என்னை கவனிப்பவர்கள்

சனி, 6 அக்டோபர், 2012

இளையராஜா செய்தது சரியா?

    தமிழ்த் திரை இசை ரசிகர்களின் மனதில் ராஜ சிம்மாசனம் போட்டு இன்றும் அமர்ந்திருப்பவர்; மௌனத்தையும் இசையாக மொழி பெயர்த்தவர்; முதன் முதலில் தமிழ் திரை இசைக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர்;   வேறு யார்? அது இளையராஜாதான். அவர் வாசகர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு குமுதத்தில் பதிலளிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

   அவருடைய கால கட்டத்தில் இளையராஜா ஒரு புதிராகவே இருந்தார். யாரிடமும் இணக்கம்  காட்டாது இருந்தார்.பலபேர் அவரிடமிருந்து விலகுவதற்கு இது காரணமானது. முதலில் வைரமுத்துவை விட்டுப் பிரிந்தபோது ரசிகர்கள் வருந்தினாலும் வைரமுத்துவைப் பிடித்தவர்கள் கூட இளையராஜாவின் பக்கமே இருந்தனர். எனினெனில் அவருடைய இசையின் ஆளுமை அப்படிப்பட்டது.
   பாரதிராஜா,மணிரத்தினம் என்ற புகழ் பெற்ற இயக்குனர்கள் ராஜாவை தவிர்த்த போது இசை ரசிகர்கள் மனதிற்குள் வருத்தமடைந்தனர்.இவர் ஏன் எல்லோரிடமும் கருத்து வேற்றுமையை வளர்த்துக் கொள்கிறார் என்ற எண்ணம் தோன்றினாலும் ராஜாவை விட்டுக்  கொடுக்க யாருக்கும் மனம் வரவில்லை. யாருக்காகவும் அவர் பணிந்து போனதில்லை.போலி புகழ்ச்சி வார்த்தைகளை பேசுவதில்லை. புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சாதாரணமானவர்களாக  இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்திய பிடிவாதம் அவர்கள் ராஜாவிடமிருந்து விலக காரணமாக இருந்திருக்கலாம். எந்த விதமான ஐயங்களுக்கும் ஊகங்களுக்கும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்த இளைய ராஜா இப்போது மனம் திறந்து பேச ஆரம்பித்திருப்பது குமுதம் இளையராஜா பதில்கள் மூலம் தெரிய வருகிறது.
   10.10.2012 இதழ் குமுதத்தில்  ஒரு வாசகர் புதுப்புது அர்த்தங்கள் படத்திற்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு நீங்கள் ஏன் இசை அமைக்கவில்லை? என்று கேட்டிருந்தார்.
   இப்படத்திற்கான ரீரெக்கார்டிங் நடை பெற வேண்டிய நேரத்தில் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருந்ததால் இளையராஜா சிவா படத்திற்காக மும்பை சென்று விட்டாராம்.அந்த நேரத்தில் கவிதாலயா நிர்வாகிகள் படம் ரிலீசாக நாள் நிர்ணயித்து விட்டதால் நீங்கள் பாம்பேயில் இருந்து வர முடியாது என்பதால் ரீகார்டிங்குக்கு ட்ராக் எடுத்து போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லலி இருக்கிறார்கள்.அதில் இளையராஜாவிற்கு வருத்தம் ஏற்பட்டு "உங்களுக்கு டைட்டிலில் இளையராஜா என்ற பெயர்தான் தேவை என் இசை உங்களுக்கு தேவை இல்லை என்று இதிலிருந்து தெரிகிறது.என்னோட பெயரை வியாபாரத்திற்கு பயன்படுத்தப் போறீங்க.இதுக்கு டைரக்டரும் உடந்தையா இருக்காரு இல்ல.நீங்க பண்ணறத பண்ணிக்கோங்க" என்று சொல்லிவிட்டார்
    இதன் காரணமாக ரஜினியின் படம்  ஒன்றை கவிதாலயா எடுத்தபோது ரஜினியே நேரில் வந்து கேட்டும் இளைய ராஜா இசை அமைக்க மறுத்ததையும்  சொல்லி இருக்கிறார் இளையராஜா.
    இளையராஜாவின் வருத்தம் என்னவெனில் பாலச்சந்தர் தன்னிடம் நேரில் பேசி இருக்கலாம். அல்லது நேரில் வந்த ரஜினி நிலையை எடுத்து சொல்லி பாலசந்தரை பேசச் சொல்லி இருக்கலாம் என்பதே. இதுவே இவர்கள் பிரிவுக்கு காரணம்.
  இளையராஜா சொல்வது ஓரளவிற்கு உண்மையாகவே படுகிறது. பாலசந்தர் எப்போதுமே ஒரு திறமையான வியாபாரி பிறருடைய புகழை பயன் படுத்தி பணம் பண்ணுவதில் வல்லவர்.ரஜினியை கூட பெரும்பாலும் தான் தயாரிக்கும் படங்களுக்குத்தான்  பயன்படுத்திக் கொண்டாரே தவிர தன் இயக்கத்தில் பயன் படுத்தவில்லை. ரஜினி தன்னுடைய படங்களுக்கு ஏற்றவர்  இல்லை என்ற எண்ணம் அவருக்கு  இருப்பதாகவே படுகிறது. ஆனால் ரஜினி அதை பெரிது படுத்தவில்லை. அவர் எடுக்கும் படங்களில் நடித்துக் கொடுத்தார். அதுவரை எம்.எஸ்.வி யை மட்டும் பயன் படுத்தி வந்த பாலச்சந்தர் புகழின் உச்சியில் இருந்த இளையராஜாவை சிந்து பைரவி படத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். இந்த வெற்றிக் கூட்டணி சிறிது காலம் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரஜினியைப் போலல்லாமல் இளையயராஜா பாலச்சந்தருடன் கருத்து வேற்றுமை கொண்டார்.

