பதிவுலகில் நுழைந்து பதிவு போட ஆரம்பித்து நாலு பேர் பார்க்க ஆரம்பித்ததும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் நமது பதிவுகளை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் ஆவல் உண்டாகிறது. அதன் தொடர்ச்சியாக பிறருடைய பதிவுகளின் பார்வையாளர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முற்படுகிறோம்.இதை அவரவர் பக்கத்தில் இணைக்கப் பட்டுள்ள விட்ஜெட் மூலம் அறிய முடிகிறது.
அடுத்த கட்டமாக தரவரிசை தமிழ்மணம் தரவரிசை இண்டி பிளாக், அலெக்சா இவற்றில் நமது தரவரிசை எப்படி உள்ளது என்பதை அறிய விரும்புகிறோம்.
இந்த தர வரிசைகளை பிறருடைய வற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் ஏற்படுவதும் இயல்பானதே. மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவது தவறு என்று ஒரு சிலர் கூறினாலும் நம்மை மேம்படுத்திக் கொள்ள ஒப்பீடு உதவும் என்றே நினைக்கிறேன்அலெக்சா மூன்று மாத பார்வையாளர்களின் அடிப்படையில் தரத்தை நிர்ணயிக்கிறது. அலெக்சாவின் இணையத் தரவரிசை பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் படுவதாகக் கூறப் படுகிறது. இது சரியில்லை என்று கூறுவோரும் உண்டு.
நம்முடைய பதிவில் அலெக்சா விட்ஜெட் இணைப்பதின் மூலம். நமது உலக அளவிலான தரத்தை அறிய முடியும்.விட்ஜெட்டை இணைக்காமல் www.alexa.com க்கு சென்று நமது வலை முகவரியை அளித்தால் உலக தர வரிசை மற்றும் இந்தியாவில் மட்டும் நமது நிலையை அறிந்து கொள்ள முடியும்.எந்த தளத்தின் முகவரியையும் இதில் இட்டு தரவரிசை அறியலாம்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் அலெக்சா தளத்திற்கு சென்று ரேங்கை அறிவது சற்று கடினமாக இருக்கும்.அதை நிவர்த்தி செய்வதற்காகவே அலெக்சா கருவிப் பட்டை (டூல் பார்) இணைத்துக் கொண்டால் நாம் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தின் அலெக்சா தரவரிசை அறியலாம் .இதோ இந்தப் படத்தில் எனது தர வரிசை.
இந்த கருவிப் பட்டையை நான் இணைத்துள்ளதால் வேறொரு வலை தளத்திற்கு செல்லும்போது அந்த வலை தளத்தின் ரேங்க் அங்கு தெரியும். நீங்களும் விருப்பமிருந்தால் கருவிப்பட்டை இணைத்துக் கொள்ளலாம் வழிமுறைகள்
உங்கள் பிரௌசர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அல்லது ஃ பையர் ஃபாக்ஸ் ஆக இருக்கவேண்டும்.குரோம் பயன்படுத்துபவர்களுக்குவேறு முறை உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். Firefox பயன்படுத்துபவருக்கும் கிட்டத்தட்ட இதே வழிமுறைகள்தான்.
படி 1
www.alexa.com க்கு சென்று Toolbar - Install Alexa Toolbar -Run என்று தொடரவும்
படி 2
படி 3
படி4
படி 5
படி 6
படி7
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்
கீழக்கண்டது போல் சில விவரங்கள் கேட்கும். இவற்றை பூர்த்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
படி8
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறக்கும்போது Tool bar இல்இடம் பெரும் கூடுதல் பட்டன்களை காண்பிக்கும்.இவற்றில் தேவை இல்லாத வற்றை அன்செக் செய்து விடலாம்.
இனி நாம் செல்லும் அனைத்து தளங்களின் ரேங்க் மேற்புறத்தில் தெரியும்.தற்போது இந்த Toolbar ல் இந்தியாவில் நமது தரவரிசையையும் காண்பிக்கிறது.தேவை இல்லை என்றால் toolbar ஐ நீக்கி விடலாம்.அல்லது மறைத்து விட்டு வேண்டும்போது தெரிய வைத்துக் கொள்ளலாம்.
