இன்றாவது நினைத்துப் பார்!
(மே தின சிறப்புக் கவிதை)
கட்டிடங்களை
பார்க்கும்போதெல்லாம்
அஸ்திவாரம் நினைவுக்கு
வந்ததுண்டா!
இன்றாவது நினைத்துப் பார்!
ஆடை அணியும் போதெல்லாம்
சரவணா ஸ்டோர்,ஜெயச்சந்திரன் .....
தவிர
அதை நெய்தவன்
நினைவு வந்திருக்கிறதா?
இன்றாவது நினைத்துப் பார்!
தீப்பெட்டிகளை
திறக்கும்போதும்
தீக்குச்சியின்
மருந்துத் தலைகளை
பார்க்கும் போதும்
பாஸ்பரஸ் நெடியில்
பணி செய்யும்
மழலைத் தலைகள்
நினைவுக்கு வருமா!
இன்றாவது நினைத்துப் பார்!
உன்
வியர்வை நாற்றம்
போக்கும்
வாசனை சோப்பை
பயன்படுத்தும்போதெல்லாம்
அதற்காக உழைத்தவனின்
வியர்வை வாசம்
உணர முடிகிறதா?
இன்றாவது நினைத்துப் பார்!
சாலையில் நடந்து
போகையிலும்
வாகனங்களில்
செல்கையிலும்
தகிக்கும் வெய்யிலில்
தாரை
உருக்கி ஊற்றியவனை
நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்!
நீ பசித்து உண்ணும்போதெல்லாம்
தன் பசியைப்
போக்க முடியாமல்
தடுமாறியும்
விடாப்பிடியாக விவசாயம்
செய்யும் உழவனை
நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்!
ஐந்து நிமிடம் தாமதமானாலும்
அசிங்க வார்த்தைகளால்
அர்ச்சிக்கும் நீ
அசிங்க வார்த்தைகளால்
அர்ச்சிக்கும் நீ
உன்னை
பத்திரமாக கொண்டு சேர்த்ததற்காக
பத்திரமாக கொண்டு சேர்த்ததற்காக
நீண்ட நேரம் ஒட்டிய
பேருந்து ஓட்டுனருக்கு
என்றாவது
நன்றி சொல்லி இருக்கிறாயா?
பேருந்து ஓட்டுனருக்கு
என்றாவது
நன்றி சொல்லி இருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்
நீ பாதுகாப்பாக வாழ்வதற்காக
எல்லையில்
கடும் பணியிலும் கொடும் பாலையிலும்
உயிரையும் பொருட்படுத்தாது
உழைக்கும் ராணுவ வீரனை
நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
எல்லையில்
கடும் பணியிலும் கொடும் பாலையிலும்
உயிரையும் பொருட்படுத்தாது
உழைக்கும் ராணுவ வீரனை
நினைத்துப் பார்த்திருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்.
நீ கால்வைக்கத் தயங்கும் இடத்தில்
கை வைத்து சுத்தம் செய்யும்
துப்புரவுத் தொழிலாளிக்கு
பேரம் பேசாமல் காசு கொடுத்திருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்!
அது போகட்டும்
கை வைத்து சுத்தம் செய்யும்
துப்புரவுத் தொழிலாளிக்கு
பேரம் பேசாமல் காசு கொடுத்திருக்கிறாயா?
இன்றாவது நினைத்துப் பார்!
அது போகட்டும்
சமையல் அறையில் இருந்து
வரும் உணவின் வாசம்
உன் நாசியைத் துளைக்கும்போதும்
நாவில் எச்சில் வழிய
காத்திருக்கும்போதும்
உன் வீடடுப் பெண்களின்
சலியா உழைப்பையாவது
சற்றே நினைத்திருப்பாயா?
இன்றாவது நினைத்துப்பார்!
