என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 11 அக்டோபர், 2012

ஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை

 (என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க!)
  கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு ஆச்சர்யம் என்னவெனில் இன்றும் பள்ளிச் சிறுவர்கள் விரும்பும் விஞ்ஞானியாக இருப்பது ஆல்பார்ட்  ஐன்ஸ்டீன்.
முக நூல் பக்கங்களில் அடிக்கடி இவரது படங்களை காணமுடிகிறது. நிறையப் பேருடைய ப்ரொஃபைல் படங்களாக இருக்கிறார். இத்தனைக்கும் இவருடைய விஞ்ஞானக் கருத்துக்கள் கல்லூரிகளில்தான் பாடப் பொருளாக உள்ளது. 

   இவரைப் போன்றவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் கதைகளாகக் கூறப் படுகின்றன. இவை உண்மையாக நடந்திருக்குமா என்பது ஐயம் என்றாலும் அவை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
இதோ அதுபோல் ஒன்று.

  ஐன்ஸ்டீன் ஒரு முறை ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்து கொண்டிருந்தாலும் அவரது சிந்தனை வேறெங்கோ அறிவியல் கருத்தை அடைய பயணம் செய்துகொண்டிருந்தது.சூழ் நிலை மறந்து சிந்தனை வயப் பட்டிருந்த அவரை ரயில் டிக்கெட் பரிசோதகர் அவருடைய பயணச் சீட்டைக் காட்டும்படி கேட்டு அவரது சிந்தனையைக் கலைத்தார்.

   ஐன்ஸ்டீன் டிக்கட்டைக் எடுப்பதற்காக பாக்கெட்டில் கைவிட்டார். அங்கு அதைக் காணவில்லை.வைத்த இடம் நினைவுக்கு வராமல் விழித்தார் அந்த விஞ்ஞானி.

   டிக்கெட் பரிசோதகருக்கு அவரை எங்கோயோ பார்த்த நினைவு வந்தது.பின்னர் கண்டு பிடித்து விட்டார் அவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்று.

   "ஐயா, நீங்கள் யாரென்று தெரிந்து கொண்டேன். நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம். நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். டிக்கெட்டைத்  தேட வேண்டாம். பரவாயில்லை." என்று சொல்லிவிட்டு அடுத்தபெட்டிக்கு சென்றுவிட்டார்.

   நீண்ட நேரம் கழித்து மீண்டும்  வந்தார்  பரிசோதகர், அங்கே, ஐன்ஸ்டீன் தன் பையில் உள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு ஆடைகள், புத்தகங்கள்  என்று என்று அலசி டிக்கெட்டை  இன்னமும் தேடிக் கொண்டிருந்தார்.

  அதைப் பார்த்த டிக்கட் பரிசோதகர் "ஐயா, நான்தான் சொன்னேனே டிக்கட் தேவை இல்லை என்று. நாடறிந்த விஞ்ஞானியை நாங்கள் நம்பாமலிருப்போமா? தயவு செய்து தேடவேண்டாம்" என்றார்.
  ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்களுக்காகத் தேடவில்லை.நான் எங்கு போக வேண்டும் என்பதை நான் மறந்து விட்டேன். டிக்கட்டைப் பார்த்துத்தான் அந்த இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதனால்தான் தேடுகிறேன்" என்றார்

  மேலும் "என் மனைவி டிக்கட்டை பையில் பத்திரமாக வைத்ததாகத் தானே சொன்னார்? கிடைக்கவில்லையே!." என்று தேடலைத் தொடர்ந்தார்.

  சிரித்த  டிக்கெட்பரிசோதகர் "கவலைப் படாதீர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மனைவிக்கு  போன் செய்து தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
  அடுத்த ஸ்டேஷன் வந்ததும் டிக்கட் பரிசோதகர் ஐன்ஸ்டீனை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்று உங்கள் மனைவிக்கு போன் செய்து கேளுங்கள் என்றார்.

    தயங்கினார் ஐன்ஸ்டீன்.

    "ஏன் தயங்குகிறீர்கள். மிஸ்டர் ஐன்ஸ்டீன்!. மனைவி திட்டுவார் என்று பயமா?" என்றார் டிக்கட் பரிசோதகர் கிண்டலாக!
   ஐன்ஸ்டீன்  பரிதாபமாக "மனைவியின் தொலைபேசி எண்ணை மறந்துவிட்டேன்"என்றார் 

                            ************************
  இந்த கதையைத்தான் என் மனைவிகிட்ட சொன்னேன். அதனால என்ன  வினை நடந்தது? எப்ப நடந்ததுன்னு  கேக்கறீங்களா?
ஒரு நாள் டூ வீலருக்கு பெட்ரோல் போடறதுக்கு வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பினேன் எங்க வீட்டம்மாவும் நானும் வரேன். என்ன கோவில்ல விட்டுட்டு உங்க வேலைய  முடிச்சிக்கிட்டு வரும்போது திருப்பி என்ன கூப்பிட்டுக்கிட்டு வந்துடுங்க  என்று சொல்ல, நானும் கோவில்ல விட்டுட்டு பெட்ரோல் போட போயிட்டேன்.வேற சில வேலைகள் இருந்தது அதையும் முடிச்சிகிட்டு  திரும்பி அதே வழியா வந்தேன்.

