என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

திங்கள், 29 டிசம்பர், 2014

மனம் வைக்குமா தமிழ்மணம்?

  
  
    தமிழ் வலைப் பூக்களில் தற்போது தொய்வு காணப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த பலர் இந்த ஆண்டு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வலைப்பூக்கள் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை . சிலர் முகநூல் ட்விட்டர் கூகிள் + க்கு சென்று விட்டனர் . ஆனாலும் புதிதாக பலரும் எழுத வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
     நான் கவனித்தவரை நிறையப் பதிவர்களின்  அதிக பட்சமாக மூன்று ஆண்டுகள் வரைதான்  தொடர்ந்து  தீவிரமாக எழுதி இருக்கிறார்கள். பின்னர் வேகம் குறையத் தொடங்கியுள்ளதை காண முடிகிறது. காரணம் முதன் முதல் எழுத வாய்ப்பு கிடைக்குபோது சிறுவயதில் இருந்து மனதில் பதிந்துவந்த எண்ணங்களும்  அனுபவங்களும் தொடர்ந்து எழுத எதையாவது கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களது ஆகச் சிறந்த படைப்புகளை மூன்றாண்டுகளுக்குள் கொடுத்துவிடுகிறார்கள். பின்னர் ஒரு வறட்சி நிலவுகிறது. இப்படி எழுதி என்ன சாதித்தோம்  என்ற எண்ணம் ஏற்படுகிறது. சக பதிவரின் பாராட்டுகளும் ஊக்கமும் ஆரம்பத்தில் கொடுத்த மகிழ்ச்சி இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப்பின்  எந்தப் பரவசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இது வலைப் பூ மட்டுமல்ல முகநூல் ட்விட்டர் எல்லாவற்றுக்குமே பொருந்தும். 
    தினம் ஒரு பதிவு எழுதி  நீண்ட காலம் தமிழ் மண தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த  வீடு திரும்பல் மோகன் குமார் இப்போது  வலைப்பக்கம் எப்போதாவதுதான் வருகிறார் கடந்த ஆண்டு முகநூலில் மூழ்கிக் கிடந்த பலரை இப்போது காணவில்லை. ஆனால்   அதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த சலிப்பையும் வெறுமைமையும் கடந்தவர்கள் அவர்கள். 'அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன்' ,'அட்ராசக்கை சிபி.செந்தில் குமார்','பழனி கந்தசாமி'  போன்றவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவர்கள் அனைவரும் அசாதாரணமானவர்கள். என் கணிப்பின்படி புதிதாக வருபவரின் படைப்புக் காலம் மூன்று ஆண்டுகள்.ஒவ்வொருவரும் தான் இயங்கிய காலத்தை மட்டுமே பொற்காலம் என்று வர்ணிப்பது வழக்கம்.
     பதிவு திசைமாறிப் போய்க்கொண்டிருக்கிறது. நான் சொல்லவந்தது புதிதாக எழுத வருபவர்களை தமிழ்மண திரட்டியில் இணைப்பது   பற்றி. புதியவர் பழையவர் யாராக இருந்தாலும் ஒருவருடைய படைப்பை அடுத்தவர் அறிய வைப்பதில் திரட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன . நான் எழுத வந்தபோது ஏராளமான திரட்டிகள் இருந்தன. பதிவர்களைப் போலவே மூன்று ஆண்டுகளில் பல திரட்டிகள் காணாமல்  போயின. அவற்றில் தாக்குப் பிடித்து நின்றது  தமிழ்மணம்,தமிழ் 10,இன்ட்லி போன்ற ஒரு சில மட்டுமே.
