என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 30 ஜூலை, 2012

பாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன?

    ஒவ்வொரு  முறை படிக்கும்போதும் விதம் விதமான உணர்வுகளை ஏற்படுத்தும் நாவல் இரும்புக் குதிரைகள். இந்தக் கதையின் நாயகன்  விஸ்வநாதனை அவனது முதலாளி கவிதை எழுதிறவன் எல்லாம் வேலைக்கு வந்து கம்பனியை அழிக்காதீர்கள்  பதில் பேசவேண்டாம் உங்க கவிதைகளை பற்றிப் பேசியது வருத்தமென்றால் வேலையை  ராஜினாமா செய்துவிட்டுப் போய் விடு."
"கிரிக்கெட் ஆடுகிறவனுக்கு சில ஆபீஸ்களில் மரியாதை இருக்கிறது இதற்காகவே வேலை தரப்படுகிறது.விளயாட்டில் வல்லவர்களுக்கு வேலை தருவது உண்டு. ஆனால்  கவிஞனுக்கு கவிதைக்காக எங்காவது  வேலை தருவது உண்டா? கவிதை எழுதுகிறவனை சோம்பேறி என்று சொல்கிறதே?" என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவன் மனதில் விளைந்த கவிதை 


              உழைப்புக்கே குதிரை என்ற 
              பெரும்போக்கு ஒருநாள் உடையும் 
              குரங்குகள் மனிதர்கள் போல 
              வளர்ந்தது உண்மையாயின் 
              குதிரையின் ரூபம் மாறும் 
              உடல் மட்டும் மனிதர் போல 
              மடி மீது வீணை போட்டு 
              மழைக்கான வேதம் பாடும் 
              இருகாலில்  புவி ஈர்ப்பை 
              ஏந்திய குதிரைப் புத்தி 
              உலகத்தின் மாயை மாற்றும் 
              சகலமும் கவிதையாகும் 
              குதிரைகள் மாறும் ஒருநாள் 
              குரங்குகள் மடியும் அன்று.


        ********************
   மற்றவர்கள் தன்  வேலையில் தவறு செய்தால் அதற்காக கண்டிக்கப் படுவதும் சகஜம்தான். ஆனால் வேலை செய்பவன் கவிஞனாய் இருந்தால் அந்தத் தவறே கவிதையால்தான் வந்தது என்று சாடப் பாடுவான் . 
இதோ அவை பால குமாரனின் வரிகளில் 

               சவுக்கடி பட்ட இடத்தை 
               நீவிடத் தெரியாக் குதிரை  
               கண்மூடி வலியை வாங்கும் 
               இதுவுமோர்  சுகம்தான் என்று  
               கதறிட மறுக்கும் குதிரை 
               கல்லென்று நினைக்க வேண்டாம் 
               கதறிட மேலும் நகைக்கும் 
              உலகத்தை குதிரை  அறியும் 

  நாம் நமது துன்பத்தை வெளிப்படுத்தினால்  ஆறுதல் சொல்லாத உலகம்  நம் நிலை கண்டு சிரிக்கவே செய்யும் என்பதை குதிரை மூலம் சொன்னது எவ்வளவு அழகு!

(குதிரை வேதம் தொடரும்) 
இதையும் படியுங்க 

வெள்ளி, 27 ஜூலை, 2012

டி.ராஜேந்தர்! + சொல்லுங்கண்ணே! சொல்லுங்க!


