என்னை கவனிப்பவர்கள்

சனி, 2 மே, 2015

என்னடா இது! ஒண்ணும் நடக்கலையேன்னு நினச்சேன் நடந்துடுச்சி-400 வது பதிவு

பதிவை படிக்க பொறுமை இல்லாதவங்க 
 படத்தை உத்து பாத்துகிட்டே இருங்க! 
பாக்க பொறுமை இல்லாதவங்க பதிவை படியுங்க. 

400 வது பதிவு 
நேற்று பஸ் ஸ்டாண்டில் இரு கல்லூரி நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது  அதையே கொஞ்சம் கூட்டி கழிச்சி பெருக்கி வகுத்து  நானூறாவது பதிவா ஆக்கிவிட்டேன். பொறுத்துக் கொள்ளுங்கள் 
**************************

"என்ன எதுக்குடா அவசரமா போன் பண்ணி வரவழச்ச? '

" மச்சி! இன்னைக்கு வரை என்னடா இது ஒண்ணும் நடக்கலையேன்னு நினைச்சேன். நடந்துடுச்சி "
"எதுக்குடா இந்த வடிவேலு வசனம்?  உங்கப்பா பாக்கெட் மணிய கட் பண்ணறேன்னு சொல்லிகிட்டிருந்தாருன்னு சொன்னியே. நிஜமாவே கட் பண்ணிட்டாரா? அடப்பாவி இனிமே தண்ணி, தம் அடிக்கறதுக்கு என் காசுதானா?
"அட அது இல்லடா "
"வேற ஏதடா சொல்ற ,நீ லவ் ப்ரபோஸ் பண்ண பொண்ணு செருப்பால அடிப்பேன்னு மிரட்டிகிட்டிருந்ததே. அடி வாங்கிட்டயா நீ முழிக்கறதப் பாத்தா அப்படித்தானே தெரியுது.நடந்துடுச்சு இல்ல? நல்லகாலம் நான் பக்கத்துல இல்ல. ஹஹா ஹ்ஹா

"டேய்......

"போன ரெண்டு  செமஸ்டர்ல அரியர்  இல்லாம பாஸ் ஆயிட்டேன்னு சந்தோஷப்பட்டுக் கிட்டிருந்தே . இந்த செமஸ்டர் அரியர் கன்பார்ம் ஆயிடுச்சி அதானே. அதெல்லாம் சகஜம்டா விட்டுத் தள்ளு. நம்மைப் பொறுத்தவரை எது நடக்கணுமோ அது நல்லாவே நடக்காது எது நடக்கக் கூடாதோ அதுவும் நல்லாவே நடக்கும் . அதான் நமக்கே தெரியுமே "
" டேய் டேய் "
"பேஸ் புக்ல ரொம்பநாளா மொக்க போட்டுக்கிட்டிருந்தயே  அந்த பொண்ணு உன்னை அன்பிரெண்ட் பண்ணிடுச்சு சரியா? பாவம்டா நீ அது என்ன ஸ்டேடஸ் போட்டாலும்  படிக்காம  சலிக்காம ஒரிஜினல் ஐ.டி.இலயம் ஃபேக் ஐடியிலும் லைக் போடுவியேடா.அது பத்தாம என் பாஸ்வோர்ட் வாங்கி வச்சுகிட்டு அத வேற யூஸ் பண்ணிக்கிட்டுருப்ப கவலைப் படாத  இன்னொரு பொண்ணு கிடைக்காமையா போய்டுவா" 

"நிறுத்தறியா? .

"நீ தண்ணி அடிச்சிகிட்டிருந்தப்ப உங்க பக்கத்து வீட்டு அங்கிள் பாத்துட்டார். போட்டுக்குடுத்துடுவார்னு பயந்து கிட்டிருந்தயே நிஜமாவே போட்டுக்குடுத்துட்டாரோ.  சான்சே இல்லையே. அவரும்தானே தண்ணி அடிச்சாரு. நீ போட்டுக் குடுத்துடுவியோன்னு பயந்த மாதிரிதானே போனார்!

"என்ன பேச விடப் போறயா  இல்லையா ?

