என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

எதிர்பார்க்கவே இல்லை-ஆதலினால் காதல் செய்வீர்!

   மன்னிக்கவும் இது சினிமா விமர்சனம் இல்லை.  "திடம் கொண்டு போராடு" சீனு வைத்த காதல் கடிதம் எழுதும் போட்டி நடத்தியதைத்தான் குறிப்பிட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக ஆதலினால் காதல் செய்வீர் என்று பதிவுலகையே கலக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பதிவர்கள் அனைவரையும் வயது வித்தியாசமின்றி காதலைப் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார்.

போட்டியில்  கலந்துகொண்ட ஒவ்வொருவரும் எழுதிய கடிதம் அப்பப்பா. உருகி உருகி காதல் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தோட,  இள வயதில் காதலிக்கத் தவறியவர்கள் காதலிக்காமல போய்விட்டோமே என்ற ஏக்கத்தை நிச்சயம் அடைந்திருப்பார்கள், காதலித்தவர்கள் தான் காதலித்த காலத்திற்கு பயணம் செய்து வந்திருப்பார்கள், இன்னும் சிலரோ இனிமேலாவது காதலித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள்.

இதில் இப்போட்டியில் பரிசு பெற்றதாக அறிவிக்கப் பட்ட 9 கடிதங்களில் 6 கடிதங்களை எழுதியவர்கள் பெண்களே! அதுவும் முதல்  மூன்று பரிசுகளில் நுட்பமாகவும் அழகுடனும்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்பதை இம்முடிவுகள் பறை சாற்றுகின்றன.
(ஜீவன்  சுப்பு மூன்றாம் இடம் பிடித்து ஆண்களின் மானம் காத்தார். நானும் ஹிஷாலியும் ஆறுதல் பெற்றோம்.)
அத்தனை  கடிதங்களையும் படித்துவிட்டு அந்தக் கடிதங்களுக்கு விமர்சனம் எழுதி நான் ரசித்தபடி வரிசைப் படுத்தி பதிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கவிதையாகப் படிக்கப் படிக்க முடிவெடுக்க முடியாமல் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.

எந்தக்  கடிதத்தை படித்தாலும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் இந்தக் கவிதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்றே தோன்றும். நடுவர்களின் பாடு உண்மையில் திண்டாட்டமாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. திடம் கொண்டு போராடித்தான் கவிதைகளை தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.


   சீனு மேலே உள்ளவாறு சொன்னபோதும் (என்னை கலாய்க்கிறாரோ என்றுகூட நினைத்தேன், ஐயம் கூட உண்டானது) நான் அவ்வளவாக ஆர்வம் கட்டவில்லை.

