என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!


. (இந்தப் பதிவை இடுவதில் சிறிது தயக்கம் இருந்தது. இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ஐயம் இருந்தாலும் இன்றைய தினத்தில் இந்தப் பதிவு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.பள்ளி வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகள், அல்லது தம்பி தங்கைகளுக்கு சொல்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.)

    நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில்  நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

    பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை  ஒரு சாலை என்று கொண்டால்  அந்தப் பாதைக்கு நேர்  செங்குத்தாக பூமி தன்னைத்  தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.

  இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம்.  ஒரு குறிப்பிட்ட நாளில் மேல்முனை சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக  வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்

படம் 1

   ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி  சுற்று சுற்றி எதிர்புறம் வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை  பூமியை நோக்கி இருக்காது.இப்போது  கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில் இருக்கிறது.
இதோ  இந்தப் படத்தைப் பாருங்கள்
படம் 2

பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால்  கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
படம் 3
ஆனால்  இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை.இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது.

   படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி  அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு  நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது. 

    இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 23 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒழி விழுவதால் வட  அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.

   இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.

   சரி! இவையெல்லாம் விண் வெளியில்  நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும் 

1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்  
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும் 
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத  குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு  மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ  சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து  திசைகளின் அமைப்பை  அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.

               ஜூன் 21 அன்று           டிசம்பர் 21 அன்று 

                       இன்று செப்டம்பர் 22 அன்று 

  இவை  யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும்.ஆனாலும்  இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும்.

சுருக்கம்:  1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள் 
           2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு 
           3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல் 
பதிவு பயனுள்ளதாக இருந்ததா? 
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக  இருக்கிறேன்.
 ************************************************************************************************************
தொடர்புடைய பதிவு 


60 கருத்துகள்:

  1. நான் புதுசா எழுதிக்கொண்டிருக்கும் பதிவுக்கு விக்கியில் தகவல்களை மேயந்துகொண்டிருக்கும் இதுபற்றியும் தற்செயலாக படித்தேன்! நீங்க விரிவா எல்லோருக்கும் எளிதில் புரிவதுபோல் எழுதியிருக்கிறீர்கள் முரளி சார்!

    keep rocking! :)

    பதிலளிநீக்கு
  2. //பதிவு பயனுள்ளதாக இருந்ததா? //

    இருந்ததே!

    பதிலளிநீக்கு
  3. சிலவற்றை முன்னரே அறிந்திருந்தாலும் இப்பொழுது சில தகவல்களை புதியதாய் அறிந்து கொண்டேன் சார் .. நன்றி

    பதிலளிநீக்கு
  4. இதுபோன்ற விளக்கங்க ஆங்கிலத்திதான் அதிகம். தமிழில் நான் படித்ததில்லை. உங்களின் இந்த பதிவு எளிமையான தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளது. உங்களின் இந்த இடுகையை பிளஸில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி முரளி அண்ணே.

    பதிலளிநீக்கு
  5. மேற்போக்காக அறிந்திருந்த செய்திகளை விளக்கமாகத் தந்துள்ளீர் முரளி! நல்ல பதிவு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ரொம்பவே பொறுமையாக படிக்க வேண்டியிருந்தது.. நிச்சயம் பயனுள்ள பதிவு என்பதில் சந்தேகமேயில்லை...

    பதிலளிநீக்கு
  7. விளக்கமான பதிவு.. கட்டாயம் தெரியாதவர்களையும் தெரிந்து கொள்ள வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  8. நல்ல விளக்கமான பதிவு...பயனுள்ள பதிவுதான் சார்..

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள பதிவுதான். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. இத்தகைய பதிவை வாசிப்பவர்கள் குறைவு என்றாலும் அவசியம் பகிர வேண்டும். நல்ல விஷயம் சார் ! வெகு குறைவான மக்கள் தான் இப்படிப்பட்ட விஷயங்கள் எழுதுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  11. ரொம்பவே பயனுள்ள தகவல்.. இது போல் எழுதுவதற்கெல்லாம் தயங்காதீர்கள்.. ஒரே ஒருவரை சென்று சேர்ந்தாலும் உங்களுக்கு வெற்றியே

    பதிலளிநீக்கு
  12. அறியாத பல தகவல்களை
    அறிந்து கொண்டோம்
    இந்தப் பதிவுக்கு ஏன் தயங்கினீர்கள் எனப் புரியவில்லை
    பயனுள்ள அருமையான் பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. //சென்னை பித்தன் said...
    //பதிவு பயனுள்ளதாக இருந்ததா? //
    இருந்ததே!//
    நன்றி சென்னை பித்தன் ஐயா!