அலெக்சா விட்ஜட் இணைத்தால் நமது தர வரிசை மட்டுமே தெரியும்.மேலும் விட்ஜெட் அப்டேட் ஆக தாமதமாகும்.ஆனால் Toolbar ல் மாற்றங்கள் உடனுக்குடன் தெரியும்.இதை பார்த்து தெரிந்து கொண்டு
பின்னர் அந்த ரேங்க் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டபின் விட்ஜெட் இணைத்துக் கொள்வது நல்லது.
அலெக்சா தரவரிசை நமது வலைப்பதிவின் மதிப்பை பார்வையாளர்களின் மத்தியில் கூட்டும்.வலைப்பதிவு எழுதுவதினால் நமக்கு கிடைக்கும் ஒரே இலாபம் பார்வையாளர்களின் அங்கீகாரமே.
நல்ல பதிவுகளை எழுதுவோம்.அனைவரும் அனைத்து தரவரிசையில் முன்னேறுவோம்.
***********************************************************************************
அலெக்சா தரவரிசைப் படி தற்போது முதல் இடம் பெற்றிருப்பது
Facebook. கூகிள் இரண்டாது இடத்தில் உள்ளது. இதை கூகுள் ஏற்றுக் கொள்வதில்லை.சிறிது காலத்திற்கு முன்பு google.com தான் முதலிடத்தில் இருந்தது.கூகிளின் பல துணை தளங்கள் முதல் 20 இல் இடம் பெற்றிருக்கின்றன.
முதல் 20 இடங்கள் எவை எவை என்று பார்ப்போம்.
-
7 Windows Live 8. Twitter 9. QQ.COM 10. Amazon.com 11. Blogspot.com12. LinkedIn 13. Google India 14. Taobao.com 15. Yahoo! Japan16. 新浪新闻中心
***************************************************************************
இதை படித்து விட்டீர்களா
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
பலருக்கும் பயன் தரும் தகவல்கள்... நன்றி
பதிலளிநீக்குnalla pathivu,,,
பதிலளிநீக்குமிக உபயோகமான பதிவு. முதல் இருபது தளங்கள் இதன் மூலம் தான் அறிந்தேன் நன்றி
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி! தொடர் மின்வெட்டு, BSNL BROAD BAND பிரச்சினைகளால் வலைப்பக்கம் வர முடியவில்லை.
பதிலளிநீக்குநல்ல தகவல்.... இதுவரை என்னுடைய அலெக்சா ரேட்டிங் நான் பார்த்ததில்லை :)
பதிலளிநீக்குநான் இதையெல்லாம் நினைப்பதும் இல்லை பார்பதும் இல்லை
பதிலளிநீக்குஅனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
பதிலளிநீக்குஅருமையான தகவலை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
Alexa Rank-பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரேங்க்!
பதிலளிநீக்குரேங்க் ஏற்ற இறக்கத்திற்கு பதிவுகளின் எண்ணிக்கையும் ஒரு காரணமாக இருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது! மற்றபடி OK!
நல்ல தகவல்கள் நன்றி.
பதிலளிநீக்கும்ம்ம் நல்ல பதுவு
பதிலளிநீக்குபலருக்கும் பயன் தரும் தகவல்... (நீங்கள் சொல்லித்தான் என் தளத்தில் இப்போது பார்த்தேன்...)
பதிலளிநீக்குநன்றி...
நல்ல பயன்னுள்ள தகவல்........உங்கள் பகிர்வுக்கு நன்றி........
பதிலளிநீக்குநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பயனுள்ள தகவல் நன்றிங்க.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குநானும் முயற்சிக்கிறேன் முரளிதரன் ஐயா.
நன்றி.
நல்ல பதிவு.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. நான் போய் மத்த பிளாக்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வரேன்
பதிலளிநீக்குஹும்ம்!என்னதை ரேங்க்!என்னத்தைப் பார்த்து!
பதிலளிநீக்குanyway,good.
//Avargal Unmaigal said...
பதிலளிநீக்குபலருக்கும் பயன் தரும் தகவல்கள்... நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
/தொழிற்களம் குழு said...
பதிலளிநீக்குnalla pathivu,,,//
தொழிற்களம் குழுவிற்கு நன்றி.
மோகன் குமார் said...
