சமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் விளம்பரத்திற்காக மீண்டும் காதலையும் சாதியையும் கையில் எடுத்துக் கொண்டது 31.03.2013 அன்று நடந்த நீயா நானா? இம்முறை சிறப்பு விருந்தினர்களாக சேரன், பாலாஜி சக்திவேல் பிரகாஷ் ராஜ், ராதா மோகன், வைரமுத்துவின் மகன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவம் படத்தின் ஆடியோ ரிலீசும் இந்நிகழ்ச்சியிலேயே சற்று வித்தியாசமான முறையில் செய்யப்பட்டது, விளம்பரம்தான் என்றாலும் நோக்கம் நல்லதாக இருந்தது. இறுதிவரை நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் மனம் கனத்துப் போகாமல் இருக்க முடியாது.
வெறிகொண்ட முரட்டு வில்லனாக, அரிவாள்,துப்பாக்கி,கம்பு தூக்கி ஆக்ரோஷத்துடன் நடித்து சேர்த்த பணத்தை தோனி,அபியும் நானும், இப்போது கௌரவம் என்று உணர்வுகளை மையமாகக் கொண்டு சமூக சிந்தனையுடன் படங்களை தாயாரிக்கும் பிரகாஷ் ராஜுக்கு ஒரு சல்யூட் செய்யலாம். இந்நிகழ்ச்சி அவரின் இமேஜை உயர்த்தவே செய்தது.
கிராமங்களின் அழகிய முகத்தையே ரசித்துக் கொண்டிருந்த நாம் அதன் கோரமான சாதி முகத்தை, நிகழ்ச்சி மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியபோது நாம் இப்படிப்படிப்பட்ட சமூகச் சூழலில்தான் இன்னும் இருக்கிறோமே என்று வெட்கப் படவும் வைத்தது. வேதனைப் படவும் வைத்தது. இதில் பங்கேற்றவர்கள் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது.
இப்படியாவது காதலிக்கத்தான் வேண்டுமா?என்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியவில்ல. பெண்கள் சாதிவெறி குறைவானவர்கள் என்று இதுவரை எண்ணி இருந்தேன். ஒரு பெண் தன் காதலுக்கு எதிராக அம்மாவும், சித்தியும் செய்த கொடுமைகளை சொன்னபோது என் எண்ணம் பொய்யாகிப் போனது
இதோ இந்த படத்தில் பார்க்கும் இந்த இளம் பெண்ணுக்குத்தான் எத்தனை சோதனைகள். காதலித்தவன் தலித் என்பதால் காதல் மறுக்கப்பட, பொருட்படுத்தாது உறுதியோடு கைபிடித்தாள். அச்சுறுத்தல்கள் தொடர சென்னை வந்தனர் பிழைத்துக் கொள்ள. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகமாக, சமாளிக்க முடியாமல் மீண்டும் சொந்த ஊருக்கே போவது என்ற தவறான முடிவை எடுக்க, அங்கே காத்திருந்த சாதி வெறியரால் பறிக்கப் பட்டது கணவனின் உயிர். அந்தப் பெண் கூலி வேலை கூட செய்ய முடியாமல் ஒதுக்கி வைக்கப் பட்டதை விவரித்தபோது அந்தப் பெண்ணின் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதற்கும் மேலாக பிள்ளையின் உயிரையும் எடுத்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். ஏனென்றால் அந்த சிறு பிள்ளை தலித்தின் வாரிசாம்! என்று அந்தப் பெண் சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த சமூகத்தின் மீதான கோபமும், இயலாமையும் நம்மையும் சேர்த்து உலுக்கியது. அல்லல் பட்டு ஆற்றாது அழுத அந்தப் பெண்ணின் கண்ணீர் இன்றே சுட்டுவிடக் கூடாதா அந்தக் கொடியவர்களை என்று தோன்றியது.
இன்னொரு பெண்ணோ காதலித்து திருமணம் புரிந்த பின் தன்னை விட்டுச் சென்றபின் பிறந்த வீட்டிற்கும் செல்ல முடியாமல் குழந்தையுடன் தனியாகக் போராடிக் கொண்டு சமூக அங்கீகாரத்திற்காக கணவனுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பதை சொன்னது நெஞ்சை உருக்கியது.
