என்னை கவனிப்பவர்கள்

போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஏப்ரல், 2014

புரோகிதரே போதும் -சொன்னவர் யார்?

    

  
  கீழே ஒரு பிரபல கவிஞரின்  கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத்  தேடினேன். அது கிடைக்கவில்லை. வேறுசில கவிதைகளே கிடைத்தன.  அவற்றில் என்னைக் கவர்ந்த மூன்றை மட்டும் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  

   ஒரு சின்ன போட்டி. இந்தக் கவிதைகளை எழுதியவர் யாரென்றுசொல்ல வேண்டும் . 
இந்த மூன்று கவிதைகளிலும் கொஞ்சம் திருத்தங்கள் செய்திருக்கிறேன்.  கவிஞரின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக!

இரண்டு பேருக்கு மட்டும் நிபந்தனை . பதிவின் முடிவில் பார்க்க 



புரோகிதரே  போதும் 


வந்து திரும்ப 
வழி செலவுத் தொகை ,
ஏசி வசதியுள்ள விடுதி,
சுண்டக் காய்ச்சிய பசும்பால், 
முந்திரிப் பருப்பு 
முடிந்தால் 
முயல் கறி; மான்கறி 
முக்கியம் பிரியாணி

கடிதம் கண்டதும் 
ஆசையாய்  
சீர்திருத்தத் திருமணம் 
செய்யக் கருதிய 
தனபாலனுக்கு தலை சுற்றியது 
அவனையும் மீறி வாய் கத்தியது 
"அம்மா சொன்ன 
அய்யரே போதும்"



கடவுளைத் தேடி 

"இருக்கிறார்  கடவுள் "
"இல்லை கடவுள்" 
வாதம் பிறந்தது ;
மோதல் வளர்ந்தது 

இப்போது 
இல்லை ஒருவர் இங்கே 
இன்னொருவர் இருக்கிறார் 
தலைமறைவாக  


தமிழ்ப் பற்று 

தேவ பாஷை 
சாஸ்திரி ஒருவர் 
சபையில் சொன்னார் 
"ஜாதி வேண்டும் "
"ஜாதி வேண்டும் "

சீறி எழுந்தார் 
தமிழ்மறவர் ஒருவர் 
ஓங்கிக் கத்தினார்
"ஒய்! ஓய்!
இனி நீர் 
ஜாதி வேண்டும் என்றால் 
 பொறுமையாக 
இருக்க முடியாது  என்னால் 
'சாதி' வேண்டும் என்று 
சரியாய் சாற்றும் 


**************************************************


1. கவிஞர் முத்துநிலவன் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம் . தனியாக மின்னஞ்சல் அனுப்பவும் 


2. தேடல் மன்னன் வௌவால் இணையத்தில்   தேடாமல் இதற்கு பதில் சொல்வதென்றால் சொல்லலாம் .

விடை அறிய கீழே க்ளிக் செய்யவும்
கவிஞரின் பெயர்

****************************************************

படித்து விட்டீர்களா?




