என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2012

தமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா?+கேபிளின் கவிதை விமர்சனம்


இது எனது 150 வது பதிவு
 கடந்த  வாரத்தில் பதிவுகள் தொடர்பாக  மூன்று பதிவுகள் படித்தேன். ஒன்று அதிரடி ஹாஜா வின் "தமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்". மற்றொன்று ரசீம் கசாலியின்  "இது தமிழ்மணம் பற்றிய அதிரடி ஹாஜா பதிவிற்கு பதிலடி பதிவல்ல." மூன்றாவது மதுமதியின் 'இப்படித் தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா?'

  அதிரடி ஹாஜா தனது பதிவில் "வாசகர் பரிந்துரையில்  7 ஓட்டுகளை பெரும் பதிவுகள்  இடம்பெற்றுவருகின்றன....ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய  ஒரு ஓட்டை தவிர  மீதி ஆறு ஓட்டுகள் அதாவது  6 பேர் பரிந்துரைக்கும் பதிவு  எப்படி வாசகர் பரிந்துரையில்  இடம்பெறலாம் மொக்கையான பதிவாக இருந்தாலும் நண்பர்கள் ஒட்டு போட்டுவிடுவதால் வாசகர் பரிந்துறையில் இடம் பெற்று விடுகிறார்கள் இதனால் வாக்கு பெற முடியாத புதிய பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறார்.

   அவர் சொல்வது உண்மை என்றாலும் பதிவுலகைப் பொருத்தவரை எனக்குத் தெரிந்து நெருங்கிய நண்பர்கள் கலந்து பேசி வலைப்பூக்கள் ஆரம்பித்து தங்களுக்குள் ஓட்டுப் போட்டுக் கொள்வது இல்லை. பதிவுலகில் நுழைந்த பின்னேதான் நண்பர்களாகிறார்கள். . ஒத்த அலைவரிசை உடையவர்கள் இணைந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் மற்றவர் பதிவுகளுக்கு கருத்திடுவதும் வாக்களிப்பதுமாக இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு ஒட்டு போட்டது யார் என்று  தெரியாமலிருக்கும். எனக்கு வாக்களித்த ஒரு சிலரை நான் பதிவர் சந்திப்பின்போதுதான் நேரில் பார்த்தேன்.

  ஏழு பேர் மட்டும் வாக்களித்தால் எப்படி வாசகர் பரிந்துரையாகும் என்பது சரி என்றாலும் ஏதாவது ஒரு அளவுகோல் வேண்டுமல்லவா!,அந்த அளவுகோல் ஏழாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். தமிழ் 10 இல் பத்து வாக்குகள் பெற்றால்தான் பிரசுரமானவை தலைப்பில் வெளியாகும். அதற்கு கீழ் உள்ளவை காத்திருப்பவை பட்டியலில்தான் இருக்கும்.

  ஏழு வாக்குகள் பெறுவது சாதாரண விஷயம் இல்லையென்றாலும் புதிய பதிவர்களும் கொஞ்சம் முயற்சித்தால் ஏழு வாக்குகள் பெற்றுவிட முடியும்.இன்னும் அதிக வாக்குகளை நிர்ணயித்தால் புதிய பதிவர்களுக்கு மேலும் சிக்கல்தான். இன்னும் குறைத்தால் பரிந்துரைக்கு அர்த்தம் இல்லாமலே போய்விடும்.வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக வேறு பெயர் வேண்டுமானால் வைக்கலாம்.

  இந்த ஏழு வாக்கு விஷயத்தில்  தமிழ்மணம் கடைபிடிக்கும் நடைமுறை புதியவர்களுக்கு உதவும் வகையில்தான் உள்ளது என்று கருதுகிறேன். ஏனென்றால் இப்பகுதியில் வெளியாகும் பதிவுகள் வாக்குகளின் எண்ணிக்கைப் படி வரிசைப் படுத்தப்படுவதில்லை. ஏழு வாக்குகள் பெற்றதும் உடனே வெளியாகி விடுகிறது.பின்னர் வாக்குகள் பெற்றாலும் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை. 50 வாக்குகள் பெற்றாலும் பின்னேதான் செல்லும்.அடுத்து 7 வாக்குகள் பெறுவது முதலிடத்தில் வருகிறது.