இதுதான் இப்படி என்றால் பார்வைத்திறன் மிகக் குறைவாக உள்ள பெண் தன்னைப் போலவே பார்வை அற்ற வேறு ஜாதிப் பையனை காதலிக்க அதற்கும் பயங்கர எதிர்ப்பாம்.என்ன கொடுமை இது! பெற்றோர்களால் அந்தப் பெண்ணுக்கு அதே ஜாதியில் நல்ல துணையை தேடிக் கொடுக்க முடியுமா? ஆனால் உறுதியோடு திருமணம் செய்து கொண்டவர்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர்,.பார்வையற்ற அந்தப் பெண்ணை ஏமாற்றி மீண்டும் மனம் மாற்ற முயற்சி செய்துள்ளனர். அனால் அது முடியவில்லை.பார்வை இழந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உபயோகமாக இந்த சமுதாயம் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவர்களாக தேர்ந்துடுத்துகொண்ட வாழ்க்கைக்காவது உபத்திரவம் செய்யாமல் இருக்கக் கூடாதா. உண்மையில் இந்த சமுதாயம்தான் பார்வை இழந்து காட்சி அளிக்கிறது.
இவர்களை பார்வைத் திறன் குறைந்த ஜோடிகளை வைத்துத்தான் கௌரவம் படத்தின் பாடல்களை வெளியிட்டார் பிரகாஷ்ராஜ். நெகிழ்ச்சியாக இருந்தது.
இயக்குனர் ராதா மோகன் சொன்ன விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில ஊர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். மேல் ஜாதியினர் மட்டும்தான் ஆண் நாய் வளர்க்கலாம். கீழ் ஜாதியினரின் ஆண் நாய் மேல் ஜாதியனரின் பெண் நாயோடு சேர்ந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாம்.அது இன்றும் நடைமுறையில் உள்ளது என்றபோது பார்த்த அத்தனை பேருமே அதிர்ந்துதான் போயிருப்பர்.
இயக்குனர் சேரன் பகிர்ந்த பல விஷயங்கள் அவர் மீது மேலும் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. சாதி மாறி காதலித்து திருமணம் புரிந்து கொண்ட ஒரு ஜோடியை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன ஜாதி சொல்லி இருக்கிறீர்கள் என்று கேட்டார். கணவனின் ஜாதியை குறிப்பிட்டதாக சொன்னார். சாதியை மீறி மணம் செய்து கொண்ட நீங்கள் சாதியை குறிப்பிடாமல் இருந்திருக்கலாமே. என்றார். அதற்கு அவர்கள் கட்டாயம் ஜாதியை குறிப்பிட வேண்டும் என்று பள்ளியில் சொன்னதாக தெரிவித்தார்.
எனக்கு தெரிந்து பள்ளிகளில் சாதிகள் குறிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. குறிப்பிடாவிட்டால் Forward Community யாக கருதப் படுவார்கள் அவ்வளவே! அரசின் சலுகைகள் வேண்டும் என்பவர் சாதியை குறிப்பிட வேண்டும்.
சேரன் தன் வாரிசுகளுக்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடாமல் சேர்த்திருப்பதாக தெரிவித்தது புதிய செய்தியாக இருந்தது. அவ்வாறே பிரகாஷ்ராஜும் செய்துள்ளார். கமல் ஏற்கனேவே இதை பின்பற்றி இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்ததுதான். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனங்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் அதே இனத்தை சேர்ந்த பிறருமஜாதி குறிப்பிடாமல்
எனக்குப் பிடித்த சேரனின் சில படங்களில் ஒன்று பாண்டவர் பூமி. அந்தப் படத்தில் வேற்று சாதி பையனுடன் ஓடிப் போகும் தங்கையின் தலையை அண்ணன் வெட்டி வீசும் காட்சிக்கு கிடைத்த கைதட்டலையும் வரவேற்பையும் கண்டு இந்த அளவிற்கா சாதிவெறி இருக்கும் அதிர்ந்து போனாராம் சேரன். அந்தக் காட்சி வைத்தது தவறோ என்று வருத்தப் பட்டார். அவர் முகத்தில் தெரிந்த வருத்தம் உண்மையானதுதான் என்று தோன்றியது.
சினிமாத் துறையில் சாதி இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று சேரனும், இருக்கிறது என்று பிரகாஷ்ராஜும் பதிலளித்தனர். பிராகாஷ்ராஜுக்கும் ஏதோ சொந்த அனுபவம் இது தொடர்பாக இருப்பதாக தோன்றியது.
