என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா?


பெட்டிக்கடை 
வலை நட்புகளுக்கு வணக்கம். 
   ஒரு சில நேரங்களில் என் மனதில் தோன்றியவற்றை   முழு பதிவாக எழுத நினைப்பேன் ஆனால் அவை போரடிக்கக் கூடும் என்பதால்  குட்டி செய்திகளாக பெட்டிக்கடை என்ற தலைப்பில்  இன்று முதல் எழுதத் தொடங்குகிறேன். ரோட்டோர பெட்டிகடையில் சோப்பு, சீப்பு, ஷாம்பூ, பேனா என்று சிறு சிறு பொருட்கள் கிடைக்கும். 

    மனதில் பட்ட சின்ன சின்ன விஷயங்களை சரக்காகக் கொண்டு   பெட்டிக்கடை யை தொடங்குகிறேன். 
திறப்பு விழாவிற்கு வருக! வருக!

                                                          அன்புடன்         
                                                      டி.என்.முரளிதரன்

****************************************************************************************************
   லியோனி அவர்களின்  குழுவின் முக்கிய பட்டிமன்ற பேச்சாளரான  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் வளரும் கவிதைகள் என்ற வலைப் பக்கம் வைத்துள்ளார்.பட்டிமன்றங்களில் நகைச்சுவை முகத்தை காட்டும் இவர்  அரசியல்  சமூகம்,கல்வி,இலக்கியம் என்று ஏராளமான கருத்துக்களை தனது வலைப்பூவில்  பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் படித்தது திருக்குறளில் தளைப் பிழையா? புதிய சுவாரசியமான தகவல்கள் 

இன்னொரு பதிவு தமிழில் தேசிய கீதம்

**************************************************************************************************
திகைக்க வைத்த  இன்னொரு  பதிவு சந்தானம்  என்றொரு சண்டாளான். ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. வலைப்பூ மலரின் நினைவுகள்

***************************************************************************************************
பெட்ரோல் விலை மீண்டும்உயர்ந்து விட்டதாம். இரு சக்கர வாகனத்தில் இனிமேல் பேருந்தில் போகவேண்டும் என்ற முடுவெடுத்து விட்டு நமது அற்புத பேருந்து சேவையின் காரணமாக முடிவை மாற்றிக் கொண்டு உயர்வை சகித்துக் கொண்டு சராசரி மக்களாக வழக்கம் போல் இருப்போமாக!
**********************************************************************************************
  எங்கள் வீட்டுக்கு சமீபத்தில் ஒரு விருந்தாளி  வந்தார் .வாசலில் உள்ள மல்லிகைக் கொடியை இழுத்து வாயில் போட்டுக் கொண்டார்.. மாம்பழ சீசன் ஆதலால் எங்கள் வீட்டு மாமரத்திலிருந்து விழுந்து கிடந்த மாங்காய் மற்றும் பழங்களை அவருக்கு கொடுக்க அவர் ஆசையோடு தின்ன ஆரம்பித்து விட்டார். இப்போதெல்லாம் தினந்தோறும் அதே நேரத்தில் வந்துவிடுகிறார். மாங்காய் கொடுத்தால்தான் போகிறார். கொடுக்கும் வரை பிடிவாதமாக அங்கேயே நிற்கிறார். மல்லிகைக் கொடியை பிடித்து இழுப்பதில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.


இன்னைக்கு ஆடி வெள்ளிகிழமை! என்னையும் கொஞ்சம் கவனிங்க

இன்னும் சில விருந்தாளிகள் உண்டு. அவர்களில் சிலர் உரிமையாக உள்ளே வந்து அதிரடியாக அச்சுறுத்துபவரும்  உண்டு. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லி உங்களையும் அச்சுறுத்த ஆவல்.

