என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

இட்லியும் தோசையும்- சன் டிவி செய்த ஆராய்ச்சி


    தினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவில்  பயணம் செய்யும்போதுதான் தெரியும்.
   சன் டிவி காலை சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் இட்லி தோசை பற்றிய ஒப்பீடு அருமையான கவிதை போல ஒளி பரப்பப் பட்டது. அலுவலகம் கிளம்பும் நேரத்தில் சன் டிவியில் எதேச்சையாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நான் அதில் ஈர்க்கப்பட்டு முழுவதுமாக பத்து நிமிடம் தாமதமாக கிளம்பினேன். இட்லி தோசை பின்னணியில் காட்சியாக தெரிய வசீகரக் குரலில் (குரல் பரிச்சயமானது என்றாலும் குரல்  கொடுத்தவர் பெயர் தெரியவில்லை. ) இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஏற்ற இறக்கத்துடன் சொன்னதைக் கேட்டதும் சுவையான இட்லி தோசை சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இதோ நான் ரசித்ததை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்கிறேன்.

இட்லியும்  தோசையும் 
   இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொருமொருப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது.பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

   இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

   மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும்.இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொருமொருப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

   இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

   இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

  குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
  குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

   குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

  இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

சன் டிவியில் காலையில் ஒளி பரப்பப்படும் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியான சப்த நிமிடங்கள் என்ற அந்த  நிகழ்ச்சியின் வீடியோ


************************************************************************************


34 கருத்துகள்:

  1. மனதை ஈர்க்கும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அரைச்ச மாவுக்கு இவ்ளோ பதிலா நடத்துங்க.

    பதிலளிநீக்கு
  3. இட்லிக்கும், தோசைக்கும் பின்னால் இவ்வளவு கதை இருக்கா????.

    எனிவே.... இண்ட்லி + தோசை படம் பார்த்து வாயில் எச்சில் ஊருகிரது....:-)))

    பதிலளிநீக்கு
  4. இட்லிக்கும்,தோசைக்கும் பின்னால் எவ்வளவு பெரிய
    கதை!
    தல்ல கருத்துக்களுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  5. இட்லி , தோசை, சட்னி , சாம்பார் , இட்லிப் பொடி – எல்லாம் வாழ்க்கையோடு வாழ்க்கையாய் ஒன்றிப் போனவை. சன் டீவி நிகழ்ச்சியை உங்கள் பதிவின் மூலம்தான் பார்த்தேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. இது போன்ற நிகழ்ச்சிகள் புதுப்புது விதமாகச் செய்ய முடியும் என்னும் பொழுது இன்னமும் சினிமாக்களையும் சீரியல்களையும் கட்டிக் கொண்டு அழுகின்றனவே இந்தத் தொலைக்காட்சிகள் என்பது தான் விந்தை!!

    பதிலளிநீக்கு
  7. இட்லி தோசையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லியிருக்காங்களே...!

    பதிலளிநீக்கு

  8. நிகழ்சிக்கு முன்னோ பின்னோ நீங்கள் சாப்பிட்டது
    இட்லியா தோசையா?

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான பகிர்வு...

    புலவர் ஐயா கேட்ட அதே கேள்வி என் மனதிலும்!

    பதிலளிநீக்கு
  10. இட்லி தோசை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

    ஆனா, அவை பற்றிய உங்கள் பதிவு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  11. கல்லிலே கலை வண்ணம் கண்டேன்.. இல்லையில்லை.. இட்லி, தோசையில் கவி வண்ணம் கண்டேன்…! ( அது சரி.. இட்லி மௌனமா..? ஒரு முறை நான் சமைக்கிற இட்லியை சாப்பிட்டு பாருங்க.. தவறி கீழே போட்டுட்டா.. ‘டங்’ னு ஒரு சத்தம் கேட்கும். )

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. நிகழ்ச்சியை உங்கள் பதிவின் மூலம் தான் பார்த்தேன்...

    மின் வெட்டு அதிகம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  14. //இராஜராஜேஸ்வரி said...
    மனதை ஈர்க்கும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //இராஜராஜேஸ்வரி said...\
    மனதை ஈர்க்கும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//
    வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. //Sasi Kala said...
    அரைச்ச மாவுக்கு இவ்ளோ பதிலா நடத்துங்க//.
    வருகைக்கு நன்றி சசிகலா.