   இங்கதாங்க என்னோட வினை ஆரம்பமாயிடுச்சு.ஏதோ ஞாபகத்தில கோவில் வாசல்ல எனக்காகாக் காத்துக் கிட்டிருந்த வீட்டம்மாவை கவனிக்காம நான் பாட்டுக்கும் தாண்டி போயிட்டேன். கிட்டத்தட்ட வீட்டுக்கிட்ட போனதும் ஞாபகம் வந்தது. திரும்பி போனதும் கோவில்ல இன்னொரு அம்மனா (பத்ரகாளியா?) நின்னுக்கிட்டிருந்த மனைவியை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு வந்தேன்.
  அப்புறம் எப்படி வாங்கிக் கட்டிக் கட்டிகிட்டிருப்பேன்றதை உங்க கற்பனைக்கு விட்டுடறேன்.
   அதோட சும்மா இருந்திருக்கலாம்தானே! சமாதானப் படுத்தறதுக்காக இந்த ஐன்ஸ்டீன் கதைய சொன்னேன். அவ்வளவுதான்.

   பொங்கி எழுந்த ஹோம் மினிஸ்டர், "ஐன்ஸ்டீன் அறிவாளி, விஞ்ஞானி, மேதை  அவர் மறந்தார் னா அதுல நியாயம்  இருக்கு. அவர் எவ்வளோ விஷயங்களை கண்டுபுடிச்சி இருக்கார். நீங்க என்ன கண்டுபுடிச்சீங்க! காணாமப் போன கம்மல் திருகாணியக் கூட கண்டுபிடிக்கலயே. ஆனா எத்தனை தொலச்சிரிக்கீங்க! எத்தனை ஹெல்மெட் எத்தனை செல்போன்?. யாரை யாரோட கம்பேர் பண்றதுன்னு  விவஸ்தை இல்லையா?........" என்று தொடர அந்த நேரத்தில வழக்கமா மிஸ்டு கால் குடுக்கிற  ஒரு மகராசன் கால் பண்ண அது மிஸ்டு கால்  ஆறதுக்குள்ள பட்டனை அழுத்தி "ஹலோ'...........ஹலோ" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினேன்.
**************

கற்றுக்கொண்ட நீதி:

தெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.
வீட்டில யாரு கிட்டயும் சொல்லக்கூடாது. குறிப்பா வீட்டம்மா கிட்ட சொல்லக்கூடாது. ஹி..ஹி,,ஹி,,ஹி,,ஹி 
                          *********************
குறிப்பு: இந்தக் கதையில் ஐன்ஸ்டீன் மனைவி விவகாரம் மட்டும் என்னோட கற்பனை.

********************************************************************
இன்னொரு ஐன்ஸ்டீன் கதை :நேரம்  இருந்தா இதையும் படியுங்க!
என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்




43 கருத்துகள்:

  1. /தெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.//

    ஆஹா! உங்க போதைக்கு நாங்கதான் ஊறுகாயா? ம் நடக்கட்டும்... ;-)

    பதிலளிநீக்கு
  2. இரட்டை மகிழ்ச்சி!

    ஒன்று ஐன்ஸ்டீன் தந்தது.

    மற்றொன்று.....?

    வேறு யார்? உங்கள் வீட்டம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நீங்கள்தான்!

    பதிலளிநீக்கு
  3. பாடத்தை படமா படிக்கிறப்ப ஈஸியா ஏறும். நல்ல நல்ல தகவல்களை இப்படி பதிவா(கதை மாதிரி) சொல்றது டக் குனு நினைவுக்கு ஏறும். அது சரி வீட்ல திட்டினா இப்படிதான் எஸ்கேப்பா..? நண்பர்கள் அனைவரும் அப்பப்ப மிஸ்டு கால் கொடுங்கப்பா..!

    பதிலளிநீக்கு

  4. அருமை முரளி! கற்பனைக் கதை என்றாலும் கரும்பென இனித்தது!

    பதிலளிநீக்கு
  5. அறியாத அருமையான கதையை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    கதையை முடித்த விதமும்
    சொல்லிச் சென்ற கருத்தும்
    உள்ளம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அப்படியே எப்படி எஸ்கேப் ஆகறதுனு ஒரு பதிவு போடுங்க நண்பரே

    பதிலளிநீக்கு
  7. எப்படியெல்லாம் கணவரைத் திட்டுறாங்கப்பா மனைவிகள்....!!

