இன்று (05.09.2012) ஆசிரியர் தினம். நமக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுத்த ஆசான்களை நினைக்கும் பாரட்டும் வாழ்த்தும் நாள். அந்த ஆசிரியர்கள் நம்மைவிட கல்வியில் பதவியில் மற்ற நிலைகளில் குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் எழுத்துக்களை அறிமுகம் செய்து ஆரம்பக் கல்வியை அழகாய்க் கொடுத்து அஸ்திவாரம் போட்டவர்கள் அவர்கள்தானே! அதனால்தான் தத்துவ மேதையும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட விருப்பம் கொண்டார்!
இந்தநாளிலே அந்த அற்புதமான பணியை மனநிறைவோடு உண்மையாய்ச் செய்கின்ற ஆசிரியர்களுக்கு கவிதை ஒன்றை சமர்ப்பிக்கின்றேன்.
இக் கவிதை சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கவியரங்கத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.
மாமேதை ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை
மகிழ்வுடனே கொண்டாடும் இந்த வேளை
ஆசிரியர் தம் மாட்சியதை கூறவந்தேன் பணிவோடு
ஆசான்கள் அருமையதை நினைத்திடுவோம் நெஞ்சோடு
கல்வி விதை தூவுவதே அவர் வேலை
அறிவுப் பயிர் வளர்ப்பதுவே அவர் வேலை
மடமைதனை போக்குவதே அவர் கடனாம்
மாண்பதனை வளர்ப்பதுவே அவர் செயலாம்
கல்வி ஒளி பரப்புகின்ற தீப மாவார்
கரை சேர்க்க உதவுகின்ற தோணியாவார்
ஏற்றத்தைக் கொடுக்கின்ற ஏணி யாவார்
ஏழைகளும் போகின்ற பாதையாவார்
இளம்பிஞ்சு நெஞ்சத்தில் அன்பைச் சேர்த்து
இதமான பண்புகளை அழகாய்க் கோர்த்து
நல்லோர்கள் மதிக்கின்ற நல்வழியும் காட்டி
நலமடைய வைத்திடுவார் திட்டமதைத் தீட்டி
களிமண்ணைக் கையினிலே எடுக்கின் றீர்
கலனாக அதை நீங்கள் வடிக்கின்றீர்
கல்வியதில் சேமித்து வைக்கின்றீர்
கரைசேரும் வழியதனை காட்டுகின்றீர்
மாற்றத்தை அவர்தானே செய்ய வேண்டும்
மானுடத்தை அவர்தானே வளர்க்க வேண்டும்
அறியாமை நீங்கிடவே உழைக்க வேண்டும்
அன்புவழி தழைக்கத்தான் செய்ய வேண்டும்
நாட்டுக்கு அவர்தானே முதுகெலும்பு
அவர் இதயம் உறுதியான நல்லிரும்பு
தூய வெள்ளை உள்ளமதே அவர் இருப்பு
துணிந்தேதான் வகிக்கின்றார் பெரும் பொறுப்பு
தேசபக்தி தெய்வ பக்தி இரண்டும் சொல்வீர்
தேடரிய கலைகள் யாவும் தேடிச் செல்வீர்
முன்னேற்றப் பாதையதை காட்டிச் செல்வீர்
முயற்சி எனும் தேரேற்றிக் கூட்டிச் செல்வீர்
சாதி சமய பேதங்களை ஒழித்திடுவீர்!
பாதியிலே வந்ததிதை பழித் திடுவீர்
பெருகிவரும் தடை எதையும் உடைத்திடுவீர்
புதியதொரு சமுதாயம் படைத்திடுவீர்
விலைகேட்டு நதியெ துவும் ஓடவில்லை
பலன்கேட்டு பயிர் எதுவும் விளவதில்லை
பரிசு கேட்டு பகலவனும் வருவதில்லை
விருதுகளை நிச ஆசான் விரும்புவதில்லை
மேதைகளை அறிஞர்களை நீங்கள் தருவீர்
மேலான கலைஞர்களை நீங்கள் தருவீர்
நாட்டுக்கு தலைவர்களை நீங்கள் தருவீர்
சமுதாயம் உயர்ந்திடவே வழிகள் சொல்வீர்
கல்லாய் இருப்பதை கலையாய் மாற்றுவீர்
கடினம் என்பதை கதையாய் ஆக்குவீர்
முயற்சி என்பதை முன்னே வைப்பீர்
முடியா தென்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பீர்
புத்தம் புது நூல்களை நாளும் கற்பீர்
புதியமுறை கற்பிக்கும் உத்திகளை ஏற்பீர்
எப்போதும் மாணவனாய் இருந்து கற்பீர்
தப்பாது தவறுகளை திருத்திக் கொள்வீர்
அரிசியிலே கலந்திருக்கும் கற்கள் போலே
பயிரிடையே செழித்திருக்கும் களைகள் போலே
வெள்ளாடை மீதினிலே களங்கம் சேர்க்கும்
கருப்பாடு ஆசிரியர் வளர்வது தடுப்பீர்.
