என்னை கவனிப்பவர்கள்

புதன், 10 ஏப்ரல், 2013

ஆறடி நிலமும் சொந்தமில்லை!

இந்தப்படம் பதிவில் குறிப்பிட்ட இடம் அல்ல
   அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல்.காரணம் முன்னால் சவ ஊர்வலம் ஒன்று  போய்க்கொண்டிருந்தது.தாரை தப்பட்டைகளும் வெடி முழக்கங்களும் அந்தப் பகுதியை அதிர வைத்துக் கொண்டிருந்தது.இந்த அமர்க்களமும் விசிலும் ஆட்டமும் இருந்ததால் கொஞ்சம் வசதியானவர் இறந்திருக்கக் கூடும். எப்போதோ ஒருகாலத்தில், இறந்து போனவர் ஒருவேளை அதிர்வான ஓசையைக் கேட்டு எழுந்துவிட மாட்டாரா என்ற நம்பிக்கையில் இப்படி ஒலி எழுப்பிப் பார்த்திருப்பார்கள்.அதுவே சடங்காக மாறி இருக்கலாம்.

  மெதுவாக சென்றுகொண்டிருந்த ஊர்வலம் நின்றுவிட்டது. மயானத்தை நெருங்கிவிட்டார்கள் போலும்.ஆனாலும் கூட்டம் கலையவில்லை.நெரிசலும் அதிகமாகியது விசாரித்தபோது மயானத்தில் உள்ளே ஏற்கனவே இறந்து போன ஒருவரின் இறுதி சடங்குகள் நிறைவடையாததால்  இவர்கள் காத்திருக்கிறார்களாம் இரு சடங்குகள் ஒரே சமயத்தில் நடக்க போதுமான இடம் அந்த மயானத்தில் இல்லை.

   இரண்டு  மூன்று கிரவுண்டுகள் அளவே அந்த மயானம் அமைந்துள்ளது இறந்தவர்களை புதைப்பதற்கான .இடுகாடும் அதுவே எரிப்பதற்கான சுடுகாடும் அதுவே! அந்த வழியாக செல்பவர்களுக்கு அங்கு ஒரு  மயானம் இருப்பதை எளிதில் அறிய முடியாது. இதுபோன்ற இறுதி ஊர்வலங்கள் நடக்கும்போதுதான் அங்கு மயானம் இருப்பது தெரியும். சென்னையின் பல புறநகர்ப் பகுதிகளில் நிலை இப்படி இருப்பதை காணமுடிகிறது.

    புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் விலை மதிப்பு மிக்கவை. அதனால் அரசு நிலங்கள் ஏரிகள்,சுடுகாடுகள், குளங்கள் ஆக்ரமிப்பு செய்யப் படுகின்றன.உள்ளாட்சி அமைப்புகளும் இதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த ஆக்கிரமிப்புகளும் அவர்களின் ஆதரவுடன்தான் நடை பெறுகின்றன. இதனால் மயானங்களின் பரப்பளவு சுருங்கிவிட்டது. 

"வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது"
”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே  சொந்தமடா”  

     இவை நிலையாமை தத்துவத்தை நிலைக்கும் வண்ணம் சொன்ன  கண்ணதாசனின்  புகழ்பெற்ற பாடல் வரிகள். ஆனால் . வந்தவரெல்லாம்  சென்றுவிட்டாலும்   அவர்களை புதைக்க போதுமான இடம் பல மயானங்களில் இல்லை.

    உண்மையில் பார்க்கப் போனால்  இது போன்ற மயானங்களில் ஆறடி நிலம் கூட இறந்தவர்க்கு சொந்தமில்லை.  சிறிது  காலத்திற்குள் வேறு ஒருவரும் அந்த இடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும். மயானம் குறைந்தது இந்தஅளவுக்கு இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லையெனில் கட்டாயம் வசதிகளை ஏற்படுத்தவும் பராமரிக்கவும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இறந்த பின்னர் நல் முறையில் அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ தக்க வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை.இது பற்றி கோரிக்கை விடுக்க பொதுநல சங்கங்களும் அவ்வளவாக முன்வருவதில்லை.

