என்னை கவனிப்பவர்கள்

புதன், 31 டிசம்பர், 2014

2014 இன் சூப்பர் ஹிட் பதிவர் யார் தெரியுமா?

இது சூப்பர் ஹிட் தானே? ஒத்துக்கறீங்களா?
   வாங்க! வாங்க! 2014 ன் சூப்பர் ஹிட் பதிவர், அதாவது அதிக ஹிட் வாங்கின பதிவர் யாருன்னு தெரிஞ்சுக்க வந்துருக்கீங்க. அப்படித்தானே? சொன்னா சிரிக்கப் படாது. ஆனா சொன்னா சிரிக்காம இருக்க முடியாது. சரி பரவாயில்ல. சிரிச்சிட்டு போங்க. 2014சிரிப்புல முடிஞ்சி  2015 சிரிப்புல தொடங்கட்டுமே. ஹலோ! நீங்க சொல்லுங்க சிரிக்கணுமா வேணாமான்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்னு சொல்றது எனக்கு கேக்குது. சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க அந்த சூப்பர் ஹிட் பதிவர் ஹிஹிஹிஹிஹி ......நான்தாங்கோ? 
  ஏங்க! பதிவு எதுக்கு எழுதறோம்? நிறையப் பேர் படிக்கணும். நிறைய ஹிட் கிடைக்கணும்னுதானே?. நானும் அதுக்குதாங்க எழுதறேன். என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை. இருக்காதா பின்ன? அந்த ஆசை இப்படி நிறைவேறும்னு நான் நினைக்கவே இல்லைங்க.
 சில பதிவர்கள் எல்லாம் அதிக ஹிட் கொடுத்த வாசகர்களுக்கு நன்றின்னு அதுக்கு ஒரு பதிவு போட்டு பெருமையா பீத்தீக்கிறாங்க. ஒவ்வொரு பதிவுக்கும் நான் வாங்கிற ஹிட் மாதிரி அவங்க யாராலையும் வாங்க முடியாதுன்னு அடிச்சி சொல்ல முடியும். இல்ல இல்ல அடிவாங்கி சொல்லமுடியும் 
   என்னடா  என்னமோ உளறிக்கிட்டு இருக்கானேன்னு பாக்கறீங்களா?. உண்மையைத்தான் சொல்றேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா? அது எப்படித்தெரியும்?. எங்க வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும்!. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்.
     பதிவு போடறதுக்கு கம்ப்யூட்டரை ஆன் பண்ணுவேன். அப்பவே ஹிட் ஆரம்பம் ஆயிடும்னா பாத்துக்கோங்களேன். எங்க வீட்டு அம்மணிகிட்ட வாங்கற ஹிட்டதான் சொல்றேன். யாருமே படிக்காததுக்கு யாருக்காக பதிவு போடறீங்கன்னு சொல்லி, ஆரம்பிக்கும் போதே தலையில நறுக்குன்னு முதல் ஹிட். காலங்காத்தால 4 மணிக்கு எழுந்து லைட்ட போட்டுக்கிட்டு எங்க தூக்கத்தை கெடுத்துக்கிட்டு, பால் வாங்கிட்டு வராம கம்ப்யூட்டர்ல உக்காந்துக்கிட்டு இருக்கறது நியாயமான்னு கேட்டு ஓர் ஹிட். கூப்பிட்டு எவளோ நேரம் ஆச்சு? இன்னுமா எழுந்திருக்கலன்னு கேட்டு  ஒரு ஹிட்? வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஒட்டரை அடிக்கச் சொன்னத மறந்துட்டு எட்டரை மணிவரை டைப் அடிச்சிக்கிட்டு இருந்ததால அதுக்கு ஒரு சூப்பர் ஹிட்.  ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்க! ஹீட்டர் போட்டு அரைமணிநேரம் ஆச்சுன்னு சொல்லி இன்னொரு  ஹிட்.
 என்னமோ பெரிசா பதிவு போடறேன்னு   நேரத்த வேஸ்ட் பண்ணீங்களே  அந்தப் பதிவு என்னனு எங்கிட்ட காமிச்சீங்களான்னு  கரண்டியாலயே நச்சுன்னு ஒரு ஹிட். கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னா எனக்கு டைம் இல்லேன்னு சொல்லிட்டு மொக்க பதிவ போட்டு அத எத்தனை பேரு பாத்தாங்கன்னு நிமிஷத்துக்கு ஒரு தடவை பாக்கறதுக்கு மட்டும் நேரம் இருக்கான்னு கேட்டு ஒரு ஹிட். 
  இந்த மாசம் கரண்ட் பில் அதிகமா வந்ததுக்கு காரணம் உங்க பதிவு வெறிதான்னு   வெறித்தனமா  ஒரு ஹிட்.  இன்னைக்கு உங்க பதிவ ஒருத்தர் கூட  பாக்கல   போலிருக்குன்னு சந்தோஷமா ஒரு ஹிட்
 இப்படி ப.மு. , ப.போ , ப.பி, (பதிக்கு முன், பதிவின் போது , பதிவுக்கு பின்) அதிகமா ஹிட் வாங்கின பதிவர் வேற யாராவது இருந்தா சொல்லுங்க.