  அதனால்  புதியவர்கள் (என்னையும் சேர்த்துத்தான் ) பல பதிவுகளைப் படித்து சரியான பின்னூட்டம் இட்டாலே வாக்குகள் கிடைக்க வழி கிடைக்கும்.

  நூறு  நூற்றி ஐம்பது ஹிட்ஸ் கிடைத்தால் வாசகர் பரிந்துரையாக இருக்கவேண்டும் என்று சொல்லும் ஹாஜாவிற்கு கசாலி சொன்னது போல  இவ்வளவு ஹிட்ஸ் பிரபல பதிவர்களுக்கே கிடைக்கும்  புதிய பதிவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இன்னும் அரிதாகும். 

  பிரபல பதிவர்களுக்கு கண்மூடித்தனமாக வாக்குகளும் கம்மென்ட்சும் குவிகின்றன என்பது உண்மைதான்.(உதாரணம்:கேபிளாரின் என்டர் கவிதை. விமர்சனம் இந்தப் பதிவின் இறுதியில் காண்க!)  ஆனால் அந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பதை உணரவேண்டும்.ஆரம்பத்தில் அவர்கள் இட்ட நல்ல பதிவுகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்திருக்கக் கூடும்.

  .கடந்த அக்டோபரில் தமிழ் மணத்தில் இணைந்த   நான் எனது நிறைய பதிவுகளுக்கு ஏழு ஓட்டுக்கள் பெற்றதில்லை. பெரும்பாலும் எனது வோட்டுக்களை எனக்காக போடுவதில்லை. ஏழு ஓட்டுக்கள் பெற்றால் வாசகர் பரிந்துரையில் இடம் பெறும் என்பதை தாமதமாகத்தான்  தெரிந்து கொண்டேன்.எப்படியோ தட்டுத் தடுமாறி  இன்று தமிழ் மணத்தின் தரவரிசையில் 23 வதாக இருக்கிறேன்.

  ஒரு சினிமாவைப் போலவே பதிவுகளின் ஹிட்டும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நாம் எதிர் பாராத வகையில் சில பதிவுகள் ஹிட்டாகி விடுகின்றன.என்றாலும் மினிமம் கேரண்டியாக 100 முதல்150 பேர் வரை பார்க்க வைக்க நல்ல பதிவுகளை எழுதினால் மட்டுமே முடியும் என்பதை எனது குறைந்த வலைப்பதிவு அனுபவத்தின் மூலம் அறிய முடிகிறது. சில நேரங்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பதிவிற்கு குறைவான வாக்குகள் விழுவதும் உண்டு. எனது சமீபத்திய ஒரு  பதிவு மட்டும் இரண்டாயிரம்  பேருக்கு மேல் பார்வை இடப்பட்டது. அதிக கருத்துகளும் கிடைத்தன, ஆனால்  வாக்குகளோ 6 மட்டுமே  கிடைத்தன. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு எனது கொள்கையை மாற்றிக்கொண்டு ஏழாவது வாக்கை நானே போட்டேன். ஏற்கனவே அதிகம் பேர் பார்த்து விட்டதால் அதற்கு மேல் அதிக பயன் ஒன்றும் விளைய வில்லை. 

  முதலில் நட்புக்காக வாக்களிப்பவர்கள் எப்போதும் தொடர்ந்து எல்லா பதிவுகளுக்கும் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.பதிவுகளின் தரம் மட்டுமே வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

  புதிய பதிவர்களுக்கு தனி பகுதி தொடங்கலாம் என்ற பிரபல பதிவர் கஸாலி சொன்னஆலோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் ஆனால அதிலும் சிக்கல் உண்டு, புதிய பதிவர் என்பதை எப்படி வரையறுப்பது பதிவுகளை எண்ணிக்கை வைத்தா? தமிழ் மணத்தில் சேர்ந்ததை வைத்தா? காலத்தை வைத்தா என்ற கேள்வி எழுகிறது. எந்த முறையிலும் அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது.

   புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர் செய்துவருகிறார்கள்.ஒருவர் "தீதும்  நன்றும் பிறர் தர வாரா" ரமணி, திண்டுக்கல்  தனபாலன்,"வரலாற்றுச் சுவடுகள்" போன்றோர் எந்தப் பதிவாக இருந்தாலும் அதில் சிறப்பு அம்சத்தை தேடிப்  பாராட்டுவதோடு யாராக இருந்தாலும் வாக்களிக்கிறார்கள்,. அவர்களது வாக்குகள் பிறரையும் வாக்களிக்கத் தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை. அதனால் பல புதியவர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.

   ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது  இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய  பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.

                 ****************************************************
  மிகவும் பிரபல பதிவர் கேபிள் சங்கரை அறியாதவர்கள் பதிவுலகில் இருக்க மாட்டார்கள். அவரது சமீபத்திய என்டர்  கவிதை ஒன்று 50 வாக்குகள் பெற்று தமிழ்மணத்தில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையாக இருந்தது. அதை  அவரது பிரபலத்திற்கு கிடைத்த பரிசாக எடுத்துக் கொள்ளலாம். அது மிகச் சுமாரான கவிதை. அதை உறுதிப் படுத்தும் விதமாகவே அதற்கு இடப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கின்றன.  இனி கவிதை எழுத வேண்டாம் என்றும் அன்புக் கட்டளைகூட  இட்டுள்ளனர்.ஆனால் கேபிள் அத்தனை கருத்துக்களையும் வெளியிட்டிருந்த நேர்மை பாராட்டுக் குரியது. இதே கவிதை வேறு யாரேனும் எழுதி இருந்தால் பாராட்டுக்கள் கிடைத்திருக்கலாம்.ஆனால் அவர் மீது அதிக எதிர் பார்ப்புகளே விமர்சனங்களுக்கு காரணம் 
குட்டி  விமர்சனம்
கேபிள் ஜி மன்னிப்பாராக!
அந்தக் கவிதை
அடர் மழை
மூடிய கார் கதவுகளுக்குள் 
ஏஸியின் குளிர்
நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்
மழைக்கு ஒதுங்கிய 
முழுக்க நனைந்த வெண்ணுடை 
டைட் ஸ்லீவ் பெண்
யார் கண்ணுக்கும் 
தந்தூரி சிக்கன் தெரியவில்லை.
இந்தக்  கவிதையில் மூடிய கார் கதவுகளுக்குள் ஏஸியின் குளிர்.இது தேவயில்லை என்று கருதுகிறேன். தந்தூரி சிக்கன் இருமுறை வந்துள்ளது.இதையும் தவிர்த்திருக்கலாம்.டைட் ஸ்லீவ் இதுவும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காகவே தெரிகிறது. முழுக்க நனைந்த வெண்ணுடை பெண் இதுவே போதுமானது.
மாற்றி அமைத்தால் கவிதை எப்படி இருக்கும்.?
             அடர் மழை!
             மழைக்கு ஒதுங்கிய
             முழுக்க நனைந்த
             வெண்ணுடை பெண்!
             யார் கண்ணுக்கும்
             தெரியவில்லை
             நிர்வாணமாய் கால் அகட்டி
             தொங்கும் தந்தூரி சிக்கன்!


இப்படி இருந்திருந்தால் ஒருவேளை கவிதையாகி இருக்குமோ. (இந்தப் பாணி சுஜாதா விடமிருந்து கற்றுக் கொண்டது)  
************************************************************************************** 

50 கருத்துகள்:

  1. என் பதிவுக்கு வரும் ஹிட்ஸில் 60 வீதம் தமிழ்மணத்தில் இருந்து தான் வருகிறது. indli, tamil10ல் இருந்து வரும் விசிட் கொஞ்சம் குறைவு.