    ஆச்சர்யமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்... உங்கள் மனைவிக்கு!

    பதிலளிநீக்கு
  8. வேங்கட ஸ்ரீநிவாசன் said...
    /தெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.//
    ஆஹா! உங்க போதைக்கு நாங்கதான் ஊறுகாயா? ம் நடக்கட்டும்... ;-)//
    ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  9. அறுவை மருத்துவன் said...
    இரட்டை மகிழ்ச்சி!
    ஒன்று ஐன்ஸ்டீன் தந்தது.
    மற்றொன்று.....?
    வேறு யார்? உங்கள் வீட்டம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நீங்கள்தான்//
    என்னா வில்லத்தனம்

    பதிலளிநீக்கு
  10. //உஷா அன்பரசு said...
    பாடத்தை படமா படிக்கிறப்ப ஈஸியா ஏறும். நல்ல நல்ல தகவல்களை இப்படி பதிவா(கதை மாதிரி) சொல்றது டக் குனு நினைவுக்கு ஏறும். அது சரி வீட்ல திட்டினா இப்படிதான் எஸ்கேப்பா..? நண்பர்கள் அனைவரும் அப்பப்ப மிஸ்டு கால் கொடுங்கப்பா..!//
    எஸ்கேப் ஆறதுக்கு வேற நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க உபயோகமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. புலவர் சா இராமாநுசம் said...
    அருமை முரளி! கற்பனைக் கதை என்றாலும் கரும்பென இனித்தது!//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா ஹா..

    ஐன்ஸ்டின் பற்றிய சுவாரஸ்யமான செய்தி நண்பரே

    பதிலளிநீக்கு
  13. ஒரு அறிவியல் மேதையின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யத்தையும், அத்துடன் ஒரு நகைச்சுவை சம்பவத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடன்! ரசித்தேன்!குடும்பத்துல நடக்குற சண்டைய பாத்து ரசிக்குரதுல எவ்வளவு சந்தோசம்.)

    பதிலளிநீக்கு
  14. //அமர்க்களம் கருத்துக்களம் said...
    அருமை . நண்பா..//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //அரசன் சே said...
    அமர்க்களம் தான் சார்//
    நன்றி அரசன்.

    பதிலளிநீக்கு
  16. Ramani said...
    அறியாத அருமையான கதையை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    கதையை முடித்த விதமும்
    சொல்லிச் சென்ற கருத்தும்
    உள்ளம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்//
    நன்றி ரமணி சார்!

    பதிலளிநீக்கு
  17. Kathir Rath said...
    அப்படியே எப்படி எஸ்கேப் ஆகறதுனு ஒரு பதிவு போடுங்க நண்பரே//
    சில சமயங்கள்ல எஸ்கேப் ஆகாம அங்கேயே இருந்தா புது பிரச்சனையில சிக்காம இருக்கலாம்.எஸ்கேப் ஆனா வேற ஒரு சிக்கல்ல மாட்டிக்க வாய்ப்பிருக்கு.
    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  18. அருணா செல்வம் said...
    எப்படியெல்லாம் கணவரைத் திட்டுறாங்கப்பா மனைவிகள்....!!
    ஆச்சர்யமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்... உங்கள் மனைவிக்கு!//
    ஏன் நண்பரே இவ்வளோ ஆசை.

    பதிலளிநீக்கு
  19. முனைவர்.இரா.குணசீலன் said...
    ஹா ஹா ஹா..
    ஐன்ஸ்டின் பற்றிய சுவாரஸ்யமான செய்தி நண்பரே//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் சார்!

    பதிலளிநீக்கு
  20. //வே.சுப்ரமணியன். said...
    ஒரு அறிவியல் மேதையின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யத்தையும், அத்துடன் ஒரு நகைச்சுவை சம்பவத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடன்! ரசித்தேன்!குடும்பத்துல நடக்குற சண்டைய பாத்து ரசிக்குரதுல எவ்வளவு சந்தோசம்.)//
    உங்க சந்தோஷத்துக்கு நன்றி.எங்க அப்பப்ப காணாம போயிடிறீங்க நண்பரே!

    பதிலளிநீக்கு
  21. இந்தக் கதையில் ஐன்ஸ்டீன் மனைவி விவகாரம் மட்டும் என்னோட கற்பனை
    /////////////////

    நான் உண்மையென்றெல்லோ நினைச்சேன்..
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்

    பதிலளிநீக்கு
  22. எதார்த்தமாக நாம் குடும்பத்தாரிடம் சொல்லும் சில செய்திகள் நமக்கே சிலசமயம் அனர்த்தமாக வந்து முடிகின்றன.