உழைக்கும் மக்களால்தான்
இந்த உலகம் இன்னும்
பிழைத்திருக்கிறது
என்பதை
இன்றாவது நினைத்துப்பார்!
உழைக்கும் மக்களால்தான்
இந்த உலகம் இன்னும்
பிழைத்திருக்கிறது
என்பதை
இன்றாவது நினைத்துப்பார்!
**********************************************************
உழைத்துக் களைத்திருக்கும் தொழிலாளர்களே நீங்கள் சிரிப்பதற்காக
காணோமே?"
"அவங்களுக்கெல்லாம்
உழைப்பாளர் தினம்
விடுமுறையாம்".
********************************************************************************************
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
நாளை : மூன்று தலைமுறை முட்டாள்கள் போதும். நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு
படிக்கத் தவறாதீர்
இப்படிலாம் நாட்கள் இருப்பதாலும், வலைப்பதிவுகள் இருப்பதாலும் , டைமிங்கா எழுதலாமேனாச்சும் நினைச்சுப்பார்க்குறாங்களே மக்கள்னு நினைச்சுப்பார்த்துக்கிட்டேன் :-))
பதிலளிநீக்குhilarious..
நீக்குஜீவன் சுப்பு மற்றும் அப்பாதுரை சார் , நீங்க ரெண்டுப்பேராவது ரசிச்சு சிரிச்சீங்களே ,நன்றி!
நீக்குசிரிக்க தெரிஞ்ச மிருகத்துக்கு மனிதன் என்று பெயராம் , அப்போ சிரிக்க தெரியாத மிருகத்துக்கு என்னப்பேரா இருக்கும்னு இனிமே தான் கண்டுப்பிடிக்கணுமோ அவ்வ்!
சிரிச்ச பாவத்துக்காக மிருகமாக்கிட்டேன்னு நினைக்காதிங்க, ஹி...ஹி நானும் ஒரு சிரிக்க தெரிஞ்ச மிருகம் தான் அவ்வ்!
இந்தப் படத்தைப் பார்த்தால் கொஞ்சமாவது மனிதாபமுள்ளவனுக்கு சிரிப்பு வராது. இதுல டைமிங் இவன் ஆத்தானு வேற காமெண்ட் எழுதிக்கிட்டு திரிகிரான் இந்த தற்குறி. இவரு ஒரே கிழியாச் கிழிசாராம். இவரு நல்லாக் கிழிக்கிராருனு ரெண்டு பேரு கைதட்டிட்டாங்களாம்! ரெண்டு தர இதுபோல் பின்னூட்டங்களை "deleted by blog administrator" னு காட்டுவதுபோல் டெலீட் செய்தால், எங்கேயாவது போயி ஒப்பாரி வைப்பானுக. அடிச்சுத் தொறத்தாமல், என்ன பண்னிக்கிட்டு இருக்கீங்க, முரளி?
நீக்குஹி...ஹி மாமா உன்ன ரொம்ப பொலம்ப விட்டேன் போல இருக்கே :-))
நீக்கு:)
நீக்குவிக்கி நக்கி வவ்வால்!!!
நீக்குஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் உயிரி பத்தி நீ பேசின காமெடிதான் இன்னைக்கு பயோகெமிஸ்ட்கள் மத்தியில் #1 காமெடி!
---------------------
ஜோக் 1:
விக்கி நக்கி வவ்வால்: ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் உயிரி இருக்கு தெரியுமா? நான் விக்கில நக்கி தெரிஞ்சுக்கிட்டேன்!
பயோகெமிஸ்ட்: அட மடமே! அந்த உயிரியில் உள்ள ப்ரோட்டீன், நியூக்லிக் ஆசிட் எல்லாமே ஆக்ஸிஜனால் ஆனதுடா! பிடிச்சு கட்டிப்போடுங்கடா இந்த விக்கி நக்கியை!
நடுவர் கு பி: ஆக்ஸிஜனா? அப்படினா? விக்கி நக்கி வவ்வால் சொன்னால் சரியாத்தான் இருக்கும்!