    உங்க கவிதை கேபிளாரின் கவிதையை விட கொஞ்சம் பெட்டராத் தெரியுது. :)

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே! திரட்டிகளில் தமிழ்மணம் தானே முன்னிலையில் உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஹிட்ஸ்,ஓட்டு என இதற்கும் ஒரு ஆராய்ச்சியா :-))

    பதிலளிநீக்கு
  4. 150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..'

    பதிலளிநீக்கு
  5. ###ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.###
    சரியான வார்த்தைகள்.முயல்கிறேன்.

    அந்த கவிதை ஆனாலும் ரொம்ப ஓவர் சார்....அன்னைக்கு வேற ஏதாவது ஒரு நல்ல பதிவு நம் கண் முன்னாடி வராம போயிருக்கும்.




    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. மிகச் சரியாக விரிவாக தமிழ்மண
    வாக்குகள் குறித்து பதிவிட்டதற்கும்
    சுஜாதா அவர்களிடம் கற்றதை மிகச் சரியாக
    பயன்படுத்தியமைக்கும் மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. 150 பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்...தரமான எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் சார்.. தமிழ் மனம் வோட்டு என்பதெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் நாம் நம் பாதையில் பயணிப்போம்

    பதிலளிநீக்கு
  9. முதலில் 150-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் முரளி சார்! மிக்க நன்றி என்னை பற்றி குறிப்பிட்டதற்கும்!

    BTW, செமையான எடிட்டர் சார் நீங்க! எடிட் செய்த பிறகு கவிதை ஜொலிக்கிறது! அதற்க்கு முன்னாடியும் கவிதை நன்றாகத்தான் இருந்தது :)

    தமிழ்மணத்தை பொருத்தவரை அதன் தற்போதைய நிலைப்பாடே சரியென்று கருதுகிறேன் (என்னை பொருத்தவரை)

    பதிலளிநீக்கு
  10. தமிழ்மணம் தான் திரட்டிகளில் முதன்மையானது. இடையில் த.ம. இணைக்க முடியாமல் வெளியிட்ட என்னுடைய சில தரமான பதிவுகள் (அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டிருப்பவை), த.ம-வில் இணைத்த என் மற்ற சாதாரண பதிவுகளை விட குறைந்த அளவு படிக்கப் பட்டதே அதற்கு உதாரணம்.

    மற்றபடி, ஒரு cut-off வைக்க வேண்டியது தான். அது 7-ஆக் இருப்பதில் தவறில்லை என்றே படுகிறது.

    நீங்கள், வெறும் ஆசிரியர் அல்ல பதிப்பாசிரியராகவும் தகுதியானவர் என்பது புலப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  11. 150-வது (நினைக்கவே மலைப்பாக இருக்கு...!) பதிவுக்கும், மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    திருத்திய கவிதைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. அட என்னமோ போங்க, நான் ரொம்ப காலமா தமிழ்மணம்ல சேர முயற்சி பன்னிட்டே இருக்கேன், ஒன்னும் நடக்க மாட்டேங்குது.