    இளையராஜாவும்  இந்த விஷயத்தை பெரிது படுத்தி இருக்கவேண்டாம், ரஜினி வந்து கேட்டும் இசை அமைக்க ஏற்றுகொள்ளாது பிடிவாதம் பிடித்திருக்க வேண்டியதில்லை.. இந்த விஷயத்தில் தன் குருநாதருக்காக தூது வந்த ரஜினியின் நிலையே இக்கட்டானது.

  இன்னும் பல சந்தேகங்களுக்கு இளையராஜாவின் பதில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.


      **************************
    பல நாட்கள் எனக்கு மட்டும்  ஒரு விஷயம் தெரியாமல் இருந்தது. மணிரத்தினம் இயக்கத்தில் தளபதி படத்தில் "புத்தம் புது பூ பூத்ததோ" என்ற ஒரு பாடல் உண்டாம்(எனக்கு ஆடியோ CD கேட்டுப் பழக்கமில்லை.)அது திரைப்படத்தில் இடம் பெறவில்லை. சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியில் இந்தப் பாடலை ஒருவர் பாடியபோதுதான் தெரிந்து கொண்டேன். முதல் முறை கேட்கும்போதே அதன் மெட்டும் இசையும் ஏசுதாஸின் இனிமையான குரலும் என்னைக் கவர்ந்துவிட்டது. ஆரம்ப ஆலாபனை இருக்கிறது பாருங்கள் அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது.இவ்வளவு இனிமையான மயக்கும் பாடலை மணிரத்தினம் ஏன் கட் செய்து விட்டார் என்று புரியவில்லை.இந்த விஷயத்தில் மணிக்கும் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இருவர் பிரிவுக்கும் காரணமாக அமைந்ததாகச் சொல்கிறார்கள். ஏ.ஆர.ரகுமான் என்ற புயல்  வீச அடிப்படையாக இதுதான் அமைந்ததோ?

  இதோ "புத்தம்புது பூ பூத்ததோ" பாடலை கேளுங்கள்.கேட்டவர் மீண்டும் ஒரு முறை தாராளமாகக் கேட்கலாம். கேட்காதவர் முதல் முறையாகக் கேளுங்கள்.


****************************************************************************************************************

இதையும் படித்தீர்களா?
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீனங்கள்- குறைகள்

*********************

53 கருத்துகள்:

  1. சார் கொஞ்சம் காண்ட்ரவர்சியா ஒரு பதிவு எழுதிருக்கீங்க. ஆச்சரியமா இருக்கு !

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    எங்கென்னவோ இளைய ராஜாவின் நிலை
    சரியெனத்தான் படுகிறது
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இணை இல்லாத ராஜா
    இளைய ராஜா தான்
    இனமோ,பணமோ,மனமோ காரனமாக இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. இளையராஜாவின் நிலை சரி என்றே தோன்றுகின்றது

    பதிலளிநீக்கு
  5. முரளி,

    ராஜாதி ராஜா என்ற ராஜ குடும்ப தயாரிப்பு படத்திலும் " என் நெஞ்சத்தொட்டு சொல்லு என் மாமா என் மேல் ஆசையில்லையா...என்ற பாடலும் நீளம் கருதி நீக்கப்பட்டது.