    முன்பெல்லாம் சுடுகாடு பக்கம் செல்லக் கூட பயப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. மக்களும் நிலம் வாங்கும் வெறியில் எந்த இடமாக இருந்தாலும் வாங்கி கட்டடம் கட்டி விடுகிறார்கள். குடியிருக்கவும் செய்கிறார்கள். உடல் எரிக்கப்படும் நேரத்தில் மட்டும் ஜன்னலை மூடி வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள். 
  
    கிராமங்களில் ஒருவர் இறந்து விட்டால் அதன் பாதிப்பு அந்த கிராமம் முழுதும் எதிரொலிக்கும்.இறந்தவரின் உடல் எடுக்கப் படும்வரை அது தொடரும். ஆனால்  நகர்ப்புரங்களில் பக்கத்து வீட்டில் யாரேனும் இறந்தால் கூட தினசரி நடவடிக்கைகளில் எந்த (இயற்கையாக வயது  முதிர்வின் காரனமாக ஏற்படும் மரணம் மட்டும்) பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 

  நகர்ப்புறங்களில் குடி இருப்புகளுக்கு மத்தியில் இத்தகைய மயானங்களில் உடல் எரிக்கப் படும்போது ஆரம்பத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டும் பின்னர் அதைப் பற்றிய எந்த உணர்வு  இன்றி வாழ மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள்.

 "என்ன! அவர்கள் உயிரின்றி எரிந்துகொண்டும் புதைந்து கொண்டும் இருகிறார்கள் நாம் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்!" என்ற சிந்தனையுடன் இருக்கிறார்களோ?

******************************************************************************** 

இன்று  தெலுங்கு வருடப் பிறப்பு உகாதிதின வாழ்த்துக்கள்
இதைப் படித்திருக்கிறீர்களா? 
http://tnmurali.blogspot.com/2012/03/blog-post_23.html
தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?  
(கடந்த ஆண்டு நான் எதிர் பார்க்காத அளவுக்கு அதிகம் பேரால் படிக்கப்பட்ட  பதிவுகளில்  ஒன்று) 


49 கருத்துகள்:

  1. சுடுகாடுகள் சொல்லிச்செல்லும் கதை தனி/

    பதிலளிநீக்கு
  2. இப்படியும் ஒரு நம்பிக்கையா...?

    "இன்று நீ நாளை நான்" என்றும், நீங்கள் சொன்ன சிந்தனையும் இருக்கலாம்...

    மின் மயானம் தானே...?

    பதிலளிநீக்கு
  3. ஆறடி நிலமும் சொந்தமில்லைத்தான். ஆனால் போனபின்பும் இத்தனை அவலமா...
    வேதனைதான்...

    பதிலளிநீக்கு
  4. மிகச் சரி
    தெளிந்து ஞானம் அடைவது ஒருவகை
    இயலாமையில் ஞானம் அடைவது ஒரு வகை
    நகரத்து வாசிகள் எல்லாம் இரண்டாம் வகை
    சிந்திக்கச் செய்த பகிர்வு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. "என்ன! அவர்கள் உயிரின்றி எரிந்துகொண்டும் புதைந்து கொண்டும் இருகிறார்கள் நாம் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்!"

    நீங்கள் சொன்ன இந்த வரிகள் தான் உண்மை மூங்கில் காற்று.
    (உயிரோடு இருந்து மட்டும் என்னத்தைச் சாதித்துவிட்டோம்?)

    பதிலளிநீக்கு
  6. ”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
    ஆறடி நிலமே சொந்தமடா”
    அற்புத வரிகள் அய்யா. ஆனால் ஆறடி நிலம் கூட
    சொந்தமில்லை என்பதுதான் இன்றைய வாழ்வியல் யதார்த்தம்.
    கடைசி வரிகள் முற்றிலும் உண்மை அய்யா.

    பதிலளிநீக்கு
  7. இறப்பிற்குப் பின்னான நிலையைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து விட்டால் போதும்... இப்போது வாழும் வாழ்க்கையில் மனிதன் பண்பட்டு விடுவான். ஆறடி நிலம் கிடைப்பதற்கே இந்தப் பாடு பட வேண்டியிருக்கிறது என்கிற யதார்த்தம் மனதைத் தொடுகிறது. நல்லாச் சொல்லியிருககீங்க. இனி வருங்காலத்தில் எல்லாமே மின்மயானமாக மாறிவிடுமோன்னு எனக்குது் தோணுது முரளி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்மயனமாக மாறிவிடும் என்பது உண்மைதான். புதைக்கும் வழக்கம் இன்னும் உலகெங்கும் உள்ளது. மத சார்ந்த அந்த வழக்கத்தை மாற்றுவது எளிதா என்பது தெரியவில்லை.

