என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

பதிவர் சந்திப்பில் -நானும் நானும்

 

26.08.2012 அன்று நடந்த பதிவர் சந்திப்பின்போது நான் ஒரு கவிதை வாசிச்சேங்க. மயிலன் லதானந்த் னு ஒரு சிலரோட கவிதைகளுக்கு முன்னாடி நம்மோட கவிதை எடுபடலன்னாலும் அதுக்காக சும்மா விட்டுட முடிமா? அங்க வந்தவங்க பட்ட கஷ்டத்தை நீங்களும் பட்டுத்தான் ஆகணும்..அதைத்தான் இப்போ படிக்க போறீங்க. சாரி படப்போறீங்க.
தலைப்பை பாத்து தப்பா இருக்குன்னு நினச்சுடாதீங்க.
நான் அப்படின்னா என்னங்க இதயமா? மூளையா?மனசா.பெரிய பெரிய ஞானிகள் அறிஞர்கள் சொல்றது நம்ம மர மண்டைக்கு ஒன்னும் ஏறலீங்க. உன்னை நீ அறிவாய்ன்னு சொன்னாங்க. அதுவும் புரியலீங்க
  கடவுள் பாதி மிருகம் பாதின்னு கமலஹாசன் சொன்னது மாதிரி உள்ளுக்குள்ள ரெண்டு பேர் ஒரே உடம்புல இருக்கிற மாதிரி தெரியுது. ஒருத்தன் நல்லவனா இருக்கான் இன்னொருத்தன் கெட்டவனா இருக்கான். இந்த ரெண்டு பேரும் என்ன படுத்தற பாட்டை கவிதையா பதிவர் சந்திப்பின் போது கவிதையா வாசிச்சேன். ரெண்டு பேருமே நாந்தான் அப்படீன்றதால அதுக்கு நானும் நானும் னு தலைப்பு வச்சேன்.


நானும் நானும்

           என்னுள் இருப்பது இரண்டு ‘நான்’கள்
           என்னையே கேட்டேன் எண்ணிலா ‘ஏன்?’கள்

           நான்
என்பது முரண்பாட் டுருவம்
           நானும்
நானும் எதிரெதிர் துருவம்

           பொய்யைச் சொல்லி உதவியும் செய்வேன்

           மெய்யைச் சொல்லி மாட்டியும் கொள்வேன்

           புதுமை கண்டு போற்றவும் செய்வேன்

           பழமை கண்டும் வியந்தும் போவேன்

           முதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்

           முட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்

           தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்

           குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்

           கண்டதை எழுதி கவிதை என்பேன்

           கவிதை படைத்துக் குப்பை என்பேன்

           சிறுமை கண்டு சீறவும் செய்வேன்

           துரோகம் கண்டு ஒதுங்கியும் செல்வேன்

           வறியவர் கண்டு வாடவும் செய்வேன்

           வறுமை கண்டு ஓடவும் செய்வேன்

           பனியைப் போல உருகியும் விடுவேன்

           பாறை போலே இறுகியும் விடுவேன்

           இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்

           இசையைக் கூட இரைச்சல் என்பேன்

           காதலை ஒருநாள் கடவுள் என்பேன்

           காமம் என்று மறுநாள் சொல்வேன்

           முற்றும் துறந்திட முயற்சியும் செய்வேன்

           சற்று நேரத்தில் சஞ்சலம் கொள்வேன்

           அடக்கம் நானில் அடங்கி இருக்கும்

           ஆணவம் இன்னொரு நானில் தொனிக்கும்

            நானே வெல்வேன்! நானே தோற்பேன்!

            நானின் தன்மை அறியா தலைவேன்

            எதிரெதிர் 'நான்’கள் என்னுள் உறங்கும்.

            எப்பொழுது எதுவெனத் தெரியா தியங்கும்

            நான்கள் எனக்கு அடங்கு வதில்லை!

            வழிவகை தெரிந்தால் தீருமென் தொல்லை!

            நீங்கள் 'நான்' களை அறிந்தி டுவீரா!.

            தீர்வொன்று இருந்தால் சொல்லிடுவீரா?

