என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2013


  இரண்டு ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறேன். ஏராளமான கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் தங்கள் அருமையான படைப்புகளை அளித்து வருகிறார்கள்.நான் பார்க்காத, கவனிக்காத படைப்பாளிகளும் இன்னும் நிறையப் பேர் உண்டு.தினந்தோறும் கல்லூரி மாணவர்கள்,நடுத்தர  வயதினர்,ஒய்வு பெற்றோர் என வயது வித்தியாசமின்றி தினந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டிருப்பது இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

    இதில் பெண்களின் பங்களிப்பு ஆச்சர்யப் படுத்தும் அளவுக்கு உள்ளது. சமூகம் நகைச்சுவை,கவிதை சிறுகதை என்று பலதரப்பட்ட பிரிவுகளில் தரமான பதிவுகள் தந்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் பிரிவில் மட்டும்தான் பெண்களை அதிக அளவில் காண முடியவில்லை அல்லது என்கண்ணில் படவில்லை.
  இவர்கள்  அளிக்கும் படைப்புகள் பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகளைவிட தரமானதாகவும் உள்ளது.

   இவர்களில் பலர் பிரபல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இணையத்தில் மட்டுமே  எழுதி வருகிறார்கள். இத்தகைய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல பத்திரிகைகள் தினமலர்,கல்கி போன்ற  பத்திரிகைகள் போட்டிகளை அறிவித்து வருகின்றன.

   தற்போது கல்கி வார இதழ் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள் .இதோ அதன் விவரம்

அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2013
 முதல் பரிசு      ரூ.10000/-
இரண்டாம்  பரிசு  ரூ.7500/-
மூன்றாம்  பரிசு   ரூ 5000/-

இது  தவிர பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப் படும் கதைகளுக்கும் பரிசு உண்டு.
சிறுகதைகள்  கல்கி அலுவலகத்துக்கு சேர வேண்டிய கடைசி தேதி 15.06.2013. முடிவுகள் 04.08.2013 இதழி வெளியாகும்

யார் வேண்டுமானாலும் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு சிறுகதையை அனுப்பும்போதும் கல்கி இதழில் வெளியான கூப்பனை கத்தரித்து இணைத்து அனுப்ப வேண்டும்.

பிற விதிமுறைகள்
 1. கல்கியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது .
 2. சொந்தக் கற்பனை என்பதற்கான உறுதிமொழிக் கடிதம் வேண்டும்.அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்பட மாட்டா.
 3. அறிமுக எழுத்தாளர்கள் எனில் இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலும் எழுதியது இல்லை என்றும் போட்டி முடிவு அறிவிக்கும் வரை எழுதுவதில்லை என்ற உறுதிமொழி தரவேண்டும்.
 4. முழு வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவேண்டும் 
 5. தேர்வாகாத கதைகளை திரும்பப் பெற போதிய தபால் தலை ஒட்டப்பட்ட அஞ்சல் உரைகளை இணைக்க வேண்டும் பின்னால் தனியே அனுப்பிப் பயனில்லை.
 6. போட்டிக்கு அனுப்பும் கதையை முடிவுகள் வெளியாகும் வரை வேறு இதழுக்கோ இணைய தளத்துக்கோ வலைப்பதிவுகளுக்கோ போட்டிக்கு அனுப்பவோ வெளியிடவோ கூடாது.
 7. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்து தேர்ந்தெடுக்கும். சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதி 
 8. முடிவு வெளியாகும் வரை எவ்வித கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி ஈ மெயில் விச்சரிப்புகளோ கூடாது
 9. "அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2013" என்று உறை மேல் குறிப்பிட வேண்டும் 
 10. கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி 
ஆசிரியர் ,
கல்கி,
கல்கி  பில்டிங்க்ஸ்,
47 NP, ஜவஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்

சென்னை 32 
***********
 பதிவுலக  தமிழ் படைப்பாளிகளே இந்த போட்டியில் கலந்து கொள்வீர். உங்கள் சிறுகதை எழுதும் திறனை காட்டுங்கள். நம்மில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி அடைவேன். போட்டியில் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பின்னர் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

******************************************************************************************

35 கருத்துகள்:

 1. போட்டியில் கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்......

  பதிலளிநீக்கு
 2. விளக்கமான தகவலுக்கு நன்றி... கலந்து கொள்வோருக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. நானும் கல்கியில் கவனித்தேன் சார்... நல்ல வாய்ப்பு... திறமை இருப்பவர்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  பதிலளிநீக்கு
 4. //நம்மில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி அடைவேன். போட்டியில் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பின்னர் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாம்.
  // - நல்ல நோக்கத்துடன் தகவலை வெளியிட்டுள்ளீர்கள். மிக மிக நன்றி!

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்வு. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் உதவ கூடிய பகிர்வை பகிர்ந்தற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. இந்த அறிவிப்பு வெளியான கல்கி இதழின் தேதி வேண்டும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. 14.04.2013 இதழில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் பின்னர் வரும் ஒவ்வொரு இதழிலும் கடைசி தேதி முடியும் சில நாட்கள் வரை அறிவிப்பு தொடர்ந்து வெளியாகும்.
  தாங்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வதற்கு வாழ்த்துக்கள் மேடம்

  பதிலளிநீக்கு
 9. நல்ல பகிர்வு சகோ. பங்குகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. பதிவுலக தமிழ் படைப்பாளிகளே இந்த போட்டியில் கலந்து கொள்வீர். உங்கள் சிறுகதை எழுதும் திறனை காட்டுங்கள். நம்மில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி அடைவேன். போட்டியில் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பின்னர் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாம். //

  உற்சாகம் ஊட்டும் அழைப்பு. உங்களுக்கு நன்றி.
  போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. எழுத்தாளர்களுக்கு ஊக்கமூட்டும் நல்ல பகிர்வு. நன்றி

  பதிலளிநீக்கு
 12. உற்சாகம் ஊட்டும் அழைப்பு. உங்களுக்கு நன்றி.
  போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. நானும் என் முக நூலில் பகிர்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 14. எழுத்தாளர்களுக்கு பயனுள்ள தகவலை வழங்கிய உங்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு


 15. நல்ல அறிவிப்பு! ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணையத்தில் நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள். அவர்கள் ஒருவேளை ஆர்வம இருப்பின் கலந்து கொள்ளட்டும் நன்றி ஐயா!

   நீக்கு
 16. அனைவருக்கும் உதவ கூடிய பகிர்வை பகிர்ந்தற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 17. மிக நல்ல தகவல். விளக்கமாக கொடுத்ததற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 18. Can anybody post here the results

  பதிலளிநீக்கு
 19. ஐயா , நான் வெளியூரில் உள்ளேன் . இங்கு கல்கி புத்தகம் கிடைப்பதில்லை. யாரேனும் இப்போடிக்கான முடிவுகள் இங்கு வெளியிட்டால் , என்னை போல் உள்ளவர்களுக்கு உதவியாய் இருக்கும் , நன்றி

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895