    அலுவலக வேலை காரணமாக ஈரோடு போக வேண்டி இருந்தது. அதற்கு முன்பு ஒரு பதிவு போடலாமென்று "நீயா நானா- பாக்காதீங்க"  பதிவை அவசர அவசரமா போட்டுவிட்டு கிளம்பினேன்..நேற்று தான் திரும்பிவந்தேன். எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. நான் எதிர் பார்க்காத வகையில் 2000 பேருக்கு மேல் இந்தப் பதிவை பார்த்து-படித்து  இருக்கிறார்கள். (நம்ம ரேஞ்சுக்கு இது அதிகம் தானே?) அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நிறையப் பேர் ஒரு மனதாக சொல்லியிருந்த விஷயம் போன வாரம் நடந்த "80 களில் இசையும் வாழ்வும்" என்ற தலைப்பு பற்றிய நீயா நானா நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்பதுதான்.அந்நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். நீயா? நானா? என்ற போட்டி இன்றி அனைவரும் ஒரே குரலாக கருத்துக்கள் முன் வைத்த நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  திரை இசை தன்மனதை எப்படிக் கவர்ந்தது;எப்படி பாதித்தது என்று குரல் வளம் பற்றிக் கவலையின்றி பாடிக் காட்டி உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் பிரமிக்கத் தக்கதாக இருந்தது.
   பல இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் 80களில் இளையராஜாவின் இசை ராஜாங்கத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு அடிமைப்பட்டுக் கிடந்திருந்தாகவே தோன்றியது.அந்த உணர்விசைக் கலைஞனை பற்றி பக்கம் பக்கமாகப் பதிவுகள் போடலாம்..
   ஆனால் நான் சொல்ல வந்தது டி.ராஜேந்தர் பற்றி. அதீத  தன்னபிக்கையும் பலவகைத் திறனும்  கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் டி.ராஜேந்தர். ஒரு தலை ராகம் படத்தில் இவர் எழுதி இசை அமைத்த அத்தனை பாடல்களும் நான் பள்ளியில் படித்துக்கொடிருந்தபோது மிகவும் பிரபலம். இவரது பாடலையும் ஒருவர் நினைவு கூர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவரும்  பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இன்றைய சினிமாவும் அரசியலும் இவரை கோமாளியாக்கி விட்டது வேதனைக்குரியது. இவரது தற்பெருமைப் பேச்சுக்களும் இதற்குக் காரணம். எதைப் பற்றியும் கவலைப் படாமல் கருத்து சொல்வது இவரது பலம் என்ற போதிலும் அதுவே பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது.
     சமீபத்தில் யூ ட்யூபில் வினு புட் ப்ராடக்ட்சுக்கு இவர் எழுதி இசையமைத்து  பாடி நடித்துள்ள விளம்பரம் பார்த்தேன் நன்றாகவே இருந்தது. தொலைக்காட்சியில் இவ்விளம்பரம் பார்த்ததாக  நினைவில்லை.
  ராப் இசை வடிவத்தில் அமைந்துள்ள இவ்விளம்பரம் தொலக்காட்சியில் ஒளி பரப்பானால் . நிச்சயம் பிரபலமடையும் என்றே நினைக்கிறேன்.
இதோ அந்த விளம்பரம்: பாருங்க!உங்க கருத்தை சொல்லுங்க


**************************************************************************************************

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க! 

   ஆதித்யா டிவியில் ஒளிபரபரப்பாகும்  சொல்லுங்கண்ணே! சொல்லுங்க! நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பது  உண்டு முதலில் பார்க்கும்போது சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. மாணவர்கள், இளைஞர்கள்,குடும்பப் பெண்கள் என்று பல பேர் இமான் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளுக்கு தவறான பதிலையே சொல்கிறார்கள் 

      உதாரணத்திற்கு செஞ்சிக் கோட்டையை காட்டியது யார் என்ற கேள்விக்கு இராஜராஜன்  என்று ஒரு மாணவன் சொன்னபோது அதை நெல்லைத் தமிழில் கிண்டலடித்தபோது  நானும் சிரித்தேன்.
   பின்னர் வேறு ஒரு கேள்விக்கு சென்னைக்கும் கோயம்பத்தூருக்கும் இடையில் இருக்கிற நாலு ரயில்வே ஸ்டேஷன் பேரை சொல்லுங்கன்னு கேட்டபோது திருநெல்வேலி திண்டுக்கல்  என்றெல்லாம் பதில் சொன்னபோது சிரிப்போடு சேர்ந்து எரிச்சலும் ஏற்பட்டது. 
   காரணம்  இதற்கு பதில் சொன்னது பள்ளியில் படிக்கும் மாணவர்கள். இது கூட தெரியாமல் இருக்கிறார்களே இந்த மாணவர்கள் என்று வருத்தம் ஏற்பட்டது. இதெல்லாம் சொல்லித் தராமல் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் மேல் கோபம் ஏற்பட்டது. பொது அறிவு ஏன் இவ்வளவு குறைந்து விட்டது என்ற ஆதங்கமும் ஏற்பட்டது. 
    இது தொடர்பாக ஆசிரியர் சிலரிடம் பேசிப்  பார்த்தபோது 'அனவைரும் தவறான பதில்களையே சொல்கிறார்கள். ஒரிருவர் கூட சரியான பதில்களை சொல்லாதது நம்ப முடியாததாக உள்ளது.வேண்டுமென்றே சரியான பதில் சொல்பவர்களை காட்டாமல் எடிட் செய்து விடுகிறார்கள்' என்று குற்றம் சாட்டினார்கள். நிகழ்ச்சி சுவாரசியத்திற்காக  சரியான பதில்  சொல்பவரையும் நகைச்சுவைக்காக குழப்பி தவறான பதில் சொல்ல வைத்து விடுகிறார் இமான் அண்ணாச்சி என்றும் சொல்கிறார்கள். எது உண்மை என்று தெரியவில்லை. தங்கள் பொது அறிவு தொலைக்காட்சி வாயிலாக நகைச்சுவையாக்கப்படுவது தெரிந்தும் மொத்தமாக சிரித்துக் கொண்டு போஸ்  கொடுப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

திங்கள், 23 ஜூலை, 2012

நீயா? நானா? பாக்காதீங்க!