    அது போல் தான் தளபதி பாடலும்.

    ராஜா, பி.சி.ஶ்ரீராம் இல்லாமல் மணிரத்னம் இல்லைனு கிளம்பிய பேச்சினால் பிரிந்தார்கள் என ஒரு செய்தி.

    ரெஹ்மானை ,வைரமுத்து தான் அறிமுகம் செய்து வைத்தாரம், சின்ன சின்ன ஆசை பாடல் தூர்தர்ஷனில் ,ரெஹ்மான் இசையில் முன்னரே வந்த ஒன்று,அந்த பழக்கத்தில் செய்திருக்கிறார்.

    மணிரத்னம் ,ராஜா பிரிவின் பின்னால் வைரமுத்து -ராரா பிரிவின் அரசியலும் இருக்கலாம் என்பது எனது அவதானிப்பு!

    பதிலளிநீக்கு
  6. மேலும் ரோஜா , பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பு ,ஏற்கனவே ராஜாவுக்கு ஆகாது என்பதும் சேர்ந்து , மணி-ரெஹ்மான் காம்பினேஷன் உருவாகி நிலைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. திறமையான படைப்பாளிகளுக்கே உள்ள கர்வம் ராஜாவுக்கும்!இருக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  8. "புத்தம்புது பூ பூத்ததோ"

    மிக அருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. கே.பாலசந்தர் வி.குமாரை, எம்.எஸ்.வியை, விஜயபாஸ்கரை, வி.எஸ். நரசிம்மனைக் கைவிட்டது சரியென்றால், இளையராஜா அவரைக் கைவிட்டதும் சரிதானே நண்பரே? :-)

    பதிலளிநீக்கு
  10. இனிமையான பாடல்...

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்....

    நன்றி....

    பதிலளிநீக்கு
  11. //இளையராஜா இதைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது//

    என்னுடைய நிலையும் இதுதான்.

    பதிலளிநீக்கு
  12. மோகன் குமார் said...
    சார் கொஞ்சம் காண்ட்ரவர்சியா ஒரு பதிவு எழுதிருக்கீங்க. ஆச்சரியமா இருக்கு //
    ஐயய்யோ அப்படியா இருக்கு?

    பதிலளிநீக்கு
  13. //Ramani said...
    அருமையான பாடல்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    எங்கென்னவோ இளைய ராஜாவின் நிலை
    சரியெனத்தான் படுகிறது
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//
    நன்றி ரமணி சார்!

    பதிலளிநீக்கு
  14. //கவியாழி கண்ணதாசன் said...
    இணை இல்லாத ராஜா
    இளைய ராஜா தான்
    இனமோ,பணமோ,மனமோ காரனமாக இருக்கலாம்//
    நன்றி கண்ணதாசன் சார்!

    பதிலளிநீக்கு
  15. கரந்தை ஜெயக்குமார் said...
    இளையராஜாவின் நிலை சரி என்றே தோன்றுகின்றது//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயகுமார் சார்!

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வவ்வால் சார்!

    பதிலளிநீக்கு
  17. //Sasi Kala said...
    ஆமா நல்லாதான இருக்கு பாடல்.//
    நன்றி சசிகலா!

    பதிலளிநீக்கு
  18. //குட்டன் said...
    திறமையான படைப்பாளிகளுக்கே உள்ள கர்வம் ராஜாவுக்கும்!இருக்க வேண்டியதுதான்//
    நன்றி குட்டன்.

    பதிலளிநீக்கு
  19. சேட்டைக்காரன் said...
    கே.பாலசந்தர் வி.குமாரை, எம்.எஸ்.வியை, விஜயபாஸ்கரை, வி.எஸ். நரசிம்மனைக் கைவிட்டது சரியென்றால், இளையராஜா அவரைக் கைவிட்டதும் சரிதானே நண்பரே? :-)//
    தங்கள் கருத்துக்கு நன்றி செட்டைக்காரன் சார்

    பதிலளிநீக்கு
  20. திண்டுக்கல் தனபாலன் said...
    இனிமையான பாடல்...
    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்....
    நன்றி....//
    நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  21. அறுவை மருத்துவன் said...
    //இளையராஜா இதைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது//
    என்னுடைய நிலையும் இதுதான்.//
    நன்றி அறுவை மருத்துவன்.

