என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 25 அக்டோபர், 2012

ஜெயா டிவியின் புதுமை +விஜய் டிவி வித்தியாசம்


    சரஸ்வதி பூஜை ஆய்த பூஜையை முன்னிட்டு இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தொடர்ந்து முழுமையாக பார்க்கக் கூடிய அளவுக்கு நிகழ்ச்சிகள் வெகு   சுவாரசியமாக அமையவில்லை என்ற போதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ஜெயா டிவியின் பட்டிமன்றம்.வழக்கமாக ஞான சம்பந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.ஆனால் இம்முறை வித்தியாசமாக இலங்கை ஜெயராஜ் என்பவரின் தலைமையில் நடைபெற்றது. பட்டிமன்றத் தலைப்பு "கொடுப்பதில் இன்பமா? பெறுவதில் இன்பமா?"இதுவரை இவரை பார்த்ததில்லை.இவரது பேச்சைக் கேட்டதில்லை.நல்ல கம்பீரமான குரலில் அழகு தமிழில் அவரது பேச்சு ஈர்த்தது. நிறைந்த தமிழறிவு உடையவர் என்பது அவரது பேச்சில் தெரிய வருகிறது.ஈழத் தமிழின் சாயலின்றி தமிழகத் தமழில் பேசியது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

  முதலில் கொடுப்பதில் இன்பம் என்று பேசியபோது  ராமலிங்கம் அவர்கள் சொன்ன கம்பராமாயண பாடல் விளக்கம் அருமையாக இருந்தது.

  எல்லோரும் இறைவனுக்கு பலவற்றை கொடுக்க விரும்புகிறோம்.ஆனால் அவரிடம் இல்லாத எதை கொடுக்க முடியும் என்று சிந்திக்கிறார். இறைவனிடம் இல்லாதது என்ன இருக்கிறது.அப்படி இல்லாதது நம்மிடம் எப்படி இருக்க முடியும்.? இல்லாத ஒன்றைக் கொடுப்பதுதானே இன்பம் என்று சிந்தித்து தன்னிடம் இறைவனிடம் இல்லாத ஒன்று தன்னிடம் நிறைய இருப்பதை அறிந்து கொண்டார். அதுதான் அறியாமை அதை ஒன்றைத்தான் இறைவனுக்கு தர முடியும் என்று சொல்வதாக அமைந்த பாடலை எடுத்துக் காட்டியது சிறப்பாக இருந்தது. கம்பரின் சாமர்த்தியம் கண்டு ஆச்சர்யம் ஏற்பட்டது.(அந்தப் பாடலை நினைவில் வைத்திருக்க முடியில்லை)

இன்னொன்று அடுத்த நாள் பட்டிமன்றத்தில் த.பாண்டியன் பட்டிமன்ற நடுவராக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

                        ***************************************
  விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் பெரிதாக எதுவும் கவரவில்லை என்ற போதும் சில நாட்களாக சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி பற்றிய விளம்பரம் உண்மையாகவே நன்றாக இருந்தது.
    கெளதம்,அஜித்,சுகன்யா,பிரகதி, யாழினி ஆகிய இறுதிப் போட்டியாளர்கள் எப்படி ஆவலுடன் ஃபைனலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுவாரசியத்துடன் சொல்வது சூப்பர். குறிப்பாக அஜித் டிவியில லைவா காட்டறாங்கலாமே? நேரா பாக்கறதுக்கு கூட்டம் வருமா என்று அம்மாவிடம் கேட்பதும்,பிரகதி நான் ஜெயிக்கணும்,தோத்தாலும் தப்பில்ல இல்ல! என்று சொல்வதும் ஒரு குறும்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.விஜய் டிவியின் விளம்பர யுக்தியைப் பாராட்டலாம்.

 விஜய் டிவி பார்வையாளர்களைக் கவர இன்னொரு யுக்தியையும் கடை பிடிக்கிறது.நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆரம்பிப்பதுதான் அது.

   அப்படித்தான் ஆரம்பித்தது தோனி படம்.இந்தப் படம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி, இணையத்தில் அலசப்பட்டு விட்டாலும் படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை.புதுவிதமான கதைக் களங்களை தைரியமாக எடுப்பதற்காக பிரகாஷ் ராஜை பாராட்டலாம்.படம் முழுவதும் அவரே தன் பிரமாதமான நடிப்பால் ஆக்ரமித்துக் கொள்கிறார்.மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக பிரமாதப் படுத்துகிறார். இவரை முழுமையாக ஒரு இயக்குனரும் பயன் படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

  நடுத்தரக் குடும்பங்களில் படிப்புதான் முக்கியம்.அதுதான் உண்மையான சொத்து. நமக்கு அதைத் தவிர வேறு வழியில்ல என்று பிறந்த போதிலிருந்து குழந்தைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள்.அது முழுமையாக சரி என்று சொல்ல முடியாவிட்டாலும்,அதிக பட்ச மதிப்பெண்கள் குறைந்த பட்ச எதிர்காலத்தில் பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கும் என்று நம்புகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு தேவைப் படுவது மினிமம் கேரண்டி.