"எதிர் வீட்டு எட்டாங்க்ளாஸ் பொண்ணு நீ போன்ல விடற பீட்டரை பாத்து இங்கிலீஷ்ல  லீவ் லெட்டர் எழுதிக் கொடுக்க சொல்லிடுச்சா? அதுக்குதான் சொன்னேன் போன்ல பேசும்போது வீட்டு வாசல்ல நின்னு பேசாதேன்னு சொன்னேன் . இப்ப மாட்டிக்கிட்டயா"

"கொஞ்சம் வாயை மூடறயா "

"அப்போ பர்சனல் விஷயம் இல்லையா 

" இருடா! நானே கண்டு பிடிக்கறேன் ஒரு மாசமா பி.எஸ்.என்.எல் பிராட் பேன்ட் ஒரு ப்ராப்ளம் இல்லாம வந்து ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தது இப்ப புட்டுகிச்சா . அதுக்குதான் வேற புரொவைடர் க்கு மாறுடான்னு சொன்னேன்"

"டேய் அத சொல்லலைடா "

"கலைஞர் ராமானுஜர் சீரியல் எழுதினது ஆத்திகர் ஆயிட்டாருன்னு பேசிக்கறாங்களே அதைத்தானே சொல்றே. அவரு மஞ்ச துண்டு போட்டப்பவே மாறிட்டாருன்னு சொல்றாங்களே"

நண்பன் முறைக்க அதை கண்டு கொள்ளாமல் 

"கண்டு புடிச்சுட்டேன்.வைரமுத்து ஜெயகாந்தன் கிட்ட பாராட்டுக்  கடிதம் வாங்கினாரே. அப்பவே டவுட்டா இருக்குன்னு சொன்ன. ஜெயகாந்தன் பொண்ணு அது சும்மான்னு சொல்லிட்டாங்களே .அதனால வைரமுத்து எல்லார் கிட்டயும் வாங்கி கட்டிகிட்டாரே . என்ன சரிதானே? "

"டேய் நிறுத்துடா!  நீபாட்டுக்கு பேசிகிட்டே போற.

"அதுவும் இல்லையா  என்னதாண்டா பின்னே நீயே சொல்லித் தொலை"

"ஹப்பா! இப்பயாவது என்ன சொல்ல விட்டயே! கமலஹாசனோட உத்தம வில்லன்  மே ஒண்ணாந்தேதி ரிலீஸ் ஆகுதேன்னு டிக்கெட் புக் பண்ணேன். இதுவரை ஒரு தடையும் இல்லாம ரிலீசாகப் போகுதுன்னு ஆச்சர்யப் பட்டுக் கிட்டே கிளம்பிப் போனேன் . என்னவோ பிரச்சனையாம் ரிலீசாகாதுன்னு சொல்லிட்டாங்கடா   என்னடா இது ஒண்ணும் நடக்கலியேன்னு நினச்சேன். நடந்துடுச்சிடா நடந்துடுச்சி. எங்க உத்தம வில்லனுக்கு எங்கிருந்துதான் புதுசு புதுசா வில்லனுங்க கிளம்பறாங்களோ?"

 "அடப் பாவி!  இதுக்கா என்ன வர சொன்ன?. படம் ரிலீஸ் ஆனா  எனக்கென்ன ஆகலேன்னா எனக்கென்ன?  என் சின்ன மூளைக்கு இவ்வளவோ வேலை குடுத்துட்டுனேடா..."

"  கொஞ்சம் இருடா  ஒரு வாட்ஸ் அப்ல  படம் ரிலீஸ் ஆகுதுன்னு மெசேஜ் வருது. நான் கிளம்பறேன் பை டா .....

........................................

   (சிரிப்பதற்காக  மட்டுமே! இப்பதிவு )

*******************************************************************

 எழுத ஆரம்பித்து  மூன்றரை ஆண்டுகள்  ஆகிவிட்டன. பலர் அனாயாசமாக 500பதிவுகளை கடந்திருக்கிறார்கள். நான் 100  பதிவைக் கூட தாண்ட மாட்டேன் என்று தான் நினைத்தேன். ஆனால் 400 பதிவுகள் எழுதிவிட்டது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. 
என்ன எழுதினாலும் சகித்துக் கொண்டு வருகை தந்து ஆதரவு தந்த நீங்கள்தான் இதற்கு முக்கிய காரணம். 10958 கருத்துரைகள் தந்திருக்கிறீர்களே. உங்களுக்கு நன்றி. வலையுலக நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 

                              தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டும் 
                                                        மூங்கில் காற்று 
                                                        டி.என்.முரளிதரன் 

41 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் நண்பரே 400 வது பதிவு விரைவில் 500 வது ஆக அட்வான்ஸ் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. ஐயா வணக்கம்.