    பதிலளிநீக்கு
  22. இராஜராஜேஸ்வரி said...
    "புத்தம்புது பூ பூத்ததோ"
    மிக அருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு
  23. சமீப காலமாகக் குமுதம் பார்ப்பதில்லை என்பதால் அருமையான இந்த பகுதியை மிஸ் செய்கிறேன் போலும். எந்த இதழிலிருந்து இளையராஜா பதில்கள் தொடங்கியிருக்கிறது? இளையராஜா-வைரமுத்துக் கூட்டணி பிரிந்தது என் போன்ற பல ரசிகர்களுக்கு மிக மிக வருத்தம்தான். மற்றபடி ஆரம்பப் பாராக்களில் நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் ஆமோதிக்கத் தக்கதே.

    பதிலளிநீக்கு
  24. i am a biggest fan of Raja. but, Rajas as a musician is far bigger and magnificent than Raja as a human being. he seems to be filled with ego.

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம். said...
    சமீப காலமாகக் குமுதம் பார்ப்பதில்லை என்பதால் அருமையான இந்த பகுதியை மிஸ் செய்கிறேன் போலும். எந்த இதழிலிருந்து இளையராஜா பதில்கள் தொடங்கியிருக்கிறது? இளையராஜா-வைரமுத்துக் கூட்டணி பிரிந்தது என் போன்ற பல ரசிகர்களுக்கு மிக மிக வருத்தம்தான். மற்றபடி ஆரம்பப் பாராக்களில் நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் ஆமோதிக்கத் தக்கதே.//
    நானும் எதேச்சையாகத்தான் பார்த்தேன் நான்கைந்து வாரங்களாக வருகிறது. என்று நினைக்கிறேன்.
    வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  26. SurveySan said...
    i am a biggest fan of Raja. but, Rajas as a musician is far bigger and magnificent than Raja as a human being. he seems to be filled with ego.//
    You are right San.Thank you for your visit

    பதிலளிநீக்கு
  27. தொழிற்களம் குழு said...
    நல்ல பகிர்வு,,
    தொடருங்கள்!!//
    தொழிற்களம் குழுவினருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. //சின்ன சின்ன ஆசை பாடல் தூர்தர்ஷனில், ரெஹ்மான் இசையில் முன்னரே வந்த ஒன்று//
    தூர்தர்ஷனில் வந்த இந்த பாடலுக்கு இசையமைததவர் மெல்லிசைமன்னர். ஒரு பொங்கல் அன்று சிறப்பு நிகழ்ச்சியாக இது அமைந்தது. பாடியவர் சித்ரா. மெல்லிசை மன்னரின் நிகழ்ச்சி என்பதால் ஆர்வமாகப் பார்த்த ஞாபகம் இன்னமும் இருக்கிறது. பாடலைப் பாடும் முன் சித்ராவிற்குத் தன் குரலால் அவர் பானியில் பாடிக் காட்டியது இன்னமும் நினைவில் இருக்கிறது. [அந்த இசைக் குழுவில் ரஹ்மான் இருந்திருக்கலாம்.] ரஹ்மான் வந்த புதிதில் (அப்பொழுது தில்லியில் இருந்ததால்) இந்த பாட்டைக் கேட்கும் முன், என் நண்பர் ஒருவர் இந்தப் பாட்டை சிலாகித்த பொழுது நான் 80 களின் மத்தியில் வைரமுத்துவின் இந்தப் பாடல் வந்ததைக் கூறினேன்.

    ரஹ்மான் இந்தப் பாடலுக்கு முற்றிலும் வேறு பரிணாமத்தில் இசைக் கோர்த்திருந்தார்.

    முரளி,
    புத்தம் புது பூ பூத்ததோ ஒலிப் பேழைகளில் (Cassettes) இருந்தது. எங்களிடம் குணா, தளபதி சேர்ந்த பேழை இருந்து தேய்ந்து அறுந்தது நினைவுக்கு வருகிறது.

    நினைவூட்டியமைக்கு நன்றிகள்.


    பதிலளிநீக்கு
  29. இளையராஜா....இசை ராஜா, கேட்டிராத பாடல் ,பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சார்.இளையராஜா மணிரதணம் கருத்து வேறுபாட்டிற்கு காரணமான பாடல் என்று சொல்கிறீர்கள்....