     
     "நீயா? நானா?" நிகழ்ச்சி பத்தி   பதிவர் மோகன் குமார் சில குறைகளை தன்னோட பதிவுல சொன்னார். "நீயா நானா" நிகழ்ச்சியை நான் பார்க்க விரும்புவதில்லை". அதற்கு வேறொரு காரணம் உண்டு. என்று பின்னூட்டமிட்டிருந்தேன்.
   அந்தக் காரணம் என்னன்னு  யாரும் கேட்கலன்னாலும் சொல்லலன்னா என் தலை வெடிச்சிடும். (யோவ்!  சொல்லலன்னா உன்  தலை வெடிச்சிடும்.சொன்னா எங்க தலை வெடிச்சுடும்னு நீங்க சொல்லறது எனக்கு கேக்குது)
       நம்ம டிவி  சீரியல் மட்டுமில்ல "நீயா? நானா?" நிகழ்ச்சியும் குடும்பத்தோடு பாக்க முடியாது சார்!
        கோபி நாத் பெருசா பீத்திக்குவாரு. இந்த நிகழ்ச்சி  சமூகத்தில,  குடும்பத்துல நடக்கிற விஷயங்களின் பரிமாணங்களை பதிவு செய்யறோம். இதனால விழிப்புணர்வு ஏற்படும்னு வேற சொல்றாரு.
    அட போங்க  சார்! குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்துதுன்னு அவர்கிட்ட யார் போய் சொல்லறது.? நம்ம மோகன்குமார் தான் சொல்லணும்? (அவரகூட இனிமே கூப்பிடமாட்டாங்க போல இருக்கே.) 

      எந்த நிகழ்ச்சியப் பாத்தாலும் கமென்ட் அடிச்சுக்கிட்டே பாக்குற பழக்க தோஷம் காரணமா, ஒரு நாள் இந்த நிகழ்ச்சியை பாக்கும்போதும்  வாய வெச்சுகிட்டு சும்மா இருக்காம நாம இதுதான் சரி அதுதான் சரின்னு ஏதோ சொல்லப்போக  அது வீட்டம்மாவுக்கு பிடிக்காம கவுன்டர் குடுக்க, வீட்டுல இன்னொரு "நீயா? நானா?" நடக்க, அது சப்ஜெக்டை தாண்டி எங்கயோ போய் பெரிய சண்டையில முடுஞ்சிடுது 

  உதாரணத்துக்கு  ஒண்ணு: ஒரு நிகழ்ச்சியில ஒரு பெண்மணி என் கணவர் ஆபீசுக்கு போனா ஃபோன்  பண்ணவே மாட்டார். நானே பண்ணாலும் ஒன்  வோர்ட் ல ஆன்சர்சொல்லி கட் பண்ணிடுவார்னு சொல்ல, என்னோட கெட்ட நேரம் மனைவியிடம், "பாத்தியா? நான் போன்  பண்றதில்லைன்னு சொல்லுவியே.எத்தனை பேரு என்னை மாதிரி இருக்காங்க பாரு" ன்னு சொல்ல, இன்னொரு பெண் 'அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை எங்க வீட்டுக்காரர் போன் பண்னுவார்னு' சொல்ல அவ்வளவுதான்! அதுக்கு மேல என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லியா  தெரியணும்.
    இன்னொரு நிகழ்ச்சியில மனைவிய எப்படி செல்லமா கூப்பிடுவோம்னு விதவிதமா சொல்ல "நீங்க இப்படி என்ன எப்பாவாவது கூப்பிட்டிருக்கீங்களான்னு  ஆரம்பிச்சு  வாக்குவாதம் வலுத்து பட்டிமன்றம், வழக்காடு மன்றம் ரேஞ்சுல  தொடர டிவி  ப்ரோக்ராம் முடிஞ்சும் நான்  வாங்கி கட்டிக் கிட்டதும் அடுத்த நாள் ஆபீசுக்கு லஞ்ச் குடுக்காம கட் பண்ணதும் என்வாயால எப்படி சொல்லுவேன்?
(லஞ்ச் எடுத்துட்டு போகாம இருந்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு மட்டும் நீங்க நினச்சிடாதீங்க. ஹி..ஹி)

      இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும். இதெல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆறதுக்குள்ள அடுத்த வார ப்ரோக்ராம் வந்துடுது.
  
       ஒவ்வொரு  நிகழ்ச்சியிலும்  இரண்டு   பிரிவா இருக்கிற மாதிரி வீடும் ரெண்டு ஆயிடுது. 