போட்டிக் கடிதங்களில் பெரும்பாலானவற்றை படித்து விட்டேன் ஒன்றிரண்டைத் தவிர.கலந்து கொள்ளவேண்டும் நினைத்தாலும் மற்ற கடிதங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் எழுத முடியுமா என்ற ஐயமும் ஏற்பட்டது. அதுவும் இந்தக் கடிதங்களில் இருந்து சற்றாவது மாறுபட்டிருந்தால் மட்டுமே நடுவர்களான  ஜீனியஸ் அப்பாதுரை, பல்துறை வித்தகி ரஞ்சனி நாராயணன், நகைச்சுவை திலகம்  பாலகணேஷ், பாசிடிவ்  ஸ்ரீராம் -இவர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும். ஜூலை 20 வரை டைம் இருக்கிறதே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
 ஒருவேளை போட்டியில் பங்குபெற்றால் அந்த கடிதத்தில் என்னென்ன இருக்கவேண்டும் என்னென்ன இருக்கக் கூடாது என்று நானே வரையறை வைத்துக் கொண்டேன்.
அதில் ராட்சசியே, பிசாசே, போன்ற வார்த்தைகள் இடம் பெறக்கூடாது என்று முடிவு செய்தேன். கடிதத்தில் எந்த இடத்திலும் காதல் என்ற வரத்தை இடம்பெறாமல் இருத்தல் நலம் என்று நினைத்தேன். மனப்பக்குவமும்,புத்திசாலித்தனமும்,வெளிப்படும் வண்ணம் அமையக் கூடாது. சொல்ல வேண்டிய விஷயங்களை இப்படிப் பிரித்துக் கொண்டேன்.
  1. .காதலால் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லவேண்டும்
  2. பழைய  நினைவுகளை சொல்லவேண்டும்.
  3. காதலியின்  அழகை கொஞ்சமாவது வர்ணிக்க வேண்டும் 
  4. .காதலிக்காக இயல்பை மாற்றிக்கொன்டதை சொல்லவேண்டும்
  5. காதலியை யாராது ஏதாவது சொன்னால் தாங்கிக்கொள்ள  முடியாதென்பதை சொல்லவேண்டும் 
  6. உனக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதையும் தெரிவிக்கவேண்டும்.
  7. கொஞ்சம்  நகைச்சுவை இருக்கவேண்டும்.
  8. காதலியைத் தவிர வேறுஎந்தப் பெண்ணையும் பிடிக்காது என்பதையும் உணர்த்த வேண்டும்.
  9. நண்பர்களுடைய நடைமுறைக்கொவ்வாத காதலை சொல்லவேண்டும் 
  10. எதிர்கால கனவை சொல்லவேண்டும் 
  11. வித்தியாசமான வடிவத்தில் சொல்லவேண்டும். 
எப்படியோ  இவற்றை எல்லாம் இணைத்து கடிதம் உருவாக்கி விட்டாலும் திருப்தி ஏற்படாமல் பதிவை வெளியிடாமல் இருந்தேன். திடீரென்று சென்னை தமிழில் எழுதினால் என்ற எண்ணம் உதிக்க, எழுதப் படிக்க தெரிந்தவராக இருந்தால் தூய தமிழில் அல்லவா எழுதுவர் என்ற லாஜிக் உதைக்க எப்படியோ செல்போனில் வாயால் பேசி பதிவு செய்வதுபோல் கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம்  எழுதி ஒப்பேற்றினேன்.
போட்டிக்கான கடைசி நாளில் bsnl சதி செய்ய அடுத்த நாள்தான் காலையில்தான் வெளியிட முடிந்தது. போட்டியில் சேர்க்கப் படுமோ படாதோ என்ற ஐயம் இருந்தது. சேர்த்துக் கொண்டதாக தகவல் அறிந்தேன்.
கருத்திட்ட அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன் அவர் எழுதிய காதல் கடிதத்தை நீக்கி விட்டாவது எனது கடிதத்தை சேர்க்கச் சொல்லி சீனுவிடம் கோரிக்கை விடுத்தபோதே பரிசு பெற்ற மகிழ்ச்சி அப்போதே கிடைத்து விட்டது.  அதுவே போதுமானதாக இருந்தது.
மனமார்ந்த நன்றிகள் மதுரை  தமிழன்
101 ஒட்டு போடுவேன் என்றுசொல்லி வரிவரியாக விமர்சித்த உஷா  அன்பரசுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
ஆறுதல் பரிசு பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை மதுரை தமிழனுக்கும் உஷா அன்பரசுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
படித்து ரசித்து கருத்திட்ட அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். 
  நகைச்சுவை என்று நினைத்து ஒதுக்கி விடாமல் பரிசீலித்து பரசளித்த நடுவர்கள்  நால்வருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்

இத்தனைக்கும் மேலாக தனி மனிதனாக சிந்தித்து சிறப்பான நடுவர்களை அமர்த்தி பதிவுலகின் படைப்பாற்றலை ஊக்குவித்த சீனுவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்களையும்  பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட முன்னுதாரணமாகத் திகழும்
என்பதில் ஐயமில்லை.

போட்டியில் வென்ற  

சுபத்ரா, கோவைமு.சரளா,ஜீவன் சுப்பு, கண்மணி, ஹிஷாலி, தமிழ்செல்வி, சசிகலா, ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

**************************************************************************************************

கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -

 

திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள் 

***********************************************************************************************************


44 கருத்துகள்:

  1. படைப்பு பரிசுக்குத் தேர்வானதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஏனோ அந்தப் போட்டியில்
    கலந்து கொள்ள ஆர்வமில்லை
    ஒருவேளை அந்தரங்கத்த்தின் மேல் இருந்த
    அபரிமிதக் காதலாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன்
    வெற்றிபெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. என்ன முரளிதரன், எனக்கு ஒரு பட்டத்தை ரொம்பவும் சைலண்டாக கொடுத்து முடித்துவிட்டீர்களே! ஒரு விழா எடுத்து கொடுத்தால்தான் இதை நான் என் பதிவில் போட்டுக் கொள்ள முடியும். எப்போது விழா?:)))))

    உங்கள் மெட்ராஸ் பாஷையில் மெர்சலாயிட்டேன்!

    நன்றி முரளி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரளி பதிவர் திருவிழாவிற்கு இந்த பல்துறை வித்தகி ரஞ்சனி நாராயணனை அழைத்து பட்டத்தை கொடுத்துவிடுங்கள்

      நீக்கு
    2. மதுரை தமிழனின் ஆணைப் படி பதிவர் திருவிழாவில் கொடுத்து விடுகிறேன்.
      நன்றி அம்மா!

      நீக்கு
  4. எப்புடிக்கீர தலைவா! கவுத்திட்டயோ சரோ படிச்சுகீனு இருக்கும் போதே சோக்கா கீதுனு தோனுச்சு பா. என்னமோ போட்டியில இலாம் கயிந்துகிட்டு பரிசுலாம் வாங்கிச்சாமே! வாழ்த்துக்கள் பா. இன்னா ட்ரீட் தரலாம்னு கீர? (அய்யா அவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்)

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. முடிவெல்லாம் வந்தாச்சா?

