என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்! எ. ப .கு. க.

  எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2

கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!

  சார்! எனக்கு கூகுள்னா ரொம்ப புடிக்கும்.இன்டர்நெட்டுன்னு சொன்னாலே கூகுள் தானே சார் ஞாபகம் வரும். எனக்கு காலையில கூகிள் மூஞ்சிலதான் முழிக்கணும். தூங்கறதுக்கு முன்னாடி கூகுளுக்கு குட்நைட்  சொல்லணும்.  சின்ன குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை எதைத் தேடறதுக்கும்  அதிகம் யூஸ் பண்றது  கூகுள்தன சார். கூகுளுக்கு நான் அடிமையாயிட்டனாம். என் பிரண்ட்சும் அப்படித் தான் சொல்றாங்க எங்க வீட்லயும் அப்படித்தான் சொல்றாங்க! அதனால என்ன எல்லாரும் கூகுள்தாசன்னு கூப்பிடறாங்க! இப்படிதான் சிலர் முகநூலுக்கு அடிமையா இருக்காங்க. அவங்கள யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாங்க. 

  கொஞ்சநாளா இப்படித்தான் சார் நடக்குது. இத படிச்சிட்டு சொல்லுங்க நியாயத்தை.

ஆபீஸ் மேனேஜர்: ஜெய்ப்பூர் சென்னையில இருந்து எவ்வளோ தூரம் ?
கூகுள்தாசன்: கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன் சார்!

நண்பன்:  சேதன் பகத் கடைசியா எழுதின புத்தகம் என்னப்பா?
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

நண்பர்:  அம்மா உணவகம் எக்மோர்ல இருக்கா?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

ஊருக்கு போன மனைவி(கைபேசியில்): ஹலோ என் தம்பி குழந்தைக்கு நாமதான் பேர் வைக்கனுமாம் குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

மகன்: சயின்ஸ் ப்ராஜெக்ட் ஒண்ணு பண்ணணுமாம்?என்னப்பா பண்றது?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
தங்கை: பரதேசி படம் எங்க ஓடுது சொல்லு:
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
தாத்தா: திருப்பதில பிரம்மோற்சவம் எப்போ?:
கூகுள்தாசன் : கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
  
அக்கா:தங்கம் விலை இன்னைக்கு என்ன?
கூகுள்தாசன்:கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

பாட்டு கற்றுக்கொள்ளும் மகள்; இந்த பாட்டு என்ன ராகம்?
கூகுள்தாசன்: கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
அப்பா: இந்த மருந்து இங்க கிடக்கல/எங்க கிடைக்கும்னு தெரியலையே?
கூகுள்தாசன் :கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.
 
அம்மா: ஊருக்கு போன உன் பொண்டாட்டி எப்ப வருவா?
கூகுள்தாசன் : இரும்மா  கூகுள்ல தேடிப் பார்த்து சொல்லறேன்.

அம்மாவுடன் சேர்ந்து மற்றவர்களும் முறைக்காறாங்க சார். நான்  செல்போனுடன் பாத்ரூமுக்கு  எஸ்கேப் ஆகி அங்க போய் கூகுள்ல தேட வேண்டியதா இருக்கு சார். நீங்கதான் சார் சரியான தீர்ப்பு சொல்லணும்.


**************************************************************************

இந்தப்  பதிவ போட்டு முடிக்கறதுக்குள்ள மின்னல் வரிகள் கிட்ட  இருந்து ஒரு போன்.

அவர் பேசுவதற்கு முன்பாக நான் "சார் நான் பதிவு போடறதுக்குள்ள தெரிஞ்சுபோச்சா?.போன்லயே பின்னூட்டமா! ரொம்ப தேங்க்ஸ் சார்."

"முரளி! உனக்கே ஓவரா தெரியல! இந்த மாதிரி மொக்க பதிவை போடறத எப்போ நிறுத்தப் போற! அதுக்குத்தான் போன் பண்ணேன்"

 "இருங்க சார்! கூகுள்ல பாத்து சொல்றேன்." ன்னு நான் சொல்ல (கூகுள் இலவச பிளாக்கிங் அனுமதிக்கறவரை தானே)   கடுப்பே ஆகாத ஆகாத பாலகணேஷ் கடுப்பாகி கட்செய்தார் ஃபோனை. 

 ***********************************************************************************
சுட்டதோட சேத்து கொஞ்சம் ஓட்ட வச்சது 
சுட்ட இடம்:google search 
.

***************************************************************************************

எட்டிப்  பார்த்து படித்த குட்டிக் கதை 1


49 கருத்துகள்:

 1. நடைமுறையில் உள்ள உண்மையை நல்ல நகைச்சுவையாக சொல்லிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. கூகிள் அடிமைக்கு பொண்டாட்டியை தேட கூட கூகிள் தேவைப்படும் அளவுக்கு நம்மை கூகிள் அடிமைபடுத்திவிட்டதோ

  பதிலளிநீக்கு
 3. ஹா... ஹா... கூகுள்ல தேடிப் பார்த்து
  சிரிக்கலைங்க...