*********************************************************************************
 நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன்.சைக்கிள் ஸ்பேர் பார்ட்சில் எனக்கு பிடித்தது Freewheel.
மனிதனின் அசத்தலான கண்டுபிடிப்பு சக்கரம் என்றால். அதன் உட்பிரிவான Freewheel இன்னும் அசத்தல். சைக்கிள் பெடலை ஒருபுறம் அதாவது முன்புறமாக மிதித்தால் மட்டுமே சக்கரங்கள் சுற்றும். எதிர் புறமாக பெடலை சுழற்றினாலும் அதன் சுழற்சி தடைபடாது. இந்த அமைப்புதான் என்னை ஆச்சர்யப் படுத்தும். ப்ரீவீல் வேலை செய்யாத சைக்கிளில் மிதிப்பதை நிறுத்த முடியாது.அப்படி நிறுத்தினால் சைக்கிள் ப்ரேக் பிடித்ததுபோல் தடுமாறும். இதுபோன்ற சமயங்களில் காலை பெடலில் படாமல் தூக்கி வைத்துக்கொண்டு சிலர் செல்வதை பார்க்க முடியும். 
    இதை பற்றி எல்லாம் பள்ளியில் அறிவியல் ஆசிரியர்கள்  சொல்லிக் கொடுக்கிறார்களா? எனக்கு எந்த ஆசிரியரும் சொல்லித் தரவில்லை. உங்களுக்கு?. என்ன செய்வது அவர்களுக்கு சிலபஸ் முடிக்கவேண்டும்.


மிதிவண்டிக்கான   ப்ரீவீலை கண்டறிந்தவர் வில்லியம் வான் ஆண்டன் என்பவர்.ஆண்டு 1869.

************************************************************************************************************

எச்சரிக்கை:பெட்டிக்கடை  தொடர்ந்து நடத்துவதுவது உங்கள் கையில்தான் இருக்கிறது

பெட்டிக்கடை  2  க்கு செல்ல கீழுள்ள கதவை மௌசால் தட்டுங்கள்


79 கருத்துகள்:

 1. உங்க பெட்டிக்கடை முதல் கஸ்டமர் நாந்தானுன்கோ

  பதிலளிநீக்கு
 2. கடை நல்லா ஓடுறதுக்கு (பிசினஸ் பண்றதுக்கு!) வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. எனக்கு ஏதாது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.

  பெட்டிக்கடைக்கு வந்த அருமையான விருந்தாளியை கவனியுங்கள்..!

  பதிலளிநீக்கு
 4. வாவ் பெட்டிக்கடை அருமை...

  வாரத்தில் ஒரு நாள் பெட்டிக்கடையை திறந்து வையுங்க... அப்பதான் உங்க கடைக்கு என்று நண்பர்களை அதிகம் பெறமுடியும்.. வியாழன் அன்று என் அஞ்சறைப்பெட்டி போல...

  பதிலளிநீக்கு
 5. பெட்டிக் கடை சரக்குகள் அனைத்தும்
  நல்ல ருசி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பெட்டிக்கடை தொடக்க விழாவிற்கு வாழ்த்துக்கள் ...
  ப்ரீ வீல் பற்றி சொன்னது சிறப்பு .. எனக்கும் அதன் மீது ஒரு ஈர்ப்பு அதிகம் ... சிலமுறை பழைய ஒன்றை கழட்டி மீண்டும் செட் பண்ணமுடியாமல் விழி பிதுங்கி நின்றிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. பெட்டிக்கடையில் கிடைக்கும் அனைத்தும் அத்தியாவசியப் பொருட்களே... அதுபோல் இங்கு இந்தப்பெட்டிக்கடையிலும் சுவாரசியமானத் தகவல்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள். விருந்தாளிக்குப் பின்னேயுள்ள சுவரொட்டியைப் பார்த்ததும் சத்தியம் நீயே தருமத்தாயே என்ற பாடல் நினைவுக்கு வந்துபோனது.

  பதிலளிநீக்கு
 8. பெட்டிக்கடையில் விற்கும் சரக்குகள் சூப்பர்! தொடர்ந்து எழுதுக! ப்ரி வீல் குறித்து எனக்கும் எந்த ஆசிரியரும் சொன்னதில்லை! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. எனக்கு ஏதாது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.//
  திருமூலர் சொன்னது போல் பசுவுக்கு நாம் உண்பதற்கு முன்பு உணவு அளித்தல் நல்லது தான். இப்போது எல்லா கோவில்களிலும் பசு இருக்கிறது அதற்கு அகத்தி கீரை அங்கு விற்கிறார்கள், மக்கள் வாங்கி கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்கிறர்கள்.உங்கள் வீட்டுக்கு கோமாதா தேடிவருதே புண்ணியம் தான். மாதாபோல் பால் கொடுத்து நம்மை காத்தமற்றொரு தெய்வம்.
  பெட்டிக்கடை தொடக்கவிழாவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி மேடம். கோமாதா மட்டுமல்ல, நாயார், அணிலார்,காகத்தார்,ஏன் பாம்பார் கூட அடிக்கடி எட்டடிப் பார்ப்பார்கள்.