திங்கள், 14 அக்டோபர், 2013

பெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்னும்

பெட்டிக்கடை 4
ஊஞ்சல்  புதிருக்கான விடை
கடந்த பெட்டிக் கடையில் ஊஞ்சல் ஆடுவது பற்றி ஒரு புதிரைக் குறிப்பிட்டிருந்தேன். (புதிரை  படிக்க இங்கு கிளிக் செய்க )அதன் விடையை வவ்வால் சரியாக சொல்லி விட்டார். அதற்கான விளக்கங்களும் விரிவாக அவரே கருத்தில் சொல்லி விட்டதால் இப்போது அதை விளக்கப் போவதில்லை
  விடை . தாத்தா பாட்டி, அம்மா அப்பா, குழந்தைகள் மூன்று பேருமே எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றே.
இது தனி ஊசல் பாடம்,சுவாரசியமாக சொல்லிக் கொடுப்பதற்காக நான் உருவாக்கிய புதிர். ஊசல்(ஊஞ்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்) மெதுவாக ஆடினாலும் சரி வேகமாக ஆடினாலும் சரி அலைவுநேரம் மாறாது. ஊசலின் நீளம் மாறினால் மட்டுமே அலைவு நேரம் மாறும்.
இது பற்றி சுவாரசியமான விஷயம் உண்டு .
     இந்த  உண்மையை கண்டறிந்தவர் கலீலியோ. ஒரு சர்ச்சுக்கு சென்றிருந்தபோது தற்செயலாக சர்ச்சில் சங்கிலியில் கட்டி தொங்க விடப்பட்ட விளக்கு காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை  கவனித்தார்.அதை உற்று நோக்கிய கலீலியோ, அது காற்றின் வேகத்திற்கேற்ப எப்படி ஆடினாலும் ஒரு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரே அளவாக இருந்தது.  கூடுதல் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது  கடிகாரம் கண்டுபிடிக்கப் படவில்லை.  பின் எப்படி இந்த உண்மையைக் கண்டறிந்தார். விளக்கின் அலைவை தன் நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டார்.  இந்த உண்மை அறியப்பட்ட  காலம் கி.பி. 1642.
     இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? பெண்டுலம் கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு இதுதான் அடிப்படையாக அமைந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிகாரம் தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்தார் கலீலியோ . ஆனால் முடியவில்லை.  இதை அடிப்படையாக வைத்து  டச்சு நாட்டு அறிஞர்  ஹைஜென்ஸ் என்ற விஞ்ஞானிதான் வெற்றிகரமாக முதல் கடிகாரத்தை உருவாக்கினார். தனி ஊசல் பாடம் நடத்தும்போது பெரும்பாலான ஆசிரியர்கள் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே! அலைவு நேரம் கண்டுபிடிக்கும் சோதனை எதற்காகப் பயன்பட்டது என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அந்த ஆசிரியரின் பெயரை சொல்லுங்கள் பாராட்டு விழா நடத்தி விடலாம்.
இன்னும் விளக்கமாக எழுதினால் பயந்து  ஓடி (ஒட்டி) விடுவார்கள் என்பதால்  இதன் தொடர்ச்சியை தற்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்.

***************************************************************************************************
சச்சின் ஒய்வு
ஒரு வழியாக சச்சின் தனது ஓய்வை அறிவித்து விட்டார். எவ்வளவுதான் புகழும் பணமும் சம்பாதித்தாலும், திறமை குறைந்து போனதை அறிந்த பின்னும் விலக மனமின்றி துரத்தும் வரை விடாப் பிடியாக இருப்பது இந்திய வீர்கள் மட்டுமே. சச்சின் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை. அதிக அளவில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்ததே ஒரு சாதனைதான். என்ன? கொஞ்சம் முன்னரே ஒய்வு அறிவித்திருக்கலாம்!

    ஓய்வை அறிவித்து விட்டதால் விமர்சித்தவர்கள் கூட கொஞ்ச நாளைக்கு அவருடைய தலையில் தூக்கி வைத்துக் கொண்டு  கொண்டாடுவார்கள். ஓய்வுக்குப் பின் ஒரு எம்பியாக கிரிக்கெட் மட்டுமல்லாது மற்றவிளையாட்டுகளையும் வளர்ப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்றே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. செய்வாரா அல்லது எம்பி சலுகைகளை அனுபவித்துக் கொண்டு மௌனமாகவே இருந்து விட்டுப் போய்விடுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

சச்சின்  தொடர்பான பிற பதிவுகள்
சதத்தில் சதம்! சச்சினுக்கு ஒரு வாழ்த்துப்பா!
சச்சினுக்கு ஒரு கடிதம்.
**********************************************************************************************
ஈஞ்சம்பாக்கம் சீரடி  சாய்பாபா கோவில்

நீலாங்கரையை தாண்டி ஈன்ஜம்பாகாத்தில்  உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு மாதம் ஒருமுறை போவது வழக்கம். கிழக்கு கடற்கரை சாலையில்  பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைதியான சூழலில் கோவில் அமைந்திருக்கிறது. கொஞ்சம் பெரிய பரப்பளவில் அழகான மரங்களும் செடிகளும் நிறைந்த சோலைக்குள் கோவில் கட்டப் பட்டிருக்கிறது. மாலை 6 மணிக்கு சென்றால் வெளியில் பறந்து திரிந்து கூடு சேரும் கீச்சு கீச்சு என்று பறவைகளின் ஒலியும், வங்கக் கடலின் அலை ஓசையும் நமது செவிகளுக்குள் நுழைந்து ஒரு ஆனந்தத்தை தரும். வட மாநில மக்கள் பலரை இங்கு காண முடிகிறது. விடுமுறை நாட்களில் சில திரை உலக பிரபலங்களும்  இங்கு வருவதுண்டு. கோயிலை ஒருமுறை சுற்றி காலாற நடந்து வந்தால்  மனம் லேசாகத்தான் ஆகிறது.
வெளியே  வந்தால் கோயிலை ஒட்டி சிறிது நடந்தால் கடற்கரை. சிது நேரம் செலவழித்து வங்கக் கடலின் அழகை ரசித்து திரும்பலாம்.