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. இளையராஜா அவர்களின் பெயரை சொல்கிறபோதே மனம் இனிக்கிறதே/

    பதிலளிநீக்கு
  32. இளையராஜா காணாமல் போனதற்கு உள்ள பல காரணங்களில் இதுவும் ஒன்று. கே பாலச்சந்தரின் சிவா என்கிற படத்திற்கு இளையாராஜா போட்ட பாடல்தான் மீனம்மா என்ற பாடல் எனவும், பாடல் நன்றாக இருந்தததால் அதை தன் சொந்த தயாரிப்பில் எடுத்த ராஜாதி ராஜா என்ற படத்திற்காக பயன்படுத்திக்கொண்டார் இளையராஜா என்பதால் பாலச்சந்தருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு உண்டானதாக ஒரு வதந்தி பரவியது.உண்மையாக கூட இருக்கலாம். இளையராஜா அப்போது ஆடிய ஆட்டம் தாங்காமல்தான் பல தயாரிப்பாளர்கள் அவரை விட்டு ஓடினார்கள். என் இசைக்கு கவிஞர்கள் தேவை இல்லை என்று கர்வமாக கூறி வைரமுத்துவை கழற்றி விட்டார் இளயராஜா. பின்னர் பாட்டு கேட்டு வந்த தயாரிப்பாளர்களிடம் தன் படத்தையும் பட போஸ்டரில் போடும் படி நிர்பந்தம் செய்தார். அதன் பின் பாடலுக்கென ஒரே ஒரு மெட்டை மட்டுமே போட்டு விட்டு அவ்வளவுதான் இதுதான் பாட்டு என்று கறாராக பேசி தன் சரக்கை வியாபாரம் செய்தவர் இந்த இளையராஜா. இப்படி அவர் செய்த லீலைகள் வெள்ளம் போல ஏறிக்கொண்டே போன சமயத்தில்தான் ரகுமான் உள்ளே வந்தார். இதை கண்டதும் பல இளையராஜா அபிமானிகள் கோபம் கொண்டு வசை பாட வரிசை கட்டி வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு நாள் ஆனபின்பும் அவரது கர்வம் குறையவில்லை என்பதற்கு அவர் குமுதம் வாசகர்களுக்குத்தரும் பதில்கள் சாட்சி.கேட்கிற கேள்விகளை மதித்து அவர் பதில் அளிப்பதே இல்லை.

      நீக்கு
  33. விஜயன் said...
    இளையராஜா....இசை ராஜா, கேட்டிராத பாடல் ,பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சார்.இளையராஜா மணிரதணம் கருத்து வேறுபாட்டிற்கு காரணமான பாடல் என்று சொல்கிறீர்கள்....//
    நன்றி விஜயன்.

    பதிலளிநீக்கு
  34. விமலன் said...
    இளையராஜா அவர்களின் பெயரை சொல்கிறபோதே மனம் இனிக்கிறதே//
    வருகைக்கு நன்றி விமலன் சார்!

    பதிலளிநீக்கு
  35. வெற்றிகரமாக இயங்கிய கூட்டணிகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுவதில் முதல் இழப்பு ரசிகர்களுக்கே.

    பகிர்ந்த பாடல் சிறந்த ஒன்று.

    பதிலளிநீக்கு
  36. பாடல் காற்றில் மிதந்து இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறதது. ரசித்ததை ரசிக்க செய்த பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  37. ராமலக்ஷ்மி said...
    வெற்றிகரமாக இயங்கிய கூட்டணிகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுவதில் முதல் இழப்பு ரசிகர்களுக்கே.
    பகிர்ந்த பாடல் சிறந்த ஒன்று.//
    நன்றி ராமலக்ஷ்மி மேடம்.

    பதிலளிநீக்கு
  38. உஷா அன்பரசு said...
    பாடல் காற்றில் மிதந்து இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறதது. ரசித்ததை ரசிக்க செய்த பதிவிற்கு நன்றி!//
    முதல் வருகைக்கு நன்றி உஷா!

    பதிலளிநீக்கு
  39. புத்தம் புது பூ பூத்ததோ"....அருமையான பாடலை பதிவிட்ட உமக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  40. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

      நீக்கு
  41. இளையராஜா அவருடைய திறமையை வெளிக்கொண்டுவந்து பெரியாளானதும் (எம்பது களில்), அவரு கொஞ்சம் "தாந்தான் பெரியவர்" என்கிற எண்ணத்தோடதான் நடந்துகொண்டார். அவருக்கு இங்கிதம் எல்லாம் ஒண்ணும் தெரியாது. அதனால இவர் கே பி, மற்றும் பலரையும் காயப்படுத்தியிருக்கலாம்தான்.