  இன்னொரு விஷயத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மாணவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை படிக்க வைக்க வேண்டும் என்பது. பெரும்பாலான மாணவர்கள் படிப்பைவிட விளையாட்டில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.அது இயல்பும் கூட. ஆனால் விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள் அனைவரும் அதில் திறமை உடைவர்களாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. விளையாட்டைப் பொருத்தவரை அதில் மிகச் சிறந்தவர்களால்தான் பாதுகாப்பான வாழ்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

   விளையாட்டுத் துறையில் புகழ் பெற அதிக கஷ்டப் படவேண்டும். ஆனால் படிப்பில் ஓரளவுக்கு சராசரியாக இருந்தாலும் எப்படியோ பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே படிப்பிற்கு முக்கியத்துவம் தரக் காரணமாக அமைகிறது. 

   கல்விச் செல்வம்தான் மிக உயர்ந்தது கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை  என்ற மனப்பான்மை சற்றுக் குறைந்தாலும் நல்லதுதான். பல்வேறு விஷயங்களை சிந்திக்க வைத்த படம் தோனி என்பதில் ஐயமில்லை.

                              ***********************
சன் டிவியின் பட்டிமன்றம் சாலமன் பாப்பையா, தலைமையில் பாரதி பாஸ்கர், ராஜா போன்றவர்களின் வாதத்தில் வழக்கம்போல் கிச்சு கிச்சு மூட்டுவதாக அமைந்தது.சிறப்பாகக் கூற ஒன்றுமில்லை.

****************

இதையும் படியுங்கள் 


23 கருத்துகள்:

 1. நல்ல அலசல்...

  சாலமன் பாப்பையா பட்டிமன்றம் மட்டும் முழுவதும் பார்க்க முடிந்தது... மற்றபடி மின் வெட்டு... நேற்று மதியம் முதல் மறுபடியும் ஒரு மணி நேர மின் வெட்டு ஆரம்பித்து விட்டது...

  ஆபாச படம் தெரிவதால் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தால் உடனடியாக நீக்கிவிடவும்... (உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்) அது போல் இன்ட்லி ஒட்டுப்பட்டையையும் எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க நேரம் ஆகிறது... இதை நண்பர்களிடமும் தெரிவிக்கவும்...

  நன்றி...
  tm3

  பதிலளிநீக்கு
 2. கம்பனின் சிந்தனைவளம் கண்டு உண்மையில் அதிசயிக்கிறேன் நண்பரே!

  லியோனி அவர்களின் பட்டிமன்றத்தை பார்த்து பழகிவிட்டதால் இலங்கை ஜெயராஜ் அவர்களது பட்டிமன்றத்தை காண முடியவில்லை. அடுத்தமுறை பார்க்க முயற்சிக்கிறேன்.
  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 3. மின்வெட்டினால் பட்டிமன்றம் பார்க்கமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. எந்த ப்ரோக்ராமும் பார்க்கவில்லை.நேற்று தி.நகர் ஷாப்பிங் போனென்.எனவே நேற்றைய டிவி நிகழ்ச்சிகளை பற்றி தெரிந்து கொள்ள உதவியது.

  பதிலளிநீக்கு
 5. ஆமா சார் யாழினிக்கு கீழே கோடு போட்டிருக்கிறீங்களே பரீட்டை மண்டபத்துல இதுதான் விடை என்னு சுபவைசர் சொல்லித் தாரமாதிரி உங்க வாக்கு நாழினிகு என்று சொல்லுறீங்களா....:)

  நல்ல அலசல் நானும் இதுவரை தோனி பார்க்கவில்லை பார்த்துவிடுகிறேன்

  பதிலளிநீக்கு
 6. தோனி பார்க்க நினைத்தும் மின் வெட்டால் பார்க்க முடியவில்லை! சன் பட்டி மன்றங்களை பார்ப்பதை விட்டு பலநாட்கள் ஆகிவிட்டது! சிறப்பான அலசல்! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. உங்களை யாரோ வீட்டிலே கட்டிப்போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்...-:)

  பதிலளிநீக்கு
 8. எந்த நிகழ்ச்சியும் பார்க்கவில்லை! எங்களுக்கு ஒரே நாள் [புதன்] அன்று மட்டும் தான் விடுமுறை. அன்றும் வேறு வேலையாக வெளியே போய்விட்டேன். பட்டி மன்றங்கள் இப்போது பார்க்கவே பிடிப்பதில்லை!

