என்னை கவனிப்பவர்கள்

சனி, 29 செப்டம்பர், 2012

வைரமுத்துவின் விதைச் சோளம்


என்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(?)தெரிந்தவர் என்று கேலிக்கு ஆளானாலும்  அவர் கவிதைக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை மறுக்க முடியாது.
அவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று.மண்வாசம் வீசும் அழகான நாட்டுப் புறக் கவிதை இது. விவசாயின் சோக வாழ்க்கை அப்படியே கவிதையில் பிரதிலிப்பதைக் காணலாம்.

             விதைச் சோளம்
 
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?

****************************************************

42 கருத்துகள்:

 1. ஒரு விவசாயின் கண்ணீர் வரிகள்...

  வைரமுத்து வைரமுத்துதான்...

  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. நல்ல கவிதை... வைரமுத்துவின் வைர வரிகள்....

  பகிர்வுக்கு நன்றி முரளி.

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான உள்ளம் தொடும் கவிதை

  பதிலளிநீக்கு
 4. ஒரு கிராமத்தானின் இயல்பான வார்த்தைகளைக் கொண்ட வரிகள்

  பதிலளிநீக்கு
 5. //விருதுகள் வாங்க(?)தெரிந்தவர் //

  :))

  பதிலளிநீக்கு
 6. நல்ல கவிதை, பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. ஆமாங்க வைரமுத்துவின் வரிகளுக்கு தனி ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு

 8. வைரமுத்துவின் விதைச்சோள கவிதை நீங்கள் சொன்ன மாதிரி விவசாயின் சோக வாழ்க்கையை எடுத்து சொல்வது உண்மை தான்.
  கவிதை பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. //கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ஒரு விவசாயின் கண்ணீர் வரிகள்...
  வைரமுத்து வைரமுத்துதான்...
  பகிர்வுக்கு நன்றி//
  நன்றி சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 10. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல கவிதை... வைரமுத்துவின் வைர வரிகள்....
  பகிர்வுக்கு நன்றி முரளி.//
  நன்றி நாகராஜ் சார்

  பதிலளிநீக்கு
 11. //சீனு said...
  ஒரு கிராமத்தானின் இயல்பான வார்த்தைகளைக் கொண்ட வரிகள்//
  வருகைக்கு நன்றி சீனு.

  பதிலளிநீக்கு
 12. //மோகன் குமார் said...
  //விருதுகள் வாங்க(?)தெரிந்தவர் //
  ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 13. //வரலாற்று சுவடுகள் said...
  நல்ல கவிதை, பகிர்வுக்கு நன்றி!//
  தவறாத வருகைக்கு நன்றி வசு.

  பதிலளிநீக்கு
 14. Sasi Kala said...
  ஆமாங்க வைரமுத்துவின் வரிகளுக்கு தனி ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.//
  வருகை தந்த தென்றலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. //திண்டுக்கல் தனபாலன் said...
  வைர வரிகள்... மிக்க நன்றி...//
  நன்றி தனபாலன் சார்!

  பதிலளிநீக்கு
 16. கோமதி அரசு said...
  வைரமுத்துவின் விதைச்சோள கவிதை நீங்கள் சொன்ன மாதிரி விவசாயின் சோக வாழ்க்கையை எடுத்து சொல்வது உண்மை தான்.
  கவிதை பகிர்வுக்கு நன்றி.//
  வருகைக்கு நன்றி கோமதி மேடம்.

  பதிலளிநீக்கு
 17. வைரமுத்து சாரின் கவிதைகளை இப்படித்தான் ஒவ்வொருவரும் அறிமுகப் படுத்த படிச்சிக் கொண்டிருக்கிறேன்....
  அவர் கவிதைகளுக்கு ஒத்த கவிதை யார் தருவார்

  பதிலளிநீக்கு
 18. நன்றி முரளிதரன். நாட்டுப் புற சொல்லாட்சில் அழகாகக் கவி வடிக்கத் தெரிந்தவர் வைரமுத்து. அவர் கவிதைகளை நான் விரும்பிப் படிப்பேன் . நான் அணிகள் கற்பிப்பதற்கு வைரமுத்து கவிதைகளைத்தான் கையாள்வேன் . பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 19. நாட்டுப் புற மணம், பாடலில் நன்றாக வீசுகிறது! நன்றி முரளி!