      நீக்கு
  8. சென்னையின் புறனகர்ப் பகுதியான ஓ.எம்.ஆர்.-சோழிங்கனல்லூரில், அழகான மயானம் அமைத்திருக்கிறார்கள். (அருகில் எங்களுக்கு இண்டேன் கேஸ் வழங்கும் கிடங்கு இருப்பதால் அந்த இடத்தைப் பார்க்க நேர்ந்தது). இன்ஃஃபோசிஸ் அலுவலகத்தின் அருகிலுள்ள சந்தில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம்). இறக்க விரும்புகிறவர்கள் இதை நினைவில் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இறக்க விரும்புகிறவர்கள் இதை நினைவில் கொள்ளவும்.// நினைவில் கொன்னுட்டேனுங்க..

      நீக்கு
  9. பல கிராமங்களில் இதே நிலை தான். காவேரிக் கரையோரம் பேருந்தில் செல்லும் போது பல முறை சாலை ஓரத்திலேயே மயானம் பார்த்திருக்கிறேன்!

    ஆறு அடி கூட தேவையில்லை - மின் மயானமாக இருந்துவிட்டால்.

    பதிலளிநீக்கு
  10. இன்று (நரகத்தில்)நகரத்தில் வாழும் எல்லோருக்குமே பொருந்தும்.அரைடம்ளர் சாம்பல் மட்டுமே கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  11. இதுநாள் வரை நான் சுடுகாடு சென்றதில்லை நான் உயிரோடு இருக்கும் வரை அங்கு செல்ல வாய்ப்பு இல்லை .அதனால் அது பற்றி கவலை இல்லை.
    கடந்த சனிக்கிழமை எனது சகோதரன் இறந்து போனான் என்ற செய்தி கிடைத்தது சில நிமிடங்கள் மனது வலித்தது அதன் பிறகு நடக்க வேண்டியது நடந்து இருக்கிறது என்று நினைத்து சென்றேன். இதுதாங்க என் டைப்பு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமா பார்க்க போறிங்க அதுல நீங்க நடிச்சிருந்தாதான் பார்க்க முடியுமா? பார்வையாளரா போறிங்க. சில சடங்குகளை செய்ய இறந்தவர்களின் உறவினர்கள் அந்த இடத்திற்கு போகிறார்கள். பார்வையாளரா போறவங்களும் ஒரு காலத்தில் அந்த பாத்திரமாக மாற போகிறவர்கள்தான். முன்பெல்லாம் ஆறடி நிலம்தான் கடைசியில் சொந்தம் என்பார்கள். ஆனால் இந்த உலகில் அது கூட சொந்தமில்லை என்ற யதார்த்த உண்மையை முரளி சார் சொல்லி இருக்கிறார்.

      நடப்பது நடந்து கொண்டிருக்கும்.. நடக்கும் பாதை தொடரும்- உங்க டைப் நல்ல டைப்தான்! யதார்த்தமாக வாழ பழகிவிட்டால் மலையளவு துன்பம் கூட கடுகளவாய் போகும்.!

      நீக்கு
  12. என்ன! அவர்கள் உயிரின்றி எரிந்துகொண்டும் புதைந்து கொண்டும் இருகிறார்கள் நாம் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்