 பக்கத்து காம்பவுண்ட் ராதிகாவின் ராடன் ஹவுஸ்

********************************************************************************************
ரூபனின்  கவிதைப் போட்டி
தீபாவளியை ஒட்டி பதிவர் ரூபன் ஒரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தார்.


போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
  போட்டிக்கு கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 31.10.2013 என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு  
இந்த  இணைப்பிற்கு சென்று பார்க்கவும். எத்தனை கவிதைகள் இதுவரை வந்திருக்கிறது என்று தெரியவில்லை.கவிஞர்களே உங்கள் படைப்புகளை விரைந்து அனுப்புங்கள். 
திடங்கொண்டு போராடு சீனுவைத் தொடர்ந்து தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஏராளமான பரிசுகளை அறிவித்து கவிதைப்  போட்டியினை நடத்தும் தம்பி ரூபனுக்கு, கவிஞர்களே உங்கள் அழகான படைப்புகளை அனுப்பி ஆதரவு வழங்குங்கள். 
நான் ரூபன்!,இது வரை எத்தனை பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.

********************************************************************************************
ஒரு பஞ்ச் கவிதை 

             தற்கொலைக்கு  முயற்சிக்காதே!
             ஏற்கனவே  நீ 
             இறந்திருக்கலாம்!

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

எதிர்பார்க்கவே இல்லை-ஆதலினால் காதல் செய்வீர்!

   மன்னிக்கவும் இது சினிமா விமர்சனம் இல்லை.  "திடம் கொண்டு போராடு" சீனு வைத்த காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்தியதைத்தான் குறிப்பிட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக ஆதலினால் காதல் செய்வீர் என்று பதிவுலகையே கலக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பதிவர்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி காதலைப் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார்.

போட்டியில்  கலந்துகொண்ட ஒவ்வொருவரும் எழுதிய கடிதம் அப்பப்பா. உருகி உருகி காதல் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தோட,  இள வயதில் காதலிக்கத் தவறியவர்கள் காதலிக்காமல போய்விட்டோமே என்ற ஏக்கத்தை நிச்சயம் அடைந்திருப்பார்கள், காதலித்தவர்கள் தான் காதலித்த காலத்திற்கு பயணம் செய்து வந்திருப்பார்கள், இன்னும் சிலரோ இனிமேலாவது காதலித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.

இதில் இப்போட்டியில் பரிசு பெற்றதாக அறிவிக்கப் பட்ட 9 கடிதங்களில் 6 கடிதங்களை எழுதியவர்கள் பெண்களே! அதுவும் முதல்  மூன்று பரிசுகளில் நுட்பமாகவும் அழகுடனும்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்பதை இம்முடிவுகள் பறை சாற்றுகின்றன.
(ஜீவன்  சுப்பு மூன்றாம் இடம் பிடித்து ஆண்களின் மானம் காத்தார். நானும் ஹிஷாலியும் ஆறுதல் பெற்றோம்.)
அத்தனை  கடிதங்களையும் படித்துவிட்டு அந்தக் கடிதங்களுக்கு விமர்சனம் எழுதி நான் ரசித்தபடி வரிசைப் படுத்தி பதிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கவிதையாகப் படிக்கப் படிக்க முடிவெடுக்க முடியாமல் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.

எந்தக்  கடிதத்தை படித்தாலும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்றே தோன்றும். நடுவர்களின் பாடு உண்மையில் திண்டாட்டமாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. திடம் கொண்டு போராடித்தான் கவிதைகளை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.


   சீனு மேலே உள்ளவாறு சொன்னபோதும் (என்னை கலாய்க்கிறாரோ என்றுகூட நினைத்தேன், ஐயம் கூட உண்டானது) நான் அவ்வளவாக ஆர்வம் கட்டவில்லை.