 ****************************

 

35 கருத்துகள்:

  1. ம்ம்ம் ரெம்ப அருமையான கவிதைங்க
    எல்லாருக்குள்ளும் இருக்கிற நான் என்கிற இன்னொருவன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை.

    எதிரெதிர் ‘நான்’கள் ‘நாண்’களாக மாறி ஒன்றை ஒன்று தாக்குகின்றனவோ?

    //முற்றும் துறந்திட முயற்சியும் செய்வேன்
    சற்று நேரத்தில் சஞ்சலம் கொள்வேன்//

    ’சற்றே’ என்று ஏகாரம் கொடுத்தால் மேலும் நன்றாக இருக்குமோ?
    [’ஆவாரம் பூவு...’ பாடலில் செவ்வந்தி பூவு தவிப்பாச்சு என்று வைரமுத்து எழுதியதை ராஜா செவ்வந்தி பூவும் தவிப்பாச்சு என்று ‘உம்’காரம் சேர்த்ததாகக் சொல்வார்கள்]

    பதிலளிநீக்கு
  3. //தீர்வொன்று இருந்தால் சொல்லிடுவீரா//
    ஞானிகள் ஒரு நான்-ஐ யே அழிக்க வேண்டும் என்பார்கள். இங்கே இரண்டு ‘நான்’கள்!!!
    அவை ஒன்றை ஒன்று அழித்துக் கொ(ள்)ல்வது தான் தீர்வோ?

    பதிலளிநீக்கு
  4. பதிவர் சந்திப்பில் கேட்டு இரசித்த கவிதையை மீண்டும் இரசிக்க பதிவிட்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. கவிதை அருமை. எல்லாருக்குள்ளும் இருக்கும் பிறழ்வுதான் . விடை தேட முடியாதது. ஆனால் இரு நான்களை ஒன்றாக்க முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. பதிவர் சந்திப்பில் ரசித்த கவிதையை இங்கே மீண்டும் படிச்சு ரசிச்சேன். ஆனா படிச்சப்பறம் நான் யார்ன்னுதான் எனக்கே புரியலை.... நான் யாரு?

    பதிலளிநீக்கு
  7. என்ன தல இவ்வளவு நல்ல கவிதையை போய் இப்பிடி சொல்றீங்க! நல்ல கவிதை தல குறிப்பா இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! எந்த வரின்னா..

    >>நானே வெல்வேன்! நானே தோற்பேன்!
    நானின் தன்மை அறியா தலைவேன்
    எதிரெதிர் 'நான்’கள் என்னுள் உறங்கும்.
    எப்பொழுது எதுவெனத் தெரியா தியங்கும்>>

    also

    >>இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்
    இசையைக் கூட இரைச்சல் என்பேன்>>

    பதிலளிநீக்கு
  8. அங்கும் ரசித்தேன்
    இங்கும் ரசிக்கிறேன்
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான கவிதை! எல்லோருக்குள்ளும் இப்படி ஒருவன் இருக்கத்தான் செய்கிறான்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    பதிலளிநீக்கு
  10. //செய்தாலி said...
    ம்ம்ம் ரெம்ப அருமையான கவிதைங்க
    எல்லாருக்குள்ளும் இருக்கிற நான் என்கிற இன்னொருவன்//
    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. வெங்கட ஸ்ரீநிவாசன் said...
    அருமையான கவிதை.
    எதிரெதிர் ‘நான்’கள் ‘நாண்’களாக மாறி ஒன்றை ஒன்று தாக்குகின்றனவோ?//
    நன்றி வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பதிலளிநீக்கு
  12. வே.நடனசபாபதி said...
    பதிவர் சந்திப்பில் கேட்டு இரசித்த கவிதையை மீண்டும் இரசிக்க பதிவிட்டமைக்கு நன்றி!//
    நன்றி சபாபதி சார்!

    பதிலளிநீக்கு
  13. //ezhil said...
    கவிதை அருமை. எல்லாருக்குள்ளும் இருக்கும் பிறழ்வுதான் . விடை தேட முடியாதது. ஆனால் இரு நான்களை ஒன்றாக்க முயற்சிக்கலாம்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஎழில்

    பதிலளிநீக்கு
  14. //இராஜராஜேஸ்வரி said...
    முரண்பாடுகளே கவிதையாய் .//
    நன்றி ராஜராஜேஸ்வரி ..