   நீக்கு
 10. எங்க வீட்டிலும் இந்த விருந்தினர் வருவார் ஒரு நாள் சாதம் வடிச்ச தண்ணிய வைத்தது இப்போதெல்லாம் தினமும் தொடர்கிறது. கேட்டை முட்டும் அளவிற்கு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெண்டு பேர் வீட்டுக்கும் ஒரே விருந்தினர் தானா...? அக்கம் பக்கம் வீடுங்களா..?

   நீக்கு
 11. கடுகு சிறிதாயினும்
  காரம் பெரிதாக இருப்பின்
  பெட்டிக்கடைக்கு
  வரவேற்பு அதிகம் கிட்டுமே...
  நம்ம வாசகர்கள்
  காரம் சாரமாகப் படித்துப் பழகிட்டாங்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம பெட்டிக் கடையில சாஃப்ட் ட்ரிங்க்ஸ் மட்டும்தான் கிடைகும் ஹிஹிஹி

   நீக்கு
 12. பெட்டிக்கடை நல்லா ஓட வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 13. பெட்டிக்கடை அருமையாக இருக்கிறது
  இன்னும் பெரியக்கடையாக வளரட்டும்

  பதிலளிநீக்கு
 14. பெட்டிக் கடையானாலும் பொருட்கள் அத்தனையும் தரத்தில் முதல் இடம்!
  மிகமிகச் சிறப்பாக உள்ளன பதிவுகள் அத்தனையும்.
  வாழ்த்துக்கள் சகோதரரே!

  த ம.4

  பதிலளிநீக்கு
 15. பெட்டிக் கடை பிரமாதம் ஐயா. தொடருங்கள்,தொடரக் காத்திருக்கின்றேன். நன்றி

  பதிலளிநீக்கு
 16. பெட்டிக்கடை சிறப்படைய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார். பெட்டிக்கடையை நீங்கள்தான் திறந்து வைப்பீர்கள் என்று நினைத்தேன்.

   நீக்கு
 17. பெட்டிக் கடையின் சரக்குகள் முடுக்காய் உள்ளன! தொடருங்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

 18. பெட்டிக் கடை-திருக்குறளில்\\ என்றவுடன்,
  பெட்டிக்கடையில்திருக்குறள் விற் க்கிறா ர்களா, அதில் பிழையான்னு குழம்பிடுச்சு.

  மாட்டின் பின்னாடி சுவற்றில் எங்கள் தாயேன்னு எழுதியிருக்கு. என்ன பொருத்தம்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு தலைப்பு வைத்திருந்தேன். அதற்குள் பப்ளிஷ் செய்து விட்டதால் குழப்பத்தை தவிர்க்க மாற்றவில்லை

   நீக்கு
 19. தொடர வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.

  பதிலளிநீக்கு
 20. நேரந்தவறாத இதே போல ஒரு விருந்தாளி என்னுடைய சிறுவயதில் தஞ்சையில் எங்கள் வீட்டுக்கும் கீரை சாப்பிட வந்ததுண்டு. நம் அறிந்து வாசல் பக்கமும் கொல்லைப் பக்கமும் மாறி மாறி நடக்கும் அது! அழகாய் இருக்கும்! ஐந்தறிவுக்கு இவ்வளவு யோசனையா தோன்றும். ப்ரீ வீல் தகவல் சைக்கிள் ஓட்டிய காலத்துக்கு அழைத்துச் சென்றது!