போட்டிக் கடிதங்களில் பெரும்பாலானவற்றை படித்து விட்டேன் ஒன்றிரண்டைத் தவிர.கலந்து கொள்ளவேண்டும் நினைத்தாலும் மற்ற கடிதங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் எழுத முடியுமா என்ற ஐயமும் ஏற்பட்டது. அதுவும் இந்தக் கடிதங்களில் இருந்து சற்றாவது மாறுபட்டிருந்தால் மட்டுமே நடுவர்களான  ஜீனியஸ் அப்பாதுரை, பல்துறை வித்தகி ரஞ்சனி நாராயணன், நகைச்சுவை திலகம்  பாலகணேஷ், பாசிடிவ்  ஸ்ரீராம் -இவர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும். ஜூலை 20 வரை டைம் இருக்கிறதே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
 ஒருவேளை போட்டியில் பங்குபெற்றால் அந்த கடிதத்தில் என்னென்ன இருக்கவேண்டும் என்னென்ன இருக்கக் கூடாது என்று நானே வரையறை வைத்துக் கொண்டேன்.
அதில் ராட்சசியே, பிசாசே, போன்ற வார்த்தைகள் இடம் பெறக்கூடாது என்று முடிவு செய்தேன். கடிதத்தில் எந்த இடத்திலும் காதல் என்ற வரத்தை இடம்பெறாமல் இருத்தல் நலம் என்று நினைத்தேன். மனப்பக்குவமும்,புத்திசாலித்தனமும்,வெளிப்படும் வண்ணம் அமையக் கூடாது. சொல்ல வேண்டிய விஷயங்களை இப்படிப் பிரித்துக் கொண்டேன்.
  1. .காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லவேண்டும்
  2. பழைய  நினைவுகளை சொல்லவேண்டும்.
  3. காதலியின்  அழகை கொஞ்சமாவது வர்ணிக்க வேண்டும் 
  4. .காதலிக்காக இயல்பை மாற்றிக்கொன்டதை சொல்லவேண்டும்
  5. காதலியை யாராது ஏதாவது சொன்னால் தாங்கிக்கொள்ள  முடியாதென்பதை சொல்லவேண்டும் 
  6. உனக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதையும் தெரிவிக்கவேண்டும்.
  7. கொஞ்சம்  நகைச்சுவை இருக்கவேண்டும்.
  8. காதலியைத் தவிர வேறுஎந்தப் பெண்ணையும் பிடிக்காது என்பதையும் உணர்த்த வேண்டும்.
  9. நண்பர்களுடைய நடைமுறைக்கொவ்வாத காதலை சொல்லவேண்டும் 
  10. எதிர்கால கனவை சொல்லவேண்டும் 
  11. வித்தியாசமான வடிவத்தில் சொல்லவேண்டும். 
எப்படியோ  இவற்றை எல்லாம் இணைத்து கடிதம் உருவாக்கி விட்டாலும் திருப்தி ஏற்படாமல் பதிவை வெளியிடாமல் இருந்தேன். திடீரென்று சென்னை தமிழில் எழுதினால் என்ற எண்ணம் உதிக்க, எழுதப் படிக்க தெரிந்தவராக இருந்தால் தூய தமிழில் அல்லவா எழுதுவர் என்ற லாஜிக் உதைக்க எப்படியோ செல்போனில் வாயால் பேசி பதிவு செய்வதுபோல் கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம்  எழுதி ஒப்பேற்றினேன்.
போட்டிக்கான கடைசி நாளில் bsnl சதி செய்ய அடுத்த நாள்தான் காலையில்தான் வெளியிட முடிந்தது. போட்டியில் சேர்க்கப் படுமோ படாதோ என்ற ஐயம் இருந்தது. சேர்த்துக் கொண்டதாக தகவல் அறிந்தேன்.
கருத்திட்ட அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன் அவர் எழுதிய காதல் கடிதத்தை நீக்கி விட்டாவது எனது கடிதத்தை சேர்க்கச் சொல்லி சீனுவிடம் கோரிக்கை விடுத்தபோதே பரிசு பெற்ற மகிழ்ச்சி அப்போதே கிடைத்து விட்டது.  அதுவே போதுமானதாக இருந்தது.
மனமார்ந்த நன்றிகள் மதுரை  தமிழன்
101 ஒட்டு போடுவேன் என்றுசொல்லி வரிவரியாக விமர்சித்த உஷா  அன்பரசுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
ஆறுதல் பரிசு பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை மதுரை தமிழனுக்கும் உஷா அன்பரசுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
படித்து ரசித்து கருத்திட்ட அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். 
  நகைச்சுவை என்று நினைத்து ஒதுக்கி விடாமல் பரிசீலித்து பரசளித்த நடுவர்கள்  நால்வருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்

