என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 23 டிசம்பர், 2014

எய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை


சமீபத்தில்  வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக்  கொடுக்க  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் ஊக்கம் கொடுக்க பல புதுக் கவிஞர்கள் வெண்பா பாட முயற்சித்தனர்.  ஏற்கனவே, பிரான்சு வாழ் கவிஞர் பாரதிதாசன், புலவர் ராமானுசம் ஐயா அவர்கள், அருணா செல்வம், கவிஞர் சிவகுமாரன் போன்றோர் அழகான வெண்பாக்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். 
இன்றுவரை பெரும்பாலான கவிஞர்களுக்கு வெண்பா பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. எனக்கும் வெண்பாமீது விருப்பம் உண்டு. வெண்பாக்களை ரசித்துப் படிப்பேன். பலவித கட்டுப்பாடுகள் இருந்தாலும் நல்ல வெண்பாவின் ஈற்றடி ஒரு பஞ்ச் டயலாக் போல அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'பெய் எனப்  பெய்யும் மழை' என்ற கவிதைத் தொகுப்பை படித்தேன். அதில்எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி வெண்பா வடிவத்தில்  அற்புதமாக எழுதி இருந்தார்.
அவற்றில் ஒரு சில 

                     போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
                     பாதை வழுவிய பாலுறவில் காதைக்
                     கழுவாத ஊசி, கழிவுரத் தத்தில்
                     நுழையும் உயிர்க் கொல்லி நோய்

                     இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
                     எடைகாட்டி  இன்பம் இழைப்பாள்-மடையா
                     கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
                     விலைமகள் ஆசை விடு

                     கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
                     புண்ணுக்குள் சென்று புலன் கொல்லும் -கண்ணா
                     முறையோடு சேராத மோகம் பிறந்தால்
                      உறையோடு போர் செய்தே உய்

                      கரைமீறி சேர்ந்தாடும் காமக் கலப்பில்
                      உறைமீறி நோய் சேர்வதுண்டே -உறைநம்பிக்
                      கம்மாக் கரையோ கடற்கரையோ  தேடாமல்
                      சும்மா இருத்தல் சுகம்

                      தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
                      வேகையிலும்   விட்டு விலகாதே-ஆகையினால்
                      விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
                      கற்பனையை வீட்டுக்குள் காட்டு

                      கலவிக்குப் போய்வந்த காமத்து நோயை
                      தலைவிக்கும் ஈவான் தலைவன் -கலங்காதே
                      காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய் தந்தால்
                      கோவலனைக் கூசாமல் கொல்

                      ஓரின சேர்க்கை உறவாலே மானுடத்தில்
                      பேரின சேர்க்கையே பிய்ந்துவிடும்-பாரில்
                      இயற்கை உறவென்னும் இன்பம் இருக்க
                      செயற்கை உறவென்ன சீ!

                      தேன் குடிக்கப் போன திருவிடத்தில்  உன்னுடைய
                      ஊன் குடிக்க ஓட்டும் உயிர்க் கொல்லி-ஆண்மகனே
                      உல்லாச நோய் சிறிய ஒட்டையிலும் உட்புகுமே
                      சல்லாப வாசல்களை சாத்து

                       பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளை
                       கண்ணைக் கெடுக்கும் கலைகளை-இன்றே
                       எரியூட்ட வேண்டும் இளஞர்கள் வாழ
                       அறிவூட்ட வேண்டும் அறி

                       துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
                       இணையாக வேறுமருந் தில்லை  மனைவிஎன்னும்
                       மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
                       மானுடத்தை வாழ்விப்போம் வா!


 படித்து விட்டீர்களா? ஒரு கேள்வி?
இவற்றில் ஒரு வெண்பாவில் உள்ள ஒரு வரி சற்று உறுத்தலாகவும்   உள்ளதாகஎனக்குப் படுகிறது. அதை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். உங்களுக்கும் அப்படித் தோன்றியதா? தெரிவிக்கலாம்

*********************************************************

அந்த வார்த்தை எது என அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்க

21 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. ஐயா பிழை என்று சொல்வது தவறாகவும் இருக்கலாம். அது எனது தவறான புரிதலாக கூட இருக்கக் கூடும்

   நீக்கு
 2. கவிஞர் தையல் ஊசியை சிலேடையாக்கிச் சொல்கிறார் .ஒட்டையில் அடைத்திருக்கும் கழிவு(ரத்தத்தில்) நூல் நுழையாது ஆனால் கிருமி நுழைந்து விடும்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! ஓவராக சிந்திக்க வேண்டாம்.நான் சொல்வது அந்த அளவுக்கு ஒர்த் இல்லாமலும் இருக்கும்.

   கழுவாத ஊசியின் மூலமும் பஞ்சில் துடைக்கப்பட கழிவாக ரத்தம் மூலமும் பரவக்க் கூடும் /. இதில் ஏதும் எனக்கு வித்தியாசம் தோன்றவில்லை

   நீக்கு
  2. நான் பிழை கண்டுபிடிக்கும் எண்ணத்துடனேயே யோசித்துவிட்டேன். உங்கள் விளக்கம் சரிதான்.

   நீக்கு
 4. வைரமுத்து அவர்களின் “பெய்யெனப் பெய்யும் மழை“யை ஏற்கனவே படித்திருந்தாலும் திரும்பவும் படித்ததில் சுகம் தான். அருமையான புத்தகம் அது.

  தவிர நீங்கள் குறிப்பிட்டது போல.... எனக்கு எந்த வெண்பாவிலும் பொருட்பிழையோ... உறுத்தலோ தெரியவில்லையே...

  (ஒரு சமயம்.... நான் அறிந்தது அவ்வளவு தான் போல...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் பயன் படுத்தியவார்த்தை எனக்கு மாறுதலாகத் தெரிந்தது.
   அந்த வார்த்தையை ஆங்கிலப் படுத்திப் பார்த்தால் வேறு மாதிரியாக புரிந்துகொள்ள முடியும்
   நாளை என் எண்ணத்தை சொல்கிறேன். நான் நினைத்தது சரியா என்று நாளை சொல்லுங்கள்

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 5. மேற்கூறிய காரணங்களுடன் சுத்திகரிக்கப் படாத ஊசியிலும், கழிவு ரத்ததின் மூலமும் பரவும் என்பதையே குறிப்பிடுகிறார் என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. படித்தேன், ரசித்தேன் என்று செல்கிறேன்.

  சொற்சுவை, பொருட்சுவைப் பிழை எல்லாம் நான் அறிகிலேன்!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  அண்ணா
  புத்தகத்தில் இருந்த கவிதையை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற சிந்தனை உணர்வுடன் பகிர்ந்தமைக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. நக்கீரர் நினைவுதான் வருகின்றது...சொற் பிழையா கருத்துப் பிழையா என்று.....ரசித்தோம் கவிதையை....

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895