   திரட்டிகள் இல்லாவிட்டால் நமது பதிவுகளை யாருமே படிக்க மாட்டார்களா? நமது பதிவுகளை திரட்டி அளிப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை? திரட்டிகளும் ஒரு ஒரு வலைத்தளமே.எவ்வவளவு பேர் வந்து பார்க்கிறார்களோ அவ்வளுக்கவ்வளவு விளம்பரம் கிடைக்கும். ஒரு வேளை வணிக நோக்கம் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் பார்க்கவேண்டும்-அல்லது பயன்படுத்தவேண்டும் என்பதே இணையதளம் நடத்துவோரின் விருப்பமாக இருக்கும்.
  திரட்டிகள் அளிக்கும் வசதிகளை பொறுத்தே அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமையும். பிரபலமாக உள்ளவர்களுக்கு திரட்டிகளின் உதவி தேவை இல்லை. வாசகர்கள் தேடி வந்து படிப்பார்கள்.எஸ் ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,சாரு போன்றோர் இதற்கு உதாரணம். முதலில் திரட்டிகளின்  உதவியால்  வாசகர்பெற்று பின்னர் சிறிது காலத்திற்குப்பின் பின் அந்த நிலையைத் தாண்டி திரட்டிகள் உதவி இன்றியே வாசகர்கள் வரும் நிலையை அடைந்தோரும் உண்டு.  கேபிள்சங்கர், அட்ராசக்க உள்ளிட்டோர் அடங்கிய பட்டியல் சிறியது.
   ஆனால் புதிதாக எழுதத் தொடங்குவோர்க்கு மிகவும் உதவிகரமாக இருப்பது திரட்டிகளே. இந்த வகையில் அதிக வலைப் பதிவர்களை கவர்ந்ததாக தமிழ் மணம், இன்ட்லி , தமிழ் 10 விளங்குகின்றன. குறிப்பாக தமிழ் மணத்தின் வசதிகள் அதிக வாசகர்களை வலைப்பக்கம் ஈர்ப்பதற்கு உதவுகின்றன. (என்னென்ன வசதிகள் என்பதை அறிய படிக்க
    மற்ற திரட்டிகளில் இணைப்பது மிகவும் எளிமையானது.உடனே அனுமதி கிடைத்து விடும். ஆனால் தமிழ்மணத்தில் தற்போது எளிதில் ஒப்புதல் கிடைப்பதில்லை. பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
சமீபத்தில் தமிழ் மணத்தில் உள்ள குறைகளை மூத்த பதிவர்கள்  பழனி கந்தசாமிம் தருமி போன்றோர் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் வேண்டுகோளின்படி விளம்பரங்கள் மற்றும்  ஆபாசப் பதிவுகளை நீக்கியது தமிழ்மணம். தமிழ் மணத்தில் பல தானியங்கி செயல்பாடுகள் உள்ளன. ஆனால் பதிவுகளின் தரம் பற்றி அவை அறியாது. மேனுவலாகத்தான் அவற்றை சரி செய்ய வேண்டி இருக்கிறது. தானியங்கியாக செயல்பட்டாலும் மனித கண்காணிப்பு நிச்சயம் அவசியம். 
   பிற திரட்டிகளைப் போல தமிழ்மணத்தில் எளிதில்  உறுப்பினராகி விடமுடியும். ஆனால்  நமது வலைப்பூவை பட்டியலில் சேர்க்க  அனுமதி கிடைத்தபின்பே நமது பதிவுகளை இணைக்க முடியும். முன்பெல்லாம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் இந்த அனுமதி கிடைத்து வந்தது. தற்போது ஏதோ சிக்கல் காரணமாக மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட கடந்த ஆறுமாதங்களாக ஒருவலைப்பூவும் சேர்க்கப் படவில்லை. எவ்வளவு காத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? 20? 30? 50? 100?
இல்லை! இல்லை! அதையும் தாண்டி 237 பேர் தமிழ் மண பட்டியலில் இணைவதற்காக காத்திருக்கிறார்கள்.
அந்த பட்டியல் இதோ