இத்தனைக்கும் மேலாக தனி மனிதனாக சிந்தித்து சிறப்பான நடுவர்களை அமர்த்தி பதிவுலகின் படைப்பாற்றலை ஊக்குவித்த சீனுவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும்  பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட முன்னுதாரணமாகத் திகழும்
என்பதில் ஐயமில்லை.

போட்டியில் வென்ற  

சுபத்ரா, கோவைமு.சரளா,ஜீவன் சுப்பு, கண்மணி, ஹிஷாலி, தமிழ்செல்வி, சசிகலா, ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************************************************************

கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -

 

திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள் 

***********************************************************************************************************


செவ்வாய், 16 ஏப்ரல், 2013

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2013


  இரண்டு ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறேன். ஏராளமான கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் தங்கள் அருமையான படைப்புகளை அளித்து வருகிறார்கள்.நான் பார்க்காத, கவனிக்காத படைப்பாளிகளும் இன்னும் நிறையப் பேர் உண்டு.தினந்தோறும் கல்லூரி மாணவர்கள்,நடுத்தர  வயதினர்,ஒய்வு பெற்றோர் என வயது வித்தியாசமின்றி தினந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டிருப்பது இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

    இதில் பெண்களின் பங்களிப்பு ஆச்சர்யப் படுத்தும் அளவுக்கு உள்ளது. சமூகம் நகைச்சுவை,கவிதை சிறுகதை என்று பலதரப்பட்ட பிரிவுகளில் தரமான பதிவுகள் தந்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் பிரிவில் மட்டும்தான் பெண்களை அதிக அளவில் காண முடியவில்லை அல்லது என்கண்ணில் படவில்லை.
  இவர்கள்  அளிக்கும் படைப்புகள் பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகளைவிட தரமானதாகவும் உள்ளது.

   இவர்களில் பலர் பிரபல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இணையத்தில் மட்டுமே  எழுதி வருகிறார்கள். இத்தகைய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல பத்திரிகைகள் தினமலர்,கல்கி போன்ற  பத்திரிகைகள் போட்டிகளை அறிவித்து வருகின்றன.

   தற்போது கல்கி வார இதழ் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள் .இதோ அதன் விவரம்

அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2013
 முதல் பரிசு      ரூ.10000/-
இரண்டாம்  பரிசு  ரூ.7500/-
மூன்றாம்  பரிசு   ரூ 5000/-

இது  தவிர பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப் படும் கதைகளுக்கும் பரிசு உண்டு.
சிறுகதைகள்  கல்கி அலுவலகத்துக்கு சேர வேண்டிய கடைசி தேதி 15.06.2013. முடிவுகள் 04.08.2013 இதழி வெளியாகும்

யார் வேண்டுமானாலும் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு சிறுகதையை அனுப்பும்போதும் கல்கி இதழில் வெளியான கூப்பனை கத்தரித்து இணைத்து அனுப்ப வேண்டும்.