      இப்ப சொல்லுங்க நான்  "நீயா? நானா?" பாக்காம இருக்கிறது நியாயம் தானே?
                   ****************************************************
இதை படிச்சிட்டீங்களா?




சனி, 21 ஜூலை, 2012

கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

     வணக்கம். இந்தியாவின்  தென்பகுதியான தமிழகத்தின்  வசிக்கும் சாதாரண  கிரிக்கெட் ரசிகர்களில் ஓருவனாகிய நான் எழுதும் மடல் .
   கிரிக்கெட்டில் வல்லமையோ புள்ளி விவரங்களில் புலமையோ இல்லாத என்னைப் போன்ற சராசரி ரசிகர்கள்கூட  சமீபத்தில் பத்திரிகையில் படித்த செய்தி கண்டு வேதனை அடைந்தோம்.
    கபில்தேவை பொது மன்னிப்பு கேட்க வைப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களாமே! .மன்னிப்பு கேட்டால் ஒரு கோடி ரூபாய், பென்ஷன், மற்றும் இதர சலுகைகள் கிடைக்குமாம்.
     நன்றாக இருக்கிறது. கபில்தேவுக்கு இழைக்கப்பட்ட அநீதி, புறக்கணிப்பு, அவமதிப்பு  இவற்றிற்கு பி.சி.சி.ஐ அல்லவா அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்?.
     பொதுமன்னிப்பு கோரும் அளவிற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன?
     இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது அந்த மாவீரன்தானே? அவர் உலகக் கோப்பையை வென்று தந்த பிறகுதானே உலகின் கிரிக்கெட் வல்லரசாகத் நாம் திகழ முடிந்தது!.மற்ற நாடுகள் இந்திய கிரிக்கெட்டை எள்ளி நகையாடிய வேளையில் எதிர் பாராத வகையில் உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய கௌரவத்தை பெற்றுத் தந்தது கபில்தேவ்தானே!

    ஆமை வேகத்தில் பந்து  வீசுபவர்களை பார்த்து பழக்கப்பட்ட நாம் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இப்படி நமக்கு கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்  இந்தியத் துணைக் கண்டத்தில் புயலாய் நுழைந்த வேகப் பந்து வீச்சாளரல்லவா அவர்? வேகமாக ஓடி வந்து அழகாக எகிறி குதித்து பந்து வீசி எதிரணியைத் திணறச் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி நினைவில்லாமல் போனது?அவரது பந்து வீச்சு அசைவுக்கு மயங்காதவர்கள்  யாரேனும் உண்டா?
      இந்திய வேகப் பந்து வீச்சும் எதிரணியை மிரளச் செய்யும் என்பதை முதலில் உணர்த்தியவர் அவர்தானே? இன்று வரை அவருக்கு ஈடான வேகப் பந்து வீச்சாளரை உங்களால் உருவாக்க முடியவில்லையே!
      அப்போதெல்லாம் டெஸ்ட் பந்தயங்களில் நமது முன்னணி வீரர்கள்கூட 6ம், 4ம் அடிப்பது அரிதாக அல்லவா இருக்கும்? ஆறாவது விக்கட்டுக்கு மேல் களத்தில்  புயல் போல் நுழைந்து வான வேடிக்கை நிகழ்த்தி ஆறும் நான்கும் அடித்து ரசிகர்களை  பரவசப்படுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை  என்றாலும் கேள்விப் பட்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியாதா என்ன?
      இத்தனைக்கும்  மேலாக 1983 உலகக் கோப்பையில்  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி உறுதி என்ற நிலையில் சூறாவளி ஆட்டம் அடி  175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததை எந்த  கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியுமா? அந்த  ஆட்டம்தானே உலகக் கோப்பையை நம் வசமாக்க வாய்ப்பளித்தது.
   என்றாவது அவர் சுயநலமாக விளையாடி இருக்கிறாரா?சொந்த சாதனைக்காக அணியின் வெற்றியை விட்டுக் கொடுத்திருக்கிறாரா? ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிராறாரா? இருக்கிறவரை தூய்மையாகத்தானே இருந்திருக்கிறார் 
    சாதரண நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர்களும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று இளைஞர்களுக்கு  நம்பிக்கை ஏற்பட்டது இவர் வரவுக்குப் பின்தானே!
     ரிச்சர்ட் ஹார்ட்லி யின் சாதனை முறியடித்தது மட்டுமில்லாமல் 
434 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்தவர்  என்ற சாதனையை நீண்ட  நாட்கள் தக்கவைத்துக் கொண்ட தன்னிகரற்ற ஆட்டக்காரரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா?
 என்றாவது அவருக்கு உரிய மரியாதை அளித்திருக்கிரீர்களா?
   நுனி நாக்கு ஆங்கிலம் பேசி போர்டு உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு வாரியத்தின் ஏதேனும் ஒரு பதவியை பெறத்  தெரியாதவராக இருந்ததும்  அவர் செய்த குற்றமோ?
    அவரது ஒய்வுக்குப் பின் உங்களில் ஒருவருக்குக் கூட அவருடைய திறமையை இந்திய கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பயன்படுத்த தோன்றவில்லையா? என்ன விந்தை இது?

   கிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் எந்த முயற்சியும் செய்யாத நிலையில் கிரிக்கட்டை வளர்க்கவும் புதிய திறமை மிக்க வீரர்களை அடையாளம் காணவும் ICL என்ற அமைப்பை உருவாக்கியதுதானே அவர் மீது நீங்கள் சுமத்தும் குற்றம்?
    பி.சி.சி.ஐ க்குப் போட்டியாக ICL வந்துவிடுமோ என்று எண்ணிதானே அப்போட்டிக்கு தடை விதித்தீர்கள்?.அதில் பங்கேற்றால் தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்காது   என்று வீரர்களை மிரட்டினீர்கள்.  ICL ஐ பார்த்துத்தானே IPL உருவானது?  விளையாட்டை  வியாபாரம் செய்து கோடிகளில் இன்று குளித்துக் கொண்டிருப்பதெல்லாம் அவரது எண்ணத்தின் விளைவுதானே!அந்த நன்றியை கொஞ்சமேனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா?
  
     இது நாள் அவரை ஓரம் கட்டிவிட்டு இன்று மன்னிப்பு கேளுங்கள் பணமும் சலுகைகளும் தருகிறோம் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறீர்களே? இது எதற்காக? உங்கள் வற்புறுத்தலால் அவர் மன்னிப்பு ஏதும் கேட்டுவிடக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.

   உண்மையாகவே அவரது திறமையும் அனுபவமும் இந்தியக் கிரிக்கெட்டுக்குத் தேவை என்று நினைத்தால் நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படி மன்னிப்பு கேட்க மனம்  இல்லை என்றால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் அந்த சாதனை வீரனை வரவேற்று உரிய மரியாதை அளியுங்கள். ரசிகர்களாகிய நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்.

நன்றி !


இப்படிக்கு
              
******************************* 
இதையும் படியுங்க! 

ஞாயிறு, 15 ஜூலை, 2012

காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.

  
    இன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது  ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.

        கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி  கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது  படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு  அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு   காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார்.  இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
 
        மாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.

        தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர்.  படிக்காத மேதை அவரை  இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.
              **********************************
         இன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப்  சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.
    கவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது  கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.  அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்'  என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.

அந்தப் பாடல் வரிகள் 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
வேறு  யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!

      என்ன அருமையான பாடல்! தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே!
     காமராசரின்  தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
          
  பின்னர் காங்கிரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்!.
       ************************************************ 


இதைப்  படித்து விட்டீர்களா?

குதிரை சொல்லும் ஏழாம் வேதம்


      இன்றைய எழுத்தாளர் பலர் மானசீக குருவாக கருதுவது பாலகுமாரன் அவர்களைத்தான். நண்பரும் பதிவருமான 'வீடு திரும்பல் மோகன் குமார்' குமுதத்தில் பாலகுமாரனின் பேட்டி வெளியாகி இருந்தததாகத் தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியைப் படித்தேன்.உடல் நலம் குன்றி உயிர்பிழைத்து எழுந்ததை திறந்த மனதுடன் அழகாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் முற்றிலும் குணமடைய வாசகர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.
        ********************************************************* 
    துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் டீசலை திருட்டுத் தனமாக குறைந்த விலைக்கு விற்பது உண்டு.லாரி டிரைவர்கள் இதை வாங்கிப் பயனபடுத்திக்கொண்டு கணிசமான தொகையை தங்களுக்கு தேற்றிக் கொள்வார்கள். 

      மேலும் டீசல்  டாங்கர் லாரிகளில் டீசலின் அளவை சரிபார்க்க அளவுகோலை பயன்படுத்துவார்கள்.கொஞ்சம் டீசலை எடுத்து விட்டாலும் லாரியை வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் அது விரிவடைந்து முன்பிருந்த அளவையே காட்டும் இதை பயப்படுத்தி இந்த டிரைவர்கள் இந்த டீசலை விற்று காசு பார்ப்பார்கள்.
***************************************************************************************
    இரும்புக் குதிரையின் நாயகன் விஸ்வநாதனிடம் அவன்  மனைவி தாரிணி  இத்தனை விஷம் கூடாது  உங்களுக்கு  என்று  சொன்னதும் அமைதியுடன் எவற்றிற்கெல்லாம் விஷம் உண்டு எவற்றுக்கு கொம்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்குகிறான்.
அதன் விளைவாக எழுந்த கவிதை 