  நான் நூறென்கிறேன்.

  நீங்கள் நானூறென்கிறீர்கள்.

  மலைப்புதான்.

  தமிழ்மணம் என் உறுப்பினர் பதிவில் சிக்கல் உள்ளது எனவே வாக்களிக்க இயலவில்லை.

  வாழ்த்துகள் ஐயா!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. உத்தம வில்லன் என்று பெயர் வைத்ததால் வந்த வில்லனோ :)
  மூங்கில் காற்றின் சுகமே தனி ,பதிவுகள் ஆயிரம் தொட ஜூனியர் ஜோக்காளியின் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. 400ஆவது பதிவு! வில்லத்தனமாவுல்ல அட உத்தம வில்லத்தனமாவுல்ல இருக்கு?
  உங்கள் நடையழகே அழகு முரளி! கற்பனை கலந்த கலக்கல்! அதுதான் உங்கள் பலம்.. விரைவில் 500என்ன..ஆயிரத்தையும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் கடப்பீர்கள்.. “ஆயிரம் பதிவு கண்ட அழகுநடை சிகாமணி“ன்னு அடுத்த பதிவர் திருவிழாவில் 2017இல் உங்களுக்கு ஒரு விருதுதர இப்போதே சொல்லி வைக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..என்போலும் நிறையப் பேர் தொடரவும் நீங்கள்தான் உற்சாகமூட்டியும் வருகிறீர்கள்.தொடர்க வாழ்க!வணக்கம் த.ம.+1

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள் நானூறு நாலாயிரம் ஆகட்டும்.

  த ம 4

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் !

  வாழ்த்துக்கள் சகோதரா !நானூறாவது ஆக்கத்தினை எட்டும் வரைத் தொடர்ந்த தங்களின் முயற்சியானது பல ஆயிரங்களைத் தாண்டும் வரைத் தொடர வேண்டும் என்றே மனப்பூர்வமாக நானும் வாழ்த்தி
  மகிழ்கின்றேன் .

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள் அய்யா
  வாக்களிக்க எந்திரம் எங்கே காணவில்லை.

  பதிலளிநீக்கு
 8. ஜெயகாந்தன் வைரமுத்து மேட்டர் மட்டும் பொருத்தமாக வரவில்லை. மற்ற எல்லாம் படிக்க ஜாலியாக பொருந்தி வருகின்றன. நமது சொந்தப் பிரச்னைகளை விட்டு நடிகர்களுக்காகக் காவடி தூக்குகிறோம் என்று சொல்ல வருகிறீர்கள். சரிதானே முரளி?

  :)))))))))

  பதிலளிநீக்கு
 9. நானூறாவது .பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. 400 என்ன 4000 தையும் தாண்டி பதிவிட
  தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 11. தங்களது 400 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் எழுத வேண்டும். (தங்கள் வலைப்பதிவினைத் திறந்தால், வருவதற்கு அதிக நேரம் ஆகிறது)
  த.ம.11

  பதிலளிநீக்கு
 12. நானூவது பதிவிற்கும்,விரைவில் பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடவும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. ஆலமரம் போல தழைத்தோங்க வாழ்த்துக்கள் .........தொடருங்கள் முரளி

  பதிலளிநீக்கு
 14. பெங்களூருவில் நேற்று உத்தம வில்லன் ரிலீசாகிவிட்டதாம் 400-க்கு வாழ்த்துக்கள் முரளி.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள். ஓரிரு மாதங்களில் 500 வது பதிவை எதிர் நோக்குகிறேன். இந்த 400 பதிவுகளுமே மிக மிக அருமையாக இருந்ததை இங்கு பதிவிட விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. நானூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! சிறப்பாக எழுதும் தாங்கள் மேலும் பல சிகரங்களை தொடுவீர்கள் அதில் ஐயமில்லை! கரெண்ட் டிரெண்டில் எழுதப்பட்ட இந்த நகைச்சுவை பதிவே அதற்கு சாட்சி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. கலக்கலான 400 வது பதிவிற்கு பாராட்டுக்கள். மேலும் மேலும் சிறப்புகள் வந்து சேர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. உத்தம வில்லன் வெளி வந்துவிட்டது போலிருக்கே.....