    பதிலளிநீக்கு
  14. எனக்குத் தெரியாததை நிறைய அறிந்து கொண்டேன்.
    நன்றி முரளிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  15. கவிதையை நீங்கள் எடிட் செய்து வெளியிட்ட விதம் மிக அருமை. இனிமேல் மிக பெரிய பதிவாளர்களாக இருந்தாலும் சிறிய பதிவாலர்களாக இருந்தாலும் பதிவிடும் முன்பு உங்களிடம் அனுப்பி எடிட் செய்து அதன்பிறகு பதிவிட்டால் மிக சிறந்த கவிதையாக வரும் என்பதில் ஐயமில்லை...இப்போது இருக்கும் இளைஞர்களிடம் திறமை மிக அதிகம் ஆனால் உங்களைப் போல உள்ள சிலர்தான் அதை யூஸ் பண்ணுகிறார்கள். அதனால் தனித்தன்மையுடன் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. இந்த ஓட்டளிக்கும் முறை என்னவென்று புரியவே ரொம்ப நாட்கள் ஆனது.ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருந்து ஓட்டளித்துக்கொள்வது என்பது நடைமுறையில் இருக்கிறதா, இந்த வரிசையில் நம்மால் காத்துக்கொண்டேயிருந்து பிறருக்கு ஓட்டளிக்க முடியாது. ஏனெனில் எப்போது சமயம் வாய்க்கிறதோ அப்போதுதான் இணையம் பக்கம் வருகிறோம். அந்தச் சமயங்களில் எந்தெந்த பதிவுகளுக்கு மறுமொழிகள் எழுதவேண்டும் என்று தோன்றுகிறதோ அந்தப் பதிவுகளுக்கு அவை பிரபல பதிவர்களுடையதா புதியவர்களுடையதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. எழுதவேண்டும் என்று தோன்றினால் பதில் எழுதுவது என்னுடைய வழக்கம். அதனால்தான் என்னுடைய பதிவுகளும் உடனடியாக ஏழு ஓட்டுக்கள் பெறுவதில்லையென்று நினைக்கிறேன்.
    ஓட்டுக்களைத் தாண்டி சில நல்ல பதிவுகள் நீண்ட நாட்கள் அல்லது ஓரிரு நாட்களாவது நிலைத்திருக்க வேறு ஏதாவது வழிமுறைகளைக் கொண்டுவந்தார்களானால் நல்லது.
    கேபிள் சங்கரின் கவிதையை நீங்கள் செப்பனிட்டிருக்கும் முறைதான் சரியானது. இப்போதுதான் அந்தக் கவிதை 'கவிதை' போலத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள்.......எனது பதிவை பற்றிய உங்கள் அலசல் அருமை...நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது....

    பதிலளிநீக்கு
  18. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    :-))//
    வருகைக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  19. //வவ்வால் said...
    ஹிட்ஸ்,ஓட்டு என இதற்கும் ஒரு ஆராய்ச்சியா :-))//
    ஆமாம் சார். நம்ம படைப்புகளை கொஞ்சம் அதிக பேர் படிச்சா சந்தோஷம் ஏற்ப்டுதே!

    பதிலளிநீக்கு
  20. //மகேந்திரன் said...
    150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..'//
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  21. //சதீஷ் செல்லதுரை said...
    ###ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.###
    சரியான வார்த்தைகள்.முயல்கிறேன்.
    அந்த கவிதை ஆனாலும் ரொம்ப ஓவர் சார்....அன்னைக்கு வேற ஏதாவது ஒரு நல்ல பதிவு நம் கண் முன்னாடி வராம போயிருக்கும்.//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ் செல்ல துரை சார்!

    பதிலளிநீக்கு
  22. //Ramani said...
    மிகச் சரியாக விரிவாக தமிழ்மண
    வாக்குகள் குறித்து பதிவிட்டதற்கும்
    சுஜாதா அவர்களிடம் கற்றதை மிகச் சரியாக
    பயன்படுத்தியமைக்கும் மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்//
    ரமணி சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. சீனு said
    150 பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்...தரமான எழுத்துக்கள் நிச்சயம் வேண்டும் சார்.. தமிழ் மனம் வோட்டு என்பதெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் நாம் நம் பாதையில் பயணிப்போம்//
    நன்றி சீனு

    பதிலளிநீக்கு
  24. வரலாற்று சுவடுகள் said...
    முதலில் 150-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் முரளி சார்! மிக்க நன்றி என்னை பற்றி குறிப்பிட்டதற்கும்!
    BTW, செமையான எடிட்டர் சார் நீங்க! எடிட் செய்த பிறகு கவிதை ஜொலிக்கிறது! அதற்க்கு முன்னாடியும் கவிதை நன்றாகத்தான் இருந்தது :)
    தமிழ்மணத்தை பொருத்தவரை அதன் தற்போதைய நிலைப்பாடே சரியென்று கருதுகிறேன் (என்னை பொருத்தவரை)//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வ.சு.