  பதிலளிநீக்கு
 9. சா.பாப்பையா பட்டிமன்றம் சன் தொ.கா வில் வழக்கமாக நடைபெறுவதுதான். இந்த முறை வசந்த் தொ.கா விலும் சா.பாப்பையாவின் பட்டிமன்றம் தான்!

  ஆனால் ஜெ.தொ.கா வின் இந்தப் பட்டிமன்றம் சிறப்பாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 10. நன்றி தனபாலன் சார்!இன்டலி ஓட்டுப பட்டையை நீக்கி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 11. வே.சுப்ரமணியன். said...
  கம்பனின் சிந்தனைவளம் கண்டு உண்மையில் அதிசயிக்கிறேன் நண்பரே!//
  கருத்துக்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 12. சிட்டுக்குருவி said...
  ஆமா சார் யாழினிக்கு கீழே கோடு போட்டிருக்கிறீங்களே பரீட்டை மண்டபத்துல இதுதான் விடை என்னு சுபவைசர் சொல்லித் தாரமாதிரி உங்க வாக்கு நாழினிகு என்று சொல்லுறீங்களா....:)
  நல்ல அலசல் நானும் இதுவரை தோனி பார்க்கவில்லை பார்த்துவிடுகிறேன்//
  நன்றி சிட்டுக் குருவி.

  பதிலளிநீக்கு
 13. Sasi Kala said...
  மின்வெட்டினால் பட்டிமன்றம் பார்க்கமுடியவில்லை//
  நன்றி சசிகலா!.


  பதிலளிநீக்கு
 14. //அமுதா கிருஷ்ணா said...
  எந்த ப்ரோக்ராமும் பார்க்கவில்லை.நேற்று தி.நகர் ஷாப்பிங் போனென்.எனவே நேற்றைய டிவி நிகழ்ச்சிகளை பற்றி தெரிந்து கொள்ள உதவியது.//
  நன்றி அமுத கிருஷ்ணா!

  பதிலளிநீக்கு
 15. s suresh said...
  தோனி பார்க்க நினைத்தும் மின் வெட்டால் பார்க்க முடியவில்லை! சன் பட்டி மன்றங்களை பார்ப்பதை விட்டு பலநாட்கள் ஆகிவிட்டது! சிறப்பான அலசல்! நன்றி!//

  நன்றி சுரேஷ்

  பதிலளிநீக்கு
 16. //ரெவெரி said...
  உங்களை யாரோ வீட்டிலே கட்டிப்போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்...-:)//
  லீவு நாள்ல வெளிய எங்கயும் போறதில்ல பாஸ்

  பதிலளிநீக்கு
 17. வெங்கட் நாகராஜ் said...
  எந்த நிகழ்ச்சியும் பார்க்கவில்லை! எங்களுக்கு ஒரே நாள் [புதன்] அன்று மட்டும் தான் விடுமுறை. அன்றும் வேறு வேலையாக வெளியே போய்விட்டேன். பட்டி மன்றங்கள் இப்போது பார்க்கவே பிடிப்பதில்லை!//
  நானும் முழுவதும் பார்ப்பதில்லை.கணினி கிடைகாத நேரங்களில் பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 18. வேங்கட ஸ்ரீநிவாசன் said...
  சா.பாப்பையா பட்டிமன்றம் சன் தொ.கா வில் வழக்கமாக நடைபெறுவதுதான். இந்த முறை வசந்த் தொ.கா விலும் சா.பாப்பையாவின் பட்டிமன்றம் தான்!
  ஆனால் ஜெ.தொ.கா வின் இந்தப் பட்டிமன்றம் சிறப்பாக இருந்தது.//
  ஆம் ஸ்ரீநிவாசன். நன்றி.


  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. சன் டிவியில் பட்டிமன்றம் அருமையாக இருந்தது.மின்சார வெட்டால் மற்ற நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 21. Jeyaraj avargal migundha thamilp pulamai vaaindha oru ilangaith thamilar. Kambavaridhi e.jeyaraj enbadhe avaradhu peyar. Ilangai kamban kalagach cheyalalar. Padhivukku nandri. My site: http://newsigaram.blogspot.com

  பதிலளிநீக்கு
 22. தொலைக்காட்சி அலசல் நன்றக இருக்கிறது.
  குழந்தைகள் ஊரிலிருந்து வந்து இருந்ததால் தொலைக்காட்சியே பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
 23. "இலங்கை ஜெயராஜ் "
  இவர் இலங்கைக் கம்பன் கழகத் தலைவர், செயலாளர், செயற்பாட்டாளர் என பல வகையிலும் சேவையாற்றும் தமிழறிஞர்.
  தமிழக கம்பன் கழக மேடைகளுக்கு மிகப் பரீட்சையமானவர்.
  கம்பனை ஆண்டு தோறும் மாறு பட்ட கோணங்களில் ஆய்பவர்.
  இலங்கைக்குப் புகழ் சேர்ப்பவர்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895