நாள்தோறும் தவறிழைக்கும் ஆசிரியர் சேதி
நாளிதழில் படிப்பதனால் வேதனை மிகுதி
ஆசரியர் நற்பெயரை கெடுப்போர் அறிவீர்!
அடையாளம் கண்டவரை விலக்கி வைப்பீர்
ஒரு சிலரே உம்மை தினம் போற்றுகின்றார்
ஒரு சிலரோ உம்மை தினம் தூற்றுகின்றார்
தூற்றலையும் போற்றலையும் தூர வைத்து
ஏற்றமிகு எழுச்சியதை தோற்று விப்பீர்!
***************************
உலகை உருவாக்கும் ஆசிரியர்களே உங்களுக்கு தமிழ்ப் பதிவுலகின் சார்பாக
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
***********************
படித்துவிட்டீர்களா?
மன்னன் என்ன சொன்னான்? பாலகுமாரன் கவிதை.மேகம் எனக்கொரு கவிதை தரும்..
*************************************************************************************
நாள்தோறும் தவறிழைக்கும் ஆசிரியர்சேதி
பதிலளிநீக்குநாளிதழில்படிப்பதனால்வேதனைமிகுதி
ஆசரியர் நற்பெயரை கெடுப்போர்அறிவீர்!
அடையாளம் கண்டவரை விலக்கி வைப்பீர்
ஊத வேண்டிய சங்கை மிகச் சரியாகஊதி இருக்கிறீர்கள்
ஆசிரியர் தின சிறப்புப்ப்பதிவு மிக மிகச் சிறப்பு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆசிரியர் பணியை ஏணியாகவும் தோணியாகவும்
சொன்னது அருமை!
கேட்டீங்களே ஒரு கேள்வி... (தலைப்பு)
பதிலளிநீக்குஅற்புத வரிகள்... வாழ்த்துக்கள்...
சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு... நன்றி...
மெழுகுவர்த்தி போல் வாழ்ந்த / வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
ரைட்டு.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு// ஒருசிலரோ உம்மை தினம் போற்றுகின்றார்
ஒரு சிலரே உம்மை தினம் தூற்றுகின்றார்//
எல்லாரையும் எல்லாரும் தூற்றவில்லை, வீட்டுப் படம் செய்யாவிட்டால் என்னை அடிக்கும் ஆசிரியர்களை தவிர ஹா ஹா ஹா
மாமேதை ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை மகிழ்வுடனே கொண்டாடும் இந்த வேளை
பதிலளிநீக்குஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்...நானும் ஆசிரியர் தின சிறப்பு பதிவு வெளியிட்டுள்ளேன் மறக்காமல் பாருங்கள்:
பதிலளிநீக்குwww.vijayandurai.blogspot.com
மக்கள் சந்தையில் என் பதிவு உள்ளது..
பதிலளிநீக்குtk.makkalsanthai.com
அருமையான கவிதை!
பதிலளிநீக்குஆசிரியர் தின வாழ்த்துகள்!
அழகான கவிதை!
பதிலளிநீக்குஅருமையான கருத்து!
நன்றி முரளிதரன் ஐயா.
ஆசிரியர் பற்றி ஹைகூ
ஏணிப்படியாய்
இருந்தவர்கள்
ஏனிப்படி ஆனார்கள்!
மிகவும் சிறப்பானகவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
நன்றி ரமணி சார்!உங்கள் வரவு எபோதுமே நல்வரவுதான்.
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குஆசிரியர் பணியை ஏணியாகவும் தோணியாகவும்
சொன்னது அருமை!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குகேட்டீங்களே ஒரு கேள்வி... (தலைப்பு)
அற்புத வரிகள்... வாழ்த்துக்கள்...
சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு... நன்றி...
மெழுகுவர்த்தி போல் வாழ்ந்த / வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...//
இன்று ஒரு நாள் அவரவர் ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கட்டுமே.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பதிலளிநீக்குரைட்டு.//
வருகைக்கு நன்றி
அருமையான கவிதை முரளி....
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
சீனு said...
பதிலளிநீக்கு// ஒருசிலரோ உம்மை தினம் போற்றுகின்றார்
ஒரு சிலரே உம்மை தினம் தூற்றுகின்றார்//
எல்லாரையும் எல்லாரும் தூற்றவில்லை, வீட்டுப் படம் செய்யாவிட்டால் என்னை அடிக்கும் ஆசிரியர்களை தவிர ஹா ஹா ஹா //
நன்றி சீனு! தூற்றுவதற்காக வாவது ஆசிரியை நினையுங்கள்
விஜயன் said...
பதிலளிநீக்குஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்...நானும் ஆசிரியர் தின சிறப்பு பதிவு வெளியிட்டுள்ளேன் மறக்காமல் பாருங்கள்://
பதிவைப் படித்து கருத்திட்டிருக்கிறேன் விஜயன்.
வெங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
ஆசிரியர் தின வாழ்த்துகள்!//
நன்றி வெங்கட் ஸ்ரீநிவாசன்
//AROUNA SELVAME said...
பதிலளிநீக்குஅழகான கவிதை!
அருமையான கருத்து!
நன்றி முரளிதரன் ஐயா.