இப்போ சொல்லுங்க நான்தானே 2014 இன் சூப்பர் ஹிட் பதிவர்?

கொசுறு:1 அப்புறம் தமிழ்மணம், அலெக்சா,தமிழ் 10  இவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நான் வாங்கின இந்த ஹிட்டை எல்லாம் சேத்து கணக்கில எடுத்துக்கிட்டு ரேங்க் போடனும்ன்னு கேட்டுக்கிறேன். அப்படி என் கோரிக்கைய நீங்க கேக்கலேன்னா பதிவு எழுதறதை நிறுத்திடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க. 

கொசுறு:2. இப்பெல்லாம் வெளிய போகும்போது தலையில கேப் போட்டுக்கிட்டுதாங்க போக வேண்டி இருக்கு. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். பதிவு எழுதறதால வாங்கின ஹிட்டு அதாங்க குட்டு வெளிபட்டுடும் இல்ல.***********************************************************************************
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

*******

32 கருத்துகள்:

 1. அய்யா... முரளி அடிச்சீங்களே ஒரு ஹிட்டு! வாங்கிக்கோங்க எங்க வெரிகுட்! எங்க “வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும்!. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்“ - இது கூடவா தெரியாது முரளி நாங்க அப்பப்ப வாங்குறது தானே? (மதுரைத் தமிழன் தினமும் வாங்குறாராமே?) மிகுந்த நகைச்சுவையுடன் எழுதி, சிரிக்கவும் சிந்திக்கவும்(மூக்கைத்தான்) வைத்த முரளிக்கு ஒரு தம1.ங்கோ...!

  பதிலளிநீக்கு
 2. இன்னும் நிறைய கிட்டு வந்து வெற்றி பெற வாழ்த்துகள்.
  இனிய 2015. ம் நன்றிகளும் எனக்கு கருத்துகள் இட்டமைக்கு.
  இன்னும் வாங்கோ!...வாங்கோ!....
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 3. சூப்பர் ஹிட் பதிவர் நீங்கள் நீங்கள் நீங்களேதான். ஒத்துக்கொள்கிறோம். தன்னம்பிக்கை என்றால் இதுதான் தன்னம்பிக்கை.

  பதிலளிநீக்கு
 4. ஹிட்டாகிட்டிங்க குட்டுவாங்கியே ஹஹ ... மகிழ்வோடு தொடங்கட்டும் இனிய புத்தாண்டு.

  பதிலளிநீக்கு
 5. வூட்ல இத்தை படிக்கறாங்கள்ல? ஹிட்டுக்கட்டாம உண்மயத்தானே சொல்லியிருக்கீரு..?

  பதிலளிநீக்கு
 6. நான் நினைத்தேன் இது என்ன புதுக் கதையாக இருக்கிறது மதுரை தமிழர் தானே அதிகம் வாங்கி இருப்பார் அதெப்படி என்று ஒரே யோசனை தான் போங்கள் இப்ப தானே புரிகிறது.15ல் ஆதிக ஹிட் வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....!