இன்னொருவர் சொன்னது இந்திய அரசியல் சட்டம் சாதியை மறுக்கவில்லை சாதிகளுக்குள் பாகுபாடு காட்டக் கூடாது என்றுதான் கூறுகிறது என்றார். அவரே சொன்னது சாதிகள் கி,மு. விலேயே இருந்தாலும் தீண்டாமை கி.பி. 500 இல்தான் ஏற்பட்டது என்கிறார். அது சரியா என்று ஆய்வாளர்கள்தான். சொல்ல வேண்டும்
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி சாதிகள் எனக்குப் பிடிக்கும் என்றார். அவரது திருமணமும் காதல் திருமணம்தான். தன் காதலியின் சாதி பெற்றோர்கள் கேட்கும் வரை தெரிந்து கொள்ளவில்லை என்று கூறியது நம்ப முடியவில்லை. ஒருவேளை தன் தாயும் தந்தையும்(வைரமுத்து-பொன்மணி வைரமுத்து) சாதி மாறி திருமணம் செய்து கொண்டிருந்தால் இத்தனை பாடல்கள் கிடைத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார் மதன் கார்க்கி. அவர் சாதி மாற்றுத் திருமணத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது தெளிவுபடவில்லை.
உயர்ந்த சாதியினராக கருதப்பட்ட பிராம்மண சமுதாயத்திலும் சாதி மாற்றுத் காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தீண்டாமை போன்றவற்றில் நம்பிக்கை உடைய இவ்வினத்தில் கூட கலப்பு திருமணத்தை ஆதரிப்பதில்லையே தவிர கௌரவக் கொலைகள் அளவுக்கு செல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் சில காலங்களுக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்தும் விடுகின்றனர்.
சினிமா கலைஞர்கள் சமூக அக்கறைகளை சினிமாவில் மட்டும்தான் காட்டுவார்கள்
என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் உண்மையாகவே அத்தகைய சிந்தனைகள்
கொண்டவர்கள் ஒருசிலர் இருக்கின்றனர் என்ற தோற்றத்தை நீயா நானா ஏற்படுத்தியது. அது
உண்மையாகவே இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
பல தன்னார்வ அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் தீவிரமாக இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். கல்வி அறிவும் பொருளாதார முன்னேற்றமுமே இத்தைகைய கொடுமைகளை குறைக்க வழி வகுக்கும் என்று நம்புகிறேன். அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கட்டும்.சமுதாய உறுப்பினர்களாகிய நாம் அதற்கு உறுதுணையாக இருப்போம்.
************************************************************************************
நல்ல அலசல் முரளி.....
பதிலளிநீக்குபிரகாஷ் ராஜ் - அவரது சில படங்கள் நான் ரசித்த படங்கள்.
நன்றி நாகராஜ் சார்
நீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய பதிவு.
நன்றி மேடம்
நீக்குதெளிவான விரிவான அலசல்
பதிலளிநீக்குபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்
நீக்குtha.ma 2
பதிலளிநீக்கு// இயக்குனர் ராதா மோகன் சொன்ன விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில ஊர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். மேல் ஜாதியினர் மட்டும்தான் ஆண் நாய் வளர்க்கலாம். கீழ் ஜாதியினரின் ஆண் நாய் மேல் ஜாதியனரின் பெண் நாயோடு சேர்ந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாம்.அது இன்றும் நடைமுறையில் உள்ளது என்றபோது பார்த்த அத்தனை பேருமே அதிர்ந்துதான் போயிருப்பர்.// - இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்கு// சினிமாத் துறையில் சாதி இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று சேரனும், இருக்கிறது என்று பிரகாஷ்ராஜும் பதிலளித்தனர். பிராகாஷ்ராஜுக்கும் ஏதோ சொந்த அனுபவம் இது தொடர்பாக இருப்பதாக தோன்றியது. // - இது அவரவர் சொந்த விருப்பு,வெறுப்பாக இருக்கலாம்.
என்ன என்ன அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணியிருக்காணுக!!! இந்த உயர் சாதினு சொல்லிக்கிட்டு திரிந்த-----மகன்கள் (நல்லாத்தான் வாயில வருது!)
நீக்குசகமனுஷனை மனுஷனாவும், தன்னைப் போல் நினைக்கத் தெரியாதவன் எப்படி உயர் சாதியாகிறான்? கேவலமான ஒரு சாதியில் பொறந்தவன்னுதான் ஆகுது.
உயர்சாதினு பெருமையடிக்கிறவன் எல்லாம் ஈனசாதியில் பொறந்தவன்னுதான் தோணுது!
நன்றி உஷா அன்பரசு!
நீக்கு
நீக்கு"சகமனுஷனை மனுஷனாவும், தன்னைப் போல் நினைக்கத் தெரியாதவன் எப்படி உயர் சாதியாகிறான்? கேவலமான ஒரு சாதியில் பொறந்தவன்னுதான் ஆகுது.
உயர்சாதினு பெருமையடிக்கிறவன் எல்லாம் ஈனசாதியில் பொறந்தவன்னுதான் தோணுது!