    உங்க "சரோவை" இன்னும் படிக்கலை! :( அதைக்கூடப் படிக்காமல் அப்படி என்னத்தை வெட்டி முறிக்கிற?னு கேட்க வேண்டாம்! :)

    அவங்க படைப்பைப் பார்த்துட்டு கோவை மு சரளா வுக்கு பரிசு உறுதினு நான் பின்னூட்டம் இட்டதா ஞாபகம். :)

    காதல் கடிதம் எல்லாம் ரொம்ப பர்சனல் சமாச்சாரம் னு நான் கலந்துக்கவில்லை. :)))

    நான் எதையாவது எழுத, அப்புறம் ஒரு நாளும் இல்லாத திருநாளா என் காதலி வந்து "யோவ்! உனக்கு எழுதியதை கேவலம் இப்படி ஒரு பரிசுக்காக வித்துப் புட்டியே?"னு சண்டைக்கு வந்தால் என்ன பண்ணுறது? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனைதான் வருண். உண்மையில் காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.

      நீக்கு
  7. படைப்பு பரிசுக்குத் தேர்வானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் காதல் கடிதம் பரிசுக்குத் தேர்வானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    முரளி (அண்ணா )
    பரிசுக்கு தேர்வானதற்கும் காதல் கடிதம் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முரளி அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. எப்படி எழுத வேண்டும் என்று வகுத்துக் கொண்ட திட்டம் நல்ல ஐடியா+சுவாரஸ்யம். அந்த வித்தியாசம்தான் சட்டென ஈர்த்தது. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்..

    ஜீனியஸ், பல்துறை வித்தகி, நகைச்சுவை திலகம், பாசிடிவ் - நல்ல பட்டப் பெயர்கள்... !!!!

    பதிலளிநீக்கு
  13. வெற்றிபெற்றவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
  14. லாஸ்ட்டா சேர்ந்தாலும் லேட்டஸ்டாதான் சேர்ந்துருக்கீங்க. வாழ்த்துக்கள் அனைத்து வெற்றியாளர்களுக்கும்!

    பதிலளிநீக்கு
  15. உங்கள் காதல் கடிதம் பரிசுக்குரியதாய்த் தேர்வானமைக்கு இனிய வாழ்த்துக்கள் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  16. போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கும் அனைவருக்கும்
    மனமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார் !!

    பதிலளிநீக்கு
  18. திட்டம் வகுத்து கடிதம் எழுதிய விதம் கிரேட் !! (

    பதிலளிநீக்கு
  19. போட்டியின் இறுதி நேரத்தில் இறுதிப் போட்டியாளராக கலந்து கொண்டாலும் சிறப்பான மற்றும் வித்தியாசமான கடிதம் எழுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்து அதே நேரத்தில் பரிசையும் வென்று ஒரு கலக்கு கலக்கிய உங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் சார்...

    காதல் கடிதம் போட்டி பற்றியும் நடுவர்கள் குறித்தும் சிறப்பாக எழுதி பாராட்டியமைக்கு மிக்க நன்றி


    பதிவுலக தோழமைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியபட்டிருக்காது.. அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  20. காதல் கடித போட்டியில் கவிதை கலக்காமல் 'காதல் வந்து இப்படித்தான் இருக்கேன் '...என்று மனசை சொல்லி ஈர்த்த உங்கள் கடிதம் வித்தியாசமானது.கவிதைக்கு பொய் அழகு.. கவிதையை அழகாக்க யதார்த்தத்தை விட்டு அலங்காரம் சேர்ப்போம். எல்லா காதலிக்கும் கவிதை படிக்கிற பொறுமை இருக்கான்னு தெரியாது. காதலை கவிதை கலந்து வார்த்தைகளில் ஜோடிக்காமல் இயல்பான அவன் பாஷையிலையே கனவுகளை உயர்த்திய உங்கள் கடிதம் சிறப்பு.
    வெற்றியில் முதலிடம், ஆறுதல் பரிசு என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை... எழுத்துக்கள் படிக்கும் பாமரன் வரை ஈர்க்க வேண்டும். அந்த வகையில் உங்கள் கடிதம் தனித்தன்மை! பாராட்டுக்கள்! பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    வலைப்பதிவர் சந்திப்பில் சிறப்பான சிந்தனைகளையுடன் நீங்க வலம் வர வாழ்த்துக்கள். மறக்காம உங்க சந்திப்புகள், பகிர்வுகளை அழகான விமர்சனத்தோடு எழுதிடுங்க... காத்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  21. கடிதம் பரிசுக்குத் தேர்வானதற்கு வாழ்த்துகள்.


    well come to my site..
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895