  பதிலளிநீக்கு
 21. பெட்டிக் கடையில் எதிர்பார்த்தது போலவே நல்ல கூட்டம் போல! வளர வாழ்த்துகள்.
  பெட்டிக்கடை நல்லாப் போனா..அப்பறம் மளிகைக்கடை... அப்டியே “டிபார்ட்மெண்டல் ஸ்டோர்” ஆக வாய்ப்பிருக்கிறது. அதுவரை தொடர்ந்து விட்டால் அப்பறம் வால்மார்ட் காரன் வந்துடுவான்.. அங்க மட்டும் எச்சரிக்கையா இருங்க... இருப்பீங்கன்னும் நம்பிக்கை இருக்கு.

  எனது திருக்குறள் பற்றிய வலைப்பக்கம் பெட்டிக்கடையின் முதல் போனியானதில் எனக்கும் மகிழ்ச்சிதான்... அது எனது வலையில் இன்னும் -(அடுத்த பதிவாக) தொடர்கிறது.. வள்ளுவர் பெரிய இமயம்ங்க.. அவர்முன், சுண்டெலி போலும் என்னால் அளக்கக்கூட முடியாது... அப்பறம் எங்க பிழை காண்பது?
  எல்லாம் அவரைப் பரப்பும் ஆசைதான்..நன்றி.
  உங்கள் எழுத்து நடை எனக்குப் பிடிச்சிருக்கு.
  வாழ்த்துகள்.
  அன்புடன்,
  நா.முத்துநிலவன்,
  புதுக்கோட்டை
  http://valarumkavithai.blogspot.in/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் முரளி ஏதோ பதில் வந்திருக்கு அதை அழிச்சிட்டீங்க போல எனது தனியஞ்சலுக்காவது அனுப்பலாம்ல... என்னான்னுதான் தெரிஞ்சுக்கலாம்ல..?

   நீக்கு
  2. நான் ஏதும் அழிக்கவில்லை ஐயா .இணைய இணைப்பு சிக்கல் காரணமாக மூன்று நாட்களாக வலைப் பக்கம் வரவில்லை. கருத்திடுபவரே தன் கருத்தை delete செய்ய முடியும் அப்படி யாரேனும் செய்திருக்கக் கூடும். பதிவுக்கு எதிரான கருத்தாக இருந்தாலும் நான் அவற்றை நீக்குவதில்லை. தகாத வார்த்தைகள் பயன்படுத்தி இருந்தால் மட்டுமே நீக்குவேன். இதுவரை அப்படி நடந்ததில்லை.
   பெரும்பாலும் என்பதிவுகளுக்கு இதுவரை கருத்தளித்தவர்கள் நாகரிகமான வார்த்தைகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

   நீக்கு
 22. பெட்டிக்கடையில் வாங்கிய அனைத்து சாமான்களும் நல்லாவே இருக்கிறது...(நானும் ரொம்ப நாளாகவே இதுபோல ஒரு தலைப்பு வைக்கனும்னு யோசிச்சிகிட்டே இருந்தேன்.. ஆனால் இது தோணவே இல்ல... செம டைட்டில்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மணிமாறன். நானும் நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். எதிர்பாராவிதமாக மனதில் தோன்றியது.

   நீக்கு
 23. கவிஞர் முத்து நிலவன் அவர்களின் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் பிரபலமானவர். அவரது பதிவுகள் என்னைக் கவர்ந்ததால் மற்றவர்க்கும் பயன்படட்டும் என்று பகிர்ந்தேன்.

   நீக்கு
  2. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை முரளி, இணைய உலகில் என்னைவிட நீங்கள் தான் பிரபலம் என்பதை என் பதிவுபற்றி உங்கள் தளத்தில் எழுதிய ஒரே நாளில் சுமார் 700பேர் என் தளத்தை வந்து பார்த்திருக்கிறார்கள்! நான் உங்களுக்கு எழுதிய தனியஞ்சலில் நன்றி தெரிவித்தது இந்த உண்மையை நான் உணர்ந்ததால்தான்.
   நமது சிறிய பிரபலம் நல்லவிஷயங்களைப் பிரபலப்படுத்த உதவுமானால் அதுதான் மகிழ்ச்சிக்குரியது. அந்த வகையில் நான் உங்கள் நண்பனாகத் தொடர்வதில் மகிழ்கிறேன்.உங்கள் பெட்டிக்கடையைப் பார்த்து நானும் இந்த வாரம் என்று ஒன்று தொடங்கி, அது, உங்களைப்பார்த்துக் காப்பியடித்ததுதான் என்பதையும் அந்தப் பின்னூட்டத்தில் ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறேன். http://valarumkavithai.blogspot.in/2013/08/blog-post_9.html
   நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.