சார் சொல்றத பாத்தா கேவலமான, ஈனத்ததனமான ஜாதியெல்லாம் இருக்குன்றாப்போல இருக்கு.ஜாதியே வேண்டாம் எனும்போது அதில் ஈனத்தன்மும் கேவலமும் மட்டும் எதற்கு.
என்ன பிரச்சின உமக்கு, திருவாளர் அகலிகன்???
நீக்குஎனக்குப் பிடிக்கிதோ இல்லையோ, உம்மைப்போல் ஆட்கள் வாழும் உலகில், ஈனத்தனமான சாதிகள் இருக்கத்தான் செய்யுது. புரியுதா? அது இந்த முட்டாப்பயளுக நிறைந்து வாழும் உலக வழக்குப்படி, கீழ்சாதி என்று சொல்லப்படுகிற ஒன்றல்ல!
மனுஷனை மனுஷனாக மதிக்காமல் தன்னையும் மற்ற்வரைப்போல் நினைக்காமல் ஈன சிந்தனையில் வாழ்ந்து கொண்டு தன்னை உயர்சாதி என்று பிதற்றிக்கொண்டு வாழ்பவர்கள்தான் உண்மையில் அந்த ஈனசாதியில் பிறந்தவர்கள்.
இதில் உமக்கு என்ன புரியவில்லை???
ஈனத்தனமும் கேவலமும் மனித சிந்தனையில் இருக்கு! புரியுதா?? உம்மிடமும் உலகிலும் இருக்கத்தான் செய்யுது. புரியுதா?? அந்த சிந்தனைகள உள்ளவர்கள்தான் தன்னை உயர் சாதினு வரையறுத்து பிதற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
புரியலைனா உம் கருத்தை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இரும். எல்லாருக்கும் எல்லாம் புரியாது.
Let us look at an example!
C6H6 + HNO3 -> H2O + product A
productA + H2/Pd-C -> C6H7N + 2H2O
Do you understand what the heck it means? I guess not. If not, that does not mean nobody can understand. Understand?
Now, STFU!
விளக்கமான அலசல்...
பதிலளிநீக்குஅந்நிகழ்ச்சியில் அந்த தாய் பரிசு பெறும் போதும் கூட, தன் மனதில் இருந்த சோகத்தை இறக்கி வைக்க முடியவில்லை...
நன்றி என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத, வெறி நாய்களும் இன்னும் சமூகத்தில் அலைகின்றன...
ஆம் தனபாலன்
நீக்குஎன்று ஒழியும் இந்த சாதி வெறி...நல்ல பகிர்வுங்க.
பதிலளிநீக்குஅதே கேள்விதான் எல்லோர் மனத்திலும்.நன்றி சசிகலா
நீக்கு//கல்வி அறிவும் பொருளாதார முன்னேற்றமுமே இத்தைகைய கொடுமைகளை குறைக்க வழி வகுக்கும் என்று நம்புகிறேன். //
பதிலளிநீக்குஇன்றைக்கு கல்வி அறிவு பரவலாகத்தான் இருக்கிறது. மற்றைய மாநிலங்களைவிட தமிழக்த்தில் மக்களின் பொருளாதார வாழ்க்கை பெட்டர்.
இருப்பினும் சாதிகள்.
அதில் ஒன்றை நீயா நானாவில் ஒருகுறிப்பிட்டார். அதாவது,
சாதிப்பிர்ச்சினையென்பது
ஒரு பக்கத்தில் தலித்துகள் மற்ற பக்கத்தில் தலித்தல்லா பிறஜாதியினர்.
இருவருக்கும்தான்.
ராமதாஸும் கொங்கு வேளாள கவுண்டர்களும் தலித்தல்லா மற்றமக்களெல்லாம் தலித்துகளை எதிர்த்து ஓரணியாகத் திரள் வேண்டுமெனறு ஒவ்வொரு மாவட்டமாக பிர்ச்சாரம் செய்துவருகிறார்கள்.
அதாவது, தலித்துவைத் தவிர வேற மாப்பிள்ளையைக்கட்டிக்கொண்டால், அவர்களுக்கு கோபம் வராது. தலித்து மாப்பிள்ளை மட்டுமே வேண்டாம். கட்டினால் கொன்று விடுகிறார்கள்.
இதற்கெல்லாம் என்ன சொல்ல வருகிறீர்க்ள்? அந்த நிகழ்ச்சியே இதைப்பற்றித்தான். சாதிகளப்பற்றிச் சொல்லவில்லை. சாதி வெர்ச்ஸ் சாதிகள் என்ப்தைப்பற்றித்தான்.
தலித் சமுதாயத்துப் பெண்ணை இவர்கள் திருமணம் செய்கிறார்களா? இது பற்றி சரியான தகவல் எனக்கு தெரியவில்லை.அதை ஏற்றுக் கொள்கிறார்களா?