          குதிரை சொல்லும் ஏழாம் வேதம்
           
                    அவல  ஆடுகள் கூட இங்கே
                    கொம்புடன்  ஜனித்ததாக;
                    கீச்சுப்  பூனைகளும் கொண்டதிங்கே
                    கூறிய  நகமும் பல்லும்;
                    யாருக்கும்  தீங்கு செய்யா
                    நத்தைக்கும்  இங்கே கல்லாய் ஓடு;
                    பச்சோந்தி நிறத்தை மாற்றும்;
                    பல்லிவால் விஷத்தை தேக்கும்;
                    குதிரைகள்  மட்டும் இங்கே 
                    கொம்பின்றிப் பிறந்ததேன்?
                    வெறுப்புடன்  பிறந்த மாக்கள் 
                    பயத்தினைத் துணையாய்க் கொள்ள
                    விருப்புடன் பிறந்த குதிரை 
                    கொம்பில்லை விஷமில்லை;
                    தர்மத்தை சொல்ல வந்தோர் 
                    தடியோடா காட்சி தருவர்?
                    குதிரைகள் காதைப் பாரும் 
                    உள்ளங்கை சிவப்பு தோற்கும் 
                    இது குதிரைகள் எனக்கு சொன்ன 
                    வேதத்தின் ஏழாம் பாடம்.

***********************************************************************************

             பாலகுமாரனின் குதிரை வேதம் தொடரும்

வியாழன், 12 ஜூலை, 2012

பேருந்துப் பாவை



                தூரத்தில்
                நகர  இயலாத அளவு 
                கூட்டத்தோடு வரும்
                நகரப் பேருந்தைக்கண்டு 
                உள்ளதை சொன்னார்கள் 
                'இந்த பஸ் 
                ரொம்ப மோசம்'


                எப்படியோ உள்ளே ஏறி 
                உன்னைப்  பார்த்ததும்
                உள்ளத்தைச் சொன்னார்கள்!
                'இந்த பஸ் 
                ரொம்ப வாசம்'


                நீ ஏறியதில்
                பேருந்துக்கும் 
                பேரின்பம் போலும்!.
                மேடு பள்ளங்களில் 
                ஏறி இறங்கி குதித்தாட 
                எங்கள் இதயமும் சேர்ந்தே...


                அண்ணல்கள் அனைவரும் 
                உன்னையே நோக்க 
                நீ யாரை 
                நோக்கப் போகிறாய்?

                உன்  பார்வைக் கதிர்வீச்சால் 
                எந்த இதயத்தை 
                தாக்கப் போகிறாய்?

                உன் சுட்டு விரல் நீட்டி 
                எங்களில்
                ஒருவரைக்  காட்டு!
                உன்னிடம் 

                இதயப் பரிமாற்றம் செய்ய!

                அந்தப்  பேரின்பப் பேரிடரில்
                சிக்கித் தவிக்கப் போகிறவர் 
                யார்?


                அது 
                தெரியும்வரை 
                எங்கள் மாரத்தான் ஒட்டமும்
                படிக்கட்டு சாகசங்களும் 
                தொடரும்.

*********************************************************

சனி, 7 ஜூலை, 2012

குதிரை வேதம் 6- பாலகுமாரன்.

   சென்னை புதுப்பேட்டையில் பழைய வாகனப் பொருட்கள் விற்றல் வாங்கல் பிரசித்தம்.காணாமல் போகும் வாகனங்கள் ரகசியமாக இங்குதான் வந்து சேரும் என்று சொல்கிறார்கள்.வந்ததும் சில நிமிடங்களில் பிரித்து இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்களாம். எப்படிப்பட்ட பழைய*புதிய வாகனங்களுக்கும் இங்கு உதிரி பாகங்கள் கிடைக்கும். உபயோகமற்ற பழைய பொருட்களை பழுது தெரியாமல் மறைத்து விற்று விடுவார்களாம். அது போன்ற செயலால் ஏற்படும் விபத்தை இரும்புக் குதிரைகள் நாவலில் அழகாக சொல்வார் பாலகுமாரன்.லாரி முதலாளிக்குத் தெரியாமல் ஓட்டுனர்கள் இது போன்று செய்வதுண்டு. இது போல பலவேறு நெளிவு சுளிவு தகவல்களை சுவாரசியமாக  பாலகுமாரன் அள்ளித் தெளித்திருப்பார்..
   

              இதோ இன்றைய குதிரை வேதம்.