  பதிலளிநீக்கு
 20. மனம் தொட்ட கவிதை. விவசாயியின் வாழ்க்கையில் மழை எப்படியெல்லாம் விளையாடுகிறது? நினைக்கவே மனம் நோகச் செய்யும் நிகழ்வு. கவிதைப் பகிர்வுக்கு நன்றி முரளிதரன்.

  பதிலளிநீக்கு
 21. அவர் கவிப்பேரரசுதான்.நூற்றுக்கு நூறு உண்மை.

  பகிர்வுக்கு மிக்க நன்றி முரளிதரன்.

  பதிலளிநீக்கு
 22. வைரமுத்துவை பிடிக்காதவர்கள் கூட மனதிற்குள் பாராட்டுவார் இந்த இமை நனைக்கும் கவிதையைப் படித்தவுடன். பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 23. நல்லதொரு பகிர்வு.
  முரளி. நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 24. சிட்டுக்குருவி said...
  வைரமுத்து சாரின் கவிதைகளை இப்படித்தான் ஒவ்வொருவரும் அறிமுகப் படுத்த படிச்சிக் கொண்டிருக்கிறேன்....
  அவர் கவிதைகளுக்கு ஒத்த கவிதை யார் தருவார்//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. சந்திரகௌரி said...
  நன்றி முரளிதரன். நாட்டுப் புற சொல்லாட்சில் அழகாகக் கவி வடிக்கத் தெரிந்தவர் வைரமுத்து. அவர் கவிதைகளை நான் விரும்பிப் படிப்பேன் . நான் அணிகள் கற்பிப்பதற்கு வைரமுத்து கவிதைகளைத்தான் கையாள்வேன் . பாராட்டுக்கள்//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

  பதிலளிநீக்கு
 26. //nagoreismail said...
  Arumaiyaa irukku//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. புலவர் சா இராமாநுசம் said...
  நாட்டுப் புற மணம், பாடலில் நன்றாக வீசுகிறது! நன்றி முரளி!//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 28. கீதமஞ்சரி said...

  மனம் தொட்ட கவிதை. விவசாயியின் வாழ்க்கையில் மழை எப்படியெல்லாம் விளையாடுகிறது? நினைக்கவே மனம் நோகச் செய்யும் நிகழ்வு. கவிதைப் பகிர்வுக்கு நன்றி முரளிதரன்.//

  நன்றி கீத மஞ்சரி.

  பதிலளிநீக்கு
 29. அறுவை மருத்துவன் said...
  அவர் கவிப்பேரரசுதான்.நூற்றுக்கு நூறு உண்மை.
  பகிர்வுக்கு மிக்க நன்றி முரளிதரன்.//
  அறுவை மருத்துவனுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. //thanigai said...
  good taste with social concise//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வே.நடனசபாபதி said...
  வைரமுத்துவை பிடிக்காதவர்கள் கூட மனதிற்குள் பாராட்டுவார் இந்த இமை நனைக்கும் கவிதையைப் படித்தவுடன். பகிர்வுக்கு நன்றி!//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 32. //முனைவர்.இரா.குணசீலன் said...
  நல்லதொரு பகிர்வு நண்பரே.//
  முனைவர் அய்யாவின் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. kovaikkavi said...
  நல்லதொரு பகிர்வு.
  முரளி. நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.//
  நன்றி வேத மேடம்.

  பதிலளிநீக்கு
 34. ’கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்று கூறாமல் நல்ல சரக்குடன் கடை விரித்து அதைச் சரியாகச் சந்தைப் படுத்தவும் தெரிந்தவர்.

  சந்தைப் படுத்துவதாலேயே சரக்கு சரியில்லை என்று கூறமுடியாமா?

  சரக்கும் இருக்கிறது முறுக்கும் இருக்கிறது!!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895