நீக்குஇப்படியாவது காதலிக்கத்தான் வேண்டுமா?என்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியவில்ல.
பதிலளிநீக்குமன்னிக்கவும்: உங்கள் எண்ணமே தவறாகப் படுகிறது.
நீக்குகாதல் என்பது ஒரு உணர்வு. அது முன்னும் பின்னும் பார்க்காது. வேண்டுமா வேண்டாவா என்ற நினைப்பு ஒரு சிந்தனை சார்ந்தது. காதல் சிந்திக்காது. காதலித்தபின்னர்தான் சிந்திக்கும். அப்போதுவேண்டுமானால் நீங்கள் சொன்னதை ஏற்று, வேண்டுமா வேண்டாமா என ஒதுக்கித்தள்ளினால், அப்பெண் தன் மனதைக் கொடுத்த பின் திருப்பி வாங்க வேண்டும். கிட்டத்தட்ட உடலைக்கொடுத்து திருப்ப வாங்குவதைப்போல. நடக்குமா? நடக்க வேண்டுமா? விபச்சாரமல்லவா அது!
காதல் என்பது ஒருமுறைதான். அதுவே முதல்; அதுவே கடை. அதற்குப்பின் பெற்றொர்கள் வற்புறுத்தலினால் அவனையோ அவளையோ மணக்கவியலாமப்போனபின் வரும் உறவு, ஒரு கன்வீனியன்ஸ். அம்மணம் ஒரு மேரேஜ் ஆஃப் கன்வீனியன்ஸ்.
காதலித்து மறக்கச் செய்து பின்னொருவனை மணமுடித்தல் மனித வாழ்க்கையை சிறுமைப்படுத்துவதாகும். எனவேதான் காதல் புனிதமானது என்றார்கள். மலரினும் மெல்லியது என்றார்கள். காட்டுமிராண்டிகளிடமிருந்து நம்மைப்பிரித்துக்காட்டும் சக்திவாய்ந்தது என்றார்கள். மனித உறவுகள் புனிதமானவை. ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்றிருக்கும்போதுதான் காதல். ஒருவனை நினைத்து உறவாடியபின்னர் இன்னொருவனை மணப்பது ஒருத்திக்குப் பலர் என்பதே.
அபிராமியின் (வீடியோவில் இருப்பவர்) பேசியதைக் கவனித்தால் அவரது காதல், ஒரு காதலுக்கு என்னென்ன இலக்கணங்கள் நாம் படித்திருப்போமோ அதனுடன் வந்தது: அவர் சொன்னார்: எங்கள் சொற்ப சம்பாத்தியத்தில் வாழவியலவில்லை. அதில் நான் இருவேளை உணவருந்த அவர் மூன்று வேளை பட்டினி கிடந்தார். மிகவும் தாளமுடியாத நிலையை அடைந்தபோது, இனி இங்கிருந்து ஏன் சாகவேண்டும்? ஊரில் போய் செத்துவிடலாம் என ஊர்வந்தோம்"
படத்திலிருக்கும் பெண், தன் கணவனை இழந்தாலும் காதலின் உயர்நிலையை உலகுக்குக்காட்டினார். Course of true love never runs smooth என்றார் செகப்பிரியர். வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களைப்படும்போதுதான் கணவன் - மனைவி தங்களின் காதலின் ஆழத்தை உணர்வார்கள். இல்லாவிட்டால் பொம்மைக்கலியாணம். அல்லது வெறும் உடலுறுவில் பிள்ளைகளை ஈன்றுதள்ளும் விலங்கு வாழ்க்கை.
உங்கள் கேள்வி: இப்படிச்சாகும் நிலைவரும் காதல் தேவையா என்பது?
உங்கள் இடத்திலிருந்து பார்க்கும்போது காதல் என்பதே இல்லை. எல்லாமே மெட்டீரியலிசம்தான். அதாவது, ஜி. பி. ஷா சொன்னது போல: licensed prostitution.
I thought a prostitute will sleep with more than one person! One who gets a license to sleep with only one person can not be called prostitute. You could call her "mistress" or NOT? :)
நீக்குஎன்னைப் பொருத்தவரை கவிதை எழுதுவதற்கு சுகமான கருப்பொருள் காதல்.நானும் காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.அதற்காக உயிரை விடுவதும் சோகத்துடன் திரிவதும் ஏற்புடையதல்ல
நீக்குதிரு குலசேகரன் கூறும் கருத்துக்கள் மேலோட்டமாக பார்க்கையில் ஏதொ முற்பொக்கனவைகளாக தோன்றினாலும் பல விஷயங்கள் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை வழிமொழிவதைப்போலவே தோன்றுகிறது. குறிப்பாக ஒரு காதல்தான் அதை மற்றிக்கொண்டால் அது விபச்சாரத்திற்குசமம் என பல சங்கதிலள் பிற்போக்கானவையாக தெரிகிறது. இவர் வழிமொழியும் எதுவுமே ஆண்சமுகத்திற்கானதாக இல்லை. காதல் ஒருமுறைதான் என்றால் பெருப்பாலான ஆண்களுக்குத்தான் இங்கே திருமனம் நடக்காது.எனவே கருத்து சொல்லும்போது நிதானம் தேவை.