பதிலளிநீக்குமிக உபயோகமான பதிவு. முதல் இருபது தளங்கள் இதன் மூலம் தான் அறிந்தேன் நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமோகன்
தி.தமிழ் இளங்கோ said...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி! தொடர் மின்வெட்டு, BSNL BROAD BAND பிரச்சினைகளால் வலைப்பக்கம் வர முடியவில்லை.//
நன்றி ஐயா!
//வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குநல்ல தகவல்.... இதுவரை என்னுடைய அலெக்சா ரேட்டிங் நான் பார்த்ததில்லை :)//
நான் அனைவரின் ரெண்கையும் தினந்தோறும் பார்த்து வருகிறேன்.
//புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குநான் இதையெல்லாம் நினைப்பதும் இல்லை பார்பதும் இல்லை//
ஆரம்ப காலத்தில் இதெல்லாம் பார்ப்பார்கள் போகப்போக விட்டுவிடுவார்கள்.
Ramani said...
பதிலளிநீக்குஅனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
அருமையான தகவலை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்கிற்கும் நன்றி.
தமிழ் காமெடி உலகம் said...
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு மிக்க நன்றி...
நன்றி,
மலர் //
நன்றி மலர்.
வரலாற்று சுவடுகள் said...
பதிலளிநீக்குAlexa Rank-பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரேங்க்!//
நன்றி வசு
வேங்கட ஸ்ரீநிவாசன் said...
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீனிவாசன்.
செய்தாலி said...
பதிலளிநீக்கும்ம்ம் நல்ல பதுவு//
நன்றி செய்தாலி
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குபலருக்கும் பயன் தரும் தகவல்... (நீங்கள் சொல்லித்தான் என் தளத்தில் இப்போது பார்த்தேன்...)//
நன்றி தனபாலன் சார்!
Easy (EZ) Editorial Calendar said...
பதிலளிநீக்குநல்ல பயன்னுள்ள தகவல்........உங்கள் பகிர்வுக்கு நன்றி........//
நன்றி பிரியா
//Sasi Kala said...
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் நன்றிங்க.//
நன்றி சசிகலா!
அருணா செல்வம் said...
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு.
நானும் முயற்சிக்கிறேன் முரளிதரன் ஐயா.
நன்றி.//
நன்றி அருணா செல்வம்
//அமுதா கிருஷ்ணா said...
பதிலளிநீக்குநல்ல பதிவு.//
வருக!வருக!நன்றி கருத்திட்டதற்கு,
ராஜி said...
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு. நான் போய் மத்த பிளாக்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வரேன்//
எப்பவுமே மத்தவங்களை பத்தி தெரிஞ்சிக்க விரும்பறது நம்மோட பழக்கம் ஆச்சே!நமக்கு பின்னாடி கொஞ்ச பேர் இருந்தா நமக்கு சந்தோஷம்தான்,
குட்டன் said...
பதிலளிநீக்குஹும்ம்!என்னதை ரேங்க்!என்னத்தைப் பார்த்து!//
anyway,good.//
ஏன் இந்த சலிப்பு குட்டன்?
அருமையான பயன்மிக்க தகவல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!
பதிலளிநீக்குபலபேருக்குப் பிரயோசனமான பதிவு !
பதிலளிநீக்குமுரளி எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
பதிலளிநீக்குஆயினும் நன்றி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன் ஏற்கனவே இம்முறையில் பாவிக்கிறேன்
பதிலளிநீக்குபலருக்கு பயனுள்ளாதாய் அமையும் பதிவு சார்
//அன்பை தேடி,,அன்பு said...
பதிலளிநீக்குஅருமையான பயன்மிக்க தகவல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
//ஹேமா said...
பதிலளிநீக்குபலபேருக்குப் பிரயோசனமான பதிவு !//
நன்றி ஹேமா
//kovaikkavi said...
பதிலளிநீக்குமுரளி எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆயினும் நன்றி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//
உண்மையை மனம் திறந்து சொல்லி விட்டீர்கள்.
நன்றி.
சிட்டுக்குருவி said...
பதிலளிநீக்குநன் ஏற்கனவே இம்முறையில் பாவிக்கிறேன்
பலருக்கு பயனுள்ளாதாய் அமையும் பதிவு சார்//
நன்றி சிட்டுக் குருவி.
தேவையான தகவல் நண்பரே.
பதிலளிநீக்கு