    //
    உண்மை தாங்கோ

    வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

    பதிலளிநீக்கு
  13. பதிவின் முடிவில் நீங்க குறிப்பிட்ட வார்த்தைகள் அருமை

    பதிலளிநீக்கு
  14. //எப்போதோ ஒருகாலத்தில், இறந்து போனவர் ஒருவேளை அதிர்வான ஓசையைக் கேட்டு எழுந்துவிட மாட்டாரா என்ற நம்பிக்கையில் இப்படி ஒலி எழுப்பிப் பார்த்திருப்பார்கள்.அதுவே சடங்காக மாறி இருக்கலாம்.// - அது போன்ற ஒலி, ஊர்வலங்கள் தினம் கண்ணில் பட்டால் மனித வாழ்க்கை அவ்வளவுதான் என்ற விரக்தி(உண்மை)வந்து விடும். பிறகேது ஆசைகள்?
    //இறப்பிற்குப் பின்னான நிலையைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து விட்டால் போதும்... இப்போது வாழும் வாழ்க்கையில் மனிதன் பண்பட்டு விடுவான். //- பண்படுத்தி கொள்ள வேண்டும்..
    அதே சமயம் அதையே நினைத்தால் இந்த நிமிட சந்தோஷங்களை தொலைத்து விடுவோம். அடுத்தவனுக்கு துன்பம் தராத செயல்களோடு நம் வாழ்க்கையை அழகாய் வாழ்ந்து விட்டு போகலாமே!

    பதிலளிநீக்கு

  15. வாழும் போது சோறுகூட போட மாட்டார்கள்!ஆனால் இறந்த பிறகு தாரை தப்பட்டை முழங்க வழியனுப்பி வைப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  16. கதையாக ஆரம்பித்து, கருத்தோடு முடிந்தது... உண்மை நிலை... நன்று ஐயா..

    பதிலளிநீக்கு
  17. உனக்கேது சொந்தம்? எனக்கேது சொந்தம் ?
    இந்த உலகத்துக்கு எதுதான் சொந்தமடா .......
    இப்படி பாடி கொண்டு போக வேண்டியதுதான்

    ஆனால் உங்கள் கவலை மிகவும் தரம் வாய்ந்தது

    பதிலளிநீக்கு
  18. //முன்பெல்லாம் சுடுகாடு பக்கம் செல்லக் கூட பயப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. மக்களும் நிலம் வாங்கும் வெறியில் எந்த இடமாக இருந்தாலும் வாங்கி கட்டடம் கட்டி விடுகிறார்கள். குடியிருக்கவும் செய்கிறார்கள். உடல் எரிக்கப்படும் நேரத்தில் மட்டும் ஜன்னலை மூடி வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள். //

    வாஸ்தவம் தான்...!

    பதிலளிநீக்கு


  19. //வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது"
    ”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
    ஆறடி நிலமே சொந்தமடா” //
    இப்போது இருந்தால் கவிஞர் ஆறடி நிலமும் சொந்தமில்லை என்று பாடி இருப்பார்.

    ஆறடி நிலம் சொந்தம் இல்லை என்பது இப்போது தெரிந்து விட்டது.

    மக்கள் மனபக்குவம் அடைந்து விட்டார்கள். அது தான் சுடுகாட்டுபக்கம் வாழ பழகிவிட்டார்கள்.



    பதிலளிநீக்கு
  20. "என்ன! அவர்கள் உயிரின்றி எரிந்துகொண்டும் புதைந்து கொண்டும் இருகிறார்கள் நாம் உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்!"


    நகரவாழ்வின்...உண்மைநிலையும்,வாழ்வின் நிலையாமையையும் சொல்லி இருக்கின்றீர்கள் .....

    பதிலளிநீக்கு
  21. தெலுங்கு வருடப் பிறப்பு உகாதிதின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யார் ???
    உறங்குவதுபோலும் சாக்காடு ...

    சமரசம் உலாவும் இடம்...

    நம் வாழ்வில் காணா சமரசம் உலவும் இடமே என்று சுடுகாட்டில் பாடும் பழைய புகழ்பெற்ற பாடல் ஒன்று உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம் அது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. வந்திருந்தால் பதிவில் குரிப்பிட்டிருப்பேன்.

      நீக்கு
  23. வணக்கம்
    முரளிதரன்(அண்ணா)

    நல்ல சமுதாய சிந்தனையுள்ள பதிவு கண்ணதாசன் தன் பாடலில் சொன்னது போல(ஆடிஅடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா”) அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. *** நகர்ப்புரங்களில் பக்கத்து வீட்டில் யாரேனும் இறந்தால் கூட தினசரி நடவடிக்கைகளில் எந்த (இயற்கையாக வயது முதிர்வின் காரனமாக ஏற்படும் மரணம் மட்டும்) பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.***

    அவங்க வீட்டிலேயே எழவு விழும்போதாவது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தினால் சரிதான்!

    பதிலளிநீக்கு
  25. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.


    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895