நீக்குஅப்படிங்களா???
நீக்குஊருப்பய கருத்தை எல்லாம் விமர்சிக்கிறதுவிட்டுவிட்டு உமது கருத்தை சொல்லிட்டுப்போறது! நீர்தான் எல்லாவற்றையும்ஜ் சரியாக புரிந்துகொண்டு பேசுவது போல் ஒரு அகங்காரம் தெரிவதாக நான் உணருகிறேன்.
அது உண்மையா? இல்லை அதை புரிந்துகொள்ளும் அளவுக்கு உமக்கு "அறிவு" இல்லையா?!
Let me put it bluntly. I get irritated when I see this akaligan's, "know-it all" FILTHY attitude! Is that clear now, whoever heck that guy, akaligan, may be!
இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்கவில்லையெனினும் முடிவுப் பகுதிகளைப் பார்த்தேன்... இடைப்பட்ட காலத்தில் குறைவது போல் தோற்றமளித்த இந்த சாதிக் கொடுமைகள் படித்தவர்கள் அதிகமாகும் இப்போது வேறு ஒரு விதமாக வளர்ந்து வருகிறது கண்கூடு... அரசியல் வளர்க்க சாதிக்கட்சிகள் தோன்றியதும் காரணமோ என எண்ணுகிறேன்....மீதி நிகழ்ச்சியையும் பார்த்த உணர்வை கொண்டு வந்துள்ளீர்கள் நன்றி..
பதிலளிநீக்குசபாஷ்!
நீக்குஇதைப்படித்த போது எனக்கு நினைவில் வந்தது எலியட்டின் இவ்வரிகள்தான்:
The endless cycle of idea and action,
Endless invention, endless experiment,
Brings knowledge of motion, but not of stillness;
Knowledge of speech, but not of silence;
Knowledge of words, and ignorance of the Word.
All our knowledge brings us nearer to our ignorance,
All our ignorance brings us nearer to death,
But nearness to death no nearer to GOD.
Where is the Life we have lost in living?
Where is the wisdom we have lost in knowledge?
Where is the knowledge we have lost in information?
The cycles of Heaven in twenty centuries
Bring us farther from GOD and nearer to the Dust.
எல்லாமே பெருகபெருக, மனித மன வக்கிரங்கலும் அதற்கு ஈடாக பெருகிக்கொண்டே போகின்றன. கோயில்களிலும் மசூதிகளிலும், தேவாலயங்களிலும் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மனோ வக்கிரங்கள் குறைந்த பாடில்லை. எழில் சொன்னதை ஆமோதிக்கிறேன்.
தங்கள் கருத்தும் ஒரு வகையில் உண்மைதான் எழில்
நீக்குபார்தீங்களா நானும் பார்த்தேன் சாதி சாதின்னு இந்த ஜனங்க பண்ற அட்டகாசத்தை கேட்டு ரொம்பவே கஷ்ட்டமா இருந்தது 5 அறிவு பிராணியில் கூட சாதியாம் 6 ஆறரிவுள்ள மனுசனுக்கு என்றுதான் திருந்துவாங்களோ
பதிலளிநீக்குபருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி
நீக்குசாதி இப்போதைக்கு ஒழியுரா மாதிரி தெரியலை............
பதிலளிநீக்குஅவ்வளவு எளிதல்ல
நீக்குபிற சாதிக்காரர்கள் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்களோ என்று அனைத்து சாதியாரும் அச்சப்படுவதும் சாதி ஒழியாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பதிலளிநீக்குஆழமான ஆய்வு.
நன்றி முரளி.