    பதிலளிநீக்கு
  14. //முனைவர்.இரா.குணசீலன் said...
    பயனுள்ள பதிவு நண்பரே./
    நன்றி முனைவர் அய்யா!

    பதிலளிநீக்கு
  15. //கோமதி அரசு said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  16. //செய்தாலி said...
    நல்ல பயனுள்ள பதிவு தோழரே//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  17. அரசன் சே said...
    சிலவற்றை முன்னரே அறிந்திருந்தாலும் இப்பொழுது சில தகவல்களை புதியதாய் அறிந்து கொண்டேன் சார் .. நன்றி//
    நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  18. பட்டிகாட்டான் Jey said...
    இதுபோன்ற விளக்கங்க ஆங்கிலத்திதான் அதிகம். தமிழில் நான் படித்ததில்லை. உங்களின் இந்த பதிவு எளிமையான தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளது. உங்களின் இந்த இடுகையை பிளஸில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி முரளி அண்ணே.//
    வருகைக்கும் கருத்துக்கும்,கூகிள் + பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெய்

    பதிலளிநீக்கு
  19. புலவர் சா இராமாநுசம் said...
    மேற்போக்காக அறிந்திருந்த செய்திகளை விளக்கமாகத் தந்துள்ளீர் முரளி! நல்ல பதிவு நன்றி!//
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புலவர் அய்யா!

    பதிலளிநீக்கு
  20. HOTLINKSIN.COM திரட்டி said...
    ரொம்பவே பொறுமையாக படிக்க வேண்டியிருந்தது.. நிச்சயம் பயனுள்ள பதிவு என்பதில் சந்தேகமேயில்லை...//
    ஹாட் லிங்க் திரட்டிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மதுமதி said...
    விளக்கமான பதிவு.. கட்டாயம் தெரியாதவர்களையும் தெரிந்து கொள்ள வைக்கும் பதிவு.//
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிஞரே!

    பதிலளிநீக்கு
  22. மோகன் குமார் said...
    இத்தகைய பதிவை வாசிப்பவர்கள் குறைவு என்றாலும் அவசியம் பகிர வேண்டும். நல்ல விஷயம் சார் ! வெகு குறைவான மக்கள் தான் இப்படிப்பட்ட விஷயங்கள் எழுதுகிறீர்கள்//
    நன்றி மோகன்.எனது தயக்கம் தவறு என்று நிருபித்து விட்டார்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
    அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  23. தெரியத விசயங்களை அறிந்தேன். நன்றி.
    உண்மையில் பயனுள்ள தகவல் முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  24. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமையான தகவல்கள் நண்பரே.//
    நன்றி!ராஜசேகர்சார்!

    பதிலளிநீக்கு
  25. சீனு said...
    ரொம்பவே பயனுள்ள தகவல்.. இது போல் எழுதுவதற்கெல்லாம் தயங்காதீர்கள்.. ஒரே ஒருவரை சென்று சேர்ந்தாலும் உங்களுக்கு வெற்றியே//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு!

    பதிலளிநீக்கு
  26. Ramani said...
    அறியாத பல தகவல்களை
    அறிந்து கொண்டோம்
    இந்தப் பதிவுக்கு ஏன் தயங்கினீர்கள் எனப் புரியவில்லை
    பயனுள்ள அருமையான் பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
    வருகைக்கும் கருத்துக்கும் வாக்கிற்கும் நன்றி ரமணி சார்!

    Read more: http://tnmurali.blogspot.com/2012/09/23.html#ixzz27JHPWpwi

    பதிலளிநீக்கு
  27. அருணா செல்வம் said...
    தெரியத விசயங்களை அறிந்தேன். நன்றி.
    உண்மையில் பயனுள்ள தகவல் முரளிதரன் ஐயா.//
    நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
  28. இன்றைய தினம் பற்றி பாடசாலை நாட்களில் அறிந்து கோண்டதன் பின் உங்களால்தான் ஞாபகப்படுத்தப் பட்டுள்ளேன்..
    பயனுள்ள பதிவு சார்

    பதிலளிநீக்கு
  29. மிகவும் நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    பதிலளிநீக்கு
  30. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  31. நல்ல பதிவு.

    நான் இது போன்ற ஒரு பதிவிற்கு படங்களை வெளியிட தமிழில் தேடிய போது கிடைக்கவ்ல்லை. ஆங்கில படங்களில் பெயர்களை நீக்கித் தமிழில் இட்டீர்களா. அல்லது தனியாக கிடைக்கவும் செய்கின்றனவா?

    பதிலளிநீக்கு
  32. உங்கள் தேடலுக்குப் பாராட்டுகள் முரளி.அருமையான தேடல்.தெரியாத தகவல்களும் கூட !