  மின்னல் வரிகளையே ஷாக் அடிக்க வைச்சிட்டீங்களே...! அவர் சொன்னா சரியாத்தானிருக்கும்... ஹிஹி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா! இப்படி காலை வாரி விட்டுட்டீங்களே சார்!

   நீக்கு
  2. சும்மா ஜாலிக்குத் தானே... சார் மட்டும் காணோம்... கோவிச்சிட்டாரோ...?

   எனது தளத்தில் இட்ட சந்தோஷ கருத்துக்கு மிக்க நன்றி... எனது புதிய பகிர்வுகள் உங்களது dashboard-ல் வருவதில்லையா...? உங்களுக்கும் மெயில் அனுப்புகிறேன்... இன்றும் ஒரு புதிய பகிர்வை பகிர்ந்துள்ளேன்... வாசிக்கவும்... நன்றி...

   நீக்கு
 4. கூகிள் தாசனே நீர் வாழ்க.. நல்ல வேள மின்னல் வரிகள கூகிள் ல தேடாம இருந்தீங்களே மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 5. சூப்பர் ...ஓவர்..... கடைசியா கூகிளையும் முழிகவச்சிடாதீங்க இலவசமா பிளாக்கிங் தரவ்ரைக்கும் சொல்லிடீங்கலெ ஆப்பு வந்துட போகுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணம் குடுக்கணும்னா என்னை மாதிரி பாதி பேர் பாதி பதிவர் காணாம போய்டுவாங்க!

   நீக்கு
 6. நடைமுறையை நகைச் சுவையுடன்
  அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நல்ல நகைச்சுவை... ஆனாலும் சிந்திக்கவும் வைக்கிறது.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. மொக்கைப் பதிவோ சக்கைப் பதிவோ, ஒரு அருமையான புனை பெயர் [கூகிள் தாசன்] கண்டுபிடிச்சிருக்கீங்க. யாராவது கேட்டா, நல்ல விலைக்கு வித்துடுங்க முரளி!!!

  பதிலளிநீக்கு
 9. சிரிக்க சிந்திக்க நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. ஹா..ஹா இதுக்கு என்ன பின்னூட்டம் போடலாம்? இருங்க கூகுள்ள பார்த்திட்டு போடறேன்....!!!
  சுட்ட படம் சூடான சுவை!

  பதிலளிநீக்கு
 11. சுட்டதோட சேர்த்து ஒட்ட வச்சது அருமை யாராவது கரண்ட் இருக்கானு கேட்டா கூகில்ல தேடிப்பார்த்து சொல்லுறேனு சொல்லியிருக்கிங்களா?

  பதிலளிநீக்கு
 12. நகைச்சுவை கலந்த உண்மை... அருமை சார்

  பதிலளிநீக்கு
 13. மின்சாரத்தை தேடிக்கொண்டு இருப்பதாக சொன்னதுதான் ‘டாப்’

  பதிலளிநீக்கு
 14. கூகுள் ஆண்டவா....
  இவர்களைக் காப்பாற்றுப்பா...!!

  பதிலளிநீக்கு
 15. கொஞ்சம் இருங்க, கூகிள்ல தேடிப் பார்த்து ஒரு கமெண்ட் போடறேன்.

  பதிலளிநீக்கு
 16. நகைச்சுவை என்றாலும் நடைமுறையை பிரதிபலித்த பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. கரண்ட் இன்றி எதுவும் நடவாது. அருமை சார்

  பதிலளிநீக்கு
 18. நடைமுறையை அழகான நகைச்சுவையில் சொல்லியிருக்கீங்க... அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 19. கூகுளா அப்படின்னு என்னனு கூகிள்ல தேடிப்பார்த்து சொல்றேன் ஜீ
  நாடி கவிதைகள்

  பதிலளிநீக்கு
 20. ஆஹா ,நல்லா சிரிக்க வைச்சிங்கப்பா.... நன்றி...

  பதிலளிநீக்கு
 21. Loose.....பெண்டாட்டீ எப்ப வருவா? கூகிளில் பார்த்துச் சொல்கிறேன்...லூசு....
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 22. இதெல்லாம் காலத்தின் கட்டாயம் மக்களே... ஒன்னுமே பண்ண முடியாது... நன்றி பகிர்வுக்கு

  Plz Visit :- http://www.puthiyaulakam.com

  பதிலளிநீக்கு
 23. கூகுளில் தேடியவைகளையாவது மனசில் வைத்துக்கொள்கிரீர்களா இல்லே அதையும் எங்கே வைத்தேன் என்று கூகுளில்தான் தேடவேண்டுமா?வேடிக்கையாய் சொன்னாலும் இன்றைய கூகுள்தாசன்க்ள் சிந்திக்கவேண்டிய பதிவு

  பதிலளிநீக்கு
 24. இந்த மூங்கில் காற்று முரளிதரன் பற்றிய சேதிகளைக் கொஞ்சம் கூகிளைப்பார்த்து சொல்லுங்களேன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895