என்னை கவனிப்பவர்கள்

நீயா நானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீயா நானா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜூலை, 2012

நீயா? நானா? பாக்காதீங்க!

     
     "நீயா? நானா?" நிகழ்ச்சி பத்தி   பதிவர் மோகன் குமார் சில குறைகளை தன்னோட பதிவுல சொன்னார். "நீயா நானா" நிகழ்ச்சியை நான் பார்க்க விரும்புவதில்லை". அதற்கு வேறொரு காரணம் உண்டு. என்று பின்னூட்டமிட்டிருந்தேன்.
   அந்தக் காரணம் என்னன்னு  யாரும் கேட்கலன்னாலும் சொல்லலன்னா என் தலை வெடிச்சிடும். (யோவ்!  சொல்லலன்னா உன்  தலை வெடிச்சிடும்.சொன்னா எங்க தலை வெடிச்சுடும்னு நீங்க சொல்லறது எனக்கு கேக்குது)
       நம்ம டிவி  சீரியல் மட்டுமில்ல "நீயா? நானா?" நிகழ்ச்சியும் குடும்பத்தோடு பாக்க முடியாது சார்!
        கோபி நாத் பெருசா பீத்திக்குவாரு. இந்த நிகழ்ச்சி  சமூகத்தில,  குடும்பத்துல நடக்கிற விஷயங்களின் பரிமாணங்களை பதிவு செய்யறோம். இதனால விழிப்புணர்வு ஏற்படும்னு வேற சொல்றாரு.
    அட போங்க  சார்! குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்துதுன்னு அவர்கிட்ட யார் போய் சொல்லறது.? நம்ம மோகன்குமார் தான் சொல்லணும்? (அவரகூட இனிமே கூப்பிடமாட்டாங்க போல இருக்கே.) 

      எந்த நிகழ்ச்சியப் பாத்தாலும் கமென்ட் அடிச்சுக்கிட்டே பாக்குற பழக்க தோஷம் காரணமா, ஒரு நாள் இந்த நிகழ்ச்சியை பாக்கும்போதும்  வாய வெச்சுகிட்டு சும்மா இருக்காம நாம இதுதான் சரி அதுதான் சரின்னு ஏதோ சொல்லப்போக  அது வீட்டம்மாவுக்கு பிடிக்காம கவுன்டர் குடுக்க, வீட்டுல இன்னொரு "நீயா? நானா?" நடக்க, அது சப்ஜெக்டை தாண்டி எங்கயோ போய் பெரிய சண்டையில முடுஞ்சிடுது 

  உதாரணத்துக்கு  ஒண்ணு: ஒரு நிகழ்ச்சியில ஒரு பெண்மணி என் கணவர் ஆபீசுக்கு போனா ஃபோன்  பண்ணவே மாட்டார். நானே பண்ணாலும் ஒன்  வோர்ட் ல ஆன்சர்சொல்லி கட் பண்ணிடுவார்னு சொல்ல, என்னோட கெட்ட நேரம் மனைவியிடம், "பாத்தியா? நான் போன்  பண்றதில்லைன்னு சொல்லுவியே.எத்தனை பேரு என்னை மாதிரி இருக்காங்க பாரு" ன்னு சொல்ல, இன்னொரு பெண் 'அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை எங்க வீட்டுக்காரர் போன் பண்னுவார்னு' சொல்ல அவ்வளவுதான்! அதுக்கு மேல என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லியா  தெரியணும்.
    இன்னொரு நிகழ்ச்சியில மனைவிய எப்படி செல்லமா கூப்பிடுவோம்னு விதவிதமா சொல்ல "நீங்க இப்படி என்ன எப்பாவாவது கூப்பிட்டிருக்கீங்களான்னு  ஆரம்பிச்சு  வாக்குவாதம் வலுத்து பட்டிமன்றம், வழக்காடு மன்றம் ரேஞ்சுல  தொடர டிவி  ப்ரோக்ராம் முடிஞ்சும் நான்  வாங்கி கட்டிக் கிட்டதும் அடுத்த நாள் ஆபீசுக்கு லஞ்ச் குடுக்காம கட் பண்ணதும் என்வாயால எப்படி சொல்லுவேன்?
(லஞ்ச் எடுத்துட்டு போகாம இருந்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு மட்டும் நீங்க நினச்சிடாதீங்க. ஹி..ஹி)

      இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும். இதெல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆறதுக்குள்ள அடுத்த வார ப்ரோக்ராம் வந்துடுது.
  
       ஒவ்வொரு  நிகழ்ச்சியிலும்  இரண்டு   பிரிவா இருக்கிற மாதிரி வீடும் ரெண்டு ஆயிடுது. 

      இப்ப சொல்லுங்க நான்  "நீயா? நானா?" பாக்காம இருக்கிறது நியாயம் தானே?
                   ****************************************************
இதை படிச்சிட்டீங்களா?