என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

லிங்கா-ஒரு வித்தியாசமான விமர்சனம்


இவ்விமர்சனத்தை கூர்ந்து படியுங்கள் . இது ஒரு வித்தியாசமான விமர்சனம் . என்ன வித்தியசம்னு கடைசியில தெரிஞ்சுக்கோங்க.

                                     இணைய வெளியிலும் லிங்கா  லிங்கா
                                     அச்சு இதழிலும் லிங்கா லிங்கா
                                     தொலைக் காட்சியிலும் லிங்கா லிங்கா
                                     வலைப்பதி வனைத்திலும் லிங்கா லிங்கா
                                     லிங்கா காய்ச்சல் பரவிக் கிடப்பதால்
                                     இங்கே நானும் காய்ச்சலில் வீழ்ந்தேன்.
                                     கமர்சியல் உச்சம் தொட்ட லிங்கா 
                                     விமர்சனம் எழுதிட நானும் விழைந்தேன்  

                                    ரஜினியை மட்டும் நம்பும் படம்தான்
                                    ரசனை என்பது அதற்கப் புறம்தான்
                                    தலைவா! தலைவா! குரல்கள் ஓங்க
                                    ஒலித்திடும் விசில்களால்  அரங்கம் அதிர
                                    ரஜினி தோன்றும்  காட்சிகள் எல்லாம்
                                    ரசிகர் பலர்க்கும் கொண்டாட் டம்தான்
                                    முதுமை முகத்தில்  தெரிந்தும்  லிங்கா
                                    பொதுவாய் கண்கள் உணர்வது 'யங்'காய்

                                    சொந்த செலவில் அணையைக் கட்டியும்
                                    நொந்து போக  வைத்தனர் சதியால்
                                   ஆண்டுகள் பலவும் கடந்து போயின
                                    மீண்டும் அணையை காப்பாற் றிடவே
                                    பேரன் ரஜினியை அனுஷ்கா மூலம்
                                    பேரிடர் தீர்க்க அழைப்பது கதையாம்
                                    கலெக்டராய் வந்து கலக்கும்  ரஜினி
                                    கலங்கவும் வைப்பது கதையில் நன்று
                                    இளைய ரஜினி நண்பர் களுடனே
                                     வளைய வருவது கலகல கலகல

                                     ரத்தின வேலுவின் காமிரா காட்சிகள்
                                    முத்திரை பதிக்குது சித்திரை நிலவாய்
                                     உண்மை அணையைப் பார்ப்பது போலே
                                     கண்முன் அணையை  நிறுத்திய தருமை
                                     கட்டிய கலைஞனை கவிதையில் வாழ்த்தலாம்
                                     கெட்டியாய் பிடித்து கைகளை குலுக்கலாம்
                                     
                                    ஆறே  மாத அவகா சத்தில்
                                    ஊரே போற்றும் படைப்பை அளிப்பது
                                    யாரால் முடியும்;முடித்தார் ஒருவர்
                                    வேறு யார்? கே.எஸ்.ரவிகுமார் அவரே
                                    நிறைகள் மட்டும் நெஞ்சில் நிற்பினும் 
                                    குறைகள் பலவும் கூறிட முடியும் 

                                    புதையல் போல ரஜினி கிடைத்தும்
                                    அதனை தவற விட்டு விட்டனரோ
                                    புதுமை ஏதும் இல்லை என்றாலும்
                                    பதுமை போல அனுஷ்கா , சோனா(க்ஷி)
                                    வந்து போயினர் கிளு கிளுப் பாக
                                    சிந்தை முழுதும் ஜிலு ஜிலுப்பாக 

                                   முன்கதை மிதமாய் செல்லும் ரயில்போல்
                                   பின்கதை கொஞ்சம் பரவா யில்லை
                                    நகைச்சுவைக் காக சந்தானம் இருந்தும்
                                   பகைச்சுவை கொஞ்சம் பஞ்சம் மென்பதால்
                                   சுறுசுறுப் புடனே ரஜினி நடித்தும்
                                   பரபரப் பின்றி  படம் செல்கிறதோ?
                                   ஆஸ்கார்  ரகுமான் இசையமைத் திருக்கிறார்
                                   பாஸ்மார்க் மட்டுமே வாங்கி இருக்கிறார்
                                    நண்பா பாடல் பாலுவின் குரலில்
                                   தெம்பு  குறைவாய் இருக்கிறதென்பேன்
                                    படமிது சூப்பர் என்றே கொள்வோம்
                                   அடுத்தது இதைவிடசுமாராய்  இருந்தால்


*****************************************

பாஸ்! என்ன வித்தியாசம்னு  கண்டு பிடிச்சீங்களா?  

ஒண்ணு  இது கவிதை(?)  நடையில இருக்கு 
இன்னொண்ணு  ரசிகர்கள் கோவிச்சுக்கலைன்னா சொல்றேன் 
நான் இன்னும் படம் பாக்கல பாஸ் !  ஹிஹிஹிஹி 
யாரும் அடிக்க வந்துடாதீங்க . ஒரு  வாரம் நான் எஸ்கேப் 

நன்றி : தொலைகாட்சி,வார இதழ்கள்,, நாளிதழ்கள் ,இணைய இதழ்கள்,வலைப்பூக்கள்

*****************************************************************


கொசுறு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவிதையில் ஒரு படத்தின் விமர்சனத்தை எழுதி இருந்தேன்.பொழுது போகலன்னா படிச்சு பாருங்க

42 கருத்துகள்:

 1. ஏதோ ரஜினி பாடல் மெட்டில் அமைந்த விமர்சனப் பாடல் என்று நினைத்தேன் !