நன்றி பரமசிவம் சார்
நீக்குசாதிக் கட்சிகள், அமைப்புக்களை தடை செய்தாலே பாதி சாதி சிக்கல் தீரும். பெற்றோர்கள் தம் மக்களை சாதி மாறி மணக்க முடிவு செய்தால் கூட இந்த சாதிக் கட்சி நாதாறிகள் போய் கலவரம் பண்ணி, குட்டையை குழப்பி அரசியல் பண்ணுதுன. சாதி, மதம் சார்ந்த கட்சிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். அத்தோடு சாதிச் சான்றிதழ்களில் இன்ன சாதி என போடுவதை நிறுத்திவிட்டு, வெறும் OBC, ST, SC என்று குறிப்பிட்டா போதும். அத்தோடு மாணவர்களின் சாதிச் சான்றிதழ்களை பள்ளிகளே அரசாங்க காரியாலங்களில் இருந்து பெற வேண்டும். மாணவர்களிடம் போய் நீ என்ன சாதி, நீ என்ன சாதி எனக் கேட்கும் போது தான் நாம் என்ன சாதி என்ற உணர்வே தோன்றுகின்றது. மாணவர்களிடம் ஆசிரியர், பள்ளிகள் சாதியைக் கேட்க கூடாது. TC போன்றவற்றிலும் போடக் கூடாது. இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே சாதி சான்றிதழ் தேவை என்பதால் அதனை பள்ளிகள், கல்லூரிகள் நேரடியாக அரசிடம் இருந்து பெற கணனி மயப்படுத்த வேண்டும்.
பதிலளிநீக்குஅது போக, கோவில், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பணியிடங்கள் போன்றவற்றிலும் சாதி சார்ந்த வன்முறைகளை ஒழிக்க அரசு கடுமையான தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும். சாதி, கவுரவ கொலை செய்வோரை எல்லாம் கடுமையாக தண்டித்து சமூகத்தில் இருந்து ஒதுக்க வேண்டும்... அப்போது தான் திருந்துவார்கள்..
சாதி மாறும் என்ற நம்பிக்கை இருக்கு, ஆனால் எப்போது முற்றாக ஒழியும் என்பது மட்டுமே வினா ?
சாதிக் கட்சிகள் தவிர்க்கப் படவேண்டிய ஒன்றுதான்.
நீக்குமிக சரியாக சொன்னீர்கள் நண்பா இதை அனைவரும் பின்தொடர வேண்டும்
நீக்கு***உயர்ந்த சாதியினராக கருதப்படும் பிராம்மண சமுதாயத்திலும் சாதி மாற்றுத் காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ***
பதிலளிநீக்குஇன்னுமா அவாள "உயர்ந்தவா" னும், "உயர்ந்த சாதி"னு சொண்ணிண்டு இருக்கேள்?
"கருதப்பட்ட"னு சொலியிருக்கலாம்.
கவனமாக எழுதுங்கள் நண்பரே!
மாற்றிவிட்டேன் வருண்
நீக்குஆமா நம்ம சங்கர் ராமன் எப்படி பரலோகம் சென்றார்? யாரோ ஒரு பிராமணாள், நாலு திராவிட கைத்தடிகளை விலைக்கு வாங்கி அவரை பகவானிடம் அனுப்பிட்டதா சொன்னாளே?
பதிலளிநீக்குIs this first degree or second degree murder?
Let us not make all brahmins innocent! OK?
என்னடா இது யாரும் ஒன்னும் இதப் பத்தி பேசலையேன்னு நினச்சேன்
நீக்கு//Let us not make all brahmins innocent! OK?//
உண்மைதான்.ஆனால் காதல் திருமனத்திற்காக இது போன்ற சம்பவம் இதுவரை படித்ததாக நினைவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும மிக நன்றி வருண்.
சாதியையும் மதமுமே மனிதனுக்கு சாத்தானாகி விட்டது என்ன செய்ய வருத்தமாய் உள்ளது அந்த பெண்ணின் நிலைகண்டு
பதிலளிநீக்குஅந்தப் பெண்ணின் நிலை கண்டு வருந்தாதவர் இல்லை கண்ணதாசன்.
நீக்குவணக்கம் மூங்கில் காற்று.
பதிலளிநீக்கு“சாதி இல்லை“ என்று மேடைக்கு மேடை
முழங்குபவர்கள் தான் தனக்கென வரும்பொழுது
சாதியை அடிமுடி வரை ஆராய்ந்து பார்த்துத்
தன் வாரிசுகளுக்குத் திருமணம் செய்கிறார்கள்.
உங்களின் இந்தப் பதிவிற்கு ஏகப்பட்ட
சாதி எதிர்ப்பாளிகள் வந்து கருத்திடலாம்.
ஆனால் தனக்கென்று வரும் பொழுது
“கறுப்புச் சட்டைக்“கூட ஏதாவது நொண்டி சாக்கு
சொல்லி தன் சாதியிலேயே முடித்துக்கொள்வர்.
நீங்களும் நானும் கூட சாதியைப் பற்றிப்
பேசிப் பேசி... என்ன வந்தவிடப் போகிறது?