   நீக்கு
 24. பொதுவாகவே விருந்தாளிங்க வீட்டுக்கு வந்தா நம்மகிட்டேருந்து கறந்திடுவாங்க... ஆனால் இந்த விருந்தாளிகிட்ட நாம கறந்திடலாம். :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கறக்க முடியாது. அதெல்லாம் முடிச்சிட்டுதான் அதை அவிழ்த்து விடுவாங்க . அதுவும் சாமார்த்தியமாக பால் கறக்கப்படும் நேரங்களில் orijinal எஜமானரிடம் சென்று விடும்.

   நீக்கு
 25. TM-8 ஓட்டும் போட்டாச்சி...ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 26. பெட்டிக்கடை நல்லாவே இருக்கு முரளி....

  தொடரட்டும் செய்திகள்.

  பதிலளிநீக்கு
 27. பெட்டிக் கடை சுட்டிக் கதைகளாக உள்ளது.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 28. No matter in which posh are a you live, it is a waste if there is no "petti kadai" nearby. Petti kadai is part of our growing up. We learn our first bad habits here only. But this petty shop is going to teach us only good ones. All the best.
  By the way, no school ever teaches life sciences.
  Here in the US, the backward movement of the cycle is the brake. It is a nuisance most of the times.
  Have you opened a Free wheel eve? A small tempered steel protruding out works on the internal ratchet like a pawl. The same wire bends and allows the ratchet to move backwards. It used to be a puzzle in younger days.Also, the other interesting part of the bicycle is that, all the threads are opposite on the left and right sides, to prevent threading,while driving.
  All the best.
  Shankar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஷங்கர் சார்.
   நீங்கள் சொல்லி இருக்கும் தகவல் புதிது.
   அதை நான் கவனித்ததில்லை நன்றி குறித்துக் கொள்கிறேன். அவ்வப்போது ஆலோசனை கூறுங்கள்

   நீக்கு
 29. பெட்டிக்கடை நலமுடன் வியாபாரமாக வாழ்த்துக்கள்,
  Freewheel மேட்டர் புதிய தகவல்... நீங்க நல்ல ஆசிரியர் சார் ! Hats off :)

  பதிலளிநீக்கு
 30. பெட்டிக்கடை சிறப்பான பெயர் சொல்லும் என்பதுக்கு இதுவே முத்தாய்ப்பாக இருக்கு பதிவு தொடருங்கள் !

  பதிலளிநீக்கு
 31. நண்பர்கள் தினத்தன்று தொடங்கிய பெட்டிக் கடையில் நண்பர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும் போல!
  பெட்டிக்கடை ஜாம் ஜாமென்று நடக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 32. பெட்டிக்கடைக்கு நிறைய பெஞ்ச் போட்டு வைங்க... குரூப்பா வருவோம்ல.. !

  பதிலளிநீக்கு
 33. பெட்டிக் கடையை தயவுசெய்து திறங்கள்.
  வாழ்க வளமுடன்.
  கொச்சின் தேவதாஸ்

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் நண்பரே, கவிஞர் முத்துநிலவன் அய்யாவின் வ்ழிகாட்டுதலின் விளைவு உங்கள் வலைப்பக்கத்தில் நான். உங்கள் பெட்டிக்கடை மிக அருமை. பெட்டிக்கடை பெஞ்ச்-ல் ஓரத்திலாவது கொஞ்சம் இடம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அ.பாண்டியன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா! உங்களுக்கு இல்லாத இடமா தாரளமாக வாருங்கள் நிறைய பெஞ்சு போட்டு விடுகிறேன்.

   நீக்கு
 35. தரமான செய்திகளைக் கொண்ட பெட்டிக்கடைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 36. உங்களில் ஒருவனாக என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி...
  பெட்டிக் கடைக்கு பெரும் வரவேற்பும் சிறப்பும் குவிய வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895