(வலதுபுறத்தில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி முழுப் பட்டியலையும் பார்க்கலாம்)

20.07. 2014 இல் இருந்து புதிதாக எந்த வலைப்பூவும் தமிழ் மணத்தில் இணைக்கப் படவில்லை.கடந்த முறையும் இதே போல பல மாத காத்திருப்பிற்குப் பின்னேதான் வலைப்பூக்கள் சேர்க்கப்பட்டன. ஏனிந்த தொய்வு  என்பதற்கான ரியான காரணம் தெரியவில்லை. முன்பு சராசரியாக ஒரு நாளைக்கு 200 பதிவுகள் இணைக்கப்பட்டன. தற்போது தமிழ்மணத்தில் வெளியாகும் இடுகைகள்  90 ஆக குறைந்துள்ளது . 

இந்த தொய்வை ஈடுகட்ட   உடனடியாக இவர்களை  தமிழ்மண விதிகளின்படி தகுதி இருப்பின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் .  தருமி அவர்கள் கூறியுள்ள படி ஒருவேளை இவற்றை கவனிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தேவை எனில்  நிபந்தனைகளின் அடிப்படையில் யாரையேனும்  பயன்படுத்த முயற்சிக்கலாம். தருமி அவர்கள் கூறியது போல திண்டுக்கல் தனபாலன் இதற்கு பொருத்தமானவர் என்று கருதுகிறேன்.அவர் கணினி நுட்பங்கள் அறிந்தவர் மட்டுமல்லாது சேவை மனப்பான்மையும் உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே.
எனது பதிவுகள பலரையும் சென்றைடய உதவியது தமிழ்மணம். இப்போதும் எனது வலைபூவிற்கு வருகை தருபவர்களில்  பெரும்பாலோர் தமிழ் மணம் மூலம் வருபவர்களே  அதேபோல் பற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். தமிழ் வலைபதிவர்களை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கையை தமிழ்மணம் உடனடியாக செய்யும் என்று நம்புகிறேன்.

**********************************************************************

கொசுறு: 1 இந்தப் பட்டியலில் ஒரு சிலர் ஏற்கனவே அதே தலைப்பில் நடத்தி வருகிறார்களே அவர்கள் எதற்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் 
கொசுறு 2:
தமிழ்மணம் கவனத்திற்கு மீண்டும் ஆபாச விளம்பரம் தலைகாட்டத் துவங்கியுள்ளது


***************************************************************************
தொடர்புடைய பிற பதிவுகள் 

 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
 • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
 • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
 • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
 • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
 •  இன்ட்லியால் ஒரு இன்னல்
 • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
 • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
 • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?


 • 27 கருத்துகள்:

  Bagawanjee KA சொன்னது…

  தமிழ்மணம் உரிய நடவடிக்கை உடனே எடுத்தால் நன்றாக இருக்கும் !
  த ம 1

  Muthu Nilavan சொன்னது…

  நன்றி முரளி, வலைப்பதிவர் பலரின் மனத்தில் இருந்த கேள்விகளைத் தொகுத்து, தமிழ்மணம் நிர்வாகிகள் அறியத் தந்தமைக்கு நன்றி. தமிழ்மணத்தின் தொண்டு அளப்பரியதுதான். நீங்கள் கேட்டிருப்பதுபோல ஏனிந்த நிர்வாகத்தில் மந்தநிலை என்று அறிந்து களைந்து செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது, நமக்கும் நல்லது. தாங்கள் சொல்லியிருப்பதுபோல, நமது தனபாலன் அருமையான தேர்வு. அவரது பணியைத் தமிழ்மணம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் தங்களின் வேண்டுகோளை நானும் வழிமொழிகிறேன். அதோடு, - “இந்தப் பட்டியலில் ஒரு சிலர் ஏற்கனவே அதே தலைப்பில் நடத்தி வருகிறார்களே அவர்கள் எதற்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள்“ என்று நீங்கள் தந்திருக்கும் பட்டியலில் மூங்கில் காற்றும் உள்ளதே? இது எப்படி? புரியவில்லையே? சற்றே விளக்குங்கள். மற்றபடி அனைவரின் சார்பான இந்தப்பதிவு காலத்தின் பதிவு நன்றி முரளி த.ம.2

  -'பரிவை' சே.குமார் சொன்னது…

  உண்மைதான்... சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நாளில் எழுதப்படும் சராசரி இடுகைகள் 170 ஆக இருந்தது. இப்போது 90க்கு கீழே போயிருச்சு...

  நல்ல இடுகை ஐயா....

  manavai james சொன்னது…

  அன்புள்ள அய்யா,

  தமிழ்மணத்தில் இணைப்பு கொடுக்க மனம் வைக்க வேண்டி அனைவரின் சார்பிலும் வேண்டுகோள் விடுத்ததற்கு நன்றி. தக்க ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கியது கண்டு மகிழ்ச்சி.

  பழனி. கந்தசாமி சொன்னது…

  மிகுந்த முயற்சி எடுத்துள்ளீர்கள். அதற்குப் பாராட்டுகள் முரளிதரன். தமிழ்மணம் என்றும் புத்துணர்ச்சியுடன் இயங்கவேண்டுமென்பதே எல்லோருடைய விருப்பம்.