ஆசிரியர் பற்றி ஹைகூ
ஏணிப்படியாய்
இருந்தவர்கள்
ஏனிப்படி ஆனார்கள்!//
நன்றி அருணா செல்வம்
//suresh said...
பதிலளிநீக்குமிகவும் சிறப்பானகவிதை! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!//
நன்றி சுரேஷ் தங்கள் வலைக்கு வருவேன்.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை முரளி....
வாழ்த்துகள்.//
நன்றி வெங்கட் நாகராஜ்
அழகான கவிதை
பதிலளிநீக்குநன்றி சிட்டுக்குருவி
பதிலளிநீக்குஎம்மாம் பெரிய கவிதை?
பதிலளிநீக்குஆசிரியர்களை புகழவும் செய்து அவர்களது குறைகளை வலிக்காமல் சுட்டியும் காட்டியிருப்பது நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குஅன்புடன்,
ரஞ்ஜனி
ranjaninarayanan.wordpress.com
ஆசிரியரைப் போற்றுவதுடன் அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு 100/100 மார்க்.
பதிலளிநீக்குநான் ரசித்த வரிகள்
//கல்வி விதை தூவுவதே அவர் வேலை
அறிவுப் பயிர் வளர்ப்பதுவே அவர் வேலை..//
//விலைகேட்டு நதியெ துவும் ஓடவில்லை
பலன்கேட்டு பயிர் எதுவும் விளவதில்லை..//
//புத்தம் புது நூல்களை நாளும் கற்பீர்
புதியமுறை கற்பிக்கும் உத்திகளை ஏற்பீர்..//
//நாள்தோறும் தவறிழைக்கும் ஆசிரியர் சேதி
நாளிதழில் படிப்பதனால் வேதனை மிகுதி .//
சகாதேவன்
சிறப்பான கவிதை
பதிலளிநீக்குத.ம.8
ஆசிரியர் என்ற முறையில், அருமையானக் கவிதையினைப் படைத்திட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தக் கொள்கின்றேன்
பதிலளிநீக்குநன்றி பழனி கந்த சாமி சார்! பொறுமை சோதிச்சுட்டனோ?
பதிலளிநீக்குRanjani Narayanan said...
பதிலளிநீக்குஆசிரியர்களை புகழவும் செய்து அவர்களது குறைகளை வலிக்காமல் சுட்டியும் காட்டியிருப்பது நன்றாக இருந்தது.
அன்புடன்,
ரஞ்ஜனி
வணக்கம் அம்மா தங்கள் முதல் வரவு கண்டு மககிழ்ச்சி அடைகிறேன்.. கருத்துக்கு மிக்க நன்றி.
//சகாதேவன் said...
பதிலளிநீக்குஆசிரியரைப் போற்றுவதுடன் அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அருமையாக சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு 100/100 மார்க்//
நீங்கள் ஆசிரியராகத்தான் இருக்கவேண்டும்,
தங்கள் உள்ளம உயர்ந்த உள்ளம எனக்கு நூறு மதிப்பெண் போட்டு விட்டீர்கள் நான் படிக்கும்போது கூட நூற்றுக்கு நூறு வாங்கியதில்லை
//குட்டன் said...
பதிலளிநீக்குசிறப்பான கவிதை
த.ம.8//
நன்றி நன்றி குட்டன் அவர்களுக்கு
கரந்தை ஜெயக்குமார் said...
பதிலளிநீக்குஆசிரியர் என்ற முறையில், அருமையானக் கவிதையினைப் படைத்திட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தக் கொள்கின்றேன்//
நன்றி ஜெயகுமார் அய்யா!.ஒரு ஆசிரியரின் வாயால் பாராட்டு பெர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்
மனடஹி நிறைத்த கவிதை.இன்றைய மாணவர்கள் இத்தனை மதிப்பும் மரியாதையும் தருகிறார்களா ஆசிரியர்களுக்கு.என் வாழ்த்துகளும் எமைப் படிப்பித்த ஆசிரியர்களுக்கு !
பதிலளிநீக்கு/ஹேமா said...
பதிலளிநீக்குமனடஹி நிறைத்த கவிதை.இன்றைய மாணவர்கள் இத்தனை மதிப்பும் மரியாதையும் தருகிறார்களா ஆசிரியர்களுக்கு.என் வாழ்த்துகளும் எமைப் படிப்பித்த ஆசிரியர்களுக்கு !//
தரவேண்டும் என்பதுதான் விருப்பம்.
இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
பதிலளிநீக்குவந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
மறக்காம ஓட்டும்!
http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html
திரு ஜி.என்.பி அவர்கள் வலை வழியே
பதிலளிநீக்குஇங்கு வந்தேன்.
இனி அடிக்கடி வரவேண்டும் என
எண்ணிக்கொண்டேன்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
sury Siva said...
பதிலளிநீக்குதிரு ஜி.என்.பி அவர்கள் வலை வழியே
இங்கு வந்தேன்.
இனி அடிக்கடி வரவேண்டும் என
எண்ணிக்கொண்டேன்.
சுப்பு ரத்தினம்.
நன்றி சுப்பு அய்யா!