    பதிலளிநீக்கு
  33. நல்ல பகிர்வு,,, தொடர்ந்து பதியுங்கள் சகோ,,,

    பதிலளிநீக்கு
  34. இவ்வளவு விளக்கமாக சொல்லி விட்டு "பதிவு பயனுள்ளதாக இருந்ததா?" என்று கேட்கலாமா...?

    மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  35. //சிட்டுக்குருவி said...
    இன்றைய தினம் பற்றி பாடசாலை நாட்களில் அறிந்து கோண்டதன் பின் உங்களால்தான் ஞாபகப்படுத்தப் பட்டுள்ளேன்..
    பயனுள்ள பதிவு சார்//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. தமிழ் காமெடி உலகம் said...

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    மலர்//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர்

    பதிலளிநீக்கு
  37. Sasi Kala said...
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிங்க.//
    நன்றி சசிகலா!

    பதிலளிநீக்கு
  38. //வேங்கட ஸ்ரீநிவாசன் said...
    நல்ல பதிவு.
    நான் இது போன்ற ஒரு பதிவிற்கு படங்களை வெளியிட தமிழில் தேடிய போது கிடைக்கவ்ல்லை. ஆங்கில படங்களில் பெயர்களை நீக்கித் தமிழில் இட்டீர்களா. அல்லது தனியாக கிடைக்கவும் செய்கின்றனவா?//
    பிளாஷ் பைலில் இருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தமிழ் எழுத்துக்கள் சேர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  39. ஹேமா said...
    உங்கள் தேடலுக்குப் பாராட்டுகள் முரளி.அருமையான தேடல்.தெரியாத தகவல்களும் கூட !//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஹேமா

    பதிலளிநீக்கு
  40. தொழிற்களம் குழு said...
    நல்ல பகிர்வு,,, தொடர்ந்து பதியுங்கள் சகோ//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  41. திண்டுக்கல் தனபாலன் said...
    இவ்வளவு விளக்கமாக சொல்லி விட்டு "பதிவு பயனுள்ளதாக இருந்ததா?" என்று கேட்கலாமா...?
    மிக்க நன்றி...//
    நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  42. வணக்கம்

    சிறந்த பதிவைச் செதுக்கிய தோழா!
    நிறைந்த மகிழ்வில் நெகிழ்ந்தேன்!- பறந்துவரும்
    சின்ன குயில்போல் செழுந்தமிழை நாட்டோறும்
    உண்ண வருவேன் உவந்து!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
  43. நமக்கு இந்த விஞ்ஞான மேட்டர் எல்லாம் அவளவு எளிதில் மூளையில் ஏறி விடாது, அப்படிப்பட்ட எனது மரமண்டையில் ஏறும் அளவுக்கு இருந்த இந்த பதிவு பயனுள்ள பதிவு தானே!

    கொஞ்ச நாட்களாக இந்தியா போயிருந்ததால் உங்களது தளத்துக்கு வரமுடியாமல் போயிருந்தது, இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம்!

    பதிலளிநீக்கு
  44. Its my birthday on sep 23rd; Feeling cool and happy about it :)

    பதிலளிநீக்கு
  45. நமக்கு இந்த விஞ்ஞான மேட்டர் எல்லாம் அவளவு எளிதில் மூளையில் ஏறி விடாது, அப்படிப்பட்ட எனது மரமண்டையில் ஏறும் அளவுக்கு இருந்த இந்த பதிவு பயனுள்ள பதிவு தானே!
    கொஞ்ச நாட்களாக இந்தியா போயிருந்ததால் உங்களது தளத்துக்கு வரமுடியாமல் போயிருந்தது, இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம்//
    நன்றி கிஷோகர்

    பதிலளிநீக்கு
  46. Abdul said...
    Its my birthday on sep 23rd; Feeling cool and happy about it :)//
    வாவ் வாழ்த்துக்கள்.சிறப்பான நாளில் பிறந்ததற்கு.

    பதிலளிநீக்கு
  47. அருமையாக எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்.. இதை வெளியிடத் தயங்கிய காரணம் புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  48. //அப்பாதுரை said...
    அருமையாக எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்.. இதை வெளியிடத் தயங்கிய காரணம் புரியவில்லையே?//
    தங்கள் கருத்துக்குமிக்க நன்றி அய்யா இதைப் படிப்பார்களா என்ற எண்ணம்தான் காரணம் .
    இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.அத்துணை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  49. மீண்டும் பள்ளிக்கு சென்றது போல் ஒரு உணர்வை குடுத்துள்ளீர்கள்,
    நான் படிக்கின்ற காலத்தில் வலைப்பூக்களை படிக்க துவங்கியிருந்தால் கட்டாயம் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பேன் என் தோன்றுகிறது, அவ்வளவு எளிமை.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895