    பதிலளிநீக்கு
  23. வேறு ஒரு பதிவுமூலம் இங்கு வந்தேன்.
    எனக்கு வேறுவிதமாக நடந்தது;
    வீட்டுக்காரர் நான் வண்டியின் பின்னால் ஏறிவிட்டேன் என நினைத்து வண்டியை எடுத்து ஏகரகளை.

    பதிலளிநீக்கு
  24. ஆஹா வாங்கிக் கட்டிக்கிட்டீங்களா....

    அதுக்குன்னு இப்படியா மறந்து போறது! அவங்க கேட்டதில தப்பே இல்லே...

    சுவையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. :))))
    ஐன்ஸ்டின் கதை சுவாரஸ்யமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  26. திண்டுக்கல் தனபாலன் said...
    நல்ல கற்பனை...//
    நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  27. தி.தமிழ் இளங்கோ said...
    எதார்த்தமாக நாம் குடும்பத்தாரிடம் சொல்லும் சில செய்திகள் நமக்கே சிலசமயம் அனர்த்தமாக வந்து முடிகின்றன./
    வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  28. சிட்டுக்குருவி said...
    இந்தக் கதையில் ஐன்ஸ்டீன் மனைவி விவகாரம் மட்டும் என்னோட கற்பனை
    நான் உண்மையென்றெல்லோ நினைச்சேன்..
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்/
    நன்றி சிட்டுக் குருவி.

    பதிலளிநீக்கு
  29. சந்திர வம்சம் said...
    வேறு ஒரு பதிவுமூலம் இங்கு வந்தேன்.
    எனக்கு வேறுவிதமாக நடந்தது;
    வீட்டுக்காரர் நான் வண்டியின் பின்னால் ஏறிவிட்டேன் என நினைத்து வண்டியை எடுத்து ஏகரகளை.//
    வருக!வருக!நம்ம கதை கற்பனைதான்.

    பதிலளிநீக்கு
  30. வெங்கட் நாகராஜ் said...
    ஆஹா வாங்கிக் கட்டிக்கிட்டீங்களா....
    அதுக்குன்னு இப்படியா மறந்து போறது! அவங்க கேட்டதில தப்பே இல்லே...
    சுவையான பகிர்வுக்கு நன்றி.//
    எல்லாருக்கும் எவ்வளோ சந்தோஷம். நம்மள மாதிரியே இன்னொருத்தன் இருக்கான்னுதானே!

    பதிலளிநீக்கு
  31. //ஸ்ரீராம். said...
    :))))
    ஐன்ஸ்டின் கதை சுவாரஸ்யமாய் இருந்தது//
    வருகைக்கு நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  32. தெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.
    வீட்டில யாரு கிட்டயும் சொல்லக்கூடாது. குறிப்பா வீட்டம்மா கிட்ட சொல்லக்கூடாது
    >>

    அதான உங்க பேச்சை கேட்கத்தானே சகோவாகிய நாங்கலாம் இருக்கோமே. அப்புறம் கேட்காதவங்ககிட்ட ஏன் சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  33. நீங்க ஒன்னையும் கண்டுபிடிக்காம எல்லாத்தையும் தொலைச்சிகிட்டே இருந்தா திட்டாம என்ன செய்வாங்க?....
    ரசித்தேன் முரளி.....

    பதிலளிநீக்கு
  34. உங்களை திட்டின உங்க வீட்டம்மா, "எங்க ஆத்துக்கார் ஐன்ஸ்டீன் பத்தியெலாம் நன்னா தெரிஞ்சி வச்சிருக்கார், ரொம்ப சம்ர்த்து" னு தோழிகளிடம் தன் ஆத்துக்காரர் பத்தி பெருமையாக சொல்லிக்குவார், கவலையை விடுங்க, முரளி!:-)

    பதிலளிநீக்கு
  35. சார் நீங்க முன்பு எழுதிய ஐன்ஸ்டீன் (கார்-டிரைவர்)கதையை நான் வாசித்து இருக்கிறேன்...இதே கதையை நான் மூன்று விதமாக படித்திருக்கிறேன்
    1.ஐன்ஸ்டீனுக்கு பதிலாக எடிசன் (தினமணி சிறுவர் மணியில் தேதி தெரியவில்லை)
    2.ஐன்ஸ்டீனுக்கு பதில் நியூட்டன் (32 way to success எனும் ஆங்கில புத்தகம்)
    3.ஐன்ஸ்டீன்(உங்க வலைப்பூவில்)

    யாரு அந்த விஞ்ஞானி என்று குழம்பி விட்டேன்...ரொம்ப படிக்கிறது ஆபத்தோ ??!

    பதிலளிநீக்கு
  36. நானும் அதை எங்கோயோ அப்போதோ படித்ததுதான் விஜயன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895