பிற விதிமுறைகள்
  1. கல்கியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது .
  2. சொந்தக் கற்பனை என்பதற்கான உறுதிமொழிக் கடிதம் வேண்டும்.அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்பட மாட்டா.
  3. அறிமுக எழுத்தாளர்கள் எனில் இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலும் எழுதியது இல்லை என்றும் போட்டி முடிவு அறிவிக்கும் வரை எழுதுவதில்லை என்ற உறுதிமொழி தரவேண்டும்.
  4. முழு வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவேண்டும் 
  5. தேர்வாகாத கதைகளை திரும்பப் பெற போதிய தபால் தலை ஒட்டப்பட்ட அஞ்சல் உரைகளை இணைக்க வேண்டும் பின்னால் தனியே அனுப்பிப் பயனில்லை.
  6. போட்டிக்கு அனுப்பும் கதையை முடிவுகள் வெளியாகும் வரை வேறு இதழுக்கோ இணைய தளத்துக்கோ வலைப்பதிவுகளுக்கோ போட்டிக்கு அனுப்பவோ வெளியிடவோ கூடாது.
  7. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்து தேர்ந்தெடுக்கும். சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதி 
  8. முடிவு வெளியாகும் வரை எவ்வித கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி ஈ மெயில் விச்சரிப்புகளோ கூடாது
  9. "அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டி 2013" என்று உறை மேல் குறிப்பிட வேண்டும் 
  10. கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி 
ஆசிரியர் ,
கல்கி,
கல்கி  பில்டிங்க்ஸ்,
47 NP, ஜவஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்

சென்னை 32 
***********
 பதிவுலக  தமிழ் படைப்பாளிகளே இந்த போட்டியில் கலந்து கொள்வீர். உங்கள் சிறுகதை எழுதும் திறனை காட்டுங்கள். நம்மில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி அடைவேன். போட்டியில் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பின்னர் வலைப்பூவில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

******************************************************************************************

புதன், 23 ஜனவரி, 2013

பிரபல கவிஞர் எழுதியது எது?



  அரவாணிகள் பற்றிய இவ்விரண்டு கவிதைகளில். ஒன்று பிரபல கவிஞர் எழுதியது. ஒன்று  நான் எழுதியது. எதை  யார் எழுதியது  என்பதைக் கண்டு பிடியுங்கள். கவிஞர் பெயரையும் சொல்லுங்கள். நீங்கள் எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.

                         நாங்கள் யார்? 
                    நாங்கள் யார்?
                    எங்களுக்கே ஐயமுண்டு!

                    நாங்கள்

                    பாலினம் அறியாத 
                    படைப்புப் பழுதுகள்!

                    வேராய் மாற முடியாத
                    வெற்று விழுதுகள்!

                    ஆணாய்ப் பிறந்தாலும்

                    பெண்மை உணர்வுகளால்
                    பேதப்  பட்டுப்போனவர்கள்!

                    பெற்ற அன்னையும்
                    வெறுத்ததொதுக்கும்
                    பெரும்பாவம் செய்தவர்கள்!

                    அலிகள் என்று 
                    உங்களால் கேலி செய்யப்படும் 
                    கேள்விக் குறிகள்!

                    கடுங்குரலும் கடுமுடியும்
                    காட்டிக் கொடுக்க 
                    கழிப்பறைக்குள் கூட 
                    அனுமதிக்கப்படாத
                    அருவெறுப்பு பிண்டங்கள்

                    எங்களுக்கும்  ஆசைதான்! 
                    கூடப் பிறந்தவர்களுடன் கூடி வாழ,
                    அன்னையின்  மடியில் 
                    அழுதபடி தலை சாய்க்க,
                    தங்கையின்  பூப்பெய்தலில்
                    பூரிப்படைய,
                    அண்ணனின் திருமணத்திற்கு 
                    அலங்காரமாய்ச் செல்ல!

                    என்ன செய்ய?
                    தெருவோரம்  நின்றால்கூட
                    துரத்தப்படும்
                    தெருநங்கைகளான  
                    திருநங்கைகள் ஆகிவிட்டோமே!
                   

                    கடவுளாய் இருந்தால் 
                    கை கூப்பி தொழுகிறீர்கள்!
                    மனிதராய்ப் பிறந்தால் 
                    கைகொட்டி சிரிக்கிறீர்கள்!

                    ஆனாலும்
                    நீங்களெல்லாம்  பெருந்தன்மை 
                    கொண்டவர்கள்தான்!
                    ஒரிலக்க எண்களில் 
                    மிகப்பெரியதை எங்களுக்கே 
                    சொந்தமாக்கி இருக்கிறீர்களே! 