  பதிலளிநீக்கு
 7. இது தான் சூப்பர் ஹிட் பதிவு.... ஹா ஹா, இதே ஹிட்டைத்தான் மதுரைத்தமிழனும் வாங்குறார்னு நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. என் வீட்டிலும் இதே கதைதான் , ஆயிரம் நாட்களைத் தாண்டி தினசரிபதிவிட்டுக் கொண்டிருக்கும் நான் எவ்வளவு ஹிட் ஆகி இருப்பேன் ?உங்களுக்காவது பரவாயில்லை ஹிட்டுவதற்கு ஒரு கைதான் ,எனக்கு ,நெட்டு பார்க்கும் வயதில் இருக்கும் இரண்டு பசங்களும் சேர்ந்து ஹிட்டுகிறார்கள்...அதிக ஹிட் யாருக்கு என்று உங்கள் முடிவுக்கே வீடு விடுகிறேன் :)
  த ம 6

  பதிலளிநீக்கு
 11. மொத்து மொத்தென்று முத்தின கையால வாங்கிற ஹிட்டா அல்லது
  பட்டுப் பட்டென்று பிஞ்சுக் கையால வாங்கின ஹிட்டா அதிகமாய்
  இருக்கும் ?! இதில பிஞ்சுக் கையால விழுகிற குட்டு அதிகமென்றால்
  நான் தான் அதிக ஹிட்டு வாங்கிய முதலாள் சகோதரா :))) வாழ்த்துக்கள்
  சகோதரா இன்று போல் என்றுமே சிரித்து சிரிக்க வைத்து மகிழ்வுடன்
  வாழ என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
  உறவினர் அனைவர்க்கும் உரித்தாகட்டும் .

  பதிலளிநீக்கு
 12. இன்னும் நிறைய ஹிட் வாங்க வாழ்த்துகிறேன் நிறைய எழுதுங்கள் நிறைய ஹிட் வாங்குங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. ஹா....ஹா...ஹா....ஹா...சந்தேகமே இல்லாம நீங்கள் சூப்பர் ஹிட் பதிவர் தான். அண்ணாவிற்கும், குடும்பத்தார்க்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. ஹஹஹஹஹ்ஹ செம ஹிட்டுங்க! பரவாயில்லைங்க.....அப்ப நாங்க உங்கள விட கூடுதல்னு நினைக்கறோம்...ஹஹஹஹஹ் ..வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய எழுதத்தான்.....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  அன்புடனும் நட்புடனும்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 15. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 16. சூப்பருங்க...!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 17. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 20. ஹாஹா இப்படி பல ஹிட்டா

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 21. ஹிட்டா, 'விட்'டா.... ஹா...ஹா..ஹா..

  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும், சக வலையுலக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. இவ்ளோ ஹிட்டு வாங்கினதுக்கே உங்களை வாழ்த்தலாம்.

  பதிலளிநீக்கு
 23. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு

 24. வணக்கம்!

  பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 25. 2014 ல் பெற்ற ஹிட்டுகளுக்காகவும்,
  2014 ல் பெற்ற ஹிட்டுகளை
  2015 ல் முறியடித்து
  2016 லும் பதிவர்களின் முதல்வராக வரவும் தொடர்ந்திடவும்
  வாழ்த்துகள்


  பதிலளிநீக்கு
 26. சூப்பர் ஹிட் பதிவராக வலம் வந்து கொண்டிருப்பதற்கு வாழ்த்தக்கள்! :)))

  பதிலளிநீக்கு
 27. இந்த வருடமும் இன்று முதல் இதுபோல் குட்டு சாரி, ஹிட்டாக எமது வாழ்த்துகள் நண்பா...

  பதிலளிநீக்கு
 28. ஹிட்டோ ஹிட்டு! :)

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 29. தொடரட்டும் ஹிட்ஸ்!
  புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 30. எப்படியோ நீங்க வீட்டில் ஹிட் வாங்கினதை இங்கே போட்டு ஹிட் ஆகிட்டீங்க... நாங்களும் சிரித்துக்கொண்டே உங்கள் நகைச்சுவைத் திறமையைப் பாராட்டுகிறோம்

  பதிலளிநீக்கு
 31. ஹா ஹா ஹா.... நல்ல ஹிட் பதிவுதான் மூங்கில் காற்று.
  இன்னும் நிறைய ஹிட் வாங்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 32. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!

  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)

  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr
  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  (இன்றைய எனது பதிவு
  "இந்திய குடியரசு தினம்" கவிதை
  காண வாருங்களேன்)

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895