               நீர் குடிக்கக் குனியும் குதிரை 
               நிழல் தெரியப் பின்னால் போகும் 
               மிரளுவது மிருகம் என்பார் 
               சீர்குணம் அறியமாட்டார்
               வேறொன்று குடிக்கும்போது 
               தான் கலக்கல் கூடாதென்று 
               குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
               மிருகத்தில் குழந்தை ஜாதி 
               கால் வைத்த இடங்களெல்லாம்
               பூ முளைக்கும் இடமென்றெண்ணி
               குளம்பது விளிம்பில் நிற்கும் 
               குதிரையா  மிரளும் மிருகம்?
               குதிரையின் குளம்பைப் பாரும் 
               இடுக்கிலே  ரோமம் சிரிக்கும்
               இது குதிரைகள் எனக்கு சொன்ன 
               வேதத்தின் ஆறாம் பாடம்
*********************************** 

(பால  குமாரனின் கவிதைகள் தொடரும் )

செவ்வாய், 3 ஜூலை, 2012

ஹோட்டலில் வடிவேலு


   வேலை தேடி வடிவேலு பட்ட அவஸ்தையை நீங்க படிச்சிருப்பீங்க.(படிக்காதவங்க இப்ப படிச்சி ஆறுதல் சொல்லலாம்..  
வேலை தேடும் வடிவேலு - பகுதி 1  
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை 
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 )
   அதனால நொந்து போன வடிவேலு கொஞ்ச நாள் வெளியில தல காட்டாம இருந்தார்.வீட்டுக்குள்ளயே எவ்வளவு  நாள் இருக்கிறதுன்னு எங்கயாவது போய்விட்டு  வரலாம் என்று நினைத்து மனம் போன போக்கில் ஒரு பஸ்சில் ஏறி சுற்றிக்கொண்டிருந்தார். மதிய நேரம் பசி எடுக்க ஆரம்பித்தது. எங்காவது ஹோட்டல் இருக்கிறதா என்று பார்க்க அருகே ஒரு ஹோட்டல் ஒன்று கண்ணில் பட்டது. கையில் காசு இருக்கிறதா என்று பார்த்தார். நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லரைகளும் இருந்தது. பரவாயில்ல சமாளிச்சுக்கலாம். என்று ஹோட்டல் வாசலை  அடைந்த வடிவேலுவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. வாசலில் வைத்திருந்த போர்டுதான்.

   நீங்கள் சாப்பிடுவதற்கு பில் தொகை கொடுக்க வேண்டாம். உங்கள் பேரனிடம் வாங்கிக் கொள்வோம். வருக!வருக!
  ஒரு நிமிடம் நின்று போர்டைப் பார்த்தவர் ஆச்சர்யம் அடைந்தார். வடிவேலுவால் அதை நம்ப முடியவில்லை. அங்கு வேலை செய்யும் ஒருவன் வெளியே வந்தான். அவனிடம் விசாரித்தார்.
"ஏம்பா போர்டில போட்டிருக்கறது. உண்மையா?"
"ஆமா சார், உண்மைதான் உள்ள வாங்க!" 
  "எதுக்கும்  கல்லால ஒக்காந்திருக்கறவர கேட்டுடுவோம்." என்று போக முற்பட்டபோது
"சார்  நீங்க தான் முதலாளியா?ஆமாம் சாப்பிடறதுக்கு பணம் குடுக்க வேணாம்.உங்க பேரன் கிட்ட வாங்கிக்கவோம்னு போட்டிருக்கீங்களே நம்பலாமா?"
"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க.நீங்க சாப்பிட்டதுக்கு உங்க பேரன் கிட்டதான் பிற்காலத்தில வாங்கிக்குவோம்.உள்ளே வாங்க "
   "என் பேரனை எப்படி கண்டுபிடிப்பீங்க."
  "உங்களை போட்டோ எடுத்து வச்சிக்குவோம்.அதை வச்சு உங்க பேரனை அடையாளம் கண்டுபிடிச்சிடுவோம்".
  "ஒ! டெக்னாலாஜி அவ்வளோ இம்ப்ரூவ் ஆயிடிச்சா! சார் எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க!"
  "நீங்க சாப்பிடறதுக்கு உங்ககிட்ட பணம் வாங்க மாட்டோம்.உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்" என்று சொல்ல வடிவேலு தன் செல்ஃபோனை எடுத்து அவர் சொன்னதை ரெகார்ட் செய்து கொண்டார்.
  "பாவம் இவ்வளோ அப்பாவியா இருக்காங்களே என் பேரன் கிட்ட எப்படி வாங்க முடியும்.என் பேரன் இந்த கடைக்கு வருவான்னு எப்படி சொல்ல முடியும்?"

