என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை

    இரும்பு குதிரைகள் நாவலில்கதையின் நாயகன் விஸ்வநாதனின் வாயிலாகச் சொல்லும் கடைசி கவிதை. தன் கணவனுக்கு பிடித்தது கவிதை இலக்கியம்.தனக்கும் தன் குடும்பத்திற்காகவும் பிடிக்காத வேலையை செய்கிறானா என்ற எண்ணம் கவிதைகளை படித்த எண்ணம்  விஸ்வநாதனின் மனைவி தாரணிக்கு ஏற்படுகிறது.அவன் எதையும் வெளிக்காட்டாது சகஜமாக நடந்து கொள்வது சிறிது குற்ற உணர்வையும் அவளுக்கு ஏற்படுத்துகிறது. இதோ அவளது வார்த்தைகளில்
  "உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? என் மேல கோபமில்லையே! சினிமா பீல்ட் கூடாதுன்னு சண்டை போட்டு அனுப்பினோமேன்னு ரொம்ப வேதனையா இருந்தது அதுக்கு தண்டனை மாதிரி நெனச்சிண்டு நீங்க எழுதின எல்லாக் கவிதைகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில நம்பர் போட்டு விடாப்பிடியா எழுதினேன்.  நன்னா இருக்கா ஏன் கையெழுத்து?தாரிணிக்கு சமர்ப்பணம்னு போடுவேளா? என்ன தலைப்பு வைக்கலாம்.?
"இரும்பு குதிரைகள்" என்றான் விஸ்வநாதன் 
"ஹா! நல்லா  இருக்கு. இரும்பு குதிரைக்கு "க்" உண்டா?
"இல்லை தாரிணி"
"க் உண்டு போலிருக்கே. ஒற்று வரணுமே!"
"நம்ம தலைப்பில வேண்டாமே!"
 நாவலின்  இறுதிப் பகுதியில் இடம் இந்த பெரும் உரையாடல் மனதுக்குள் பல உணர்வுகளை எனக்கு ஏற்படுத்தியது. 
அப்போது பதிவுலகம் இருந்திருந்தால் ஒரு வேளை அவனது கனவுகளை பதிவுகள் மூலம் கவிதைகளாய் வெளிப்படுத்தி இருப்பான். இப்போது கூட எத்தனையோ விஸ்வநாதன்கள் தங்கள் உணர்வுகளை பதிவுலகில் விதைக்கிறார்கள். நீங்களும் நானும் கூட அவர்களில் ஒருவராக இருக்கலாம்.

ஒன்பது பகுதிகளாக வெளிவந்த பாலகுமாரனின் கவிதைகளுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

                            இரும்பு குதிரைகள்

                வட துருவம் தென் துருவம் அச்சாய் வைத்து
                புவியுருண்டை  சூரியனை சுற்றும் என்றார் 
                பூமியது தேரேன்றால் புரவிஎங்கே?
                எங்கிழுத்துப் போகிறது இத்தனைக் காலம் 
                யாரிதற்கு தேர்ப்பாகன் எங்கே வார்த்தோல்?
                ஏன் ஓட்டிப் போகின்றான் எதனைத் தேடி?
                நரநரத்து பூமித் தேர்  போகும் சத்தம்
                இரவெல்லாம் என்னுள்ளே தினமும் கேட்கும்
                இழுக்கின்ற குதிரையதை இருட்டில் தேடும் 
                காணாமல்  வாய்பொத்தி தவிக்கச் செய்யும் 
                நுகத்தடியில்  பூட்டாது பரியை உருக்கி 
                தேருக்குள் அடைத்துவிட்டு செல்லுதல் போல் 
                பூமிக்குள் ஏதேனும் குதிரை உண்டா?
                யார் உருக்கி அடைத்தார்கள் உருண்டைப் புவியில் 
                பூமியது தேர்தானா குதிரை  உடலா?
                தெரு முழுதும் ஓடுவது தேரா பரியா?
                உயிர்போல ஒர் பொறியை உள்ளே பொதித்து
                இரும்பான குதிரைகள் ஓடக் கண்டேன் 
                பூமியெனும் குதிரைகள் சக்தி யூட்டி 
                பொழுதெல்லாம் ஓட்டுவது எந்த ஞானி 
                ஏன்ஓட்டிப் போகின்றான் இத்தனைக் காலம்?
                              ************************************

  இதைப் படித்தீர்களா?
பாலகுமாரனின் கவிதைகள்!l
மன்னன் என்ன சொன்னான்? பாலகுமாரன் கவிதை.
***************************************************************************************

இன்று மகா கவி பாரதியின் நினைவு நாள் அந்த தேசிய கவிக்கு ஒரு கவிதாஞ்சலியைப்  படித்து தங்கள் மேலான கருத்தைக் கூறுவீர்.


30 கருத்துகள்:

 1. // ஒன்பது பகுதிகளாக வெளிவந்த பாலகுமாரனின் கவிதைகளுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

  அனைத்துப் பகுதிகளையும் இனிமைகப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 2. மிகவும் சிறப்பான பகிர்வு! புத்தகமாய் வாசிக்க முடியவில்லை என்ற குறையை உங்கள் பகிர்வு தீர்த்து வைத்தது!