    பதிலளிநீக்கு
  25. வேங்கட ஸ்ரீநிவாசன் said...
    தமிழ்மணம் தான் திரட்டிகளில் முதன்மையானது. இடையில் த.ம. இணைக்க முடியாமல் வெளியிட்ட என்னுடைய சில தரமான பதிவுகள் (அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டிருப்பவை), த.ம-வில் இணைத்த என் மற்ற சாதாரண பதிவுகளை விட குறைந்த அளவு படிக்கப் பட்டதே அதற்கு உதாரணம்.
    மற்றபடி, ஒரு cut-off வைக்க வேண்டியது தான். அது 7-ஆக் இருப்பதில் தவறில்லை என்றே படுகிறது.
    நீங்கள், வெறும் ஆசிரியர் அல்ல பதிப்பாசிரியராகவும் தகுதியானவர் என்பது புலப்படுகிறது.//
    நன்றி வெங்கட ஸ்ரீநிவாசன்.

    பதிலளிநீக்கு
  26. திண்டுக்கல் தனபாலன் said...
    150-வது (நினைக்கவே மலைப்பாக இருக்கு...!) பதிவுக்கும், மேன்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...//
    தங்களை இந்தப் பதிவில் குறிப்பிட்டது மகிழ்ச்சி அடைகிறேன்

    பதிலளிநீக்கு
  27. ??? said...
    150 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
    திருத்திய கவிதைக்குப் பாராட்டுகள்.//
    நன்றி அறுவை மருத்துவன்.

    பதிலளிநீக்கு
  28. //Kathir Rath said...
    அட என்னமோ போங்க, நான் ரொம்ப காலமா தமிழ்மணம்ல சேர முயற்சி பன்னிட்டே இருக்கேன், ஒன்னும் நடக்க மாட்டேங்குது.//
    தமிழ்மணம் இன்னும் ஆக்டிவேட் செய்யவில்லையோ.
    அல்லது பதிவுகளை இணைக்க முடியவில்லையா? .என்னால் முடிந்த உதவி என்றால் செய்யத் தயார்.

    பதிலளிநீக்கு
  29. அருணா செல்வம் said...
    எனக்குத் தெரியாததை நிறைய அறிந்து கொண்டேன்.
    நன்றி முரளிதரன் ஐயா.//
    நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
  30. //Avargal Unmaigal said...
    கவிதையை நீங்கள் எடிட் செய்து வெளியிட்ட விதம் மிக அருமை. இனிமேல் மிக பெரிய பதிவாளர்களாக இருந்தாலும் சிறிய பதிவாலர்களாக இருந்தாலும் பதிவிடும் முன்பு உங்களிடம் அனுப்பி எடிட் செய்து அதன்பிறகு பதிவிட்டால் மிக சிறந்த கவிதையாக வரும் என்பதில் ஐயமில்லை...இப்போது இருக்கும் இளைஞர்களிடம் திறமை மிக அதிகம் ஆனால் உங்களைப் போல உள்ள சிலர்தான் அதை யூஸ் பண்ணுகிறார்கள். அதனால் தனித்தன்மையுடன் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்//
    நன்றி மதுரைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  31. Amudhavan said...
    இந்த ஓட்டளிக்கும் முறை என்னவென்று புரியவே ரொம்ப நாட்கள் ............................................
    ஓட்டுக்களைத் தாண்டி சில நல்ல பதிவுகள் நீண்ட நாட்கள் அல்லது ஓரிரு நாட்களாவது நிலைத்திருக்க வேறு ஏதாவது வழிமுறைகளைக் கொண்டுவந்தார்களானால் நல்லது.
    கேபிள் சங்கரின் கவிதையை நீங்கள் செப்பனிட்டிருக்கும் முறைதான் சரியானது. இப்போதுதான் அந்தக் கவிதை 'கவிதை' போலத் தெரிகிறது.//
    நன்றி அமுதவன் சார்!