யார் தான் மாறிவிடப் போகிறார்கள்?
“உபதேசம்“ கேட்கவும் படிக்கவும் பேசவும்
மட்டும் தான் நன்றாக இருக்கும்.
குடும்பம் என்று வந்தால்... குழப்பம் தான்.
யோசிக்கத் துர்ண்டிய பகிர்விற்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அருணா
நீக்குஇந்தியாவில் சாதி மதம் போல அமெரிக்காவில் இனப்பிரச்சனை ஆனால் கல்யானத்திற்காக கொலைகள் விழுவதில்லை. அவ்வள்வுதாங்க
பதிலளிநீக்குஇப்படி லவ் பண்ணுபவர்கள் கல்யாணத்திற்கு அப்புறமும் அதே ஊரில்தான் வாழனுமா என்ன? அவர்களுக்குதான் தெரியுமே தங்கள் பெற்றோர்களும் உறவினர்களும் சாதிக் காரகளும் இத்ற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலைகள் கூட செய்ய தயங்கமாட்டார்கள் என்று அப்படி இருக்கும் நிலையில் அவர்கள் வேறு ஊருக்கோ அல்லது மாநிலத்திற்கோ சென்று சந்தோசமாக வாழ் வேண்டியதுதானே அதைவிட்டு விட்டு அழுவதன் காரணம் எனக்கு புரியவில்லை
எனது திருமணமும் மதம் மாறி பண்ணிக் கொண்டதுதான் குடும்பங்களில் அவ்வளவு எதிர்ப்பு இல்லை இருந்த போதிலும் கல்யாணத்திற்கு முன்பே என்ன செய்ய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் எங்கே இருக்க வேண்டும் என்று ப்ளான் செய்து அதன்படி நாங்கள் இன்று வரை சந்தோஷ்மாக இருந்து வருகிறோம்.( என்ன அப்ப அப்ப என் மனைவி பூரிக் கட்டையை தூக்குவா அவ்வளவுதான் ஆனா நான் மதுரக்காரன் அல்லவா அடிவாங்கி காய்சு போன உடம்பு என்ன என் மனைவி என்னை அடிக்கும் போது அதனால் அவள் கை வலிக்குமே என்றுதான் நான் கவலைப்படுவேன்.)
சென்னை வந்தபின் திரும்ப ஊருக்கு சென்றது அந்தப் பெண் செய்த தவறு.சென்னையில் பிழைக்க ஏராளமான வழி உண்டு.
நீக்கு//மனைவி என்னை அடிக்கும் போது அதனால் அவள் கை வலிக்குமே என்றுதான் நான் கவலைப்படுவேன்// ஆஹா இதுவல்லவா காதல்
உங்கள காதல் வாழ்க்கை .இப்படியே இனிமையாக தொடரட்டும்!.
Peoples comments here not at all understanding, one side you are all saying that we want to go with indian culture and the other side you hate caste// caste is nothing but a bunch of family tree// when marriage is happen 2 families are unite and all the activities will take place till the death// one family approach is differents towards the life// versa others also different// so if you want to make a two different families that is not possible// people how you hate the caste// simliarely we love the caste//
பதிலளிநீக்குhttp://arulgreen.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF
பதிலளிநீக்குhttp://arulgreen.blogspot.com/2013/04/Priest-killed-trying-to-save-daughter-in-TamilNadu.html
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குடி,என் முரளிதரன் (அண்ணா)
நல்ல பதிவு ஏன் இந்த சாதி வெறி ?உலகத்தில் உள்ளது ஆண் பெண் என்ற இருசாதிதான் சாதி என்ற வன்சொல்லைப் பாவித்து ஏன் இந்த துவசம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
''..சாதியைப் பற்றிப்
பதிலளிநீக்குபேசிப் பேசி... என்ன வந்தவிடப் போகிறது?..'''
அது தானாக மறைய வேண்டும்.
நல்ல அலசல்.
வேதா. இலங்காதிலகம்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறினர். ஆனாலும் சாதிய முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நமது இன்றைய கல்வி முறை, கல்வியை போதிக்கின்றதே தவிர, வாழ்வை, வாழ்க்கை நெறிமுறைகளை போதிக்காததன் விளைவு என்று எண்ணுகின்றேன். நன்றி அய்யா. சிந்தனைக்கு உரிய பதிவு.
பதிலளிநீக்குசிறப்பான கருத்துகளை முன் வைத்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து உங்களுக்கு வாழ்த்துக்கள் .....நிறைய செய்திகளை பதிவு செய்கிறீர்கள் ஒவ்வொன்றாய் படிக்க ஆரமிதிருகிறேன்
பதிலளிநீக்கு