  "சார்!உங்க மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப நல்லவராத் தெரியுது. உங்க வாரிசுகளும் அப்படித்தான் இருப்பாங்க . நீங்க பட்ட கடனை நிச்சயமா.அவங்க அடைப்பாங்க! அது மட்டுமில்ல இவங்க ஏன் இப்படி ஹோட்டல  நடத்தணும்னு நீங்க நினைக்கறது எனக்கு தெரியுது.எங்க தாத்தாவோட ஆசை இது. அவர் ஆரம்பிச்ச பழக்கமிது. அதை அதை எங்கப்பா நான் தொடர்ந்துகிட்டு இருக்கோம்."
  "வித்தியாசமா ஹோட்டலை நடத்துறீங்க.

  "அண்ணே! கொஞ்சம் நில்லுங்கன்னே,உங்க கிட்ட விஷயம் சொல்லனும்"
  வடிவேலுவின்  நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

  "அடடா!இவனுங்க எங்க வந்தானுங்க. எப்படித்தான் மூக்கில வேர்க்குதோ தெரியலயே."
   "நீங்க  ஒன்னும் சொல்ல வேணாம் என் பொழைப்ப கெடுக்கறதே உங்களோட வேலையாப் போச்சு. மரியாதையா போயிடுங்க.
   "அவங்கள உள்ள விடாத துரத்தி விடுங்க?"

    வடிவேலு உள்ள போய் உட்கார்ந்தார்.

  "சார் ஏசி யில ஒட்காருங்க " என்று அழைத்துச் சென்றனர்.

  "சரி நாமளா காசு கொடுக்கப்போறோம்." என்னப்பா இருக்கு?

  "என்ன வேணுமோ கேளுங்க சார். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம்."

  "அப்படியா! ரொம்ப சந்தோஷம். மொதல்ல நாலு இட்லி கொண்டுவா."
  "அப்புறம் சார்!"

  "சோலா பூரி ரெண்டு., கீ ரோஸ்ட், பரோட்டா, அடுத்து கொண்டுவா!
அனைத்தும்  சாப்பிட்டு முடிக்க 
  "வேற என்ன வேணும் சார்?"
  "அட அட இவங்க அன்புத் தொல்ல தாங்க முடியலையே. இந்த  ஹோட்டல்ல என்ன ஸ்பெஷல்?"
  "அடை அவியல், இடியாப்பம் குருமா ........."இன்னும் சொல்லிக்கொண்டே போக,

  "சரி! சரி! எல்லாத்திலயும் ஒரு செட் கொண்டு வா! அப்புறம் ஐஸ் கிரீம் ஜூஸ் காப்பி மறக்காம எடுத்துட்டு வா!"

அனைத்தையும் முடித்துவிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே கிளம்பினார்.
"சார், இந்தாங்க பில் 3000 ரூபா எடுங்க."
"யோவ். என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு. நான் பல தடவை கேட்டுட்டுதானே  சாப்பிட வந்தேன். நான் சாப்பிடறதுக்கு பில் கட்டத் தேவையில்லைன்னு நீங்க சொன்னத நான் ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன். என் பேரன் கிட்டதான் வாங்கிக்கணும் என்ன ஏமாத்த முடியாது."
"சார் அவசரப் படாதே  இந்த பில் நீங்க சாப்பிட்டதுக்கு இல்ல உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு."
 "என்னது எங்க தாத்தா சாப்பிட்டதுக்கா?படு பாவிங்களா அதை ஏண்டா முதல்லயே சொல்லல. இப்படி ஒரு உள்குத்து இருக்கும்னு தெரியாம போச்சே.! ஏன்யா  தெரியாமத்தான் கேக்கறேன்! அந்த காலத்திலேயேவா எங்க தத்தா 3000 ரூபாய்க்கு சாப்பிட்டார்?.எங்கிட்ட பணம் இல்லை."
  "நீயே இத்தனை ஐட்டம் தின்னயே. அந்த காலத்து ஆளு உங்க தாத்தா எவ்வளோ சாப்பிட்டிருப்பார். மோதிரம் போட்டிருக்க இல்ல அத கழட்டிக்குடு. உன் மோதிரத்த பாத்துட்டுதான் உன்ன சாப்பிட உள்ளே விட்டோம். உம் சீக்கிரம்."
   "மோதிரம் இல்லன்ன என்ன செய்வீங்க?"
  " உன்ன உங்க தாத்தா இருக்கிற இடத்துக்கே அனுப்பிடுவோம்"
 மோதிரத்தை உருவிக்கொண்டு வடிவேலுவை வெளியே தள்ளினர் 
"ஐயோ! நம்ம பசங்க அப்பவே இதைத்தான் சொல்ல வந்தாங்களோ. அதையும் கேக்காம அவங்களை துரத்திட்டேனே. சரி!சரி  உசுருக்கு சேதாரம் இல்லாம தப்பிச்சமே அது போறும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

***************************************************************************