நேற்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கவிதையை வெளியிட்டிருந்தேன். ( படிக்க நேற்றைய பதிவு எய்ட்ஸ் பற்றி வைரமுத்து)
அவை வெண்பா வடிவத்தில் அமைந்திருந்தன. மிக சிறப்பாக எழுதப் பட்டிருந்தது
இவ்வெண்பாக்கள் ஒன்றில் ஒரு வார்த்தையை வித்தியாசமாக உணர்ந்தேன் என்று குறிப்பிடேன்.ஆனால் மற்ற எவரும் அதனை குறிப்பிடவில்லை என்பதால் எனது புரிதலில்தான் தவறு உள்ளது என்றே இப்போது எண்ணுகிறேன். இருந்தாலும் எனது என்ன ஓட்டத்தையும் சொல்லி விடுகிறேன்
அந்த வெண்பா இதுதான்
வேகையிலும் விட்டு விலகாதே-ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு
விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தைதான் எனக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியது.
விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை Sales women என்றே என்னால் சட்டென்று பொருள் கொள்ள முடிந்தது. ஆனால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தையை பாலியல் தொழில் செய்யும் பெண் என கவிஞர் பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம் என்பதே எனது கருத்து. Sales girls எல்லாம் Call girls அல்ல
இந்தக் கவிதையில் முதலில் இருந்தே காசுக்காக காம சுகம் தரும் பெண்களைப் பற்றி பேசுவதால் விற்பனைப் பெண்டிர் என்ற வார்த்தை பாலியல் தொழில் செய்யும் பெண்ணையே குறிப்பதாக மனது ஏற்றுக் கொண்டு விடுவதால் அந்த வார்த்தை யாருக்கும் தவறாக தோன்றவில்லை என நினைக்கிறேன்.
எனக்கென்னவோ விற்பனைப் பெண்டிர் என்றதும் சரவணா ஸ்டோர், போதீஸ் போன்றவற்றில் கால்கடுக்க நின்றுகொண்டு கேட்டதை எடுத்துக் கொடுக்கும் பெண்களும், வாசல் கதவை தட்டி ரெண்டு வாங்கினா ஒண்ணு ப்ரீ விளம்பர ஆஃபர் சார் வாங்கிக்கோங்க என்று கெஞ்சும் பெண்களுமே கண்முன் வந்து போனார்கள்.
உங்கள் கருத்து என்ன?
****************************************************
தொடர்புடைய பிற பதிவுகள்
தொடர்புடைய பிற பதிவுகள்
- 2.ஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா?-வைரமுத்து
- 3.சாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து
- 4.A.R.ரகுமான்-வைரமுத்து-நெஞ்சுக்குள்ளே-கடல் பாடல் வர...
- 5.எப்படி இருந்த மதுரை!-வைரமுத்து
- 6.வைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜின...
- 7.கண்ணகிபோல் இருக்காதீர்!-வைரமுத்து
- 8.கவிதைச் சூரியன்-வைரமுத்து (VAIRAMUTHU)
- 9.வைரமுத்துவின் விதைச் சோளம்
- 10.இதை எழுதியது யாரு?கண்டுபிடியுங்க!
****************************************************