    பதிலளிநீக்கு
  15. //பால கணேஷ் said...
    பதிவர் சந்திப்பில் ரசித்த கவிதையை இங்கே மீண்டும் படிச்சு ரசிச்சேன். ஆனா படிச்சப்பறம் நான் யார்ன்னுதான் எனக்கே புரியலை.... நான் யாரு?//
    ஹையா! உங்களை குழப்பிட்டனே!

    பதிலளிநீக்கு
  16. வரலாற்று சுவடுகள் said...
    என்ன தல இவ்வளவு நல்ல கவிதையை போய் இப்பிடி சொல்றீங்க! நல்ல கவிதை தல குறிப்பா இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! எந்த வரின்னா.. //
    வசு வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. //பழனி.கந்தசாமி said...
    வந்தேன்.//
    வருகைக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  18. Ramani said...
    அங்கும் ரசித்தேன்
    இங்கும் ரசிக்கிறேன்
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்//
    ரமணி சாருக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  19. s suresh said...
    சிறப்பான கவிதை! எல்லோருக்குள்ளும் இப்படி ஒருவன் இருக்கத்தான் செய்கிறான்! நன்றி!
    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2//
    நன்றி சுரேஷ்௧

    பதிலளிநீக்கு
  20. அருமையான கவிதை
    அழகான வரிகள்
    வரிகளின் கோர்வை மிகவும் பொருத்தம்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் நண்பரே...
    சந்திப்பின் போது கவியரங்கத்தில் கேட்டு ரசித்த
    கவிதையை இங்கே படிக்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  22. எதிரெதிர் 'நான்’கள் என்னுள் உறங்கும்.
    எப்பொழுது எதுவெனத் தெரியா தியங்கும் நான்கள் எனக்கு அடங்கு வதில்லை!
    வழிவகை தெரிந்தால் தீருமென் தொல்லை! நீங்கள் 'நான்' களை அறிந்தி டுவீரா!.
    தீர்வொன்று இருந்தால் சொல்லிடுவீரா?

    //அருமை! அருமை!//

    பதிலளிநீக்கு
  23. அட நல்லா இருக்கே... ஒவ்வொருவருக்குள்ளும் ’நான்’கள்..

    பதிலளிநீக்கு
  24. ஓர் உறைக்குள் இருக்கும் இரண்டு கத்திகள்....
    ஒன்றை ஒன்று வெட்டிக்
    கொள்ளும் என்பதைவிட
    ஒன்றை ஒன்று உராய்ந்து
    இன்னும் கூர்மையாகும்....

    கவிதை சூப்பர்ங்க முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  25. ஒவ்வொரு மனிதனும் முரண்களின் தொகுப்பு தான் ...

    பதிலளிநீக்கு
  26. இளையராஜா வின் "நான் யாரு ...எனக்கே அது தெரியலயே...என்ன கேட்டா நான் கூற வழி இல்லையே.." பாடலை நினைவு கூர்கிறது உங்கள் கவிதை.

    பதிலளிநீக்கு
  27. கவிதை அருமை.
    ’நான் யார்’ என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள செய்யும் கவிதை.
    நான் யார் என்று தெரிந்து விட்டால் நாட்டில் அமைதி நிலவும்.
    பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி தொகுப்பு , படங்கள், என்விகடனில் வந்த பதிவர் சந்திப்பு விபரம் எல்லாம் அறிந்தேன் மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  28. அருமையான ‘நான்’கள் !

    அருமையான ‘நான்’கள் !

    Vetha.Elangthilakam (after holidays)

    பதிலளிநீக்கு
  29. மிகச் சிறப்பான ஆக்கம்!!!!.... மென்மேலும் சிறப்புற
    என் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கு .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  30. வடக்கும் தெற்கும் தன்னில் பொருந்தி
    நடக்கும் நானோர் நகரும் காந்தம்.

    முரண்களின் நாணை ஏற்றி படிப்பவர் மனதில் எய்து போனீர்கள் ஐயா.

    என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895