----------
விக்கி நக்கி வவ்வால்: நான் வருண் டவுசைரைக் கிழிச்சுப்புட்டேன்!
வேடிக்கை பார்த்தவன்: அதெல்லாம் சரி, நீ அம்மனமா நிக்கிறடா முண்டம்! உன் டவுசரை எங்கே?! போயி ஏதாவது கோவணம் கட்டிக்கிட்டு வா!
--------------------------------
I hear that vikki-nakki vavvaal and jeyadev were accusing me of visiting blogs as an anonymous guy. This response is to show the world that விக்கி நக்கி வவ்வாலை செருப்பலை அடிக்கணும்னா நான் வருணாவேதான் வருவேன்! உன்னைமாரி குடிகாரப்பயலுக்கெல்லாம் நான் பயந்தா எப்படி சொல்லு?
என்ன மாமா சவுக்கியமா?
நீக்குஅதான் உம்ப்பதிவுக்கே வந்து பேசினேனே அப்புறம் ஏன் முரளி பதிவில வந்து சம்பந்தமேயில்லாம ஊளையிட்டுக்கிட்டு இருக்க? பாவம் அவர் அமைதியானவர் ,அவருக்கும் நம்ம மேட்டருக்கும் என்ன சம்பந்தம்?
ஏன்யா அமிஞ்சிக்கரையில மழை பேஞ்சா அமெரிக்காவில கொடைப்பிடிக்கிற, எதா இருந்தாலும் ஒன்னு உம்கடையில பேசுவோம் இல்லை நம்ம கடைக்கு வா கமெண்ட் மாடரேஷன் கூட கிடையாது "நல்லவே கவனிப்பேன்" விருந்தோம்பல் தமிழன் பண்பாடு :-))
ஹே வர்ரட்ட்டா!!!
------------
முரளி ,
மன்னிக்கவும் , சம்பந்தமில்லாமல் இங்கே வந்து மாமா பொலம்பியதால், தகவல் தெரிவிக்க மட்டுமே இப்பின்னூட்டம் ,தடங்கலுக்கு வருந்துகிறோம்!
// உழைக்கும் மக்களால்தான்
பதிலளிநீக்குஇந்த உலகம் இன்னும்
பிழைத்திருக்கிறது //
சீறிய உள்ளத்தில் சீரிய கவிதை வரிகள்.
எனது மே தின வாழ்த்துக்கள்!
த.ம.1
கவிதை நன்றாக இருக்கிறது. ஜோக் கவிதையின் கருத்துக்கு நேர்மாறாக இருக்கிறது! :))))))))
பதிலளிநீக்குஉழைக்காதவர்களை பகடி செய்யும் நகைச்சுவையாகத் தான் நான் நினைக்கிறேன்.
நீக்குவலி நிறைந்த வார்த்தைகளால் பொங்கி எழுந்த உண்மையான உணர்வுக் கவிதைக்கு
பதிலளிநீக்குஎன் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரா மக்கள் நினைவில் கொள்ள வேண்டிய
நிகழ்வுகள் இவை யாவும் !
நீங்கள் குறிப்பிட்ட பகுதியினரில் நானும் ஒருவன் என்றால் இன்றாவது என்னையே நினைத்துப் பார்க்க வேண்டுமா.?
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குதங்கள் பதிவில் 'தமதாமானாலும்' என்ற சொல்லை 'தாமதமானாலும்' என்றவாறு மாற்றுங்கள் ஐயா!
பதிலளிநீக்கு'இன்றாவது நினைத்துப் பார்!' என
என்றாவது மறக்காது இருக்க
எடுத்தாண்ட எடுத்துக்காட்டுகள்
அடுத்தடுத்து உள்ளத்தில் உருளும்
துயர்களைப் பகிர்ந்தமையைப் பாராட்டுகிறேன்!