  Avargal Unmaigal சொன்னது…

  எங்கிருந்து இந்த 237 பேர் பட்டியலை எடுத்தீர்கள் & எப்படி பொறுமையாக அதை எக்ஸ்லில் சேர்த்தீர்கள். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  Dr B Jambulingam சொன்னது…

  எனது பதிவுகள் தமிழ் மணத்தில் இணையாததற்கு உரிய காரணத்தை இப்போதுதான் தங்கள் பதிவு மூலமாக அறிந்தேன். தாங்கள் கூறியபடி வலைப்பதிவில் ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுகின்ற தொழில்நுட்ப அறிவினைக் கொண்டவர்கள் இணைந்து தமிழ் மணத்தை மேம்படுத்த முயற்சிக்கலாம். திண்டுக்கல் தனபாலன் மற்றும் அவர்களைப்போன்றோர் (தாங்களும்தான்) ஈடுபடுத்தப்படலாம். தமிழ்மணம் நன்கு மணம் வீச வாழ்த்துக்கள்.

  கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

  தங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது ஐயா
  தமிழ் மணம் நிர்வாகிகள் புதியவர்களையும் தங்களுடன்இணைத்த
  வலைப் பூ மேலும் மணம் வீர ஆவண செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன் ஐயா

  கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

  தம 3

  விசுAWESOME சொன்னது…

  நண்பரே, பதிவிற்கு நன்றி.
  //இந்தப் பட்டியலில் ஒரு சிலர் ஏற்கனவே அதே தலைப்பில் நடத்தி வருகிறார்களே அவர்கள் எதற்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் //
  அந்த வரிசையில் அடியேனும் ஒருவன். நான் பதிவுலகில் இறங்கும் போது BlogSpot மூலமாக எழுத ஆரம்பித்தேன், அதையே தமிழ்மணத்திலும் சேர்த்தேன். தமிழ் மணத்தில் நாம் நம் பெயரில் ஒரே ஒரு தளத்தில் இருந்துதான் பதிவுகளை சேர்க்க முடியும். இப்போது நான் எனக்காக ஒரு வலைதளத்தை ஆரம்பித்து உள்ளேன். அங்கே இருந்து என் பதிவுகளை தமிழ் மணத்தில் சேர்க்க வேண்டுமெனில் இன்னொருமுறை என் புதிய வலைதளத்தை அங்கே சேர்க்க வேண்டும் என்று விண்ணப்பித்து காத்து கொண்டு இருக்கின்றேன் .

  அம்பாளடியாள் சொன்னது…

  வணக்கம் !

  மிகவும் சிறப்பான கணிப்பீடு ! காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்
  அனைவருக்கும் தமிழ்மணத்தில் இணையும் வாய்ப்பு விரைந்து கிட்ட
  வேண்டும் .இதற்காகத் தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் என்
  மனமார்ந்த பாராட்டுக்களும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் சகோதரா !

  டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

  நானும் கவனித்தேன். சரியாக சொல்லி விட்டீர்கள். ஆனால் உங்களுடையது புதிதாக இன்னொரு வலைத்தளம். ஆனால் என்னுடையது புதியது அல்ல.Custom domain பெற்றதனால் ஏற்பட்ட விளைவு

  Thulasidharan V Thillaiakathu சொன்னது…

  மிக மிக அருமையான தகவல் பதிவு! நண்பரே! கடினமான உழைப்பு தகவல் திரட்டியதில் தெரிகின்றது. இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் இணைய உங்கள் முயற்சி முதல் கட்டமாக இருக்கட்டும். டிடிக்கு ஓட்டு! உங்கள் சஜஷன் சரியே! அதனால்.....

  அனைவருமே நல்ல எழுத்தாளர்கள். இவர்களும் இணைய வேண்டும். அப்போதுதான் பல வித எழுத்துக்கள் வளரும். நல்ல முயற்சி நண்பரே!

  ஸ்ரீராம். சொன்னது…

  //ஒவ்வொருவரும் தான் இயங்கிய காலத்தை மட்டுமே பொற்காலம் என்று வர்ணிப்பது வழக்கம்.//

  ஹா...ஹா...ஹா..

  எப்படி இந்த 237 பேர்கள் கொண்ட லிஸ்ட் எடுத்தீர்கள் என்பது வியப்பாக உள்ளது. தொழில்நுட்ப விஷயங்கள் நான் அறியாதவை. உங்கள் உழைப்புக்குப் பலன் கிடைக்கட்டும்.

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

  அடுத்த வருடம் இன்னும் 50 புதிய பதிவர்கள் உருவாக உள்ளோம்... (நீங்களும் தான் - புதுக்கோட்டையில்) மீண்டும் தமிழ்மணம் எப்போது மனம் வைக்குமோ...?

  237 பட்டியல் - ஓஹோ...!

  கோமதி அரசு சொன்னது…

  நல்ல பணி.
  ஆசிரியர் அல்லவா!
  நல்லதை சொல்கிறீர்கள்.

  முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  Mythily kasthuri rengan சொன்னது…

  தமிழ் மனம் பற்றி இப்போ தான் இவ்ளோ டீடைல தெரிஞ்சுகிறேன். மூன்றாம் ஆண்டில் இருக்கும் எனக்கு கொஞ்சம் மெரிசலாகுது:(( 237 பேரில் ஒரு காலத்தில் நானும் ஒருத்தியா இருந்தேன்..மலைப்பா இருக்கு உங்க உழைப்பு!!!

  தி.தமிழ் இளங்கோ சொன்னது…

  வலைப்பதிவர்களைப் பற்றி நல்லதொரு அலசல். வலைப்பதிவினில் கிடைக்கும் தனித்தன்மை FACEBOOK இல் கிடைக்காது என்பதனை உணர்ந்தவர்கள், மீண்டும் வலைப்பக்கம் வருவார்கள்.
  த.ம.8

  தனிமரம் சொன்னது…

  பலரின் ஆதங்கத்தை மொத்தமாக தமிழ்மணத்திடம் கொட்டிவிட்டீர்கள் பார்ப்போம் மாற்றம் வருகுதா என்று பார்ப்போம். காத்திருப்போர் பட்டியல் மலைப்பாக இருக்கு ஆனால் வலையுலகம் தொய்வில் இருப்பது மறுக்க முடியாது. திடங்கொண்டு போராடு சீனு ஒரு பதிவு போட்டது ஞாபகத்தில் இருக்கு.பலருக்கு களம் கொடுத்த மேடை தமிழ்மணம் தான் அதன் மூலம் தான் தனபாலன் முதல் முரளி அண்ணாச்சி வரை பலரை நட்பிள் உறவு கொண்டாடுவது.

  ரூபன் சொன்னது…

  வணக்கம்
  தாங்கள் சொல்வது உண்மைதான்.. எல்லாவற்றுக்கும் காரணம் வளர்ந்து வரும் நவீன காலம்.... என்றுதான் சொல்ல முடியும்.. கடிகார முட்களுக்கு நடுவில் வேலைப்பழுதான் காரணம்... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் த.ம11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Amudhavan சொன்னது…

  காத்திருப்போர் பட்டியல் மட்டுமல்ல, அந்த 'மூன்று வருட' அலசலும் உங்களை உற்றுப் பார்க்கவைக்கிறது.

  அன்பே சிவம் சொன்னது…

  அய்யா தங்களின் பட்டியல் என் பாழாய் போன கண் (அ) கணினியில்
  கீழ்கண்ட ( கண்டபடி) இப்படித்தான் தெரிகிறது என்ன பிழை என்பது தெரியவில்லை எப்படி சரிசெய்வது
  Server not found
  Firefox can't find the server at onedrive.live.com.
  Check the address for typing errors such as ww.example.com instead of www.example.com
  If you are unable to load any pages, check your computer's network connection.
  If your computer or network is protected by a firewall or proxy, make sure that Firefox is permitted to access the Web.

  KILLERGEE Devakottai சொன்னது…

  தங்களின் செயல் அறிந்து ஆச்சர்யமாக இருக்கிறது நண்பரே....

  டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

  சில நேரங்களில் அப்படி நடப்பது உண்டு Google Chrome இல் முயற்சிக்கவும்.

  ஊமைக்கனவுகள். சொன்னது…

  அய்யா,
  வணக்கம். காலையிலேயே உங்கள் பதிவைப் பார்த்தேன்.
  அவசர வேலையாய்க் காரைக்குடி சென்றமையால் தாமதமாக வருகிறேன்.
  மன்னியுங்கள்.
  பல பேரின் மனக்குறையைப் பதிவு செய்திருக்கிறீர்கள் என்று பார்த்தால்,
  மனம் கொண்ட புரமும் பட்டியலில் இருக்கிறதே!!
  உங்கள் குரல் தமிழ் மணத்திற்குத் தெரிகிறதோ இல்லையோ, பாதிக்கப்பட்ட தமிழ்மனங்களுக்கு நிச்சயம் ஆறுதலாய் இருக்கும்.
  நன்றி அய்யா!
  த ம கூடுதல் 1

  ‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

  தமிழ் மணம் திரட்டி விரைவில் சுறுசுறுப்பு அடையவேண்டும் என்பதே எல்லோர் விருப்பமும்!

  Mathu S சொன்னது…

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்