    Read more: http://tnmurali.blogspot.com/2012/09/blog-post_17.html#ixzz26kOG5J99

    பதிலளிநீக்கு
  32. //NKS.ஹாஜா மைதீன் said...
    வாழ்த்துக்கள்.......எனது பதிவை பற்றிய உங்கள் அலசல் அருமை...நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது...//
    இது உங்களுக்கு மட்டுமல்ல அவ்வப்போது எல்லாருக்கும் இந்த ஐயங்கள் எழுவதுண்டு.
    நன்றி ஹாஜா மைதீன்.

    பதிலளிநீக்கு
  33. ஓட்டு, தமிழ் மணம், பரிந்;;;;துரை என்று பல விடயங்கள் அறிய முடிந்ததற்கு மிக்க நன்றி முரளி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  34. தமிழ்மணம்.... - நல்ல அலசல்...

    கவிதை - நல்ல எடிட்டிங்.... உங்களுடையதும், கேபிள் அவர்களுடையதும் தனித்தனி சுவை....

    150-ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் முரளி...

    பதிலளிநீக்கு
  35. // புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர் செய்துவருகிறார்கள்.ஒருவர் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" ரமணி, திண்டுக்கல் தனபாலன்,"வரலாற்றுச் சுவடுகள்" //

    உண்மையிலேயே இது பாராட்டப்படவேண்டிய விஷயம்.....

    அதேபோல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை சமீப காலங்களில் சில 'பிராப்ள பதிவர்கள்' கலாய்ப்பதும் நடந்து வருகிறது.புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த இங்க எத்தனைப்பேர் முன் வருகிறார்கள்..? ஆரம்ப நிலையிலுள்ள பதிவர்களுக்கு 'கமென்ட்' என்பது எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம்.இப்போது பிரபலம்மாக இருப்பவர்களெல்லாம் ஆரம்பத்தில் கமெண்டுக்காகவும்,ஓட்டுக்காகவும் ஓடி ஓடி உழைத்தவர்கள்தானே....!

    பதிலளிநீக்கு
  36. அடர் மழை!
    மழைக்கு ஒதுங்கிய
    முழுக்க நனைந்த
    வெண்ணுடை பெண்!
    யார் கண்ணுக்கும்
    தெரியவில்லை
    நிர்வாணமாய் கால் அகட்டி
    தொங்கும் தந்தூரி சிக்கன்!

    சுண்டக்காய்ச்சிய பாலுக்குதான் சுவை அதிகம் என்று சொல்வாங்க...அதேபோல சுருக்கி அழகா சொல்லியிருக்கீங்க....

    அதே நேரத்தில் .... "அடர் மழை! மழைக்கு ஒதுங்கிய முழுக்க நனைந்த வெண்ணுடை பெண்!" இது நீங்கள் தந்தூரி சிக்கனை வர்ணிப்பதுபோலல்லவா உள்ளது(ஹைக்கூ கவிதை மாதிரி)..
    தந்தூரி சிக்கன் தொங்குமிடத்தில் ஒரு பெண் நிற்கிறாள்... அங்கே தந்தூரி சிக்கன் தெரியவில்லை ..மழையில் நனைந்த அந்த பெண்தான் தெரிகிறாள்..என சொல்லப்படும்போது இரண்டு இடத்தில் தந்தூரி சிக்கன் என வருவதே சரியாகப்படுகிறது..(மன்னிக்கவும்..இது என் பார்வையில்)

    பதிலளிநீக்கு
  37. அடர் மழை!
    முழுக்க நனைந்து
    ஒதுங்கிய வெண்ணுடை பெண்!
    யார் கண்ணுக்கும்
    தெரியவில்லை..
    அவளருகில் நிர்வாணமாய்
    கால் அகட்டி தொங்கிய
    தந்தூரி சிக்கன்!