நன்றி ஐயா எப்படி கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை. மாற்றிவிட்டேன்.
நீக்குஉண்மை தான் சகோ கண்ணை திறந்து வைத்துள்ளீர்கள். குற்ற உணர்வில் குறுகியது நெஞ்சு. சிறு வலிகள் குழப்பங்களுக்கும் சலித்துவிடும் நாம் அவர்கள் வலியை எண்ணிப் பார்த்தால் சட்டை செய்யாது விட்டு விடுவோமே.பேரம் பேசுதலையும் நிறுத்த வேண்டும். இன்று மட்டுமல்ல இனி எந்நாளும் நினைவிருக்கும் பதிவு. நன்றி ! வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குநினைத்துப் பார்க்க ஏது நேரம்? காலம் போகும் போக்கில் போய்க்கொண்டிருக்கிறோம்!
பதிலளிநீக்குகண்டிப்பாக நினைத்து பார்க்க வேண்டும்! சிறப்பான கவிதை! முரணான ஜோக்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமை முரளி அய்யா.
பதிலளிநீக்குசடசடவென்று அடித்துப் பெய்யும் மழைபோல..
படபடவென்று வெடித்துக் கிளம்பும் பட்டாசு போல..
அருமையான கவிதையை அழகாகத் தந்துவிட்டீர்கள். அதிலும்,
“நீ கால்வைக்கத் தயங்கும் இடத்தில்
கை வைத்து சுத்தம் செய்யும்
துப்புரவுத் தொழிலாளிக்கு
பேரம் பேசாமல் காசு கொடுத்திருக்கிறாயா?“ எனும் வரிகள் சிகரம் என்றால்,
“உன் வீடடுப் பெண்களின்
சலியா உழைப்பையாவது
சற்றே நினைத்திருப்பாயா?“ எனும் வரிகள் இமயம்! பழத்தை ருசிபார்க்கும் நாம் அதன் செடிக்கு மரியாதை செய்ய நினைத்ததில்லையே? இதைத்தான்,
“சித்திரச் சோலைகளே உமை நன்று
திருத்தஇப் பாரினிலே -முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே“ என்றார்! உழைப்பாளர் தினத்தில் நினைக்கவைத்து நெஞ்சில் நிறுத்திய கவிதைக்கு என் மே-தின சல்யூட்!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉணர்வுமிகு
பதிலளிநீக்குஉண்மை வார்த்தைகள்
வலிமைமிகு
வேதனை வார்த்தைகள்
உண்மை என்றுமே சுடத்தானே செய்யும்
அருமை ஐயா
அருமை
உழைக்கும் மக்களால்தான்
இந்த உலகம் இன்னும்
பிழைத்திருக்கிறது
என்பதை
இன்றாவது நினைத்துப் பார்ப்போம்
tha ma 7
பதிலளிநீக்குதொழிலாளர் நலன் மட்டுமல்ல, எல்லோருடைய நலனையும் காப்பது அரசின் கடமை, ஆள்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும், சாமான்யன் என்ன செய்ய முடியும்?
பதிலளிநீக்குஅனைவரையும் நினைத்துப் பார்க்க வைக்கும் கவிதை! அருமை! நன்றி! முரளி!
பதிலளிநீக்குஎன்றும் நினைக்க வேண்டும்...
பதிலளிநீக்கு''......உழைக்கும் மக்களால்தான்
பதிலளிநீக்குஇந்த உலகம் இன்னும்
பிழைத்திருக்கிறது ...''
Vetha.Elanagthilakam.
வணக்கம் சகோ! இழுத்து கன்னத்தில் ஒரு அரைகொடுத்து பின் தப்புங்கறதுநாலதானே,
பதிலளிநீக்குசொன்னேன் என்பதுபோல் (நகைச்சுவையாக) முதுகில்ஒரு தட்டு அருமை சகோ.