    பதிலளிநீக்கு
  17. பட்டிகாட்டான் Jey said...
    இட்லிக்கும், தோசைக்கும் பின்னால் இவ்வளவு கதை இருக்கா????.
    எனிவே.... இண்ட்லி + தோசை படம் பார்த்து வாயில் எச்சில் ஊருகிரது....:-)))//
    அந்தக் கதைதான் என்னை ஈர்த்திச்சி.

    பதிலளிநீக்கு
  18. தொழிற்களம் குழு said...
    இட்லிக்கும்,தோசைக்கும் பின்னால் எவ்வளவு பெரிய
    கதை! //
    தொழிற்களம் குழுவினருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தி.தமிழ் இளங்கோ said...
    இட்லி , தோசை, சட்னி , சாம்பார் , இட்லிப் பொடி – எல்லாம் வாழ்க்கையோடு வாழ்க்கையாய் ஒன்றிப் போனவை. சன் டீவி நிகழ்ச்சியை உங்கள் பதிவின் மூலம்தான் பார்த்தேன். நன்றி!//
    நன்றி தமிழ் இளங்கோசார்.

    பதிலளிநீக்கு
  20. //வேங்கட ஸ்ரீநிவாசன் said...
    இது போன்ற நிகழ்ச்சிகள் புதுப்புது விதமாகச் செய்ய முடியும் என்னும் பொழுது இன்னமும் சினிமாக்களையும் சீரியல்களையும் கட்டிக் கொண்டு அழுகின்றனவே இந்தத் தொலைக்காட்சிகள் என்பது தான் விந்தை!!//
    அவ்வபோது ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் இதுபோல் ஒளிபரப்பாவதுண்டு. நன்றி ஸ்ரீனிவாசன்

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம். said...
    இட்லி தோசையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லியிருக்காங்களே...!//
    நானும் அசந்துதான் போன் ஸ்ரீராம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  22. புலவர் சா இராமாநுசம் said...
    நிகழ்சிக்கு முன்னோ பின்னோ நீங்கள் சாப்பிட்டது
    இட்லியா தோசையா?//
    நல்ல சந்தேகம் ஐயா! நான் சாப்பிட்டது தோசைதான். நிகழ்ச்சி பத்தி தெரியறதுக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
  23. வெங்கட் நாகராஜ் said...
    சிறப்பான பகிர்வு...
    புலவர் ஐயா கேட்ட அதே கேள்வி என் மனதிலும்!//
    நன்றி நாகராஜ் சார்.

    பதிலளிநீக்கு
  24. //Geetha Sambasivam said...
    jooperu//
    முதன் முதலாக உங்களை என் வலைப்பக்கத்திற்கு வரவழைத்த் இட்லி தோசைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அறுவை மருத்துவன் said...
    இட்லி தோசை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.
    ஆனா, அவை பற்றிய உங்கள் பதிவு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.//
    நன்றி பரமசிவம் சார்.

    பதிலளிநீக்கு
  26. உஷா அன்பரசு said...
    கல்லிலே கலை வண்ணம் கண்டேன்.. இல்லையில்லை.. இட்லி, தோசையில் கவி வண்ணம் கண்டேன்…! ( அது சரி.. இட்லி மௌனமா..? ஒரு முறை நான் சமைக்கிற இட்லியை சாப்பிட்டு பாருங்க.. தவறி கீழே போட்டுட்டா.. ‘டங்’ னு ஒரு சத்தம் கேட்கும். )//
    அப்பா உங்க கயில ஒரு ஆயுதம் இருக்குன்னு சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  27. திண்டுக்கல் தனபாலன் said...
    நிகழ்ச்சியை உங்கள் பதிவின் மூலம் தான் பார்த்தேன்...
    மின் வெட்டு அதிகம்...//
    மின் வெட்டு சூழலிலும் கருத்திட்டதற்கு மிக்க நன்றி. தனபாலன்

    பதிலளிநீக்கு
  28. இட்லி தோசையில் இவ்வளவு தத்துவங்களா...!!!

    வித்தியாசமான பகிர்வு. நன்றி முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  29. இப்பொழுதெல்லாம் உங்கள் பதிவு என் டாஷ்போர்டில் தெரிவதில்லையே ஏன்...?

    பதிலளிநீக்கு
  30. இந்த நிகழ்சிக்கு பின்னணி குரல் கொடுத்தவர் பெயர் சண்முகம். சன் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவர்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895