    (ஹி..ஹி..கவிதைக்கும் நமக்கும் ரொம்பதூரம்.சும்மா ட்ரை பண்ணிப் பார்த்தேன்...மன்னிக்கவும்)

    பதிலளிநீக்கு
  38. எனக்கென்னவோ ஏழு ஓட்டு,நூறு ஹிட்ஸ் இரண்டுமே புதிய பதிவர்களுக்கு கடினம்தான் என்று தோன்றுகிறது....அதே நேரத்தில் ஒரு பதிவை ஓட்டுபோட்டு முகப்பில் வரவைப்பது நாம்தான்.நட்புக்காக ஓட்டு போடும் நாம் நல்ல பதிவுகளுக்கும் ஓட்டு போட்டு வரவேற்றால்,இந்த பிரச்சனை வராது என நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  39. நல்லதொரு பதிவு..
    தமிழ்மண வாசகர் பரிந்துறையில் வெளியான என்னுடைய பதிவுகள் ஒன்றுக்குமே என்னுடைய வாக்கினை நான் அளித்தது கிடையாது. சொல்லப் போனால் தமிழ்மணத்தில் நானும் வாக்களிக்கலாம் என்பது எனக்கு இந்த மாதம்தான் தெரிய வந்தது.

    தமிழ் மணத்தின் இன்றைய நிலை என்னைப் பொருத்தவரையில் சரியானதே...

    இனுமொரு சின்ன வேண்டுகோள் மதவாதம் தொடர்பான பதிவுகளை தமிழ்மணம் கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் அவற்றினை மகுடத்திற்கு கொண்டு வருவதனையும் தடை செய்ய வேண்டும்

    அப்படி செய்யவில்லையாயின் பதிவர்கள் மத்தியில் மதவாதத்தை தூண்டும் திரட்டியாக தமிழ்மணம் மாறிவிடும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.. ஆசை..

    பதிலளிநீக்கு
  40. அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

    பதிலளிநீக்கு
  41. தொடர்ந்து எழுதி இன்னும் பல மைல்கல்களைத் தொட வாழ்த்துக்கள்.
    தமிழ்மணம் பரிந்துரை விவரம் புரிந்த மாதிரி இருக்கிறது.

    கேபிளின் கவிதையும் நன்றாக இருக்கிறது, உங்களின் திருத்தம் போலவே. முதலில் குறிப்பிடப்பட்ட சிக்கன் setup, கடைசியில் வருவது payback. சினிமாக்காரர் கவிதையாச்சே? முதலில் வராவிட்டால் கடைசியில் ரசித்திருக்க முடியாதென்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. கவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவிதையையும் கூட.இன்னும் இன்னும் எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி !

    பதிலளிநீக்கு
  43. //குட்டன் said...
    கலக்கிட்டீங்க முரளிதரன்!//
    நன்றி குட்டன்

    பதிலளிநீக்கு
  44. //அப்பாதுரை said...
    தொடர்ந்து எழுதி இன்னும் பல மைல்கல்களைத் தொட வாழ்த்துக்கள்.
    தமிழ்மணம் பரிந்துரை விவரம் புரிந்த மாதிரி இருக்கிறது.
    கேபிளின் கவிதையும் நன்றாக இருக்கிறது, உங்களின் திருத்தம் போலவே. முதலில் குறிப்பிடப்பட்ட சிக்கன் setup, கடைசியில் வருவது payback. சினிமாக்காரர் கவிதையாச்சே? முதலில் வராவிட்டால் கடைசியில் ரசித்திருக்க முடியாதென்று நினைக்கிறேன்.//
    இது எனது பார்வையே தவிர இதுதான் சரி என்று
    கூற மாட்டேன்.நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  45. //ஹேமா said...
    கவிதையை மிக ரசித்தேன்.உங்கள் கவிதையையும் கூட.இன்னும் இன்னும் எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி !//
    நன்றி ஹேமா!

    பதிலளிநீக்கு
  46. கவிதை விளக்கம் மிக அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்...

    அழகு...

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895