    கே பி இவர் இல்லாமல் நெறையா படங்கள் இயக்கி வெளியிட்டு இருக்காரு.. இவரு இடையில் வந்தவர்தான்.. இவரோட பிரச்சினை வந்ததும் புதுமுகத்தைத் தேடிப் போயிட்டார்.

    இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. அதன் விளைவால் இளையராஜா மங்கும் காலம் வந்துருச்சு.. அதனால் கே பி, மணியை எல்லாம் திட்டுவது சிறுபிள்ளைத்தனம்.

    கலைஞர்கள் சண்டை போடுவது, ஈகோ க்ளாஷ் வருவதெல்லாம் இயற்கைங்க. ஒற்றுமையா இருப்பதுபோல் நடிப்பது, கட்டி அழுவதுதான் நடிப்பு..

    IR chose his path. He is the one who is responsible for his actions and consequences. Blaming KB, MR and VM for whatever happened in nineties is ridiculous. Nobody can be in the top for ever. IR is not an exception to that.

    பதிலளிநீக்கு
  42. புத்தம் புது பாடல் படத்தில் வரும் சிச்சுவேசன் என்னவன்றால் அது பானுப்பிரியாவிற்கும் - ரஜினிக்கும் வரும் பாடல், கதைப்படி ரஜினியை 2வதாக தான் பானுப்பிரியா மணப்பார், அப்போது வரும் பாடல் கதைக்கு அவசியமில்லாததால் மனிரத்னம் கட் பண்ணியிருக்காலம், ரஜினி - பானுப்பிரியா திருமணம் முடிந்தவுடன் அடுத்த சீனில் வரும் BGM கேளுங்கள் இந்த மியுசிக் வரும்,

    பதிலளிநீக்கு
  43. தளபதி படத்தில் வராவிட்டால் என்ன ?

    பிதாமகன் படத்தின் முதல் பாடலாக இதே மெட்டில் " பிறையே பிறையே " என்று போட்டு நெகிழ வைத்திருப்பார்.

    சட்டநாதன்

    பதிலளிநீக்கு
  44. புத்தம்புது போ பூத்ததோ பாடல் ஏனோ பிதாமகன் படத்தில் வரும் பிறையே பிறையே பாடலை நினைவுபடுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  45. திரு.காரிகன் அவர்கள் எழுதிய கதை நன்றாக இருக்கிறது. பேசாமல் அவர் திரை துறைக்கே சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம். ஏதோ பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தவர் போல் எழுதுவதில் அவருக்கு இணை அவரே. உண்மைக்கு அவருக்கு ரொம்ப தூரம். அவருக்கு இளையராஜா அவர்கள் மேல் எப்போதும் ஒரு வன்மம் இருக்கிறது. அவரது வலைத்தளத்தில் ஏதோ நடுநிலையாளர் போல வேஷம் போட்டு கொண்டு இருப்பதை இங்கு தான் தனது முகத்திரையை தானே கிழ்த்துகொண்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் இளையராஜாவை பற்றி எதிர்மறையாக எழுதினால் கதை என்கிறீர்கள் ..அவர் சொல்வது பொய் என்றால் நீங்கள் இளையராஜா மடி மீது உக்கார்ந்து கவனித்தீர்களா? இளையராஜா ஒன்றும் இசையை கண்டுபிடித்த கடவுள் அல்ல ..விமர்சனத்துக்கு அப்பற்படவரும் அல்ல அவரது சுபாவத்தை ஏற்கனவே "பூவெலாம் கேட்டு பார் " " முகவரி" இனி வரவிருக்கும் "இசை" படங்களின் கதாபாத்திரங்கள் வழியே வெளிபடுதபடிருகின்றன ..நீங்கள் காரிகன் முகத்திரையை கிழிக்கவில்லை அவர்தான் உங்கள் இளையராஜாவின் முகத்திரையை கிழித்திருக்கிறார் .. நியாயப்படி எம் எஸ் வீ யும் A R ரகுமான் உம தான் "trend setter " கள் இளையராஜா வைத்தது வெறும் "ஒப்பாரி" மற்றும் பாடல் வரிகளில் கருத்தை வைக்காமல் "மானே" "தேனே" "ராசா" போன்று வார்த்தைகளை சேர்த்து பாடலை கொலை செய்தது ..

      நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895