****************************************************************************************

                          காகிதப் பூக்கள் 


                          காலமழைத் தூரலிலே
                          களையாய்ப் பிறப்பெடுத்தோம்
                          தாய்ப்பாலின் சரித்திரத்தில்
                          சதிராடும் புதிரானோம்

                          விதைவளர்த்த முள்ளானோம்

                          விளக்கின் இருளானோம்
                          சதை வளர்க்கும் பிணம் நாங்கள்
                          சாவின் சிரிப்புகள்

                          மூங்கையொரு பாட்டிசைக்க

                          முடவனதை எழுதி வைக்க
                          முடவன்  எழுதியதை
                          முழுக் குருடர் படித்ததுண்டோ

                          சந்திப் பிழை போன்ற 

                          சந்தததிப் பிழை நாங்கள்
                          காலத்தின் பேரேட்டை
                          கடவுள் திருத்தட்டும்

                          தலை மீது பூவைப்போம்

                          தாரணியோர் கல்லறையில்
                          பூவைத்தல்  முறைதானே
                          பூத்த உயிர் கல்லறைகள் நாங்கள்

                          தாய்ப் பெண்ணோ முல்லைப்பூ

                          தனி மலடி தாழம்பூ
                          வாய்ப் பந்தல் போடுகின்ற
                          காகிதப் பூக்கள் நாங்கள் 

******************************************************************************************

கவிதைத் தேர்தலில் ஒட்டு போட்டு விட்டீர்களா?
டெப்பாசிட்டாவது கிடைக்குமா?

*****************************************************************************************
 இதைப் படித்து விட்டீர்களா?
புத்தக்கக் காட்சியில் பட்டிக்காட்டாரிடம் பதிவர்கள் கோரிக்கை.

வெள்ளி, 9 நவம்பர், 2012

இதை எழுதியது யாரு?கண்டுபிடியுங்க!



     கவிதை  ரசிகர்களுக்கு ஒரு சவால்  இந்தக் கவிதை எழுதியது யார்னு சொல்லுங்க பாக்கலாம்? சரியா சொல்றவங்களுக்கு தீபாவளிப் பரிசா  என் இதயத்தில 10 G.B இலவச இடம் வழங்கப் படும்.(Google குடுக்குறதைவிட அதிகங்க) 
(எழுதிய  கவிஞர் மன்னிப்பாராக! பெரிய கவிதையை கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன்.)

                                       அழைப்பு 

                             தயவு செய்து 
                             என்னைத் தொல்லை செய்!
                             தயவு  செய்து 
                             என்னைக் கொள்ளையடி!

                             கழுத்தடியில் ஒரு 
                             செல்லக்கடி கடி

                             கூந்தல் கலைத்து 
                             பூக்களை உதிர்த்துவிடு 

                             ஓடிப் பிடித்தென்னை 
                             உருக்குலைத்துப்  போடு 

                             குளித்துவரும்  என்னை 
                             மீண்டும் அழுக்காக்கு 

                             எதிர்பாரா இடத்தில் 
                             என்னைத் தீண்டு 
                             எவ்வளவு இயலுமோ 
                             அவ்வளவு தழுவு 

                             எங்கே என் உயிரென்று 
                             கண்டுபிடி 

                             உன் உதட்டு எச்சிலால்
                             என்  உடல் பூசு 

                             இது ஒன்றும் 
                             ஒருவழிப் பாதையல்ல

                             என் பங்குசெலுத்த 
                             எனக்கும் இடம் கொடு

                             மார்பகப் பள்ளத்தில் 
                             முகம் வைத்து மூச்சு விடு 
                             பூனையின் பாதம் பொருத்தி 
                             பொசுக்கென்று வந்து 
                             புடவை இழு!

                             உன் தீவிரவாதத்தால் 
                             என்னைத் திணற வை 

                             என்னைத் தூண்டிவிட்டு 
                             நித்தமொரு  தடவை 
                             அழவை!

                             வா!வா! 
                             என்னை  வலி செய் 
                             உயிர் பெருகி ஒலிசெய்!

                             உன் நகர்த்தலுக்கு 
                             துடிக்குதென் ஆடை 
                             உன்  நகம் கிழிக்க
                             ஏங்குதென் மார்பு!

                             எங்கே 
                             மீண்டும் ஒருமுறை 
                             முந்தானைக்குள் புகுந்து 
                             முயல் குட்டியாகு!

                             தட்டாதே!
                             தாய் சொல்லைக்கேள்!

                             பத்து மாதம் 
                             என்வயிறு சுமந்த 
                             பிஞ்சுப் பிரபஞ்சமே!


*****************************************************************************************
நேரம் இருந்தால் இதையும்படியுங்கள்

கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 .html