..) அப்படியே புடிங்க த.ம.வா.2 நல்லா இருக்கீங்களா? வீட்டு வேலை முடிஞ்சு பால்காச்சியாச்சா? பால் விலை அதிகரிச்சுக்கிட்டே போறதால முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா பால்காய்ச்சிடுங்க.. வாழ்த்துகள் வணக்கம்)
பதிலளிநீக்குபெற்று வளர்ப்பது மட்டும்தான் பெண்களின் கடமை ,விதி ,சாபம் ,மனுதர்மம் ,தலைஎழுத்து என்பதை தோழரே ,நீங்களுமா ஏற்றுக்கிறீங்க ?
நீக்குபகவான்ஜி, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு ஆண்களுக்கும் உண்டு என்பதை சொல்லவே இந்தக் கதை.அவர்களின் பணியை உழைப்பை பாராட்டாவிட்டால் பரவாயில்லை இகழ்வாக கருதுதல் நியாயமன்று என்பதே இப்பதிவு சொல்லும் நீதி
நீக்குஇல்லை பகவான்ஜி! அண்ணா இங்கு சொல்லியிருப்பது அதை அல்ல. ... ஒரு பெண்ணின் பெருமையை...ஒரு பெண்ணின் பெருமையே தாய்மைதான். தாய்மை என்பது அன்பு. அன்பு என்றால் சாதாரண அன்பு இல்லை அது. மிகப் பெரியது அகண்டது, ஆழமானது. அந்த ஆண் அதைத் தெரிந்து கொள்ளக் கூட முயற்சி செய்யாமல் அவளுக்கு இது தெரியவில்லை அது தெரியவில்லையெ என்று அந்தக் கணவன் குறை கூறி ஆதங்கப்படுவது பெருமை அல்லவே...ஆண் அந்தத் தாய்மை உணர்வைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் ...ஜி ... இது இந்தக் கதையில் வரும் ஆண் மட்டுமல்ல...பல ஆண்களையும் குறிக்கும். அப்படிப்பட்ட, தாய்மையைப் பற்றிய சிறப்பா எண்ணம் ஒவ்வொரு ஆணின் மனதிலும் இருந்தால் கற்பழிப்பு, பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் எதுவுமே இவ்வுலகில் நடக்காதே ஜி!
நீக்குகீதா
நீ செய்வதையெல்லாம் உன் மனைவிக்கும் கற்றுக் கொடுன்னு கணவனிடம் ,அந்த பெரியவர் சொல்லியிருந்தால் சரியாக இருக்கும் :)
நீக்கு:D நல்ல பதிவு , தங்கள் தளத்தில் இதை ஏற்கனவே படித்த மாதிரி ஓர் உணர்வு ! மீள் பதிவா சார் :)
பதிலளிநீக்குஅருமையான ஆலோசனை..முரளி.
பதிலளிநீக்குhttps://kovaikkavi.wordpress.com/
முன்பே வாசித்ததுதான் இருந்தாலும், பல விஷயத்தில் பெண்களை நாம் நெருங்ககூட முடியாது என்பதே நிஜம் !
பதிலளிநீக்குநல்ல பதிவு சகோ, நிஜம் நிஜம் உண்மை சகோ,, நன்றி நன்றி தொடருங்கள்
பதிலளிநீக்குபெண்கள் பெண்களாகவே இருக்கட்டும் ஆண்களைப் போல் மாற வேண்டாம் ஆண்களிடம் கிடைக்கப் பெற முடியாத தாய்மை பெண்களிடதில் இருக்கிறதே அருமையான பகிர்வு
பதிலளிநீக்குமிகவும் அற்புதம்
பதிலளிநீக்குநாம் தான் தேவையற்ற குப்பைகளைத்
தெரிந்துவைத்துக் கொண்டு
அறிக்னனைப் பொல குதியாட்டம் போடுகிறோம்
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமையான கதை நண்பரே இருப்பது கண்களுக்கு சில நேரங்களில் தென்படுவதில்லைதான்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
அருமையான அசத்தல் பதிவு!
பதிலளிநீக்குத ம 4
மகளிர்தினம் அன்று படித்த இரண்டாவது நல்ல கதை.படிக்க அருமையாக இருந்தது.பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குஆனால் இந்த கதையில் வரும் பெண்கள் மாதிரி இன்றைய கிராமத்து பெண்கள் இல்லை என்றுதான் தோன்ருகிறது .என்ன கிராம்த்து பெண்ணிற்கு ஆங்கிலம் வேண்டுமானால் மட்டும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மற்றவிஷயங்களில் அவர்கள் ஆண்களைவிட ஒரு படி மேல்தான்
கணவர்களுக்கு சவுக்கடி! ஆண்கள் எப்போதுமே அவசரக்காரர்கள்.
பதிலளிநீக்குதம + 1
அருமை அருமை.
பதிலளிநீக்குபல ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
நச்சென்று அடித்துவிட்டீர்கள். மிக அருமையாக இருந்தது. யதார்த்தம். அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். நன்றி.
பதிலளிநீக்குபெண்ணின் பெருமையினை இதைவிட சிறப்பாக யாராலும் கூற முடியாது ஐயா
பதிலளிநீக்குஅருமை
நன்றி ஐயா
இதிலிருந்து சகலமானவர்களும் தெரிந்து கொள்வது என்னவென்றால், உங்களுக்கு மனைவியிடமிருந்து உடனடியாக ஆகவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதே! Anyway வாழ்த்துக்கள், எல்லாம் நல்லபடியாக முடியட்டும்! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குமிக அருமை. இது போல மனைவியை அடைந்தவர் கொடுத்துவைத்தவர். நல்ல யோசனை குட்டுவத்கற்குப் பதிலாகக் கொடுத்துவிட்டீர்கள்.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான கதை! பெண்கள் தினத்தில் அதைப் பகிர்ந்து "தாய்மை"க்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள்! வாழ்த்துகள். தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி!
பதிலளிநீக்குஅசத்தல்...
பதிலளிநீக்குமுகநூலில் கண்டேன்!
பதிலளிநீக்குதிருமண பந்தம், தாய்மை, குடும்பப் பாதுகாப்பு இவையே பெண்ணின் பலம் மற்றும் பலவீனம் என்று மகளிர் தின சிறப்புக் கட்டுரையில் படித்தேன். இந்த வரிகள் ஏனோ உங்கள் பதிவு படித்தபின் நினைவிற்கு வந்தன.
பதிலளிநீக்குஅருமையான பதிவு..மனம் நிறைந்த நன்றிகள் சகோ.
பதிலளிநீக்குஎன்னவொரு கருத்தாழம் மிக்க கதை?! உங்கள் அனுமதியுடன் மூன்று நண்பர்களுக்கு பகிர்கிறேன் முரளி!
பதிலளிநீக்கு