  இன்று என் தளத்தில்!
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
  http://thalirssb.blogspot.in/2012/09/8.html

  பதிலளிநீக்கு
 3. எனக்கு வைரமுத்து மிகவும் பிடிக்கும். கதாநாயகன் விசு-வுக்கும் அவரைப் பிடிக்கும். அப்பொழுது (நாவலைப் படித்த பொழுது) ஒரு ஆடிட்டரிடம் வேலை; அவருக்கு யானைக்கவுனியில் (சென்னை) ஒரு வாடிக்கையாளர் உண்டு. அங்கு ஏடாவது வேலை என்றால் எப்பொழுதும் நான் தான் போவேன். அங்கு போகும் பொழுதெல்லாம் இந்த நாவலில் படித்ததெல்லாம் வந்து வந்து போகும்.
  இப்பொழுது அந்த நினைவுகளை மீண்டும் புதுப்பித்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. விழுந்து விழுந்து படித்தது என் இளமைகாலங்களில்...ஏனோ இதை படித்தும் விழியோரம் நீர் கசிகிறது..

  பதிலளிநீக்கு
 5. நல்ல புத்தகத்தை
  மிக நேர்த்தியாகப் பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. நல்ல நாவல். பகிர்ந்ததற்கு நன்றி. அதில் வரும் கவிதைகளை நான் மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. கவிதைகளை மீண்டும் படிக்கத்தந்தமைக்கு நன்றி முரளி. மீண்டும் இப்புத்தகம் படிக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 8. என் 15 ஆம் வயதிலேயே படித்து படித்து வியந்த நாவல். பின்நோக்கி இழுத்துச் சென்ற பதிவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. செய்தாலி said...
  நல்ல பகிர்வு நண்பரே//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. //s suresh said...
  மிகவும் சிறப்பான பகிர்வு! புத்தகமாய் வாசிக்க முடியவில்லை என்ற குறையை உங்கள் பகிர்வு தீர்த்து வைத்தது!
  இன்று என் தளத்தில்!
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8//
  நன்றி சுரேஷ்

  பதிலளிநீக்கு
 11. //வெங்கட ஸ்ரீநிவாசன் said...
  எனக்கு வைரமுத்து மிகவும் பிடிக்கும். கதாநாயகன் விசு-வுக்கும் அவரைப் பிடிக்கும். அப்பொழுது (நாவலைப் படித்த பொழுது) ஒரு ஆடிட்டரிடம் வேலை; அவருக்கு யானைக்கவுனியில் (சென்னை) ஒரு வாடிக்கையாளர் உண்டு. அங்கு ஏடாவது வேலை என்றால் எப்பொழுதும் நான் தான் போவேன். அங்கு போகும் பொழுதெல்லாம் இந்த நாவலில் படித்ததெல்லாம் வந்து வந்து போகும்.
  இப்பொழுது அந்த நினைவுகளை மீண்டும் புதுப்பித்தமைக்கு நன்றிகள்.//
  நிறையப் பேருக்கு பழைய நினவுகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. //திண்டுக்கல் தனபாலன் said...
  சிறப்பான பகிர்வுக்கு நன்றி..//
  தனபாலன் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. //ஜீவன்சிவம் said...
  விழுந்து விழுந்து படித்தது என் இளமைகாலங்களில்...ஏனோ இதை படித்தும் விழியோரம் நீர் கசிகிறது..//
  மிக்க நன்றி ஜீவன் சிவம்.!

  பதிலளிநீக்கு
 14. //Ramani said...
  நல்ல புத்தகத்தை
  மிக நேர்த்தியாகப் பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்//
  ரமணி சாருக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. கும்மாச்சி said...
  நல்ல நாவல். பகிர்ந்ததற்கு நன்றி. அதில் வரும் கவிதைகளை நான் மிகவும் ரசித்தேன்.//
  நன்றி கும்மாச்சி!

  பதிலளிநீக்கு
 16. //வெங்கட் நாகராஜ் said...
  கவிதைகளை மீண்டும் படிக்கத்தந்தமைக்கு நன்றி முரளி. மீண்டும் இப்புத்தகம் படிக்க வேண்டும்!//
  அதனை பதிவுகளுக்கும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி வெங்கட் சார்!

  பதிலளிநீக்கு
 17. சிவகுமாரன் said...
  என் 15 ஆம் வயதிலேயே படித்து படித்து வியந்த நாவல். பின்நோக்கி இழுத்துச் சென்ற பதிவிற்கு நன்றி//
  மிக்க நன்றி சிவகுமாரன் சார்.

  பதிலளிநீக்கு
 18. இரும்பு குதிரைகள் -- மீண்டும் படித்த நிரைவைத்தந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 19. மீண்டும் நினைவலையில் நிறுத்திய பதிவின் இறுதி தொகுப்பு .. நேரம் கிடைக்கையில் மீண்டும் படிக்கலாம் .. நன்றிங்க சார்

  பதிலளிநீக்கு
 20. Dear sir i saw this story from pothikai Tv .in my school days .Thanks for remembering

  பதிலளிநீக்கு
 21. இராஜராஜேஸ்வரி said...
  இரும்பு குதிரைகள் -- மீண்டும் படித்த நிரைவைத்தந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்//
  நன்றி ராஜேஸ்வரி

  பதிலளிநீக்கு
 22. //அரசன் சே said...
  மீண்டும் நினைவலையில் நிறுத்திய பதிவின் இறுதி தொகுப்பு .. நேரம் கிடைக்கையில் மீண்டும் படிக்கலாம் .. நன்றிங்க சார்//
  நன்றி அரசன்.

  பதிலளிநீக்கு
 23. //குட்டன் said...
  சிறப்பான கவிதாஞ்சலி//
  நன்றி குட்டன்.

  பதிலளிநீக்கு
 24. அ.குரு said...
  Dear sir i saw this story from pothikai Tv .in my school days .Thanks for remembering//
  நன்றி குரு.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895