  400-வது பதிவு - மனம் நிறைந்த பாராட்டுகள் நண்பரே. மேலும் பல பதிவுகள் எழுதிட எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. 400-வது பதிவு - மனம் நிறைந்த பாராட்டுகள் முரளி! தொடரட்டும் பல நூறுகள்!

  பதிலளிநீக்கு
 20. வணக்கம்
  முரளி அண்ணா
  400வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் த.ம 15
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 21. நேற்றுத் தானே
  பயன்படா மரங்கள் உண்டா?
  என்றொரு பதிவைப் படித்தேன்
  இன்று
  400 ஆவது பதிவு
  என்று அறிந்தேன்.
  400 ஆவது கடக்கும் வரை
  தாங்கள் கற்றது - இனி
  தங்களுக்கு வழிகாட்டுமே!
  தொடருங்கள்
  ஆயரமாயிரம் பதிவுகளாகத் தொடர
  எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 22. நூறுகள் ஆயிரமாக மாற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 23. சிரித்து ரசித்தேன். 'எது நடக்கணுமோ....' அட்டகாசம். நானும் இதை யூஸ் பண்ணிக்கறேனே?

  நானூறுக்கு நானூறு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. படத்தில் இருக்கும் பெண்ணின் கண்கள் மிக அழகு.. பிறவும்.

  பதிலளிநீக்கு
 25. வாழ்த்துரைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
 26. 400 பதிவினைத் தொட்டமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து ஆயிரமாவது பதிவினைக் காணுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பதிவை மிகவும் பொறுமையாகப் படித்ததால் புகைப்படத்தைப் பின்னர்தான் பார்த்தேன். இரண்டுமே அருமை.
  ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

  பதிலளிநீக்கு
 27. எங்கிருந்தெல்லாம் நியூஸ் பிடிக்கிறீங்க நண்பரே! சுவையான கற்பனை. (கொஞ்ச நாளாக வலைப்பக்கம் வரவில்லை; எழுதவும் இல்லை; படிக்கவும் இல்லை. இனிமேல் வருவேன். எழுதவும் தொடங்குவேன்.)- இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 28. நானூறாவது பதிவா!!!! கலக்குங்க அண்ணா! வாழ்த்துக்கள்! அந்த பசங்க எப்படித்தான் இப்டி அண்ணன் இருக்கிற இடத்தில வந்து பேசினாங்களோ!!! சீரியஸாவும், காமெடியாவும் சுவையா எழுதும் வெகு சிலரில் ஒருவர் நீங்க! தொடர்ந்து எழுதுங்க அண்ணா, என் போன்றோருக்கு வழிகாட்டியாய் இருக்கும்!

  பதிலளிநீக்கு
 29. 'நூறு பதிவைக்கூடத் தாண்டமாட்டேன் என்று நினைத்தேன்'- தங்களின் இந்த அமரிக்கையான அணுகுமுறைக்கும், உங்களிடமுள்ள எழுத்துத் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை உங்கள் வலைத்தளம் நிரூபித்துள்ளது. 400 பதிவுகளைத் தாண்டியும் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள் என்பதுதான் இங்கே முக்கியம்.
  ஒரு சிலரின் அலட்டல்களைப் பார்க்கும்போது நீங்களெல்லாம் இன்னமும் 400 அல்ல, நீங்கள் எத்தனைப் பதிவுகள் எழுதவேண்டுமென்றாலும் எழுதுவீர்கள் என்பதுதான் இதிலிருந்து வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. என்மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்னை நல்ல பதிவுகள் எழுத வழி நடத்தும். மிக்க நன்றி அமுதவன் சார்!

   நீக்கு
 30. உங்களது 400ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .. நான் இப்பொழுதான் தொடங்கி இருக்கிறேன்.எனக்கு மிமின்னஞ்சலில் வழி காட்டிய உங்களுக்கு ,என் தனிப்பட்ட நன்றி.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895