  நீங்கள் சொல்லவில்லை என்றால் உண்மை எனக்கும் தெரியாது :)
  த ம 1

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஐயா
  கவிதை வடிவில் விமர்சனம் எழுதி அசத்திட்டீங்க. கடைசியாக தான் உண்மை தெரிந்தது. பார்க்காமலே இப்படி கவிதை எல்லாம் னா பார்த்திருந்தால்? கலக்கல் பதிவு ஐயா. உண்மையாக வித்தியாசம் தான்.

  பதிலளிநீக்கு
 3. படம் பார்க்காமலேயே விமர்சனம் அருமை ஐயா
  கவிதை வடிவில் ஒரு விமர்சனத்தை இப்பொழுதுதான்
  முதன் முறையாகக் காணுகின்றேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. கவிதை மிக அருமை. படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உங்கள் கவிதை போதும்.

  பதிலளிநீக்கு
 5. படம் பார்த்து விட்டு ஒரு விமர்சனம் வருமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இனிமே உண்மையா பாத்துவிட்டு எழுதினாலும் ஒத்துக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்

   நீக்கு
 6. படத்தைப் பாக்காமலே விமர்சனமா..? அதுவும் கவிதை யாகவே.. கலக்கிட்டீங்க சார்.

  பதிலளிநீக்கு
 7. படம் பார்க்காமலேயே விமர்சனக் கவி!

  ஹா...ஹா..ஹா...

  ஆமாம், எல்லா விமர்சனங்களிலும் பிட்டு, பிட்டு வைத்து விடுகிறார்களே...

  நல்ல முயற்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார் இப்போபாய் படத்த பாத்தா போர் அடிச்சிடும்னு நினைக்கிறேன்

   நீக்கு
 8. //படமிது சூப்பர் என்றே கொள்வோம்
  அடுத்தது இதைவிடசுமாராய் இருந்தால்// ஹா ஹா ஹா இது மாஸ் :-)

  பதிலளிநீக்கு
 9. வித்தியாசமான விமர்சனம் அருமை...

  பதிலளிநீக்கு
 10. படமே பார்க்காமல் பாட்டு மூலம் விமர்சனமா? ஆஹா!

  பதிலளிநீக்கு
 11. படத்தை பார்க்காமல் கவிதை மூலம் செய்துள்ள விமரிசனம் புதியது. அருமையும் கூட. நீங்கள் உண்மையை சொல்லிவிட்டீர்கள். சிலர் சொல்வதில்லை!

  பதிலளிநீக்கு
 12. படம் பார்க்காமல் விமர்சனம்....அதுவும் பாடு வடிவில்..எழுதிய முதல் நபர் தாங்களாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்... நன்று நன்று அருமை...

  தம.6

  பதிலளிநீக்கு
 13. இப்படியும் விமர்சனம் எழுதலாமா?? சூப்பர்!! ஓகே ஓகே:)

  பதிலளிநீக்கு
 14. கவிதையா எழுதினத சொல்லல, படம் பார்க்காமலே எழுதினத சொன்னேன்:)
  ** ஆஸ்கார் ரகுமான் இசையமைத் திருக்கிறார்
  பாஸ்மார்க் மட்டுமே வாங்கி இருக்கிறார் *** ரைமிங்கா, டைமிங்கா தான் இருக்கு!

  பதிலளிநீக்கு
 15. நான் இந்த ரஜினி கஜினிகளையெல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை; திரைப்படங்களும் பார்ப்பதில்லை; விமர்சனங்களைச் சீந்துவதே இல்லை. இருந்தும்.....

  முரளியின் விமர்சனமாயிற்றே என்று அரைகுறை விருப்புடன்தான் உங்களின் இந்தப் பதிவை வாசித்தேன்; பிரமித்தேன்.

  வரிக்கு வரி எதுகை மோனை. செவிக்கினிய சந்தம். விதம் விதமான சொல் விளையாட்டு. தொய்வில்லாத விறுவிறு நடை.

  இது சினிமா விமர்சனம் அல்ல; அதன் பெயரில் ஒரு குட்டிக் காவியமே படைத்துவிட்டீர்கள்.

  இது, கொஞ்சமும் மிகைப்படுத்தப்படாத மனப்பூர்வ பாராட்டு முரளி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்காக வருகை தந்து படித்ததோடு பாராட்டியதற்கும் நன்றி சார். அது தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

   நீக்கு
 16. ஆஹா! சும்மா விமர்சனம் படிச்சுட்டே விமர்சனம் எழுதலாமோ?!!!! கவிதை நடை அருமை! நண்பரே! ரசித்தோம்.

  பதிலளிநீக்கு
 17. பழகு தமிழில் பா நடையில்
  லிங்காவத் திறனாய்வு செய்து
  நன்றே பகிர்ந்தீர்!
  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 18. ரஜினி படங்கள் எல்லாம் ஒரு பார்முலாவிற்குள் அடங்கிவிடும். அதை வைத்து நீங்கள் கவிதையை எழுதிவிட்டீர்கள், படம் பார்க்காமலேயே! படம் பார்த்தால் ஒன்றுமே எழுத வராதோ?
  கவிதை நன்றாக வந்திருக்கிறது, அதற்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பதிவை படிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு மேடம் ஹிஹி

   நீக்கு
 19. ஹா..ஹா.. படம்பார்த்து விமர்சனம் செய்தவர்களை விட உங்க விமர்சனம் செம்ம.. 'லிங்கா ஊதிட்டாங்க சங்கா..' இந்த வரியை இடையில எங்கேயாவது சேர்க்க முடியுமான்னு பாருங்க.. :-)

  பதிலளிநீக்கு
 20. ஆகா பார்க்காமல் இத்துணை விமர்சனமா ...
  அப்பா பார்த்துட்டா ...
  தாங்காதுடா சாமி

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895